குட்டீஸ் பகுதி

நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க? இறை இயேசுவின் அருளாலும் அன்னை மரியின் பரிந்துரையாலும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாவும் இருப்பீங்கனு நினைக்கிறேன்.
2015 இதோ பத்து மாதம் முடிந்து ஆண்டோட இறுதிக்கு வந்துட்டோம். கடந்த பத்து மாதங்கள்ள எத்தனையோ விஷயங்கள் நாம சந்திச்சிருப்போம். அதில பல அனுபவங்களும் கிடைச்சிருக்கும். சில விஷயங்கள்ள வெற்றி கிடைச்சிருக்கும். சில விஷயங்கள்ள தோல்வி அடைஞ்சிருப்போம். சிலர் பல முயற்சிகள் பண்ணியிருப்பீங்க ஆனா தோல்விய சந்திச்சிருப்பீங்க. என்ன குட்டீஸ் மனம் சோர்ந்திட்டீங்களா? மனம் சோர்வடையவே கூடாது.
ஆங்கிலத்தில இவ்வாறு சொல்வாங்க positive attitude is the key to success. நம்மளோட முயற்சி சரியான இலக்கை அடையனும்னா நம்மளோட அனுகுகுறையும் நேர்மறையா இருக்கனும். இந்த நேர்மறை அணுகுமுறை யால தங்களோட வாழ்க்கையின் இலக்கை எட்டிய மனிதர்கள் நிறைய உண்டு. அவர்களில் சிலரைப் பற்றி பார்ப்போம்.
இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் ஒரு வீரன் தன் தோழர்களிடமிருந்து வழி தவறி காட்டில் மாட்டிக்கொண்டான். அந்தக் காட்டை எதிரி நாட்டுப்படையினர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். சிக்கிக் கொண்டால் அவனது உயிர் அவனிடம் இல்லை. இவன் தப்பிப்பதற்காக அங்குமிங்கும் பார்க்கும்பொழுது ஒரு குகை கண்ணில் பட்டது. உடனே அங்கு சென்று ஒளிந்து கொண்டான். அவன் கடவுள் கிட்ட ஆண்டவனே என்னை எதிரிகளிடமிருந்து காப்பாற்று. நான் உம்மை நம்புகிறேன். நீங்க ஏதாவது ஒரு அற்புதம் செஞ்சி என்னைக் காப்பாத்துங்கனு வேண்டிக் கொண்டான். செபித்து விட்டு ஆண்டவரிடமிருந்து உதவி வருமா என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் எட்டுக்கால் பூச்சி அந்த குகை வாசலிலே வலை பின்னுவதைப் பார்த்தான். அவன் சிரிச்சிக்கிட்டே நான் கடவுள் கிட்ட எதிர்பார்த்தது ஒரு வலிமையான சுவரை. ஆனால் அவர் அனுப்பியிருப்பது ஒரு சின்ன வலிமையற்ற எட்டுக்கால் பூச்சியை. கடவுளுக்கு நல்ல நகைக்சுவை உணர்வு அப்படினு மனசில சொல்லி அவன் கேலியா சிரிச்சிருக்கான்.
அப்போ அந்த எதிரி வீரர்கள் ஒவ்வொரு குகையா தேடிட்டே வர்றாங்க. ஒரு வீரன் நம்ம கதையின் நாயகன் இருந்த குகைகிட்ட வந்து தேட முயற்சிக்கும் போது தலைமை வீரன் அவனைப் பார்த்து இந்த குகையினுள் தேட வேண்டாம். எதிரி உள்ளே போயிருந்தால் இந்த எட்டுக்கால் பூச்சி கட்டிய வலை அறுந்திறுக்கும். எனவே போக வேண்டாம் என்று தடுத்து விட்டான். வீரனும் காப்பாற்றப் பட்டான். அவனுக்கு உடனே விவிலியத்தில் வாசித்த இறைவார்த்தை நினைவுக்கு வருகிறது. ‘‘என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல என்கிறார் ஆண்டவர்’’ (எசா 55 : 8) அவன் உடனே கடவுளிடம், ‘‘ஆண்டவனே என்னை மன்னித்துவிடு. உம்முடைய பார்வையில் இந்த எட்டுக்கால் பூச்சி ஒரு சுவரை விட வலிமையானது’’ என்று செபித்தான். ஆம் அன்பான பிள்ளைகளே சில நேரங்களில் செபம் சூழ்நிலையை மாற்றாது. ஆனால் நமது அனுகுமுறையை அந்த சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிவிடும்.
நாமும்  கூட குழந்தைகளே நமது அணுகுமுறையை சூழ்நிலைக் கேற்றவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். எதையும் ஒரு நேர்மறை கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் நம்மால இந்த உலகத்தில எத்தனை இடர்கள், இன்னல்கள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். இதற்கு உதாரணமா தந்தை பியோவை சொல்லலாம்.
ஒரு கதை சரியா குட்டீஸ். ஒரு கதைன்னு சொன்ன உடனே உங்கள் முகம் சந்தோஷமாகுது, எனக்கும் கூட அப்படித்தான். கதைனா ரொம்ப பிடிக்கும். சரி அடுத்த கதைக்குப் போகலாமா குட்டீஸ். ஒரு மனிதன் காட்டு வழியே வரும்போது மிகுந்த களைப்பிற்குள்ளாகி மயங்கி ஒரு மரத்தினடியில் விழுந்து விட்டான். அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை. அப்பொழுது அந்த வழியே ஒரு குடிகாரன் சென்றான். அவன் அவனைப் பார்த்து பாருடா! ஒரு குடிகாரன் நல்லா குடிச்சிட்டு விழுந்து கிடக்கான் அப்டின்னு சொல்லிட்டே அவனை கடந்து சென்று விட்டான். அடுத்து அந்த வழியே ஒரு விவசாயி சென்றான். அவன் அவனைப் பார்த்து நல்ல உழைப்பாளியா இருக்கனும் அதனால் தான் உழைத்து களைத்துப்போய் படுத்து இருக்கான் அப்படின்னு அவனும் சொல்லிட்டு போயிட்டான். அப்புறம் அந்த வழியே ஒருத்தர் வர்றார். அவர் யாருன்னா தன் பிள்ளைகளால கை விடப்பட்ட ஒரு தந்தை. அவர் பார்த்துட்டு ஐயோ பாவம் இவரை இவரோட பிள்ளைகள் சுமையா கருதி துரத்தி விட்டுட்டாங்க போல. அப்படினு மனசில பரிதாபப்பட்டுட்டே சென்றார். அப்போ அந்த வழியா தந்தை பியோ வருகிறார். அவர் என்ன சொல்லிருப்பாருனு உங்களாள யோசிக்க முடியுதா? ஆமா கண்டிப்பா அவர் அந்த மனிதனை ஒரு துறவியாத்தான் பார்த்திருப்பாரு. ஏன்னா தந்தை பியோ தன்னோட வாழ்விலே எல்லாத்தையும் நேர்மறை அணுகுமுறையாதான் பார்த்தார்.
தந்தை பியோவோட குருத்துவ வாழ்க்கையில எத்தனையோ முறை சாத்தானால் சோதிக்கப்பட்டடபோதும் சரி, கடுமையான நோயால் தாக்கப்பட்ட போதும் சரி அவர் எல்லாத்தையும் கடவுளை தான் அடையக்கூடிய படிக்கற்களாத்தான் நினைச்சார். அது மட்டும் இல்ல இந்த சோதனைகள் கடவுளால் அனுமதிக்கப்பட்டது. அவர் இதிலிருந்து தன்னை நிச்சயம் விடுவிப்பார் என்று பொறுமையோடும் மகிழ்ச்சியோடும் தனது துன்பங்களை ஏற்றுக்கொண்டார். ஐயோ நான் நினைத்தபடி குருத்துவ வாழ்வு இல்லையே என்ற சோர்ந்து போகவில்லை. அதனால்தான் இறைவனால் அவர் புனிதராக உயர்த்தப்பட்டார்.
அன்புக் குழந்தைகளே ! நாமும் வாழ்வில் வெற்றியோட சிறப்பா வாழ நேர்மறை சிந்தனை நமக்கு மிகவும் தேவை. அதோட இறைவனோட அருளும் தேவை. நம்முடைய முயற்சிகளை  விசுவாசத்தோட இயேசுவின் பாதத்தில் வச்சிட்டு தந்தை பியோவைப்போல நேர்மறையா எல்லா செயல்களையும் எதிர் கொண்டால் வெற்றி நிச்சயம். செய்வீங்களா குட்டீஸ். அதுமட்டும் இல்ல இந்த கிறிஸ்துமஸ் உங்களுக்கு இனிமையானதாகவும் புத்தாண்டு வளமாகவும் அமைய என்னோட வாழ்த்துக்கள்.
அன்புடன்
உங்கள் அங்கிள்
ஜோசப்  லியோன், தூத்துக்குடி.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அன்றாட வாழ்விற்காக புனித தந்தை பியோவின் ஆன்மீக வழிகாட்டுதல் ( கடிதங்கள் வழியாக)

தந்தை பியோவின் ஆலோசனைகள் ஆழமானவை. பொறுக்க இயலாத மன வேதனைகளைத் தாங்கிக் கொண்ட இயேசு நம்மை எவ்வாறு மீட்பிற்கு வழி நடத்துகிறார் என்று அவர் வழியாக அறிந்து கொண்டோம். இயேசுவின் மீட்பை நாம் ஏற்க மறுப்பதனால் நன்றி கெட்டதனத்தை வெளிப்படுத்துகிறோம் என்பதனால் நன்றியுடையவராக இருத்தல் அவசியம். எதிலுமே கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக இருப்போம். கிறிஸ்துவின் பாடுகளில் நாமும் பங்கு பெறும்பொருட்டு நம் இழிவுணர்ச்சிகளையும் இச்சைகளையும் சேர்த்து சிலுவையில் அறைந்து விட்டோம் என்றால் மீட்பு பெற தகுதி பெற்றவர்களாவோம். இயேசுவின் பாடுகளை உடலில் ஐம்பது ஆண்டுகளாக தாங்கினவரான புனித பியோவின் போதனைகளைப் போன்று ஆழமான போதனைகளைப் பெற்றுகொள்வது எளிதல்ல, அதை புரிந்து கொள்வதும் கடினமாகவே உள்ளது.
சிந்தனை 2/23 :  இறுமாப்பு  குறித்து எச்சரிக்கை.

ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கும், ஆன்மீக வாழ்விற்கு கையளித்தவர்களது ஆன்மாவிற்கும் அளவுக்கு மிஞ்சிய வீண் பெருமை அல்லது இறுமாப்பு உண்மையான எதிரியாக இருக்கிறது. அதன் காரணமாகவே, முழு நிறைவை இலட்சியமாகக் கொண்ட எந்த ஆன்மாவையும் அழித்துவிடும் புழு என்று அதனை சரியாக அழைத்துள்ளாளர்கள்.
இறுமாப்பு எவ்வாறு முழு நிறைவிற்கு எதிரானது என்பதனை இவ்வாறு விளக்கலாம். பேய்களுக்குக் கட்டளையிட்டபோது அவை கீழ்ப்படிந்ததைக் கண்ட சீடர்கள் முழுநிறைவோடும் அளவுக்கு மிஞ்சிய வீண் பெருமையோடும் இருப்பதைப் பார்த்த இயேசு அவர்களைக் கடிந்து கொண்டார். தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம்  (லூக் 10 : 20) என்றார்.
அவர்களது மனதிலிருந்து வெளிப்பட்ட, சாபத்துக்கு ஆளாக்குகிற தீமையின் தீய பாதிப்புகளை வேரோடு பிடுங்கி விடுவதற்காக அவர்கள் மனதில் நயம்பட புகுவதில் வெற்றி பெற்றுவிடாதிருக்க, லூசிபரை கடவுள் உயர்த்தி வைத்திருந்த இடத்திலிருந்து கீழே விழுந்ததை எடுத்துகாட்டாகச் சொல்லி அவர்களை அவர் நடுக்கமுறச் செய்தார். தான் பெற்ற கொடைகளால் இறுமாப்பு அடைந்ததன் காரணமாக விழுந்ததைச் சொன்னார். ‘வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப்போல விழக்கண்டேன்.’ (லூக்கா 10 : 18 ) என்றார்.
இந்த தீமை அதிகம் அஞ்சுதற்குரியது, ஏனெனில் அதை எதிர்க்க சரியான எதிர்மதிப்பீடு (virtue to counter) ஒன்றும் இல்லை. ஏனைய எல்லா தீமையையும் எதிர்க்கக் கூடிய சரியான எதிர்மதிப்பீடுகளைக் கொண்டிருக்கின்றன. கோபம் அதற்கு  எதிரான பொறுமையால் மேற்கொள்ளப்படுகிறது. பொறாமை கொள்வது (envy) இரக்கச்செயல் (Charity) வழியாக, பெருமை தாழ்ச்சி வழியாக இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் மாற்று மதிப்பீடுகள் உண்டு. சுயஇறுமாப்பு அல்லது ஆணவத்திற்கு மாத்திரம் நேரடியாக அதை எதிர்க்கும் படியான மதிப்பீடு கிடையாது செயல்களிலெல்லாம் புனிதமானவற்றிலும் அது மெல்லியதாக ஊடுருவி விடுகிறது. மேலும் அதை அடையாளம் காண இயலாது. அது செருக்குடன் தாழ்ச்சிலும் தனது கூடாரத்தை அடித்துக் கொள்கிறது.
 ((To Fr,agotino of san marco in lamis aug 2, 1913).

சிந்தனை 2/24 :  பாவங்களை அல்ல, சுய இறுமாப்பை மேற்கொள்பவர்களையே சாத்தான் சோதிக்கிறான்.
(இந்த கடிதங்கள் அருட்தந்தை அகுஸ்தினோ யாமிலில் உள்ள சான்மார்கோவைச் சார்ந்தவருக்கு ஆகஸ்டு 2, 1913 அன்று எழுதியது)
அன்பான தந்தையே! காமவெறி கொண்ட ஒரு நபர், மனப்பேராசை கொண்ட ஒரு நபர், ஒரு பாவி இத்தகையோர் பெருமைப்பட்டு கொள்வதைவிட அதிகமாக குழப்பம் அடைந்தவராகவும், அவமானத்தால் முகம் சிவந்தவராகவும் இருக்க வேண்டும் என்று சாத்தானுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே அவன், சுய இறுமாப்பினால் அவர்களைச் சோதிப்பதைத் தவிர்த்து விடுகிறான். இத்தகைய போராட்டத்தில் அவர்களுக்கு சாத்தான் ஊறு விளைவிக்காதிருந்தாலும் நல்ல மக்களை அதிலும் நிறைவு பெற்றவர்களாய் வாழும் குறிக்கோளாகக் கொண்டவர்களை அவன் காயப்படுத்தாமல் விட்டு வைப்பதில்லை.
ஏனைய தீய ஒழுக்கங்கள், யாரெல்லாம் அந்த தீய ஒழுக்கங்களால் மேற்கொள்ளவும், அதிகாரம் செலுத்தவும் அனுமதிக்கிறார்களோ அவர்களை மட்டுமே வெற்றி கொள்கின்றான். எப்படியிருந்தாலும் சுய இறுமாப்பானது அதனோடு  போராடி அதனை மேற்கொள்ளும் மக்களுக்கு மட்டுமே எதிராக அதன் தலையை உயர்த்துகிறது. இறுமாப்பின் மீது வெற்றி கொண்டவர்களுக்கு எதிராகப் போராடி, அவர்கள் பெற்றுக் கொண்ட வெற்றியை எடுத்து விடும்படியாக இறுமாப்பு செயல்படுகிறது. ஒரு போதும் களைப்படையாத எதிரி அது. மேலும் நம் எல்லா செயல்களிலும் அது நமக்கு எதிராகப் போர் தொடுக்கிறது. நாம் அது இருப்பதை உணராவிட்டால் நாம் அதன் ‘பலியாள்’ ஆகிவிடுவோம்.
இதன் காரணமாக மற்றவர்களுடைய புகழ்ச்சியிலுருந்து ஓடி விடுகிறோம். திறந்த வெளியில்  உபவாசம் இருப்பதைவிட பிறர் அறியாமல் மறைவான இடங்களில் உபவாசம் இருப்பதைத் தெரிந்து கொள்கிறோம். திற மையான பேச்சைவிட அமைதியையும் முக்கியமாகக் கருதப்படுவதைவிட ஏளனத்திற் குள்ளாவதையும், புகழ் பெறுவதை விட அவமதிப்ப்புக்குள்ளாவதையும் நாம் விரும்பித் தேர்ந்தெடுக்கிறோம். அந்தோ, என் கடவுளே, இவ்வாறு காரியங்களை நாம் செய்தாலும், அவர்கள் சொல்லுவதுபோல, சுய-இறுமாப்பு (ளுநடக- ஊடிnஉநவை) அதனுடைய மூக்கை உள்ளே நுழைக்க விரும்புகிறது. மேலும் சுய திருப்தியினால் நம்மைத் தாக்குகிறது.

சிந்தனை 2/25 :  சுய இறுமாப்பை நுழைய விட வேண்டாம். அது நம்மை சேதப்படுத்திவிடும்.
புனித ஜெரோம் சுய இறுமாப்பை ஒரு நிழலுக்கு ஒப்பிடுவது சரியே, ஏனென்றால் ஒரு நிழலானது. அதன் உடல் எங்கு சென்றாலும் அதன் பின்னால் செல்கிறது. அதன் அசைவுகளை அப்படியே திரும்பச் செய்கிறது உடல் ஓடும்போது அதன் நிழலும் தொடர்ந்து ஓடுகிறது. ஏதோ ஒருவர் மெதுவாக சிறுசிறு அடிகளை எடுத்து நடந்து சென்றால் அந்த அடிகளை நிழலும் உறுதி செய்கிறது. ஒரு நபர் உட்கார்ந்தால் அதுவும் அதே வடிவமைப்பையே எடுத்துக் கொள்கிறது.
அதுபோலவே, சுய இறுமாப்பும் நல்லொழுக்கமும் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து செல்லுகிறது. உடல் அதன் நிழலை விட்டு ஒடுவதால் பயன் ஒன்றும் இருக்காது. ஏனென்றால், நிழல் எப்பொழுதும் எங்கும் உடலைத் தொடர்ந்து தான் செல்லும் அதனை விட்டு விலகாதிருக்கும். அது போலவே, யாரெல்லாம் உயர் மதிப்பீடுகளையும் நிறைவையும்  குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்களோ அவர்களையும் சுய இறுமாப்பு தொடர்கிறது. சுய நிறை வைக் கண்டுகொள்ள ஓடும் போதெல்லாம், அது நிழலைப்போல நெருக்கமாக பின்னாலே ஓடிகின்றது.
எனவே எப்பொழுதும் நாம் விழிப்போடிருப்போம். இந்த அஞ்சத்தக்க எதிரி நமது மனங்களுக்குள்ளும் இதயங்களுக்குள்ளும் நுழைந்து, அதன் வழியாக நம்முள் நுழைய அனுமதிக்க வேண்டாம் ஏனென்றால், ஒரு முறை அது நுழைந்தால், அது நமது எல்லா ஒழுக்கப்பண்புகளையும் நாசப்படுதுதம்.
 எல்லா புனித தன்மையையும் கெடுத்துவிடும். எதெல்லாம் நல்லதாகவும் அழகாகவும் இருக்கிறதோ அவற்றையெல்லாம் களங்கப்படுத்துகிறது.
(கூடி குச. ஹபடிவinடி டிக ளுயn ஆயசஉடி in டுயஅளை ஹரப 2, 1913)
அன்பு தந்தை புனித பியோ, அருட்தந்தை அகுஸ்தினோவிற்கு எழுதிய கடிதங்களில் இருந்து இறுமாப்பு குறித்த மிக முக்கியமான தகவல்களை வாசித்தோம். இறுமாப்பைக் குறித்த எச்சரிக்கையை இதயத்தில் பதிப்போம்.
1. புனிதத்தை சேதப்படுத்தும் புழு போன்றது இறுமாப்பு (வீண் பெருமை)
2. லூசிபர் இறுமாப்பினால் வீழ்ந்ததை மனதில் நிறுத்தி, தீய ஆவிகள் அடிபணிவதற்காக மகிழ வேண்டாம் என்று சீடர்களிடம் சொன்னார்.
3. சுய இறுமாப்பிற்கு மாத்திரம் நேரடியாக எதிர்க்கின்ற மதிப்பீடு இல்லை.
4. பாவிகளை, பலவீனர்களை சாத்தான் சுய இறுமாப்பினால் சோதிப்பதில்லை, மாறாக சுய இறுமாப்பை வென்றவர்களையே சோதிக்கிறான்.
5. சாத்தான் நம்மை சோதிப்பதை அறியாவிட்டால் நாம் அதற்குப் பலியாள் ஆகிவிடுவோம்.
6. நல்லொழுக்கமுள்ளவர்களை சுய இறுமாப்பு நிழல்போல் தொடருகிறது. எனவே விழிப்போடிருந்து அது உள்ளே நுழைவதைத் தடுக்கா விட்டால் நம் புனிதத் தன்மையை இல்லாதாக்கிவடும். 
அதனால் தான் நீதிமொழி
‘‘அழிவுக்கு முந்தியது அகந்தை
வீழ்ச்சிக்கு முந்தியது வீண் பெருமை’’ (நீ.மொ 16 : 18)
என்று எச்சரிக்கிறது. எச்சரிக்கையுடன் உஷாராவோம். இறுமாப்பிலிருந்து காத்துக் கொள்வோம். 
இந்த 5 சிந்தனைகளையும் வாசித்தபிறகு ஏதாவது ஒரு சிந்தனையையாவது மனதில் நிறுத்தி செயல்படுத்த வேண்டும். இந்த இதழிலே சிலுவையை ஏற்கும் பண்பை வலியுறுத்தி கடவுளின் திருவுளப்படி நடக்கவும் ஊனியல்பின் வேரை எடுத்து மாற்றி சிலுவையில் இச்சைகளை அறைந்துவிடவும் இறுமாப்பை களைந்து தாழ்ச்சியோடு செயல்படவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  தந்தை பியோவின் சிந்தனை வழியாக அவர் என்ன செய்தி சொல்ல விரும்புகிறாரோ அது மாத்திரம் சென்று சேர வேண்டுமே என்ற ஏக்கத்தோடு இந்தப் பக்தியை எழுதுகிறேன். இதை வாசிக்கும்போது அவரின் ஆன்மா, ஆவியின் ஆற்றலோடு நீங்களும் வாசித்து தியானித்து வாழ்வாக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

தொடரும்....

திருமதி இம்மாகுலேட் பிலிப், 
நாகர்கோவில

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித பியோ ஜெபமாலை இயக்க விழா

புனித பியோ செபமாலை இயக்கத்தின் 3வது ஆண்டு விழாவானது திருவையாறு தூய இதய அன்னை ஆயத்தில் 20.09.2015 ஞாயிறன்று நடைபெற்றது. முந்தின நாள் இரவு ஆன்மீக வழிகாட்டியின் தலைமையில் இயக்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து இயக்கத்தின் கருத்துக்களுக்காக ஜெபமாலை ஒப்புக் கொடுக்கப்பட்டது. பின்னர் பியோ குரல் ஆசிரியர் குழுவினரின் கலந்துரையாடல் நடைபெற்றது. உறுப்பினர்கள் கடந்த ஒரு வருடமாக புனித பியோ செபமாலை இயக்கத்தில் தங்களது பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்றும் இன்னும் இந்த இயக்கத்தை எவ்வாறு மெருகூட்டுவது என்றும் விவாதிக்கப்பட்டது. பின்னர் உறுப்பினர்கள் புனித பியோ வழியாக தாங்கள் பெற்ற குடும்ப சமாதானம் மற்றும் இறை நம்பிக்கையை பகிர்ந்துக் கொண்டார்கள். ஆன்மீக வழிகாட்டி அருட்தந்தை செல்வராஜ்  அவர்கள் ஒவ்வொருவரும் இன்னும் அதிக உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் செயல்பட வேண்டும் என்றும் முடிந்த வரையில் தாங்கள் வசிக்கும் பகுதியில் உறுப்பினர்கள் மாதம் ஒரு முறையாவது கூடி செபிப்பதற்கு முயற்சி எடுக்குபடியாகவும் கூறினார்.

20.09.2015 ஞாயிறன்று காலை 8.20 மணியளவில் ஆடம்பர செபமாலையுடன் திருப்பலியானது அருட்தந்தை செல்வராஜ் அவர்கள் தலைமையில் தொடங்கியது. தனது மறையுரையில் தந்தை பியோ தனது வாழ்வில் எவ்வாறு இயேசுவையும், அன்னை மரியாளையும் முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தார் என்றும் நாமும் எவ்வாறு தந்தை பியோவை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்வது என்றும் எடுத்துரைத்தார்.

திருப்பலிக்குப் பின்னர் தஞ்சை மாவட்ட செபமாலை இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. இருதயராஜ் அவர்கள் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி டல்சி டி குருஸ் அவர்கள் மற்றும் திருமதி வேணி ஜாண் அவர்களும் திருவையாறு பங்கு மக்களுக்கு புனித பியோ வழியாக தாங்கள் பெற்ற இறை அனுபவத்தையும் பியோவின் அற்புதங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். அன்று திருவையாறு பங்கிலிருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட மக்கள் மிக ஆவலுடன் புதிய உறுப்பினராக சேர்ந்து கொண்டனர். அதன் பின்னர் ஒரு மணி நேர ஆராதனை நடைபெற்றது. இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தவும் நமது இயக்க விழாவிற்கு வெளியூரிலிருந்து வந்திருந்த விருந்தினர்களை மிக அன்பாக உபசரித்த திருவையாறு புனித தூய இதய அன்னை ஆலய பங்குத் தந்தை அருட்திரு கிறிஸ்து ராஜா அவர்களுக்கு சிறு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜெபமாலை, இயக்கப் பிள்ளைகளுக்கு வழங்கியதைப் போலவே இந்த ஆண்டும் வழங்கப்படடது. மஸ்கட்டைச் சார்ந்த திரு. பழனிவேல் சேகர் அவர்கள் இயக்க விழாவை முன்னிட்டு தனது பங்களிப்பாக 1000 செபமாலை அன்பளிப்பாக வழங்கினார்கள். இயக்க விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் சிங்கப்பூர் புனித பியோ ஜெபமாலை இயக்கத்தைச் சார்ந்த திரு. அந்தோணி ஜோசப் அவர்கள் மதிய விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். நமது ஆன்மீக வழிகாட்டி இத்தாலி சென்றிருந்தபோது ஆன்மீகப்பிள்ளைகளுக்கென்று வாங்கிய தந்தை பியோவின் புனித திருப்பண்டமும் வழங்கப்பட்டது. மேலும் சென்னை திரு.கெவின் அவர்கள் நமது இயக்க விழாவிற்காக தந்தை பியோவின் திருஉருவம் பதித்த கீ-செயின் வழங்கினார்கள். திரு இருதயராஜ் அவர்கள் தந்தை பியோவின் நவநாள் செப புத்தகங்களும், படங்களும் வழங்கினார்கள். திருமதி ராணி ஜெகதீஷ் அவர்கள் தந்தை பியோவின் நவநாள் செபம் தாங்கிய படங்களையும் வழங்கினார்கள். திருவிழாவிற்கு வந்திருந்த இயக்கப் பிள்ளைகளை அருட்தந்தையர்கள் அ.செல்வராஜ் மற்றும் கிறிஸ்து ராஜா அவர்கள் திருப்பயணமாக பூண்டி திருத்தலத்திற்கு அழைத்துச் சென்றார்கள். இறுதியாக திருமதி வாசுகி செல்வராஜ் அவர்கள் இயக்க விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூற  அருட்தந்தையர்கள் ஆசீர் வழங்க கூட்டம் இனிதே நிறைவுற்றது.

-வாசுகி செல்வராஜ் தூத்துக்குடி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உங்களுடன்..........

இறை இயேசுவில் அன்பான பியோவின் குழந்தைகளே !
உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் அன்பான வாழ்த்துக்கள்.

நவம்பர் மாதம் முதல் தேதி புனிதர்கள் அனைவரின் பெருவிழா. அன்பு உறவே மனிதம், புனிதம்,  தெய்வீகம். நம் திருத்தந்தை பிரான்சிஸ் புனிதர்கள் அனைவரையும் நமது மூத்த சகோதர, சகோதரிகள் என்று அழைத்ததோடு மட்டுமல்லாமல், இவர்களை நமது முன்மாதிரியாகக் கொண்டு நெருக்கமாகக் கிறிஸ்துவுக்குச் சேவை செய்ய அழைக்கிறார்.

நவம்பர் 2ம் தேதி இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் நினைவுநாள். அன்புறவை கல்லறை அடக்க முடியாது. (தி.பா. 27 : 1) ஆண்டவரே என் ஒளி அவரே என் மீட்பு. வாங்கு... பயன்படுத்து....தூக்கியெறி என்று பிறரை ஒரு பொருட்டாகக் கருதாத இயந்திர உலகிலே, இறந்த முதாதையர்களை நினைத்துப் பார்த்து, அவர்களுக்காகச் செபித்து நம்முடைய மனிதாபிமானத்தை, அன்பை, நம் இதயக்கல்லறையில் உயிர்ப்பிக்கின்ற உயிர்ப்பு பெருவிழாவாக எண்ணி மகிழ்வோம். உயிரோடு இருக்கின்ற முதியவர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு இக்கல்லறைத் திருவிழாவின் போது நம்மால் இயன்றவற்றை செய்து மகிழ்வோம்

நமது பிறப்பு பிறருக்கு வாழ்வு கொடுக்கட்டும். கடவுள் சமயங்களை உருவாக்கவில்லை. மாறாக அவரது சாயலில் மனிதர்களை உருவாக்கினார். இயேசுவின் பிறப்பு இறைவனையும் மனிதரையும் இணைக்கின்ற உறவு. உயிர்  பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் நேரம் மிகக் கொடுமையானது. இறைவன் இயேசு உறவின் பாலமாக வரலாற்றில் பிறந்துவிட்டார். ஆனால் நம் இதயத்தில் பிறந்துவிட்டாரா? ஆம் சுயநலமற்ற அன்பு, கைம்மாறு கருதாத உதவி, எதிர்பார்ப்பு இல்லாத தியாகம், மன்னிக்கும் மனப்பாங்கு இவையாவும் நம் இதயத்தில் பிறந்துவிட்டால் அதுவே இயேசுவின் பிறப்பு.

இறை நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் ஒருங்கிணைந்து செயல்படட்டும்.  ஆண்டின் இறுதியில் இருக்கும் நாம் கடந்த நாட்களைப் பின்னோக்கிப் பார்த்து தொலைநோக்குப் பார்வையோடு நிகழ்காலத்தில் பயணிக்க நம்மை தயாரிப்போம். இந்நாளில் நம் ஆண்டவர் நம்மை முகமுகமாகப் பார்த்து, கரிசனையோடு தனது ஆசியை வழங்கி, நம்மோடு தனது உடன் பயணிப்பை உறுதிப்படுத்துகின்றார். ஆகவே பிறக்க இருக்கும் புத்தாண்டில் பிஞ்சுக் குழந்தை இயேசுவின் நிறைவான ஆசிகளுடன் புதிய ஆண்டினைத் தொடர்வோம். தந்தை பியோவின் உடனிருப்பு என்றும் நம்மோடு.
   
 கிறிஸ்துவில் பிரிய,
சகோ.ஆலிஸ் (ரெஜி)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆன்மீக வழிகாட்டியின் கடிதம்

                
Infant Jesus Friary,
W-3/8K, Mariamman Koil St,
230,Vallam, Chengalpat,
Kanchepuram Dt-603003
Cell : 95971 66607
தூய வாழ்வுக்கு வழிகாட்டும் செபமாலை!
                
புனித தந்தை பியோவில் அருமையான ஆன்மீக பிள்ளைகளே!, இயேசு கிறிஸ்துவிலும் அன்னை மரியாவிலும் உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களும் வணக்கங்களும்! நலமோடு இருக்கின்றீர்களா? கடந்த மாதம் நம் அன்னையின் விழாவையும் தந்தை பியோவின் விழாவையும் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நானும் நமது இயக்கப் பிள்ளைகளோடு திருவையாறு பங்கில் மகிழ்ச்சியோடு கொண்டாடினோம். அது ஒரு அற்புதமான மகிழ்ச்சியின் நாளாக இருந்தது. கடவுளுக்கு நன்றி. தந்தை பியோ அழைத்தால் நீங்களும் அடுத்த ஆண்டு வருவீர்கள். சந்திப்போம். இங்கே நம்மோடு ஒருவர் பேசுகிறார், கேட்போமா?
               
  ‘‘என் வாழ்வை மோசமாக மாற்றிக் கொண்டிருந்த குடிப்பிரச்சனையிலிருந்து மாற்றம் வேண்டி, ஒருநாள் இரவில் வேலையிலிருந்து திரும்பி வந்த பிறகு செபமாலை சொல்லிக் கொண்டிருந்தேன். நான் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையோடு இருப்பவன். எனது குடிப்பழக்கத்தை விடவில்லை என்றால் எனது எதிர்காலம் குடியில் நாசமாகிவிடும் என்று உணர்ந்தேன். கவலையோடு இருந்த நான் குடிப்பழக்கத்திலிருந்து மீளமுடிவெடுத்து செபமாலை செபித்துக் கொண்டே தந்தை பியோவின் உதவியைக் கேட்டேன். உடனே வர்ணிக்க முடியாத நறுமணம் அங்கு பரவியதை உணர்ந்தேன். அந்த மகிழ்ச்சியான இனிமை மிகுந்த நறுமணம் என்னை மூடி எனக்குள்ளே ஆழமான பேரமைதியையும் மனதிருப்தியையும் ஏற்படுத்தியது. உடனே அது மறைந்துபோய் விட்டது. சிறிது நேரத்தில் வீட்டை அடைந்ததும் வழக்கம்போல அங்குத் தூங்கிக் கொண்டிருக்கும் எனது குழந்தையைப் பார்க்க சென்றேன். எனது மகனின் அறையில் நுழைந்ததும்  மீண்டும் அந்த நறுமணம் அறைக்குள் பரவியது. பின்னர் மறைந்துபோனது. எனது குடிப்பழக்கத்தை கைவிடுவதற்கு எனக்கு உதவும்படி தந்தை பியோவின் உதவியை நாடியது என் நினைவிற்கு வந்தது. மிகுந்த ஆச்சர்யம் என்னவென்றால் அந்த இரவிலிருந்து இதுவரை 20 வருடத்திற்கு மேலாக எந்த ரூபத்திலும் நான் மதுவை விரும்பியதே இல்லை. அதன் பிறகு என் ஜெபம் கேட்கப்பட்டதற்கான பதி லாக தந்தை பியோ நறுமணத்தை அடையாளமாக பயன்படுத்தினார் என்பதை தெரிந்துகொண்டேன்.’’ (பெயர் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது)

                எனது அருமையானவர்களே!, இந்த மனிதர் செபமாலை செபிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்திருந்திருக்கிறார். செபமாலை செபிப்பவர் செபமாலை செபிப்பார், அல்லது அதை விடுத்து பாவத்தில் விழுவார். இதில் ஏதாவது ஒன்றுதான் நடைபெறும். இரண்டும் சேர்ந்து நடைபெறாது. செபமாலை செபிக்கிறவர்கள் அன்னை மரியாவின் உதவியை மட்டுமல்ல மற்ற  புனிதர்களின் உதவியையும் எளிதாகப் பெற்றுவிடலாம். அனைத்து புனிதர்களும் அன்னை மரியாவை அதிகமாக அன்பு செய்தவர்கள். தந்தை பியோ அன்னை மரியாவை விடாமல் பற்றிக் கொண்டிருந்தவர். ஆகவே மேற்கூறப்பட்ட புதுமையில் வரும் மனிதர் அழைத்தவுடனே பியோ தாமதமின்றி உதவி செய்ததை அறிகிறோம். அதன்பின் அந்தமனிதர் பாவத்தை விடுத்து தொடர்ந்து செபித்துக் கொண்டிருப்பவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகவே செபமாலை செபிக்கும்போது புனித வாழ்வை நாம் தொடங்கலாம். செபமாலை செபிப்போருக்கு என்னென்ன நிகழ்கிறது என தெரியுமா?

1. பாவ சூழலிலிருந்து விடுதலைதரும் செபமாலை

                பாவம் செய்வதற்கான சூழல் அகற்றப்படுமானால் பாவத்திற்கான வழி தடைபட்டுவிடும். செபமாலை தினம்தோறும் செபிக்கும்போது பாவ சூழல்கள் அகன்றுவிடும். ‘‘பாவ நிழலே அணுகா பாதுகாத்தான் உனையே பரமன்‘‘ என்று அன்னை மரியை நோக்கிப் பாடுகிறோம். அந்த அன்னை பரமனுக்குத் தாயானார். தாய் தன் பிள்ளைக்குத் தீமையேதும் தீண்டாமல் காப்பதுபோல் அன்னை மரியா செபமாலை செபிக்கும் பிள்ளைகளுக்கு பாவ சூழல் ஏற்படாமல் தடுத்துவிடுவார் என்பது உறுதி. அம்மா அம்மா என்றும் அருள் நிறை மரியே என்றும் அன்னை மரியை அழைத்த வண்ணம் இருந்த தந்தை பியோ பாவ சூழலிலிருந்து காக்கப்பட்டவர் என்பதற்கு அவரது தூய வாழ்வே சாட்சி. எனவே பாவ சூழலிலிருந்து விடுபட செபமாலையை கையில் ஏந்தி செபிக்கத் தொடங்குங்கள்.

2. சாத்தானை வெல்லும் செபமாலை

                ஒரு சிலர் சொல்வார்கள், ‘‘ ஃபாதர் செபிக்கத் தொடங்கிய பிறகு தான் எனக்கு பிரச்சனை அதிகரித்துவிட்டது. எனது கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது என்று...’’ உண்மையாக செபிக்கிறவர்களை சுற்றி சுற்றி வருவான் சாத்தான். ஆன்மீக காரியங்களில் முன்னேற முயற்சிக்கிறவர்களை விழத்தாட்டிப் பார்ப்பான் அவன். அவர்களது முயற்சியிலிருந்து அவர்களை பின் வாங்க வைப்பான்.
                சாத்தானுக்கு செவிமடுத்து செபத்தை கைவிட்டால் தோல்வி, பிரச்சனைகளைக் கண்டாலும் மனந்தளராமல் தொடர்ந்து செபமாலை செபித்தால் வெற்றி. ஏசுவையே சோதித்தவன் சாத்தான். சாத்தானின் சதி வேலைகளை முறியடித்து மீட்புத்திட்டத்திற்கு உடன் பணியாளாய் இருந்தாள் அன்னை மரியாள் (தொ. நூ 3 : 15) தந்தை பியோவுக்கு செபமாலை சாத்தானை வெல்லும் ஆயுதமாக இருந்தது. ‘‘சாத்தான் விரட்டப்படுவதற்கும் ஒருவர் தன்னை பாவத்திலிருந்து காத்துக் கொள்வதற்கும் செபமாலை ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம்‘‘ என்கிறார் பாப்பு 11ம் பயஸ். ஆகவே செபமாலை செபிக்கும் ஒருவர் சாத்தானைக் குறித்தோ தீய சக்திகளைக் குறித்தோ அஞ்சத் தேவையில்லை..செபமாலை என்னும் ஆயுதம் சாத்தானை ஓட ஓட விரட்டுகின்ற ஆயுதம். மறவாமல் கையிலேந்தி செபமாலை சொல்லுங்கள். சாத்தானை வெல்லுங்கள்.

3. இயேசுவின் பிரசன்னத்தில் நிலைநிறுத்தும் செபமாலை

                செபமாலை ஆன்மீகத்தில் ஒருவர் பாவத்திலிருந்து விடுபடுகின்ற போதும் சாத்தானை வெல்லுகின்ற ஆன்மீக ஆற்றல் பெருகுகின்றபோதும் அவர் இயேசுவின் பிரசன்னத்திற்குள் நிலைப்பெறுகிறார். செபமாலை செபிக்கும் ஒருவர் அன்னை மரியாவின் அடைக்கலத்திலே வாழ்கிறார். அவரது வழிகாட்டுதலில் வாழ்கிறார். இயேசுவை கருவில் சுமந்த தாய் மரியா வோடு நாம் இருக்கும்போது இயேசுவின் பிரசன்னத்தில் நாம் இருக்கிறோம். ‘‘அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்...’’ (யோவா 2 : 5) என்ற அன்னையின் சொல்லைக் கேட்டு நடக்கும்பொழுது நாம் இயேசுவின் வார்த்தைகளை செயல்படுத்துவோம். இயேசுவின் பிரசன்னம் நம்மை நிரப்பும். அவருக்கும் நமக்கும் உள்ள பிiணைப்பு உறுதியாகும். ‘‘நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்‘‘ (யோவான் 15 : 7 ) என்ற இயேசுவின் வாக்குறுதி நம் வாழ்வில் நடந்தேறும். நாம் அவரது பிரசன்னத்தில் நிலைபெறுவோம். ஜெபமாலை ஜெபிக்கும்போது இயேசுவின் பிரசன்னம் நம்மோடு.

 4. நலம் தரும் செபமாலை

                இறைப்பிரசன்னத்தில் நிலைபெறும் ஒருவர் செபமாலை பக்தியில் ஆழமான ஆன்மீகத்தைக் காண்பார். தந்தை பியோ இறைபிரசன்னத்தில் ஆழ்ந்திருந்ததனால் ஆன்ம நலம் பெற்ற புனிதரானார். ஆன்மா எல்லா வித கறைகளிலிருந்து விடுபடுகிற பொழுது மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஆன்மா அழுக்காகி சாத்தானுக்கு அடிமையாகிப் போனால் உலகமே தன்னைப் புகழ வேண்டும் என எதிர்பார்க்கும். கடவுள் பயம் இல்லாமல் அவரையும் அவரது செயல்களையும் எதிர்க்கும். பண்பும், பணிவும், தாழ்ச்சியும் போய் தற்புகழ்ச்சி மட்டுமே மேலோங்கி நிற்கும். தொடர்ந்து தினமும் செபமாலை செபிக்கும்போது ஆன்மா, மனம், உடல் அனைத்தும் நலம்பெறும். பிறரை குணமாக்கும் ஆற்றலையும் பெறுவர். ஆம் செபமாலை அனைத்து நலன்களையும் உறுதி செய்யும் அற்புத செபம்.

 5. அமைதியை விதைக்கும் செபமாலை

                உலக அமைதிக்காக தினமும் செபமாலை செபிக்கும்படி அன்னை மரியா பாத்திமாவில் ஆடு மேய்க்கும் குழந்தைகளிடம் கேட்டுக்கொண்டார். அமைதியின் அரசர் இயேசுவின் தாய் அந்த அரசரின் பிரதிநிதியாக உலகம் சமாதானத்தை பெற வேண்டுமென ஆசிக்கிறார். உள்ளத்திலும் இல்லத்திலும் உலகத்திலும் உண்மையான அமைதி ஏற்பட வேண்டுமென்றால் நம்பிக்கையோடு செபமாலை செபித்தால் போதும். நிறை அமைதி நம்மில் குடிகொள்ளும். கேட்கின்றபோது பெற்றுக் கொள்கிறோம் என்ற மனநிலையோடு செபித்தல் வேண்டும் ‘‘செபமாலை சொல்வதற்கு வெட்கப்படாதீர்கள். ஏனென்றால் இது குடும்பத்தில் உள்ளவர்களிடையே குடும்ப பிணைப்பை மீண்டும் மீண்டும்  தூண்டி பலப்படுத்துகிறது’’ என்கிறார் புனித 2ம் ஜாண் பால். அருள் நிறை மரியே என்ற வாழ்த்து அமைதியை கொணர்ந்த வாழ்த்து. மாலைதோறும் செபமாலை சொல்லும் குடும்பம் எவ்வளவு அழகான குடும்பம் என்கிறார் புனித 2ம் ஜாண்பால். அமைதியை ஏற்படுத்த அழிவு ஆயுதங்களை ஏந்தி போராடுகிறார்கள். பலன் இரத்தம் சிந்தல், காயப்பட்ட உலகம், உயிர் சேதம், பொருள்சேதம் போன்ற அழிவுதான் முடிவாகிறது. அமைதியல்ல. ஒருவர் அமைதி பெற மற்றொருவரை பலியாக்குவது அமைதியாகாது. உலகில் ஒவ்வொருவரும் செபமாலை என்னும் ஆயுதத்தை ஏந்தினால் உலகமே அன்பு, மகிழ்ச்சி, அமைதி என்ற சிங்கார வனத்தைக் காண முடியும்.
                ‘‘உங்களை அழைத்தவர் தூய்மையுள்ளவராய்  இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மையுள்ளவர்களாய் இருங்கள்.’’ (1 பேது 1 :  15) என்ற புனித பேதுருவின் அழைப்புக்கு ஏற்ப நாம் மாசற்ற தூய வாழ்வு வாழ செபமாலை கைகொடுக்கும் ஊன்றுகோலாகும். தூயவரை பெற்றெடுக்க அமல உற்பவியான கன்னிமரியா எவ்வளவு புனிதத்தின் சிகரமாக உள்ளார். தூயவராம் இயேசுவின் பிறப்பும் எவ்வளவு தூய்மையான புனித நிகழ்வு!.. இவ்விரு விழாக்களையும் வரும் திசம்பர் மாதத்திலே கொண்டாடப்  போகிறோம். நமது வாழ்வு எவ்வளவு தூய்மையாக உள்ளதோ அவ்வளவு மகிழ்ச்சியும் ஆசியும் நிறைந்த விழாக்களாக அவைகள் அமையும்.
                செபமாலையை உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள். அன்னைக்கு மிகவும் நன்றி நிறைந்தவர்களாய் இருங்கள். காரணம் இயேசுவை நமக்குக் கொடுத்தவர் அவர்தான். என்கிறார் தந்தை பியோ. செபமாலையை நன்றாக செபிக்கும்போது அது இயேசுவுக்கும் மரியாவுக்கும் அதிகமான மகிமையைக் கொடுக்கிறது. அது செபங்களையும் விட மதிப்பு மிகுந்தது என்கிறார் புனித லூயிஸ் டி மான்ஃபோர்ட். செபமாலை முழுமையான நற்செய்தியின் சுருக்கம் என்கிறார் பாப்பு 12ம் பயஸ்.
                ஆகவே செபமாலை நம்மை புனித வாழ்வுக்கு இட்டுச் செல்லும் சிறந்த செபமாக இருக்கிறது. இயேசுவை அடைய நம்மை தூய்மையாக்கி பலப்படுத்தும் மாலைதான் செபமாலை. அது கழுத்தில் அணிந்து கொள்ளும் மாலை அல்ல. கரங்களில் ஏந்தி அருள் நிறைமரியை வாழ்த்தி சாற்றும் செபமாலை. புனிதத்தின் சிகரமாம் புனித அன்னை மரியே, புனித வாழ்வை நோக்கி எம்மை நடத்தும் அம்மா.
                                உங்கள் அனைவருக்கும் புனிதமான கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்களும் ஆசீரும்!.
                 இயேசுவே, உமக்கு புகழ் ! ! !

-அருட்தந்தை அ. செல்வராஜ், க.ச

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Pio Kural Magazine September - October 2014


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆன்மீக வழிகாட்டியின் கடிதம்

எனது அருமையானவர்களே
புதுமைகள் கடவுளின் வெளிப்பாடு. புதுமைகள் நடக்க  வேண்டுமென எதிர்பார்க்கும் மக்கள் ஏராளம். கடவுளை நம்பாதவர்கள் கூட புதுமைகள்  நடப்பதைப்  பார்த்தால்  நம்பிவிடுவர். புதுமைகள்  சாதாரணமாக மனித ஆற்றலுக்கோ, இயற்கையின்  ஆற்றலுக்கோ உட்பட்டதல்ல. மாறாக இயற்கையின்  விதிக்கும், அறிவியல்  ஆராய்ச்சியின் விதிக்கும் அப்பாற்பட்டது. மனித ஞானத்தினால், அறிவினால், புத்தியினால், பகுத்தாய்வு செய்து காரணங்களைக் காண முடியாது. மனித சிந்தனைக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்டது. ஆனால்  ஒன்று,  கடவுள் விரும்பினால் தான் நடக்கும்.  அது  கடவுளின் விருப்பம் அல்லது திருவுளம் ஆகும். கடவுள் ஆழமான  தனது   அன்பின்   உந்துதலால்  நிகழ்த்துகின்ற    காரியம்  அது. அதே  நேரத்தில் மனிதன்  கடவுள் மீது  கொண்டிருக்கும்  அசைக்க  முடியாத நம்பிக்கை  மிகவும்  அவசியம்.  ஆகவே புதுமை என்பது இயற்கையை கடந்த ஒரு நிகழ்வு அல்லது தெய்வீகப் பராமரிப்பு ஆகும்.
ஒன்றுமில்லாமையிலிருந்து கடவுள் இவ்வுலகை படைத்தார்..  ‘‘தொடக்கத்தில் கடவுள்  விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தபோது  மண்ணுலகு   வெறுமை யாக  இருந்தது’’.  (தொ.நூ 1: 1-2) ஒன்றுமில்லாத நிலையிலிருந்து    மனிதரையும்,   மனிதருக்கும்   அனைத்து உயிர்களுக்கும் தேவையான  அனைத்தையும்  படைத்து அது  நல்லது  எனவும்  கண்டார். இது  எவ்வளவு அற்புதமும் ஆச்சரியமுமான புதுமை. இஸ்ராயேல்  மக்களை பாலை நிலத்தில் நடத்தி வந்தபோது எத்தனை எத்தனை புதுமைகள்!  நம்மை   மிகப்   பெரிய  ஆச்சரியத்தில்   மூழ்கச்  செய்த  புதுமை  ‘இயேசுவின் உயிர்ப்பு’ (மத்  28: 6-9).  மக்களின் பாவங்களுக்காக  இயேசு  இறந்து  உயிர்க்க வேண்டும்  என்பது கடவுளின்  திருவுளம். இயேசுவின்  உயிர்ப்பை மையமாகக் கொண்டுதான்  கிறிஸ்தவ  விசுவாசமே இருக்கிறது.  இயேசு  உயிர்க்கவில்லை  என்றால் கிறிஸ்தவமே  இல்லை.  இயேசு  தனது  சீடர்களிடம் ‘‘உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை  இருந்தால்  நீங்கள் இம்மலையைப் பார்த்து  இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது   ஒன்றும்   இராது  என  நான்    உங்களுக்குச் சொல்லுகிறேன்’’ என்றார் (மத் 17 :20). தம் பன்னிரு சீடர்களுக்கு இயேசு தீய ஆவிகளை ஓட்டவும் நோய்   நொடிகளை  குணமாக்கவும்   அதிகாரத்தை   வழங்கினார்   (மத்   10 :1). எனவே புதுமை என்பது கடவுளின்  வெளிப்பாடும்  அவரது அதிகாரத்திற்கும் திருவுளத்திற்கும் உட்பட்டதாகும்.

தந்தை   பியோவின்  வாழ்க்கையே  புதுமையானதுதான்.  அவரது வாழ்க்கை   முழுவதும்  புதுமைகள்.  அந்த  புதுமைகள்  அனைத்தும்  இறை வெளிப்பாட்டின்  நிகழ்வுகளாகவே  இருந்தது.   இந்தக்  காரணத்திற்காகவே, புனித    பியோ    புதுமைகளின்   ஒரே     ஊற்றாகத்     திகழும்     கடவுளுக்கு நன்றி    செலுத்தும்படியாக   மக்களைக்    கேட்டுக்கொள்வார்.    கடவுளின் வெளிப்பாட்டை தெளிவாகக் கண்டு நம்பிக்கையோடு வாழ்ந்த   புனித  பியோ  கடவுளின்   திருவுளத்திற்கு முற்றிலும் அடிபணிந்து வாழ்ந்தார்.

1908ம்      ஆண்டு      நிகழ்ந்த      ஒரு      புதுமை தந்தை பியோ வழியாக    நடந்த    முதல் புதுமை என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நேரத்தில்  தந்தை பியோ மான்ட்டேஃபுஸ்கோவில் உள்ள மடத்தில் வாழ்ந்தார். ஒருநாள் அருகில்  இருந்த காட்டிற்கு சென்று செஸ்ட்நட்    எனப்படும்    கொட்டைகளை   சேகரித்து ஒரு பையில்  நிரப்பி பியட்ரில்சினாவில் இருந்த  தன் அத்தை  டாரியாவிற்கு அனுப்பி  வைத்தார்.    டாரியா   பியோவை  அதிகம்   அன்பு    செய்தார்கள். அதைப்  பெற்றுக்கொண்ட டாரியா கொட்டைகளை சாப்பிட்டபின் பியோ நினைவாக அந்த பையை  பத்திரமாக பாதுகாத்தார்.
சில  நாட்களுக்குப்  பின்  டாரியா  அலமாரியில் ஏதோ   தேடிக் கொண்டிருந்தார். அந்த இடத்தில்தான் அவரது கணவர் துப்பாக்கி சுடும் மருந்து  பொடியை  வைத்திருந்தார்.   அது    மாலை   நேரமாக   இருந்ததால் டாரியா  மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டு   தேட,   அந்த  மருந்து  தீப்பிடித்து அவரது    முகத்தில்    பற்றி     எரிந்தது.     சற்று     நேரத்திற்குப்பின்    அத்தை டாரியா பியோ நினைவாக வைத்திருந்த பையை  எடுத்து,  தனது முகத்தில் ஒத்திக்கொண்டார். ஆச்சரியம்! உடனே  அவரது முகம் குணம் பெற்றது. முகத்தில்  வலியோ, காயமோ, தழும்போ  எதுவுமில்லாமல்  மறைந்து   போ- னது. இது  தந்தை பியோ வழியாக  நடந்த  முதல் புதுமையாக கருதப்படுகிறது. கடவுளின்  பராமரிப்பு, நம்பிக்கை கொண்டவர்களுக்கு உண்டு என்பதற்கு இதுவே சாட்சியாக இருக்கிறது. இது உண்மை என்பதை  இந்த புதுமை நமக்கு உணர்த்துகிறது.

புனித பியோவின் ஆன்மீக  மகள்  ஒரு முறை  அவர்     எழுதிய கடிதத்தை  சாலையோரமாக நின்று  வாசித்துக்  கொண்டிருந்தாள். திடீரென காற்றடிக்கவே அந்தக் கடிதம்  கை தவறி காற்றில் வேகமாக அடித்துச் செல்லப்பட்டது. வெகுதூரம் அடித்துச் செல்லப்பட்ட கடிதம்  திடீரென ஒரு கல்லில் சிக்கி அங்கேயே  இருந்தது. அந்தப்  பெண்  வேகமாக  ஓடி  கடிதத்தை பத்திரமாக எடுத்துக்கொண்டாள். அடுத்த நாள் அந்தப் பெண்  தந்தை பியோ வை சந்தித்தபோது, ‘‘காற்றடிக்கும்போது நீ அடுத்தமுறை கவனமாக இருக்க வேண்டும்.  நான்  காலால்  அதை  மிதிக்கவில்லையென்றால்  அந்தக்  கடிதம் பறந்து  பள்ளத்தாக்கிற்கு  ஓடியிருக்கும்’’என்று சொன்னார்.

‘‘ஒன்றா இரண்டா புதுமைகள் செய்தார் தந்தை பியோ
இந்த உலகம் வியக்க அற்புதம் செய்தார் தந்தை பியோ’’
என்ற  கவிஞர் பொன்னடியானின் பாடல் வரிக்கேற்ப  தந்தை பியோ ஏராள- மான  புதுமைகள் செய்திருக்கிறார்.  அதாவது   கடவுள் அவர்  வழியாக   மா- பெரும் நிகழ்வுகளை நிகழ்த்தியிருக்கிறார். இயேசு  நிகழ்த்திய புதுமைகளில் எல்லாம் ஒரு செய்தியைச்  சொன்னார். ஒவ்வொரு  புதுமையும் கடவுளின் இரக்கத்தை, மன்னிப்பை, கருணையை, அன்பை  வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது.    ஆகவே புதுமைகள் நிகழ்த்தவேண்டும்  என்பதற்காக  அல்ல அந்த  நிகழ்வின்  வழியாக   இறையாட்சியை அறிவிக்க   வேண்டும்  என்பதே அதன்  நோக்கம்.   இயேசுவின்   சீடராக  இருந்து   81  ஆண்டுகளாக  வாழ்ந்த தந்தை பியோ இயேசு  விடுத்த இறையாட்சி பணியை  தனது புனிதமான வாழ்க்கையாலும், வார்த்தையாலும் மட்டுமல்ல புதுமைகள் வழியாகவும் அறிவித்தார். 

புதுமைகள் புரியும் தந்தை பியோவோடு இணைந்து கடவுளுக்கு நன்றி செலுத்த  நாம்  ஒவ்வொருவருமே அழைக்கப்படுகிறோம்.  கடவுள் நிகழ்த்தும் புதுமைகளில் கடவுளின்  வெளிப்பாட்டை கண்டு கொள்வோம். கடவுள்மீது கொண்டிருக்கும் விசுவாசிகளாக வாழ தந்தை பியோவைப் போல் நற்கருணை ஆண்டவரின்  பக்தியிலும்,  அன்னை   மரியாவின் பக்தியிலும் ஆர்வமுடன் ஈடுபடுவோம்.

இறையாசீர் உங்களோடு இருப்பதாக !

- அருட்தந்தை அ. செல்வராஜ், க.ச.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS