இயேசுவே நீர் தொட்டால் போதும் | Yesuve Neer Thottal Podhum

இயேசுவே நீர் தொட்டால் போதும் | Yesuve Neer Thottal Podhum


இயேசுவே நீர் தொட்டால் போதும் என் உடலெல்லாம் அற்புதம் காணும் இயேசுவே நீர் சொன்னால் போதும் என் மனமெல்லாம் சுகமாய் மாறும் - 2 

ஆராதனை ஆராதனை ஆராதனை

இயேசுவே நீர் தொட்டால் போதும் என் உடலெல்லாம் அற்புதம் காணும்

இயேசுவே நீர் சொன்னால் போதும் என் மனமெல்லாம் சுகமாய் மாறும் 

1. நாவசைத்து பேசாத என் வாயும் கூட வகைவகையாய் கீதங்கள் பாட செய்வீரே - 2 

2. எவ்வொலியும் கேட்காத என் காதும் கூட அயராது உன் வார்த்தை கேட்க செய்வீரே - 2

3. எழிலேதும் காணாத என் கண்ணும் கூட வரமான உம் வதனம் காண செய்வீரே - 2 

4. செயலேதும் அறியாத என் கைகள் கூட விலகாத உன் கரங்கள் பற்ற செய்வீரே - 2 

5. உணர்வேதும் இல்லாத என் வாழ்வும் கூட உறவாக என்னோடு உடன் வாழ்வீரே - 2

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS