யாருமில்லை என்று நான் அழுத

யாருமில்லை என்று நான் அழுத

யாருமில்லை என்று
நான் அழுத போது
தாயை போல என்னை
தேடி வந்த தெய்வம்
இயேசுதான் என் இயேசுதான் – 2

வியாதி படுக்கையிலே
நான் விழுந்த வேளையிலே – 2
காயங்களை ஏற்றவரே
காயங்களை ஆற்றினிரே – 4 – இயேசுதான்

வாலிப பாதையிலே
நான் விழுந்த வேளையிலே
அழைத்தவர் வந்தீரே
அன்பு கரம் நீட்டினீரே - 4
- இயேசுதான் என்


ஊழியத்தின் பாதையில் நானும் உடைந்த நேரத்தில்

எதிர்காற்று வீசும் நேரம்
என் படகு மூழ்கும் நேரம் – 2
நங்கூரமாய் வந்தவரே
நன்மைகளை தந்தவரே – 4 – இயேசுதான்

யாருமில்லை என்று நான் அழுத

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குப்பையான என்னை கோபுரத்தில் வைத்தீரே

குப்பையான என்னை கோபுரத்தில் வைத்தீரே

Kuppayana Ennai
குப்பையான என்னை கோபுரத்தில் வைத்தீரே
உதவாத என்னை உமக்காய் தெரிந்தீரே
நீங்கதான் எல்லாம் இயேசப்பா
என் இயேசப்பா
உம்மை விட யாருமில்லப்பா

1. கலங்கின எனக்கு ஆறுதல் அளித்தீரே
கண்ணீரில் எனக்கு கிருபை தந்தீரே
சோர்ந்துப் போய் இருந்தேனப்பா
என் இயேசப்பா
சோகங்கள் தீர்த்தீரப்பா

2. தனிமையில் எனக்கு துணையாய் நீன்றீரே
ஆனாதை எனக்கு அடைக்கலம் தந்தீரே
தாகத்தால் தவித்தேனப்பா
என் இயேசப்பா
ஜீவ தண்ணீர் தந்தீரப்பா

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இந்த பூவிலே ஒரு காலத்தில்

இந்த பூவிலே ஒரு காலத்தில்
தனம் தேடும் நோக்கத்தில் திசை போகும் நாளில்
நீ காமரா போர்ச்சுகீஸ் தேசத்தார்
கடல் பயணம் செய்தார்கள் சந்தோஷமாய்
சொல்லொணாததாய் புயலும் வீச
காணுணாததாய் இருளும் சூழ
மூழ்கவே கப்பலும் அந்தோ மடிந்தோமென்று
தஞ்சம் தனைத் தேடினர் - குளோரியா
அன்னை தஞ்சம் தனை தேடினர் - குளோரியா

1. அன்னையைத் தாம் நினைந்தே மாலுமிகள் அழுதார்
பிழைப்போமேல் உமக்காய்
ஒரு கோவிலைச் செய்வோமென்றார்
மாதாவாம் மேரியின் உன்னத அருளால்
கரை சேர்ந்திட நொடியில் கண்டார்

2. மீண்டவர் யாவருமே மேரியம் மாதாவை
கண்டு வணங்கினர் தாம்
மேலும் நன்றி நவின்றனர் தாம்
மாதாவாம் மேரியின் திருச்சந்நிதியை
அவராலயமாகப் பணிந்தார்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS