திருத்தூதர்களான தூய பேதுரு, பவுல் பெருவிழா



திருத்தூதர்களான புனித பேதுரு, பவுல் பெருவிழா

நிகழ்வு

பேதுருவைக் குறித்து சொல்லப்படுகின்ற ஒரு பாரம்பரிய நிகழ்வு. உரோமையை ஆண்ட நீரோ மன்னன் திருச்சபையின் தலைவரான பேதுருவைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டினான். இதையறிந்த கிறிஸ்தவர்கள் பேதுருவை எப்படியாவது உரோமை நகரைவிட்டு தப்பிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். பேதுருவும் அரை மனதாக உரோமை நகரைவிட்டு தப்பித்து வெளியே போய்க்கொண்டிருந்தார். அவர் போகும்வழியில் இயேசு எதிரே வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போன பேதுரு, “ஆண்டவரே! நீர் எங்கே செல்கிறீர்?” (Domine, quo vadis? Lt) என்று கேட்டார். அதற்கு இயேசு, “நான் உரோமை நகரில் மீண்டுமாக கொல்லப்படப் போகிறேன்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டதுதான் தாமதம், பேதுரு வெளியே தப்பித்துப் போகும் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டு, உரோமை நகருக்குச் சென்று, அங்கேயே மறைசாட்சியாக தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார்.

இன்று திருச்சபையானது திருச்சபையின் இருபெரும் தூண்களான தூய பேதுரு மற்றும் பவுலின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. 

இந்த நாளிலே தான் நம் பங்கின் உடைய திருவிழாவான இயேசுவின் திரு இருதய திருவிழாவை கொண்டாடி இன்று நிறைவு செய்கிறோம்.

 இயேசுவின் திரு இருதயம் அன்பின் அடையாளமாக இருக்கிறது. இயேசுவின் திரு இருதயம் அன்புக்கு இலக்கணமாக இருக்கிறது. இயேசுவின் திரு இருதயம் அன்பாக இருக்கிறது. இயேசு அன்பாக இருக்கிறார். கடவுள் அன்பாக இருக்கிறார் என்று திருத்தூதர் யோவான் சொல்லுகிறார்.  நல்ல மேய்ப்பன் தன்  ஆடுகளை அன்பு செய்கிறவராக இருக்கிறார். அந்த இதயம் நம் ஒவ்வொருவரையும் நேசிக்கிற இதயமாக இருக்கிறது என்பதை இந்த திருவிழா நமக்கு சுட்டி காட்டுகிறது. இன்றைய விழா நாயகர்கள் புனித பேதுருவையும் புனித பவுல் அடியாரையும் இயேசு அவ்வளவு அன்பு செய்தார் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த இருவரும் வெவ்வேறு திசையிலே சென்று கொண்டிருந்த சூழலிலே  இயேசுவின் அன்பு அவர்களை தேடிச் செல்கிறது. இயேசுவிடைய இரக்கத்தினாலே மன்னிப்பினாலே அன்பினாலே தொடப்பட்ட இந்த பேதுருவும் பவுலும் இயேசுவுக்காக  தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் கொடுக்கிறார்கள். 

முதலில் இவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் குறித்து சிந்தித்துப் பார்த்துவிட்டு, அதன்பிறகு இவர்கள் நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன என சிந்தித்து நிறைவுசெய்வோம்.

வாழ்க்கை வரலாறு :

புனித பேதுரு 

பேதுரு கலிலேயாவில் உள்ள பெத்சாய்தா என்னும் ஊரில் பிறந்தார். இவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது ஆண்டவர் இயேசு இவரிடம் “என் பின்னே வா நான் உன்னை மனிதர்களைப் பிடிப்பவன் ஆக்குவேன்” (மத் 4: 18-21) என்று சொல்லி அழைத்தபோது அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார்.

இயேசுவின் சீடர்கள் குழுவில் சேர்ந்த பேதுரு, அவருடைய மூன்று முதன்மைச் சீடர்களில் ஒருவராக மாறுகின்றார். குறிப்பாக இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த மிகவும் முக்கியமான நிகழ்வுகளான உருமாற்றம், தொழுகைக்கூடத் தலைவரான யாயிரின் மகளை உயிர்ப்பித்தல், கெத்சமணித் தோட்டத்தில் இரத்த வியர்வை வியத்தல் போன்ற நிகழ்வுகளில் இவர் இயேசுவோடு உடனிருக்கிறார், நெருக்கமாக இருக்கக் கூடிய வாய்ப்பு.

ஆண்டவர் இயேசு சீடர்களிடத்தில் “நீங்கள் என்னை யாரெனச் சொல்கிறீர்கள்?” என்று கேட்கும்போது பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” (மத் 16:16) என்று சொன்னதினால் இயேசு அவரை திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தி, எல்லா அதிகாரங்களையும் அவருக்குக் கொடுக்கின்றார். இயேசு தன்னுடைய உயிர்ப்புக்கு பிறகு, அவருக்குத் தோன்றியபோது, “என் ஆடுகளை மேய்” என்று சொல்லி அதனை உறுதிசெய்கிறார் (யோவா 21: 15-18).

பேதுருவைப் பொறுத்தளவில் உணர்ச்சிப் பெருக்கின் அடையாளமாக இருக்கின்றார். அவசரப்பட்டு ஏதாவது பேசுவார். பின்னர் அவர் பேசிய வார்த்தைகளை அவரே மீறுவார்.

 எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த பேதுருதான் பின்னாளில், “ஆண்டவரே உம்மைப் பின்பற்றிவந்த எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்பார். 

“எல்லாரும் உம்மைவிட்டுப் போனாலும் நான் உம்மைவிட்டுப் போகமாட்டேன்” என்று சொன்னவர், பிறகு இயேசுவை மூன்றுமுறை மறுதலித்தார்.

 எனக்கு எதிராகத் தீங்கு செய்யும் என்னுடைய சகோதரனை எத்தனை முறை மன்னிப்பது? ஏழுமுறையா?” என்று கேட்டவர்
 படைவீரனாகிய மால்கு இயேசுவைக் கைதுசெய்ய வரும்போது, அவருடைய காதைத் துண்டிப்பார்.

 இப்படியாக அவர் பேசிய வார்த்தைகளை அவரே மீறுவார்.

 இருந்தாலும் அவர் இயேசுவின்மீது அளவு கடந்த அன்புகொண்டிருந்தார், அவருக்காகத் தன்னுடைய உயிரையும் கொடுத்தார்.

ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு பேதுரு திருச்சபையின் தலைவராக இருந்து புரிந்த பணிகள் ஏராளம்.

 மத்தியாசை திருத்தூதராகத் தேர்ந்தெடுப்பதற்கு பேதுருதான் முன்னின்று செயலாற்றினார்.

 பெந்தகோஸ்தே நாளில் பேதுருதான் சீடர்களின் சார்பாக இருந்து பேசுகின்றார். அதேபோன்று புறவினத்தாரிலும் தூய ஆவியார் செயல்படுகிறார் என்பதை அறிந்து, அவர்களையும் இறைமக்கள் கூட்டத்தில் சேர்ப்பதற்கு பேதுருதான் காரண கர்த்தாவாக இருக்கின்றார் (திப 10: 34- 43).

 பேதுருதான் திருத்தூதர்களில் முதன்முறையாக இயேசுவின் பெயரால் புதுமையை ஆற்றியவர் (திப 3: 1-9).

 இவ்வாறாக பேதுரு திருச்சபையின் தலைவராக இருந்து, சீடர்களை ஒருங்கிணைத்தும் இறைமக்கள் கூட்டத்தை வழிநடத்தியும் சிறப்பான ஒரு பணியைச் செய்தார்.

பேதுரு தொடக்கத்தில் அந்தியோக்கு நகரில் நற்செய்திப் பணி செய்தார். அதன்பிறகு அவர் உரோமை நகருக்குச் சென்று, அங்கே நற்செய்திப் பணியை ஆற்றி வந்தார். அப்போதுதான் நீரோ மன்னன் பேதுருவைப் பிடித்து சிறையில் அடைத்து, அவரைச் சித்ரவதை செய்தான். இறுதியாக அவர் சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டு கொல்லப்பட்டார். இவ்வாறாக பேதுரு, இயேசுவின் மீது கொண்டிருந்த அன்பினால் அவருக்காகத் தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார். அவர் மறைசாட்சியாகக் கொல்லப்பட்ட ஆண்டு கி.பி.64.

புனித பவுல் 

சவுல் எனப்படும் பவுல் தர்சீஸ் நகரைச் சேர்ந்தவர்; பெஞ்சமின் குலத்தில் பிறந்தவர். இவர் கமாலியேல் என்பவரிடம் கல்வி கற்று, யூத சமயத்தில் மிக உறுதியாக இருந்த ஒரு பரிசேயராக விளங்கினார்.

 அப்போதுதான் இவர் கிறிஸ்தவம் என்ற புதிய நெறியைக் குறித்துக் கேள்விப்பட்டு, அது யூத சமயத்திற்கு எதிராக இருப்பதாக நினைத்து, அம்மதத்தைப் பின்பற்றுவோரை அழித்தொழிக்க நினைத்தார்.

 அதற்காக அவர் எருசலேமிலிருந்து ஆணையை வாங்கிக்கொண்டு தமஸ்கு நகர் வழியாகக் குதிரையில் வந்துகொண்டிருந்தார். அந்நேரத்தில் வானத்திலிருந்து தோன்றிய ஒளி அவரை நிலைகுலையச் செய்தது. அதனால் அவர் தடுமாறி கீழே விழுந்தார். “சவுலே, சவுலே ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்” என்று வானத்திலிருந்து குரல் ஒலித்தது. அதற்கு அவர், “ஆண்டவரே! நீர் யார்?” எனக் கேட்க, “நீ துன்புறுத்தும் இயேசு நானே” என அந்தக் குரல் பதிலளித்தது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சவுல் பவுலாகின்றார். அவர் புறவினத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கும் நற்செய்திப் பணியாளர் ஆனார்.

எந்த மதத்தைக் கூண்டோடு அழிக்கவேண்டும் என்று நினைத்தாரோ, அந்த மதத்திற்காக பவுல் தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார். 

நற்செய்தி அறிவிப்பிற்காக பவுல் மேற்கொண்ட மூன்று திருத்தூது பயணங்கள் மிகவும் முக்கியமானவை. அதைவிடவும் அவர் நமக்கு வழங்கிவிட்டுச் சென்ற பதிமூன்று திருமுகங்கள் மிகவும் முக்கியமானவை. இத்திருமுகங்களைப் படித்துப் பார்க்கும்போது பவுல் ஆண்டவர் இயேசுவின்மீது எந்தளவுக்கு அன்பும் பற்றும் கொண்டிருந்தார் என நாம் புரிந்துகொள்ளலாம். “வாழ்வது நானல்ல, என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்” என்று சொல்லி அவர் மறு கிறிஸ்துவாக மாறிவிடுகின்றார் (கலா 2:20).

“பன்முறை சிறையில் அடைபட்டேன்; கொடுமையாய் அடிபட்டேன்; பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்; ஒருமுறை கல்லெறிபட்டேன்; மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். பயணங்கள் பல செய்தேன்; அவற்றில், ஆறுகளாலும் இடர்கள், என் சொந்த மக்களாலும் இடர்கள், பிற மக்களாலும் இடர்கள், நாட்டிலும் இடர்கள், காட்டிலும் இடர்கள், கடலிலும் இடர்கள், போலித் திருத்தூதர்களாலும் இடர்கள், இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன்.
 பாடுபட்டு உழைத்தேன்; பன்முறை கண்விழித்தேன்; பசிதாகமுற்றேன்; பட்டினி கிடந்தேன்; குளிரில் வாடினேன்; ஆடையின்றி இருந்தேன்” (2 கொரி 11: 24- 27) என்று பவுல் சொல்வதன் வழியாக அவர் கிறிஸ்துவுக்காக பட்ட பாடுகளை நாம் அறிந்துகொள்ளலாம்.

 இப்படியாக ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவித்து, அதற்காக துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்த புறவினத்தாரின் திருத்தூதராக பவுல் 67 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

புனித பேதுரு மற்றும் பவுலின் வாழக்கை வரலாற்றைக் குறித்து அறிந்து கொண்ட நாம் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

1. கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் தருதல்

பேதுருவும் பவுலும் இருவேறு துருவங்களாக இருந்தாலும் அவர்கள் இருவரும் ஆண்டவர் இயேசுவில் ஒன்றிணைந்து வந்தார்கள்; அவர்கள் இருவரும் இயேசு கிறிஸ்துவுக்காக எதையும் தர, ஏன் தங்களுடைய உயிரையும் தர முன்வந்தார்கள். இந்த இருவருடைய விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நாம் அவர்களைப் போன்று இயேசுவுக்காக நம்மையே முழுவதுமாய் தர முன்வருகிறோமா என சிந்தித்துப் பார்ப்போம்.

(( ஒருசமயம் கடலில் மூழ்கி முத்தெடுப்பவர்கள், அவ்வாறு கடலில் மூழ்கும்போது எப்போதோ கடலில் மூழ்கிய ஒரு கப்பலைக் கண்டுபிடித்தார்கள். அதிலிருந்து அவர்கள் நிறைய விலை உயர்ந்த பொருட்களை கண்டெடுத்தார்கள். அதில் ஒன்றுதான் வைரத்தால் ஆன மோதிரம். அந்த மோதிரத்தில் ஒரு கையானது இதயத்தைத் தாங்கிப் பிடிப்பது போன்று இருந்தது. அதற்குக் கீழே “ I have nothing more to give you” (என்னுடைய இதயத்தைத் தவிர உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை) என்ற வசனம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த மோதிரம் ஒருவர் மற்றவர்மீது கொண்ட அன்பை வெளிப்படுத்த மிக உன்னத பரிசைத் தருவது போன்று இருக்கின்றது. பேதுருவும் பவுலும் தங்களுடைய உயிரையே தந்து, இயேசுவின் மீது உள்ள அன்பை வெளிப்படுத்துகிறார்கள். நாமும் இயேசுவின் மீது கொண்ட அன்பை வெளிபடுத்த நமது உயிரைத் தரமுன்வரவேண்டும்.))

நற்செய்தியில் இயேசுகூறுவார், “என் பொருட்டு தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவார் (மத் 16:25). பேதுருவும் பவுலும் இயேசுவுக்காக தம்மை இழந்தார்கள், வாழ்வடைந்தார்கள். நாமும் அவ்வாறு செய்வோம். வாழ்வடைவோம்.

2. வலுவின்மையில் சிறந்தோங்கும் வலிமை

பேதுருவும் பவுலும் குறைபாடு உள்ளவர்கள்தான். பேதுரு படிக்காதவர், ஆண்டவரை இயேசுவை மும்முறை மறுதலித்தவர். இருந்தாலும் இயேசு அவரை திருச்சபையின் தலைவராக ஏற்படுத்துகிறார். பவுல் திருச்சபையை துன்புறுத்தியவர், உடல் குறைபாடோடு இருந்தவர் (“உடலில் தைத்த முள்” (2 கொரி 12: 7-9)என பவுல் சொல்வதை விவிலிய அறிஞர்கள், அவர் பார்வைக் குறைபாடோடு, திக்கு வாயராக இருந்ததை குறித்துக்காட்ட சொல்வதாக விளக்கம் தருவார்கள்) அப்படியிருந்தாலும் கடவுள் அவரை புறவினத்தாருக்கு திருத்தூதராக ஏற்படுத்துகிறார். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவர்கள் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையும் அன்பும்தான்.

நாம் குறைபாடு உள்ளவர்களாக இருந்தாலும், பலவீனமானவர்களாக இருந்தாலும் இறைவன் தன்னுடைய வலிமையை நம்முடைய வலுவின்மையில் சிறந்தோங்கச் செய்வார். அதனை இவர்கள் இருவருடைய வாழ்விலிருந்தும் நாம் கண்டுகொள்கிறோம்.

ஆகவே, புனித பேதுரு, பவுலின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவர்களை இறைவன் நமக்குத் தந்ததற்காக இறைவனைப் போற்றுவோம், அவர்களைப் போன்று ஆண்டவர் இயேசு பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம். அதன்வழியாக சுவின் அன்புக்கு சாட்சிகளாக வாழ்வோம் இறையருள் பெறுவோம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பாரம்பரிய அக்குபஞ்சர் புள்ளிகள்

பாரம்பரிய அக்குபஞ்சர் புள்ளிகள் 
உடலில் பல குத்தூசி மருத்துவம் இடங்கள் இருந்தாலும், பெரும்பாலான குத்தூசி மருத்துவம் நிபுணர்கள் இன்னும் பாரம்பரியமாக அடையாளம் காணப்பட்ட புள்ளிகளைப் பார்க்கிறார்கள். குத்தூசி மருத்துவம் புள்ளிகள் 14 முக்கிய மெரிடியன் சேனல்களுடன் வரைபடமாக்கப்பட்டுள்ளன. சீன மருத்துவத்தில் , ஒரு மெரிடியன் சேனல் ஜிங் ஐயோ என்றும் அழைக்கப்படுகிறது, இதன் மூலம் குய் (முக்கிய வாழ்க்கை ஆற்றல்) சூ (இரத்தம்), ஜின்யே (உடல் திரவங்கள்), ஜிங் (சாரம்) மற்றும் ஷென் (ஆன்மா) பாய்கின்றன. ஒரு மெரிடியன் சேனல் 12 உள் உறுப்புகளில் ஒவ்வொன்றையும் குறிக்கிறது. இரண்டு கூடுதல் சேனல்கள் "அசாதாரண நாளங்களுடன்" தொடர்புடையவை - முதுகெலும்பின் உட்புறம் (ஆளும் பாத்திரம்) மற்றும் மற்றொன்று அடிவயிற்றின் நடுக்கோட்டில் (கருத்தரிப்பு பாத்திரம்).

மெரிடியன்கள் ஒரு வலையமைப்பைப் போன்றவை, மேற்கத்திய மருத்துவத்தில் சுற்றோட்ட அமைப்புடன் ஒப்பிடலாம், இருப்பினும், மெரிடியன்கள் புலப்படாது, மாறாக ஆற்றல் மிக்கவை. 14 மெரிடியன் சேனல்களில் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட எண்ணைக் கொண்டுள்ளன, மேலும் குத்தூசி மருத்துவம் புள்ளிகள் அர்த்தங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் பின்வருவன அடங்கும்:   

நுரையீரல் (1); பெரிய குடல் (20); வயிறு (45); மண்ணீரல் (21); இதயம் (9); சிறுகுடல் (19); சிறுநீர்ப்பை (67); சிறுநீரகம் (27); இதயப் புறணி (9); டிரிபிள் எனர்ஜிசர், சீன மருத்துவத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உறுப்பு, ஆனால் மேற்கத்திய மருத்துவத்தில் அல்ல (23); பித்தப்பை (44); கல்லீரல் (14); ஆளும் பாத்திரம் (28, யாங் கடல் என்றும் அழைக்கப்படுகிறது); மற்றும் கருத்தரிப்பு பாத்திரம் (24, யின் கடல் என்றும் அழைக்கப்படுகிறது).

ஒவ்வொரு அக்குபஞ்சர் புள்ளியும் பல கோளாறுகளின் பட்டியலைக் குணப்படுத்த முடியும் .

பொதுவாகப் பயன்படுத்தப்படும் புள்ளிகள் மற்றும் குத்தூசி மருத்துவம் சிகிச்சைகள் பின்வருமாறு:
வயிற்றுக் கால்வாய்: ST36 - காலின் முன்புறத்திலும் முழங்காலுக்குக் கீழும் அமைந்துள்ள இந்தப் புள்ளி, செரிமானக் கோளாறுகள், நோயெதிர்ப்பு குறைபாடு, சோர்வு மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது. இது உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அடித்தளமாக உள்ளது.
மண்ணீரல் கால்வாய்: SP6 – கணுக்காலுக்கு மேலே காலின் உள் பக்கத்தில் அமைந்துள்ள இந்தப் புள்ளி, ஒழுங்கற்ற மாதவிடாய், செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு கோளாறுகள் போன்ற ஹார்மோன் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கிறது.
கல்லீரல் சேனல்: LV3 - பாதத்தின் மேற்புறத்திலும், இரண்டாவது மற்றும் முதல் கால்விரல்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்தப் புள்ளி, தலைவலிக்கு சிகிச்சையளிக்கிறது, உணர்ச்சி சக்தியை சமநிலைப்படுத்துகிறது, மாதவிடாயை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
ஆளும் பாத்திரம்: GV20 - தலையின் மேற்புறத்தில் அமைந்துள்ள இந்தப் புள்ளி, தலைச்சுற்றல், காது மற்றும் மூக்கு கோளாறுகள் மற்றும் பல்வேறு மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கிறது.
கருத்தரிப்பு நாளம்: CV12 - மார்பக எலும்புக்கும் தொப்புளுக்கும் இடையில் அமைந்துள்ள இந்தப் புள்ளி, செரிமானக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளித்து, குடல்களை ஒத்திசைக்கிறது.
கருத்தரிப்பு நாளம்: CV6 - தொப்புளுக்கு சுமார் 1.5 அங்குலத்திற்கு கீழே அமைந்துள்ள இந்தப் புள்ளி, சோர்வு, பலவீனமான மண்ணீரல் குய் மற்றும் கீழ் வயிறு மற்றும் உறுப்புகளின் ஆற்றலைக் கையாளுகிறது.
பெருங்குடல் கால்வாய்: LI4 - கட்டைவிரலுக்கும் முதல் விரலுக்கும் இடையில் கையின் பின்புறத்தில் அமைந்துள்ள இந்தப் புள்ளி, நோய் எதிர்ப்பு சக்தியைச் செயல்படுத்தி, குறிப்பாக முகத்தில் வலியைப் போக்க உதவுகிறது.
சிறுநீரக சேனல்: KI3 - உள் கணுக்காலுக்குப் பின்னால் அமைந்துள்ள இந்தப் புள்ளி, ஆஸ்துமா, தூக்கமின்மை, தொண்டை வலி மற்றும் கீழ் முதுகு வலிக்கு சிகிச்சையளிக்கிறது.
உடலின் பின்புறத்தில், முதுகெலும்பின் இருபுறமும் யின் உறுப்புகளுடன் (திட உறுப்புகள்) இணைக்கும் பல அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளன. இந்த அக்குபஞ்சர் புள்ளிகள் இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் பெரிகார்டியம் (இதயத்தைச் சுற்றியுள்ள சாக்) ஆகியவற்றை வலுப்படுத்துவதில் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகின்றன, மேலும் அவை சீன மருத்துவத்தில் மிகவும் முக்கியமானவை. சிறுநீர்ப்பைக் குழாயில் அமைந்துள்ள பல புள்ளிகள் பல்வேறு நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க முடியும். பொதுவான புள்ளிகள் மற்றும் அவற்றின் அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்:  
BL13 – ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, மூக்கடைப்பு மற்றும் தொண்டை புண் உள்ளிட்ட நுரையீரல் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்கிறது.
BL14 - இந்தப் புள்ளி இதயத் துடிப்பு, பதட்டம் மற்றும் மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் பீதி தாக்குதல்கள் உள்ளிட்ட பெரிகார்டியத்துடன் தொடர்புடைய நிலைமைகளுக்கு உதவும்.
BL15 – இரத்தம் மற்றும் சுற்றோட்ட பிரச்சினைகள் உட்பட இதயம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்கிறது. படபடப்பு, பதட்டம், பயம், மன அழுத்தம் மற்றும் நினைவாற்றல் குறைபாடு போன்ற இதயம் தொடர்பான அனைத்து உணர்ச்சிப் பிரச்சினைகளுக்கும் இது முக்கிய அம்சமாகும். இது தூக்கமின்மை மற்றும் இரவு வியர்வைக்கும் உதவும்.
BL18 – ஹெபடைடிஸ், மஞ்சள் காமாலை மற்றும் சிரோசிஸ் போன்ற அனைத்து உடல் கல்லீரல் நிலைகளுக்கும் முக்கிய புள்ளி. மனச்சோர்வு, கோபம், எரிச்சல் மற்றும் மன அழுத்தம் போன்ற உணர்ச்சிப் பிரச்சினைகளைப் போக்க இது ஒரு முக்கிய புள்ளியாகும்.
BL21 - இந்தப் புள்ளி மண்ணீரலுடன் தொடர்புடைய பிரச்சனைகளைப் போக்க உதவும். சில உடல் மண்ணீரல் பிரச்சனைகளில் வீக்கம், வயிற்று வலி, வீக்கம் மற்றும் பசியின்மை ஆகியவை அடங்கும்.
BL23 – இந்தப் புள்ளி முழு சிறுநீரக அமைப்பையும் குணப்படுத்துகிறது. ஆண்களில் ஆண்மைக் குறைவு போன்ற பாலியல் குறைபாடு பிரச்சனைகளையும், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பெண் பாலியல் மற்றும் இனப்பெருக்கக் கோளாறுகளையும் இது மேம்படுத்தும். இது கீழ் முதுகு வலி மற்றும் சுளுக்குக்கும் ஒரு முக்கிய புள்ளியாகும், மேலும் காது தொடர்பான டின்னிடஸ் மற்றும் காது கேளாமை போன்ற பிரச்சினைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிங்கராயர் திருமண பொன்விழா வாழ்த்துக்கள்

திருமண பொன்விழா கொண்டாடும் தம்பதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 50 ஆண்டு திருமண பந்தம் என்பது ஒரு பெரிய மைல்கல். இந்த இனிய நாளில், உங்கள் அன்பு எப்போதும் நிலைத்திருக்கவும், உங்கள் இல்லறம் மகிழ்ச்சியுடன் திகழவும் வாழ்த்துகிறேன். 

பொன்விழா என்பது ஒரு தம்பதியினர் 50 ஆண்டுகால திருமண வாழ்க்கையை கொண்டாடும் ஒரு சிறப்பு நிகழ்வு. இது ஒரு தங்கத்தின் மதிப்பை போல், வலிமையும், அழகும் நிறைந்த ஒரு பயணம். 

🌹திருப்பாடல்கள் 35:18
மாபெரும் சபையில் உமக்கு நன்றி செலுத்துவேன்; திரளான மக்களிடையே உம்மைப் புகழ்வேன்.
கடவுள் நம்பிக்கையிலும் ஜெபத்திலும் ஆழம் கண்ட வாழ்வு. .இறைவார்த்தை..

🌹பிள்ளைகளில் மகிழ்ச்சியும் பெருமையும் கண்ட வாழ்வு .

🌹பேரப்பிள்ளைகளில் ஆனந்தமும் மனதிருப்தியும் அடைந்த வாழ்வு.

🌹மருமகனையும் மருமகளையும் கடவுளின் கொடையாக கண்டு பூரித்த வாழ்வு.

🌹நீங்கள் எனக்கும் ஒரு மார்த்தாவாக மரியாவாக இருக்கின்ற மகிழ்ச்சியான வாழ்வு. 

🌹குருக்கள் மட்டில் குருத்துவத்தில் 
மகிழ்ச்சியும் மட்டற்ற மரியாதையும் கொண்ட வாழ்வு.


"50 ஆண்டுகால உங்கள் அன்புப் பயணத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! வரும் காலங்களிலும் இதே அன்புடன் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வாழ்த்துகிறேன்."

"தங்கத் திருமணமாகிய பொன்விழா நாளில், உங்கள் வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப் பெற வாழ்த்துகிறேன்." 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Retreat Titles

---
## Preaching Retreat Titles for Religious Nuns

Here are some thoughtful and inspiring titles for a preaching retreat for religious nuns, focusing on themes of spiritual growth, renewal, and their consecrated life:

---
🌹 Pope Leo 
https://www.vaticannews.va/en/pope/news/2025-06/pope-leo-xiv-commends-religious-sisters-for-their-commitment.html
### Titles Emphasizing Deepening Faith & Spirituality

* **Heart Ablaze: Rekindling the Fire of Consecration**
1. பற்றி எரியும் யோவானை போல 
2. தந்தை பியோ 


* **Echoes of Eternity: Listening to God's Call in a Noisy World**
* **The Beloved's Gaze: Dwelling in Divine Love**
* **Seamless Garment: Weaving Prayer and Presence in Daily Life**
* **Beholding the Face of Christ: A Journey into Contemplative Prayer**
* **Unveiling the Sacred: Discovering God in the Ordinary**

---

### Titles Focused on Mission & Vocation

* **Prophets of Hope: Embracing Our Call in Today's World**
* **Living Letters: Incarnating Christ's Love to All**
* **Sent Forth: The Dynamics of a Consecrated Mission**
* **Stewards of Grace: Cultivating a Culture of Encounter**
* **New Wine, New Wineskins: Adapting Our Charism for Contemporary Needs**

---

### Titles for Renewal & Restoration

* **Springs in the Desert: Finding Refreshment in the Spirit**
* **Reclaiming Our First Love: A Retreat into the Heart of Our Vows**
* **The Art of Letting Go: Embracing Freedom in Christ**
* **Mending the Nets: Renewing Our Spiritual Practices**
* **From Weariness to Wonder: Rediscovering Joy in Consecrated Life**

---

### Titles Reflecting Wisdom & Legacy

* **Guardians of the Flame: Preserving and Passing on Our Charism**
* **Wells of Wisdom: Drawing from the Riches of Our Tradition**
* **The Unfolding Tapestry: Our Lives Woven into God's Plan**

---

When choosing, consider the specific theme or focus of the retreat, the order's charism, and the current spiritual needs of the nuns.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மூவொரு கடவுள்

இறைவன் மூவொரு கடவுள்

நம் இறைவன் மூவொரு கடவுள்

மூன்று ஆட்களாய் மூன்று ஆட்களாய் மூன்று ஆட்களாய் ஒரே கடவுளாய் ஒரே கடவுளாய் ஒரே கடவுளாய் இருக்காரு

தந்தை கடவுளே தந்தை கடவுளே தந்தை கடவுளே 
படைக்கும் கடவுளே படைப்பின் கடவுளே படைப்பின் கடவுளே உலகைப் படைத்த கடவுளே  படைக்கும் கடவுளே.

 மகன் கடவுளே மகன் கடவுளே மகன் கடவுளே திருமகன் கடவுளே மீட்பின் கடவுளே மீட்பின் கடவுளே மீட்பின் கடவுளே எங்கள் மீட்பரே 
இயேசு கிறிஸ்துவே

ஆவி கடவுளே ஆவி கடவுளே தூய ஆவி கடவுளே  
தூய கடவுளே அருள் பொழியும் கடவுளே நம்மை ஆளும் கடவுளே 
தூய ஆவியாரே தூய ஆவியாரே
தூய ஆவியாரே துணையாளரே


ஒரு தீவில் தனிமையாக வாழ்ந்த மூன்று துறவிகளை ஆயிரம் அவர்கள் சந்திப்பதற்காக சென்றார் அப்பொழுது தான் தெரிந்தது அவர்களுக்கு கர்த்தர் கற்பித்த ஜெபம் கூட தெரியவில்லை என்று ஆகவே ஆயிரம் அவர்கள் அவர்களுக்கு கர்த்தர் சமம் சொல்லிக் கொடுத்தார் அவர் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர்கள் அந்த ஜெபம் மறந்து போய்விட்டது என்பதை உணர்ந்து ஓடினார்கள் அப்பொழுது சொன்னார்கள் கலைஞருக்கு மீண்டும் சொல்லிக் கொடுங்கள் ஆயிருக்கும் என்ன ஆச்சு என்ன செய்வது அப்பொழுது அவர் கேட்டால் இதற்கு முன்பாக எப்படி ஜெபம் செய்தீர்கள் என்று அவர்கள் சொன்னார்கள் நாங்கள் மூன்று பேராக இருக்கிறோம் நீங்களும் மூன்று பேராக இருக்கிறீர்கள் எங்கள் மேல் இரக்கமாயிரும் என்று சொன்னார்கள் 

🌹 3 ஆட்களின் ஒன்றிப்பை ஒற்றுமையை அறிந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.
Communion of persons.
🌹மூவொரு கடவுளோடு உள்ள ஜெப ஒன்றிப்பில் அவரை அறிந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்.

புனித அகஸ்டின் 

" திரித்துவக் கடவுளின் கனியைப் பெறுவதற்காக, அவருடைய சாயலில் நாம் படைக்கப்பட்டுள்ளோம், அது உண்மையில் நமது மகிழ்ச்சியின் முழுமை, அதை விட பெரியது எதுவுமில்லை."

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS