கிறிஸ்துவ ஒன்றிப்பு


கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் என்றால் என்ன?
கிறித்தவ ஒன்றிப்பு (Ecumenism) என்பது பிளவுபட்டு நிற்கின்ற கிறித்தவத் திருச்சபைகள் தமக்குள்ளே அதிக ஒற்றுமை நிலையை அடையவும் ஒன்று சேர்ந்து செயல்படவும் மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளைக் குறிக்கும். கொள்கை, வரலாறு, நடைமுறை போன்றவற்றில் பிளவுபட்டிருக்கின்ற திருச்சபைகள் ஒன்றிணைந்து வருவது இங்கே குறிக்கப்படுகிறத..


&&&&&&&&&&&&&&&&&&

திருத்தந்தை பிரான்சிஸ்.  (ANSA)
திருத்தந்தை
ஒரே குடும்பத்தைச் சார்ந்த கிறிஸ்தவர்களாக மாற...
58ஆவது கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரமானது சனவரி 18 சனிக்கிழமை முதல் 25 சனிக்கிழமை வரை நடைபெற்று வருகிறது .

மெரினா ராஜ் – வத்திக்கான்

எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! என்ற இறைவார்த்தைக்கேற்ப இவ்வாண்டும் கிறிஸ்தவர்களாகிய நாம் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து வாழ கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் அழைக்கப்படுகின்றோம் என்று குறுஞ்செய்தி ஒன்றினை தனது டுவிட்டர் வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 18 சனிக்கிழமை ஹேஸ்டாக் செபம் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது விருப்பத்தேர்வு அல்ல என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தை சார்ந்த கிறிஸ்தவர்களாக மாற வாழ கிறிஸ்தவர்களாகிய நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், அனைவரும் ஒன்றாக இருப்பார்களாக என்ற யோவான் நற்செய்தியின் இறைவார்த்தைக்கேற்ப வாழ நாம் செபிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது விருப்பத்தேர்வல்ல என்றும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாண்டு 58ஆவது கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரமானது சனவரி 18 சனிக்கிழமை முதல் 25 சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது. யோவான் நற்செய்தியில் இடம்பேரும் இலாசர் உயிர்த்தெழுதல் நிகழ்வின்போது இயேசு மார்த்தாவிடம் கேட்ட, “இதை நீ நம்புகிறாயா?” என்ற இறைவார்த்தையானது கருப்பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

&&&&&&&&&&&&&&&&&&&

கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ  (AFP or licensors)
திருஅவை
இணைந்து பணியாற்றுவது ஒன்றிப்பின் அடையாளம்! : கர்தினால் சாக்கோ
கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துகிறது. கிறிஸ்துவின் பணியின் பின்னணியில் திருஅவையும் கிறிஸ்தவர்களும் அந்தந்த சூழல்களுக்கேற்ப இதனைச் செயல்படுத்த வேண்டும் : கர்தினால் சாக்கோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது பகிரப்பட்ட நம்பிக்கை மற்றும் ஒருவருக்கொருவர் மீதான மரியாதையில் வேரூன்றிய ஆன்மிக மற்றும் நடைமுறை பெருமுயற்சியாகும் என்று கூறியுள்ளார் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ.

உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கத் தலத் திருஅவைகள் பிற கிறிஸ்தவ சபைகளுடன் இணைந்து இம்மாதம் 18-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதிவரை கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான இறைவேண்டல் வாரத்தை சிறப்பிக்கும் வேளையில் இவ்வாறு கூறியுள்ளார் கர்தினால் சாக்கோ.

மேலும் கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ  சபைகளை ஒரே அமைப்பாக இணைப்பது மட்டுமல்ல, மாறாக, பன்முகத்தன்மையைத் தழுவி வேறுபாடுகள் இருந்தபோதிலும் ஒன்றிணைந்து செயல்படுவது என்பதையும் விசுவாசிகளுக்கு அவர் நினைவூட்டியுள்ளார்.

ஒவ்வொரு கிறிஸ்தவத் திருச்சபைக்கும் உள்ள ஒரு தனித்துவமான வரலாறு, மரபுகள் மற்றும் ஆளுகை பாதுகாக்கப்பட வேண்டும் என்று தனது உரையில் கேட்டுக்கொண்டுள்ள கர்தினால், , கிறிஸ்தவ மரபுகளுக்கு இடையே நெருக்கமான உறவுகளுக்கான பாதையாக உரையாடல் மற்றும் பகிரப்பட்ட பார்வை விளங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கிறிஸ்தவத்  திருச்சபைகளுக்கு இடையே, குறிப்பாக, கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் மரபுகளுக்கு இடையே உள்ள உறவை, கிறிஸ்தவத்தின் "இரண்டு நுரையீரல்கள்" என்று திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் விவரித்தபடி, ஏற்கனவே உள்ள ஒன்றிப்பின் பல அடிப்படை அம்சங்களையும் எடுத்துக்காட்டியுள்ளார் கர்தினால் சாக்கோ.

பெந்தக்கோஸ்து கிறிஸ்தவச் சபைகளின் பங்களிப்புகளை ஒப்புக்கொண்டுள்ள கர்தினால் 2015-ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ. அமைப்பினரால் கொள்ளப்பட்ட காப்டிக் கிறித்தவர்கள் கத்தோலிக்க நாள்காட்டியில் சேர்க்கப்பட்டுள்ளதையும், கிழை வழிபாட்டு முறை திருஅவையில் இருந்து நினிவேயின் புனித ஈசாக்கை உரோமன் மறைச்சாட்சியர் இயலில் சேர்க்கும் திருத்தந்தையின் அண்மைய முடிவு குறித்தும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

🌹🌹🌹🌹🌹❤️

 புனித பிரான்சிஸ் வலியுறுத்துவதும் இந்த ஒன்றிப்பை தான் இது என மட்டுமல்ல கடவுளுடைய படைப்புகள் அனைத்தும் ஒன்றித்து இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய ஆவல்.
 அது அடிப்படையில் பிரான்சிஸ் கன்ஸ் வாழ்வு ஒன்றிப்பு காண வாழ்வு தான் நாம் பல பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் கப்புசெயின் வாழ்வை வாழ்வதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறோம் பிரான்சிஸ்  கொள்கைகள் அனைத்தும் ஒன்றிப்பின் பிம்பங்களாக இருக்கின்றன. நற்செய்தியின் அடிப்படையில் சகோதரித்துவ வாழ்வையும் அன்பையும் பறைசாற்றி ஒன்றிணைந்து வாழுகின்ற வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டுள்ளோம்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக