பொதுக்காலம் 5ம் ஞாயிறு - புத்தூர் Padre Pio Promotion 9/02/2025

பிப்ரவரி மாதத்திற்கான திருத்தந்தையின் செபவேண்டல் கருத்து

திருத்தந்தை :
 இன்றும் இறைவன் இளையோரை அழைத்துக் கொண்டேயிருக்கிறார், சில வேளைகளில் நாம் கற்பனைச் செய்துகூடப் பார்க்க முடியாத வகையில் அந்த அழைப்பு உள்ளது.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அருள்பணித்துவம் மற்றும் துறவு வாழ்வுக்கான தேவ அழைத்தல்கள் பெருக இறைவனை நோக்கி சிறப்பான விதத்தில் செபிப்போம் என பிப்ரவரி மாதத்திற்கான செபக்கருத்தில் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி மாதத்திற்கான தன் செபவேண்டல் கருத்தை பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 17வது வயதில் நடந்த ஓர் அனுபவத்துடன் தன் செய்தியைத் துவக்கியுள்ளார்.

தான் 17வது வயதில் படித்துக்கொண்டும் வேலை செய்துகொண்டும் இருந்தபோது, தனக்கென்று சில திட்டங்கள் இருந்ததாகவும், அதில் தான் ஓர் அருள்பணியாளராக வேண்டும் என ஒரு நாளும் சிந்தித்துப் பார்த்ததில்லை எனவும் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய ஒரு பின்னணியுடன் தான் ஒரு நாள் கோவிலுக்குச் சென்றதாகவும் கடவுள் தனக்காக அங்கு காத்திருந்ததைக் கண்டதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

இன்றும் இறைவன் இளையோரை அழைத்துக் கொண்டேயிருக்கிறார், சில வேளைகளில் நாம் கற்பனைச் செய்துகூடப் பார்க்க முடியாத வகையில் அந்த அழைப்பு உள்ளது என தன் செய்தியில் கூறும் திருத்தந்தை, சிலவேளைகளில் நாம் அவரின் அழைப்புக்கு செவிமடுப்பதில்லை, ஏனெனில் நாம் நம் விடயங்களிலும், நம் திட்டங்களிலும், திருஅவைக்குள்ளான நம் சொந்த விடயங்களிலும் மூழ்கிப்போய் விடுகிறோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால், தூய ஆவியார் கனவுகள் வழியாக நம்மிடம் உரையாடுவதோடு, இளையோர் தங்கள் இதயங்களில் உணரும் அக்கறை வழியாகவும் பேசுகிறார் என்றுரைக்கும் திருத்தந்தையின் செபக்கருத்து, நாம் இளையோரின் பயணத்தில் உடன் நடந்தால் கடவுள் எவ்வாறு அவர்கள் வழியாக புதியவைகளை ஆற்றுகிறார் என்பதை அறிந்துகொள்வதோடு, திருஅவைக்கும் இவ்வுலகுக்கும் சிறப்பான முறையில் சேவையாற்றுவதற்கான வழிகளில் அவரின் அழைப்பை நம்மால் வரவேற்க முடியும் என மேலும் கூறியுள்ளார்.

நாம் இளையோரில் நம்பிக்கைக் கொள்வோம். அனைத்திற்கும் மேலாக, கடவுளில் நம்பிக்கைக் கொள்வோம், ஏனெனில் அவர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறார் 
என தன் செய்தியின் இறுதியில் கூறும் திருத்தந்தை, 
அருள்பணி வாழ்வு அல்லது, துறவு வாழ்வு வழியாக இயேசுவின் மறைப்பணி வாழ்வுக்கு அழைக்கப்பட்டோரின் விருப்பங்களையும் சந்தேகங்களையும் திருஅவை சமூகம் வரவேற்று வழிநடத்தவேண்டும் என செபிப்போம் என அதனை நிறைவுச் செய்துள்ளார்.  

======-=========

 கடவுளின் அழைப்புக்கு பதில் கொடுத்தவர்கள் :
🌹 15 வயதில் கார்மல் சபையில் நுழைந்த இயேசுவின் புனித குழந்தை தெரசா 
🌹 18 வயதில் கடவுளின் குரலைக் கேட்டு டொரேட்டோ அறுத்த சகோதரர்களின் சபையில் இணைந்த அன்னை தெரசா
🌹 47 வயதில் கடவுளின் குரலைக் கேட்டு நோயாளிகளையும் முதியோரையும் பராமரிக்க தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட புனித ஜீன் சுகன் 
🌹 முப்பதாவது வயதில் காயப்பட்ட ராணுவ வீரனாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த புனித லொயோலா இன்னாசியா மனம் மாறி கடவுளின் குரலுக்கு பகல் கொடுத்த மிகப்பெரிய புனிதர்.
🌹 பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்த புனித பிரான்சி சேவியர் மற்றும் புனித அகுஸ்தினார் 
 🌹 20 வயது இளைஞனாக பெருஞ்சியாவில் பாதாள சிறைச்சாலை கைதியாக இருந்து இறைவார்த்தை கேட்டு மனம் மாறி கடவுளுக்கு பதிலளித்த புனித பிரான்சிஸ் அசிசி 
🌹 இணைந்தாவது வயதில் கப்பிச்சின் சபையில் இணைந்த புனித தந்தை பியோ / ஐந்து வயதில்  கமிலோ என்ற கப்புச்சின் துறவியால் ஏற்கப்பட்டவர் 

வரங்கள்
 ஆன்மாக்களை சோதித்தறியும் வரம், 💐பிறர் மனதில் உள்ளதை வாசித்து அறியும் வரம், 💐புதுமையாக குணமாக்கும் வரம், 💐ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றும் வரம், 💐மேல் எழும்பி செல்லும் வரம், 💐💐திருப்பலியில் மெய் மறந்து இயேசுவின் பாடுகளில் இணைந்து கண்ணீர் சிந்து வரம், 💐நறுமணம் பரப்பும் வரம், 💐ஐந்து காய வரம் 50 ஆண்டுகள் 

 இன்றைய நற்செய்தி:
 இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் சீமோனையும் யாக்கோப்பையும் யோவானையும் சந்திக்கிறார்.
 இரவு முழுவதும் மீன்பிடித்தார்கள் ஒன்றும் கிடைக்கவில்லை.
 இயேசுவின் வார்த்தைகளுக்கு பணிந்து மீண்டும் கடலுக்குச் சென்றார்கள் பெரும் திரளான மீன்களை பிடித்தார்கள். இதைக் கண்டு பேதுரு  இயேசுவின் கால்களில் விழுந்து " ஆண்டவரே நான் பாவி" நீர் என்னை விட்டுப் போய்விடும்" என்றார்.
 பேதுரு தன் தகுதியின்மையை உணர்ந்தார் நான் தகுதியற்றவர்களாய் இருந்தும் நம்மை அழைத்து தகுதிக்கு கொடுக்கிறார்.

 முதல் வாசகம்:
 ஏசாயா இறைவாக்கினர் தானாக முன்  வந்து கடவுளின் குரலுக்கு பதில் கொடுக்கிறார். " இதோ நான் இருக்கிறேன், அடியேனை அனுப்பும் " என்கிறார். அதே நேரம் தன் தகுதியின்மையை ஏற்றுக் கொள்கிறார். கடவுள் அவரை தகுதியுள்ளவராக மாற்றுகிறார்.

 இரண்டாம் வாசகம் :
 புனித பவுல் தன் தகுதியின்மையை ஏற்றுக் கொள்கிறார். கடவுளின் அருள் அவரது தகுதியை மிகுதியாகியது 

🌹 புனித பியோ ஜெபமாலை இயக்கம்

🌹 ஜெபமாலை
    -   ஜெபமாலையில் கிறிஸ்து மையம் கொள்கிறார்
 - இறை வார்த்தை மையப்படுத்தப்படுகிறது
- ஜெபமாலை நமக்கும் நம் அன்னை மரியாவுக்கும் இடையே உள்ள உரையாடல்
 -ஜெபமாலை ஒரு விவிலிய ஜெப தியானம்
 -ஜெபமாலை ஒரு சுருக்கமான முழுமையான நற்செய்தி புத்தகம்
- ஜெபமாலையில் மீட்பின் வரலாற்றை தியானிக்கிறோம்

🌹 புனித தந்தை பியோ 
      Padre Pio 
- ஜெபமாலை எனது ஆயுதம்
- மாமரியை நேசியுங்கள், பிறர் அவரை நேசிக்க செய்யுங்கள் அடிக்கடி ஜெபமாலை சொல்லுங்கள்.
- எல்லா நேரமும் ஜெபமாலையே சொல்லிக் கொண்டே இருப்பார்
- அன்னை மேரி என்னும் படகில் பயணிக்காமல் மீட்பின் கரையை அடைந்து விட முடியும் என்று எண்ணுபவர்கள் முட்டாள்கள் அனைவரிடத்தில் அனைத்து அருள் வரங்களையும் ஆண்டவர் ஒப்படைத்திருக்கிறார்
- அன்னை மரியே அம்மா என்று அழைத்துக் கொண்டே இருப்பார்

 🌹ஜெப குழுக்கள்

🌹விவிலியம் 
1 தெசலோனிக்கர் 5:11
ஆகவே நீங்கள் இப்பொழுது செய்து வருவது போல, ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்; ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்.

மத்தேயு 18:19
❮19-20❯உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

"Family that prays together, stays together " catechism 
இணைந்து ஜெபிக்கும் குடும்பமே இணைந்து வாழும் குடும்பம். 

இணைந்து ஜெபிப்பது நம்பிக்கையாளர்களை இணைத்து வைக்கிறது.
ஆன்மீக உறவு குடும்பம் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக