நல்லவன் × கெட்டவன்

 நல்லவனாய் இருப்பதற்கும் கெட்டவனாய் இருப்பதற்கும் அவன் அவன் அதற்குப் பொறுப்பு. நல்லவன் மிகுந்த முயற்சிகள் எடுத்து நல்லவனாக இருக்கலாம். ஆனால் கெட்டவன் மிக சுலபமாக கெட்டவனாக மாறிவிடலாம். கெட்டவன் மனம் மாறி நல்லவனாக வாழ்கிறான் என்றால், அவன் கடவுளுடைய ஆசிர்வாதத்திற்கு சொந்தக்காரனாக மாறிவிடுகிறான். கடவுளும் பாவி மனம் மாறி வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார். பாவி ஒருவன் அழிந்து போக வேண்டும் என்று கடவுள் விரும்புவதில்லை. நல்லவனாக இருக்கிறவன் தவறுதலாக கெட்டுப் போகிற பொழுது, கடவுளின் சாபத்தை தான் பெற்றுக்கொள்கிறான் (எசேக் 18:23-25). அவன் நல்லவனாக இருந்தான் என்பதற்காக எந்த விதத்திலும் அவன் கடவுளிடம் வாழ்வை பெற்றுவிட முடியாது. அவனுக்கு அழிவு நிச்சயம். நல்லவனாக இருந்து கெட்டவனாக மாறுகிறவனுக்கு பெரிய ஆபத்து, தப்பிக்க முடியாத ஆபத்தில் போய் முடிந்து விடும். இயேசுவும் தனது சீடர்களிடத்திலே கேட்டுக் கொள்வது இதுதான், "மறை நூல் அறிஞர்கள், பரிசேயர்கள் ஆகியோரின் நெறியை விட உங்கள் நெறி சிறந்து இருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்" (மத் 5: 20). 

இன்று அதைதான் இயேசு கிறிஸ்தவர்களாகிய நமக்கு சொல்லுகிறார். நம்முடைய நெறி; நம்முடைய ஒழுக்கம் நிறைந்த வாழ்வு மிக மிக சிறப்பாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் கடவுளின் அரசிற்கு அப்பாற்பட்டவர்களாக போய்விடுவோம். அவருடைய ஆட்சிக்குள் நுழையவே முடியாது. அழிவே நமக்கு இறுதியாகிவிடும். ஆகவே கடவுளின் சாபமும் ஆசிர்வாதமும் அவரவர் கையில் இருக்கிறது.

 இந்த தவக்காலத்தில் கிறிஸ்தவன் என்ற பொறுப்போடு வாழ்ந்து கடவுளுடைய ஆசீர்வாதத்தை நமதாக்கிக் கொள்ள வேண்டும் என்று விழிப்போடு ஜெபிப்போம், விழிப்போடு வாழ்வோம். நம்மை சுற்றி வான தூதர்கள் வந்து உதவி செய்வார்கள். இயேசு கிறிஸ்துவின் பெயரால் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் ஆசீரும் ஆகட்டும்.








  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அறிவிப்பு

 புனித பியோ ஜெபமாலை இயக்கத்தின் அன்பு சகோதர சகோதரிகளே, வணக்கம்.

 சில வருடங்களாக புனித ஜெபமாலை இயக்கத்திற்கான இரு மாத இதழ் "பியோ குரல்"  என்ற பெயரிலே வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கிய காலத்தில் இருந்து அந்த இதழ் நிறுத்தப்பட்டது. காரணம் அதற்குப் போதிய நிதி உதவி கிடைக்கவில்லை. ஆகவே, அதற்காக வருந்துகின்றேன். இனிவரும் காலங்களில் stpiorosarymovement என்ற bloggerஐ திரும்பவும் சீரமைப்பு செய்து அதன் வழியாக உங்களோடு தொடர்புகளை தொடரவும், நமது கத்தோலிக்க விசுவாசத்திற்கு தேவையான ஆன்மீக சிந்தனைகளை உங்களுக்கு வழங்கவும் ஆவலாய் இருக்கிறேன்.

 ஆகவே, இதில் உங்களுடைய படைப்புகளை வெளியிட விரும்புகிறவர்கள் என்னோடு தொடர்பு கொண்டு ஒத்துழைக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த bloggerஐ பார்க்க விரும்புகிறவர்கள் பார்த்து பயனடையின்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. இறைவன் உங்கள் ஒவ்வொருவரோடும் இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக!

மனித தந்தை பியோவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென்.

இப்படிக்கு,

 தந்தை A. செல்வராஜ் க.ச.

புனித பியோ ஜபமாலை இயக்க நிறுவனர் & வழிகாட்டி,.              பதோனி இல்லம்,                                      D- 127, 10வது கிராஸ் கிழக்கு,  தில்லை நகர், திருச்சி -18

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வத்திக்கான் செய்திகள்

சுவராக இல்லாமல், அன்பின் சமூகமாக மாறுவோம்.

குழந்தைகளை இயேசு வரவேற்று ஏற்றுக்கொண்டது போல அன்புடன் பெற்றோரும்  ஆசிரியர்களும் ஒவ்வொரு குழந்தையையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
பசியால் வாடுகின்ற கைவிடப்பட்ட, சுரண்டலுக்கு ஈடுபடுத்தப்படுகின்ற அன்பு மறுக்கப்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் இந்தச் சமூகம் வரவேற்க வேண்டும்.
ஏழ்மையாலும் மோதல்களாலும் துன்புறும் குழந்தைகளைக் காண்பது மிகப்பொரும் வேதனையைத் தருகின்றது என்ற திருத்தந்தை தம் கதவுகளைத் தட்டும் இந்தக் குழந்தைகளுக்கு சுவராக இல்லாமல் அன்பின் சமூகமாக மாறு வோம் என்றார்.

குடும்பங்களுக்கு திருஅவையின் முழு ஆதரவு

குடும்பம் குறித்த ஆயர் மாமன்றம் இடம் பெற்றுவரும் இவ்வேளை பொது நலனுக்கு உதவுன்ற கண்ணோட்டத்தில் குடும்பத்திற்கும் திருஅவைக்கும் இடயே நிலவும் ஆழமான உறவின் சில கூறுகள் குறித்து நோக்குவோம். இறைவனின் பாதையில் குடும்பங்கள் பயணம் செய்யும்போது இறைஅன்பின் அடிப்படை சாட்சிகளாக அவை விளங்குகின்றன. குடும்பங்களுக்கு திருஅவையின் ஆதரவும் முழு அர்ப்பணமும் அத்தியாவசியமாக வழங்கப்பட வேண்டும். துன்ப வேளைகளில் கூட ஒருவன் ஒருவருக்கிடையேற்று மாறா உறுதிப்பாடு நேர்மை, நம்பிக்கை, ஒத்துழைப்பு, மற்றும் மதிப்பு ஆகிய பண்புகளில்  குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை நாம் அறிவோம். சமூகத்தில் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய நபர்கள் மிகுந்த அக்கறையுடன் நடத்தப்படுவது தும்பங்களில்தான். இருப்பினும் இன்றைய  அரசியல் மற்றம் பொருளாதார வாழ்வில்லா நேரங்களிலும் குடும்பங்களுக்கு  ஆதரவை வழங்குவதில்லை. அது மட்டுமல்ல குடும்ப மதிப்பீடுளை சமுக வாழ்வில் உள்புகுத்தி ஒன்றிணைக்கும் பலத்தையும் இழந்துவிட்டது. 
இங்கு திருஅவையும் இறைவனின் குடும்பமாக எவ்வளவு தூரம் வார்ந்து வருகின்றது என்பதையும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய அழைப்புப் பெற்றுள்ளது. தூய பேதுருவைப்போல் திருஅவையும் மனிதகளைப் பிடிக்கம் மீன்வராக மாற அழைப்பு பெற்றுள்ளது. இதற்கு ஒரு புது வகையான வலையும் தேவைப்படுகின்ற குடும்பங்களே நமக்கு விடுதலை வழங்குகின்றன. அதன் வழியாகவே இறை வனின் குழந்தைகளாக இருப்பதில் கிட்டும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றnhம். பிடிக்கப்போகும் மீன்களின் அளவு மிகப்பெரிதாக இருகிட்டும் என்ற நம்பிக்கை மிக ஆழமாகப் பயணம் செய்யட்டும்.  தூய ஆவியாரால் தூண்டப்படும் ஆய மாமன்ற தந்தையர்களும் இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டு வாசத்திலும் உறுதிப்பாட்டிலும்  திருஅவை தன் வலையை ஊக்கமளிப்பார்களாக.

உலகின் இருளின் மத்தியில் குடும்பம் எப்போதும் ஒளியாக உள்ளது.

இருளில் சிறிய மெழுகுதிரியை ஏற்றுவது எத்துணை நல்லது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இருளை விரட்டுவதற்க இதைவிடச் சிறந்த வழி இருக்கின்றதா? இருளைப் போக்கமுடியுமா? என்ற கேள்விகளுடன் தன் மறையுரையைத் தொடங்கினார்.
வத்திக்கானில், 14வது ஆயர்கள் மாமன்றத்திற்குத் தயாரிப்பாக, புனித பேதுரு பசிலிக்காய் பேராலய வளாகத்தில் பல்லாயிரம் மக்கள் முன்னிலையில் நடைபெற்ற திருவிழிப்பு வழிபாட்டில் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இறைவன் நம் வாழ்வுக்காக வைத்துள்ள திட்டத்தை உணர்ந்து, நம்பிக்கையோடு அதை ஏற்பதற்குக் கற்றுக் கொள்ளும் இடம் குடும்பம் என்று கூறியத் திருத்தந்தை, நன்றியுணர்வு, உடன்பிறப்பு உணர்வின் பிரசன்னம் மற்றும் தோழமையின் இடம் குடும்பம் என்பதையும், பிறரை ஏற்கவும், மன்னிக்கவும், மன்னிப்புப் பெறவும் கற்றுக்கொள்ளும் இடம் குடும்பம் என்பதையும் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு குடும்பமும், அது எந்நிலையில் இருந்தாலும், இவ்வுலக இருளின் மத்தியில் எப்போதும் ஒளியாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இதை ஏற்று, குடும்பத்தில் உள்ள அழகு, நன்மை, புனிதம் ஆகியவற்றை மாமன்றத் தந்தையர் அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இரக்கத்தின் ஆண்டு

வருகிற டிசம்பர் 8ம் தேதி அமல அன்னை விழாவன்று தொடங்கி 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவோடு நிறைவடையும் இரக்கத்தின் புனித ஆண்டு, அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் அருளை வழங்கும் உண்மையான காலமாக அமையும் மற்றும் புதிய வழியில் நற்செய்திப் பணியைத் தொடர்ந்து ஆற்றுவதற்கும், மேய்ப்புப் பணியில் மாற்றங்கள் இடம்பெறுவதற்கும் தூண்டுலாக இருக்கும் என்று கூறினார் பேராயர் Salvatore Fisichella இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டு குறித்து செய்தியாளர் கூட்டத்தில் விளக்கிய, புதிய வழியில் நற்செய்தி அறிவிப்புப் பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் Fisichella அவர்கள். திருஅவை இரக்கத்தையும், கருணையையும் வழங்குவதற்கு, தணியாத ஆர்வத்தில வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்று கூறினார்.
ஆதாரம் வத்திக்கான் வானொலி


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அழகு குறிப்பு (முகம் ஒளி பெற)


போனேன், போகிறேன், போவேன் என்று முக்காலத்தையும் உணர்த்தினார் ஒரு மங்கை. எங்கே? என்றேன். Beauty parlour என்றார்.
ஏன் என்றேன்.
முகத்தில் வயதை மறைக்க என்றார்.
நானும் தேடினேன் முகத்தை விவிலியத்தில்

நானோ நேர்மையில் நிலைத்து
உமது முகம் காண்பேன்
விழித்தெழும்போது  உமது முகம் கண்டு
நிறைவு பெறுவேன்

ஆண்டவர் எளியோர்க்குத் தன் முகத்தை
மறைக்கவுமில்லை
வறியோருக்குத் தம் முகத்தை
திருப்பவுமில்லை.

ஆண்டவரின் முகம் தீமை செய்வோருக்கு
எதிராக இருக்கிறது.
ஆண்டவரின் முகம் பாவிகளை நோக்கி
இரக்கப் பார்வை பார்க்கிறது.

ஆண்டவரின் வார்த்ததையைக் கேட்டு அதன்படி நடக்காதவர்கள்
கண்ணாடியில் தம் முகம் பார்த்து பின்பு தான் எவ்வாறு இருந்தார்
என்பதை மறந்து விடும் ஒரு சாதாரண மனிதருக்கு ஒப்பாவார்.
உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசச் செய்யும்.

இந்த முகம் இறைவனுக்குச் சொந்தம்
என்பதைக் கண்டு கொள்ளச் செய்யும்.
தந்தை பியோவும் இதை உணர்ந்து வாழ்ந்ததால்தான்

இறந்தபின்னும் அவர் முகத்தில் ஒளி.
அவர் முகம் அழியவில்லை.

ஆகவே பியோவின் வழியில் வாழ்ந்து
நமது முகத்தை  ஒளியாக்கவோம்.

எப்படி?
முகத்துக்கு  Beauty Tips  கொடுத்தேனா?

ன்னை மரியா..
சையுடன் பெற்ற மகன்
றப்பின் தருவாயில்...
ட்டியால் துளைக்கப்பட
றைந்து நிற்கின்றாள்
ரார் முகம் எங்கே?
ங்கே போயினரோ?
க்கத்துடனே அவள்
யோ மகனே என்கிறாள்
ன்று சொல்கிறோம்
டுகிறோம் உம் முகம் நோக்கி
தந்தை பியோ வழியாக....

அக்ஸிலியா ஜோசப் லியோன், தூத்துக்குடி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஜெபமாலையின் மேன்மை

ஜெபமாலை என்பது நம் ஆன்மா சுத்திகரிக்கும் ஓர் ‘‘அன்பின் கருவி’’ அன்னை மரியாள் ஓர் அன்பின் பிறப்பிடம். எனவேதான்  இறைவன் தன் மகனை பெற்றெடுக்கும் ‘‘ஓர் பெட்டகமாக’’ அன்னையை உருவாக்குகிறார். அன்னை மரியாள் எளிமையாக தன் வாழ்வை உருவாக்கி இறைவனாக தன்னில் உருவெடுக்க தன் உதிரத்தை தூய்மையாக்கியவள் என்பதை உணர்த்துகிறது. ஜெபமாலையில் அன்னை மரியாளுக்கு கபிரியேல் வானதூதர் ‘‘மகிழ்ச்சியான ஓர் செய்தியை’’ சொல்கிறார். அன்னை மரியாள் எலிசபெத் அம்மாவை சந்தித்து ‘மகிழ்ச்சியை பகிர்ந்து’’ கொள்கிறார். இறை மகனின் பிறப்பு இடையர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியில்  அறிவிக்கப்படுகிறது. இறை மகன்  இயேசு தன் 12 வது வயதினில் தன் தந்தையின் விருப்பம் என்ன? என்பதை அறிந்தவராய் சட்ட வல்லுநர்கள். பரிசேயர் சதுசேயர் அறிஞர்கள், மூப்பர்கள் மத்தியில் ‘‘இறைவார்த்தை மகிழ்ச்சியோடு விளக்கிக் கூறுகிறார். காணமாமல் போன தன் மகனை அலைந்து திரிந்து சோர்ந்து தேடிய தாய் தன் மகனை ஆலயத்தில் கண்டு அவர் விளக்கிக் கூறிக்கொண்டிருப்பதை உணர்ந்தவராய் பெருமகிழ்ச்சி அடைகிறார், இவ்வாறு ஜெபமாலை என்பதை நாம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்லும்போது எல்லையில்லா ஆனந்தத்தை பெறுகிறோம்.
நாமும் நம்மை காக்கின்ற தெய்வம் எளிமையும் தூய்மையுமானவர் என்பதை அன்னை மரியாவைக் கண்டு அறிந்து தெளிந்த சிந்தனை கொள்வோம்.
உச்சியிலே நீ இருந்த -தாய்
உதிரத்தை பாலாக்கி
பக்தியிலே எமை வளர்த்து
சக்தியாய் நிற்பவளே
முக்தியை அடைந்திட முனைவோர்க்கு
முழுவதும் தன்னை தருபவளே  அன்னையே
இவ்வையத்தில் என்னை ஜனனம் பெற செய்தவளே
இச்சாம்ராஜ்யத்தில் நான் என் வழிதொடர
‘ஜெபமாலை என்னும் அருட்கருவியை’
தந்தவளே உம்மை போற்றுகிறேன். 
கிறிஸ்து பிறப்பு உலக மாந்தர்க்கே சிறப்பு’’ 
கிறிஸ்து உணர்த்தும் உன்னத கருவியை ‘தந்தவளே’
தாயே உம்மை போற்றுகிறேன்
ஜெபமாலை செய்வோம்
செம்மையான வாழ்வு வாழ்ந்து
இவ்வையத்தை  வெல்வோம்.
ஜெபமாலையை அருட்கருவியாய் கொண்டு
அவனியில் அமைதியை வளர்ப்போம்.

 S.கரோலின்மேரி  FIHM
திருக்கானூர்பட்டி
தஞ்சாவூர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அன்னையின் சங்கமம்


ஆதவனின் பொன் கீற்றுகளால் பின்னப்பட்டு பால்
ஒளியால் நிரப்பப்பட்டு நட்சத்திரப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட
அழகு மிளிர்ந்த ஆன்மாவை அன்பரின் அருளால் நிரப்ப
ஆண்டவனையே கருத்தாங்கிய கன்னி இவள்

ஆரவாரமில்லா அமைதியில் இறையனுபவத்தைப் பெற்று
அனைவர் மனத்தையும் கொள்ளை கொள்ளும் கன்னியாய்
தரணியர் போற்றும் தாயாய் சீர்திருத்தவாதியாய்
தாராள உள்ளத்தோடு பிறரன்புப் பணியில் ஈடுபாடு கொண்ட தாயவள்

தன்னிகரில்லா அருட்கன்னியாய் அரசாட்சி புரிபவள்
காற்றை சுவாசிப்போர்க்கு மணமாகவும் சுகமாகவும் இருக்கும்
காற்றுக்கு உருவம் உண்டோ இல்லையோ- ஆனால்
அன்னை மரியளுக்கு என்றும் ஆண்டவனின் அருளுண்டு

இறைவன் கொடுத்த கனிஇவள் இறைமக்களால் சுவைக்கப்படுபவள்
பார் போற்றும் பாவை இவள் பரலோகப் பிதாவின் பக்தை இவள்
இறைவார்த்தையை இதயத்தில் சுமந்து இறைமக்களை மனத்தில் சுமந்து
இறைவழியில் என்றும் நாம் வாழ ஜெபிப்பவள் நம் அன்னை

தொடர் சந்திப்பு நெருக்கத்தை உருவாக்கும்
அருகாமை நெருக்கத்தை  வளர்த்தெடுக்கும்
உடனிருப்பு உள்ளத்தை கொள்ளை கொள்ளும்
இறைவனின் நெருக்கம் என்றும் நமக்கு ஆசியைப் பெற்றுத்தரும்

உம் வழியில் யாம் நடக்க உம் மகளாய் (மகனாய்)
யாம் மாறிட நிலம் பிளந்து உள்செல்லும் மழையாய்
இருள் கிழித்து ஊடுருவும் ஒளியாய் எம்முள்
உம் அருள் வேண்டும் உம்ஆசீர் எமை ஆள வேண்டும்  அன்னையே

கிறிஸ்துவில் பிரிய
சகோ. ஆலிஸ் (ரெஜி)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தேவ இரகசியங்களை அறிவோம்

மகிழ்ச்சி நிறை மறையுண்மை
4. இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானிப்போம்.
  
இயேசு பிறப்பின் நிகழ்ச்சிகள் அன்னை மரியாவின் அடிமனதில் இன்ப அலைகளாக எழுப்பிக் கொண்டேயிருந்துது. நாற்பது நாட்கள் 40 நொடிகளாக கடந்தன. தாயின் சுத்திகரச் சடங்கும், தலைச்சன் மகனைக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கவும் தயாராகிறார்கள். இச்சடங்கை எருசலேம் ஆலயத்தில் தான் செய்ய வேண்டும் என்பதல்ல.  எந்த இடத்திலும் உள்ள ஒரு யூதகுருவிடம் காணிக்கை செலுத்தி, இறைவனுக்கு உரிமையான தலைச்சன் குழந்தையை மீட்டுக்கொள்ளலாம். அன்னை மரியாவின் இந்தப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இறைமகனையே தன் மகனாக அளிக்க மரியா எடுத்துச் செல்கிறார். சீயோன் மகள் என்ற அடையாளத்தில் திருஅவையால் போற்றப்படும் மரியாவில் இஸ்ராயேல் இனம்  விருத்தசேதனத்தால் தன் இனத்தாராகி விட்ட இறைமகனை இறைவனுக்கு மிகவும் ஏற்ற காணிக்கையாக்க மகிழ்ச்சி பொங்க செல்கிறார்கள். இங்கு மூன்று முக்கிய நிகழ்வுகள் நடக்கின்றன.

1. மரியாவின் தூய்மைப்படுத்தும் சடங்கு
2. தலைச்சன் குழந்தையை மீட்டல்
3. குழந்தை இயேசுவைக் காணிக்கையாகக் கொடுத்தல்.

பழைய ஏற்பாட்டில் :

லேவியர் 12 1-4, 6-8 பகுதியில் சொல்லப்பட்டுள்ளபடி ஒரு பெண். ஆண் குழந்தையை பெற்றபின் ஏழுநாட்கள் தீட்டுள்ளவளாக கருதப்பட்டாள். தொடர்ந்து 33 நாட்கள் தூயதான எந்தப் பொருளையும் தொடலாகாது.  தூய தலத்திற்குள் வரக்கூடாது. 40 நாட்களுக்கு பின் ஓராண்டு வயதுள்ள செம்மறி ஒன்றை எரிபலியாகவும், புறாக்குஞ்சு அல்லது காட்டுப்புறா ஒன்றை பாவம் போக்கும் பலியாகவும் குருவிடம் கொடுக்க அவர் அவளுக்கு கறை நீக்கம் செய்வார். ஏழையாக இருந்தால் இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரண்டு புறாக்களையோ கொண்டு வந்து ஒன்றை எரிபலியாகவும், மற்றதைப் பாவம் போக்கும் பலியாகவும் படைத்து கறை நீக்கம் செய்வார்.

மரியாவின் தூய்மைபடுத்தும் சடங்கு:

உலகனைத்தையும் பாவத்தீட்டிருந்து தூய்மையாக்க வந்தவரைப் பெற்ற தூய்மையே உருவான மரியா தூய்மைப்படுத்தும் சட்டத்திற்கு உட்பட்டு, ஏழைகளின் காணிக்கையுடன் நிற்கும் மேன்மையை என்னென்பது?. இதோ! ஆண்டவர் சிறுகுழந்தையாகப் பெற்றோரால் தூக்கிக் கொண்டு வரப்படுகிறார்.
‘அழிக்கவல்ல, நிறைவேற்றவே வந்தேன்‘ என்ற வாக்குக்கு இணங்க சட்டத்தை ஏற்படுத்தியவரே, அதற்குப் பணிந்து நிறைவேற்றுகிறார். அதுபோல தூய்மைபடுத்தும் சடங்கு அன்னை மரியாவுக்குத் தேவையில்லை. அசுத்தம், குறை எதுவும் அவளிடம் இல்லை. ஆனாலும் தம் மகனைப் பின்பற்றி, அவரும் சட்டத்துக்கு பணிந்து நடக்கிறார்.

மெசியா பற்றிய இறைவாக்கு :

யூதச்சடங்குகளின் பெயர் மட்டுமல்ல, தூய ஆவியின் அருட்பொழிவையும், இறை வாக்கினர்களின்  கூட்டம் கூடிவந்து குழந்தை யையும், அதன் தாயையும் சூழ்ந்து கொண்டு  மெசியாவைப் பற்றிய இறைவாக்கு நிறைவுக்கு வந்து விட்டதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதையும் மையப்படுத்துகின்றது. இவர்கள் மூலம் இஸ்ராயேல் மக்களின் வாழ்வின் மையமான எருசலேம் ஆலயத்தில் இறைவன் தன் மெசியாவை அறிமுகப்படுத்துகிறார். சடங்குகளை நிறைவேற்றிய குருக்கள் மெசியாவைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஆவியால் அருட்பொழிவு பெற்ற சிமியோன்  புளகாங்கிதம் அடைகிறார். தன் காலமும் நிறைவடைந்து விட்டதாக கூறி, கடவுளைப் போற்றுகிறார். (லூக் 2 : 28-32) சிமியோனும், அன்னாவும் கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காக காத்திருந்த எல்லோரிடமும் குழந்தையைப் பற்றி எடுத்துரைக்கின்றனர்.

இயேசு எதிர்க்கப்படும் அறிகுறி :

இயேசு இஸ்ராயேலின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாகவும், எதிர்க்கப்படும் குறியாகவும், புறவினத்தாருக்கு உண்மையென ஒளிர்விக்கும் ஒளியாகவும் இருப்பார் என விவரிக்கப்படுகிறார். (லூக் 2 : 34) ‘‘ புற இனத்தாரை ஒளிர்விக்கும் ஒளி’’ என்பது எசாயா புத்தகத்தில் ‘‘ஆண்டவரின் ஊழியன்‘‘ பற்றி சொல்லப்பட்ட அருள்வாக்கு. உலகம் முழுவதற்குமே மீட்பராக உள்ளார் என அறிவிக்கப்படுகிறார். (எசா 42 : 6, 49 : 6, 52 : 10)
இயேசு எதிர்க்கப்படும் அறிகுறியாக ஏன் இருக்க வேண்டும்? இறைவன் அன்பே உருவானவர் என அனைவரும் நம்பும் போது அவரை ஏன் எதிர்க்க வேண்டும்? சென்றவிடமெல்லாம் நன்மை செய்த இயேசு ஏன் விரோதிக்கப்பட வேண்டும்? இங்குதான் உண்மை அன்பையும் மனித இனத்தின் முரண்பாடுகiயும் பார்க்கிறோம். குடிப்பழக்கம் உள்ளவனுக்கு மதுபானம் வாங்கி கொடுப்பவன் உயர்ந்த நண்பனாகத் தெரிகிறான். உண்மையான அன்போடும், அக்கறையோடும் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட ஆலோசனைக் கூறுபவனை பகைக்கிறான்.
இறைவன் நமது வாழ்வில் நேரடியாகவோ பிறர் வழியாகவோ உண்மை அன்பைக் காட்டும் போது அதனைக் காணப் பழக வேண்டும். இல்லையெனில் அவ்வப்போது மகிழ்ச்சியளிக்கும் காரியங்களையும் நபர்களையும் உண்மை அன்பையும் வெறுத்து வாழ்வு தடம் புரளும் நிலையடைவோம்.

மரியாளின் இறை நம்பிக்கை :

மரியாவுக்கு ‘‘உமது உள்ளத்தையும் ஒருவாள் ஊடுருவிப்பாயும்‘‘ (லூக் 2 : 35) என்ற இறைவாக்கு அருளப்படுகிறது. இவ்வாக்கால் ஊடுருவப்பட்டு, ‘‘ஆண்டவர் சொன்னவை யாவும் நிறைவேறும்‘‘ என்று நம்பி, பேறுபெற்றவளாய் (லூக் 1 : 45) உயர்ந்து நிற்கிறார். குழந்தை இயேசுவைக் காணிக்கையாக்கும் நிகழ்ச்சியானது மரியா இறை நம்பிக்கையில் உயர்ந்து நிற்பவராக தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது. சிமியோனும், அன்னாவும்  குருவர்க்கத்தை சேர்ந்தவர்கள்  அல்லர். இக்காலத்தில் வயதானவர்கள் கோயிலில் கதியாய் கிடந்து செபமாலைச் சொல்லிக் கொண்டிருப்பது போல சிமியோனும், அன்னாவும் தேவாலயத்திலே இருந்து  இறைவனைப் புகழ்ந்தனர். அவர்களது பிரமாணிக்கமுள்ள , உண்மையான, வைரம் பாய்ந்த பக்திக்கு கடவுள் சன்மானம் அளிக்க சித்தமானார். உலக இரட்சகரைக் கண்டு களித்தனர்.
செபம் :
நித்திய பிதாவே ! இயேசு, மரி, சூசையின் தாழ்ச்சி நிமித்தம் எங்களுக்கு தாழ்ச்சியைக் கற்றுத்தாரும். அன்பின் நிர்மலத்தாய் ஏழைகளின் காணிக்கையான இரு வெண்புறாக்களை அளித்ததை நினைத்து எங்களிடத்தில் ஏழ்மை மனநிலையை ஊட்டியருளும். மகா பரிசுத்த கன்னிகையே நாங்கள் வாழ்வின் சட்ட திட்டங்களுக்கும், ஒழுங்கு கிரமத்திற்கும், எங்கள் பணிகளில், வாழ்வு நிலையில் கீழ்படியும் மனப்பான்மையைக் கொண்டு வாழ கிருபை செய்யும் ஆமென்.


சகோ. சிறியபுஷ்பம்,  FIHM
கூத்தப்பாக்கம், 
கடலூர்.
.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS