இருமுறை பேறுபெற்றவர் !



அன்னை மரியாவுக்குப் புகழ் சேர்க்கும் லூக்கா நற்செய்தியின் ஒரு பகுதியே இன்றைய நற்செய்தி வாசகம்.

அன்னை மரியா இரண்டு வகைகளில் பேறுபெற்றவர் என்பதை இயேசு அறிக்கையிட்டுத் தம் அன்னையைப் பெருமைப்படுத்துவதை அன்னையின் ஆhவலரான லூக்கா கவனமுடன் பதிவுசெய்துள்ளார். 

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்னும் குறள் மொழிக்கேற்ப, இயேசுவின் அருள்மொழிகளைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பெண் அவரது போதனையாலும், ஆளுமையாலும் கவரப்பட்டு, அவரது அன்னையைப் புகழ்கிறார்.

ஞானம் நிறைந்த இறைமகன் இயேசுவைக் கருத்தாங்கிப் பாலுட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர் என்று ஒரே நேரத்தில் தாயையும், மகனையும் புகழ்கிறார். 

இயேசுவோ இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர் என்று சொல்லி, தம் தாய் மரியா இறைவார்த்தையைக் கடைப்பிடித்ததாலும் இரட்டிப்பாகப் பேறுபெற்றவர் என்று அறிக்கை இடுகிறார்.

நாமும் அன்னை மரியி;ன் தாய்மையில் பங்கெடுக்க இயேசு அழைக்கிறார். அன்னை மரியாவைப் போல நாமும் பேறுபெற்றவராக வேண்டுமென்றால், இறைவார்த்தையைக் கேட்டு, அதைக் கடைப்பிடிப்பவராக வாழ்வோமாக.

மன்றாடுவோம்: அன்னை மரியின் திருமகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உம் தாய் உம்மைக் கருத்தரித்தால் மட்டும் பேறுபெற்றவராகாமல், இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி வாழ்ந்ததாலும் பேறுபெற்றவராகச் செய்தீரே. உமக்கு நன்றி. நாங்களும் இறைவார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல், அதைக் கடைப்பிடித்து, அதன வழியாகப் பேறு பெற்றவராய் மாறும் அருள் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக