இரக்கத்தின் ஆண்டவரே என் மீது இரக்கம் வையும் - 2
அளவில்லா இரக்கம் கொண்டவரே
அனுதினம் என்னை ஆள்பவரே
ஆறுதல் என்னில் தருபவரே
அமைதியை என்னில் அளிப்பவரே
ஆபத்தில் உதவும் தூயவரே
அழைத்திடும்போது வருபவரே
அழுகையில் ஆறுதல் தருபவரே
அன்பாய் தேற்றி அழைப்பவரே
துன்புறுவோர் துயர் துடைப்பவரே
துணை வந்து எம்மை ஆள்பவரே
நிம்மதி வாழ்வில் தருபவரே
நீங்காதென்னில் நிலைப்பவரே
கண்ணீர் யாவும் துடைப்பவரே
கருணைக்கண் நோக்கி பார்ப்பவரே
நிலவாய் இதயத்தில் இருப்பவரே
நீங்கா தென்னில் வாழ்பவரே
பாவங்கள் என்னில் தீர்ப்பவரே
பாசத்தை என் மேல் பொலிபவரே
திடம் மிக என்னில் தருபவரே
தினம் தினம் என்னை
தொலைந்து போன ஆடு என்னை
தோளில் வைத்து மகிழ்பவரே காப்பவரே
நீதியை என்னில் தருபவரே
நிம்மதி நிலை விட செய்பவரே
தாயாய் என்னை காப்பவரே
தந்தையாய் என்னை அழைப்பவரே
3.






0 கருத்துகள்:
கருத்துரையிடுக