விருந்தோம்பல்
"விருந்தும் மருந்தும் மூன்று நாள்" - பழமொழி
"மருந்தே ஆனாலும் விருந்தோடு உண்" - கொன்றை வேந்தன்
70.
மருந்தே ஆயினும் - (உண்ணப்படுவது கிடைத்தற்கு அரிய) தேவாமிர்தமேயானாலும், விருந்தோடு - வந்த விருந்தாளிகளோடு கூடி, உண் - உண்ணு.
(பொழிப்புரை) கிடைத்தற்கரிய தேவாமிர்தமே யானாலும் விருந்தினரோடு புசி.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (புறநானூறு 18)
மாமியாரும் மருமகளும் விருந்துக்கு போனாங்க. வாழை இலையில சாப்பாடு பரிமாறி ஆயிடுச்சு. சாப்பிட்டுகிட்டு இருக்கும் போது மருமக மாமியாருடைய இலையை பார்த்தாங்க. "அத்தை உங்களுக்கு லெக் பீஸ் வேணுமா ?" வேணாம் வேணாம் ன்னு சொல்ல, மருமக மாமியார் இலையில் இருந்த லெக் பீஸ் எல்லாத்தையும் அள்ளிட்டாங்க. மாமியார் கடுப்பாயிட்டான் என்ன செய்ய அவங்க மருமகளே பார்த்தாங்க அங்கிருந்து சிக்கன் பிரை சுற்றலாம்னு நெனச்சா சோ மர்ம வேட்டை கேட்டாங்க "உனக்கு சிக்கன் பிரை வேணுமா" அதற்கு மருமக ரொம்ப விவரத்தோட அம்மா எனக்கு வேணும் அப்படின்னு சொல்லி மாமியார் இலையில இருந்த சிக்கன் பிறைய அள்ளிட்டாங்க....
ஒரு சில விருந்தாளி தான ரொம்ப விவரமானவங்க:
"உங்க வீட்டுக்கு நாங்க வந்த என்ன தருவீங்க.
எங்க வீட்டுக்கு நீங்க வரும்போது என்ன கொண்டு வருவீங்க"
"சோத்துக்கு கையால காக்கா விரட்டாதவன்"
விருந்தோம்பல் என்பது தமிழர்களின் பண்பாடு:
Thirukural
விருந்தோம்பல்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. (௮௰௩ - 83)
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை. (௮௰௩)
— மு. வரதராசன்
முதல் வாசகம்:
தன்னைத் தேடி வந்த இறையவர்களுக்கு ஆபிரகாம் விருந்து படைக்கிறார்
ஆசீர்வாதம்: மகன்
நற்செய்தி வாசகம்:
தன் வீட்டிற்கு வந்த இயேசுவுக்கு மார்த்தா விருந்து படைக்கிறார் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறார்.
ஆசீர்வாதம் : சீடத்துவ வாழ்வுக்கான அழைப்பு.
இரண்டாம் வாசகம்:
உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன். என் மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக