புனித பியோ ஜெபமாலை இயக்க ஜெபம்

இறையருளால் முழுமையாக, நிரப்ப பெற்ற
முழுமையின் தாயே, எம் அன்னை மரியே, நீர் வாழ்க!
பூவுலகில் வாழுகின்ற எமக்கு, அடைக்கலமும் ஆதரவும் நீரே.
உம் மகனாம் எம் மீட்பர் இயேசுவை, அன்பு செய்ய,
அவர் நினைவாக வாழ, அவர் சொல்படி நடக்க பலம் தாரும் அம்மா.
புனித பியோ ஜெபமாலை இயக்கத்தின், ஆன்மீக பிள்ளைகளாகிய
நாங்கள், ஆன்ம உடல் நலத்தோடு உலகை வென்றிட,
ஆற்றல் தாரும் அம்மா.
மகிழ்ச்சியையும் அமைதியையும், அருள் மழையாக
பொழிந்தருளும் தாயே. இம்மண்ணில் நிறை அமைதியும்,
இறைபிரசன்னமும் நிலைக்கட்டும்.
பாவிகளாகிய எங்களுக்காக, உம் மகன் இயேசுவிடம்
மன்றாடும் அம்மா. ஆமென். (1 பர , 1 அருள், 1திரி )

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித தந்தை பியோவுக்கு நவநாள் ஜெபம்

ஐந்து காய வரம் பெற்ற முதல் குருவே, புனித தந்தை பியோவே, அனைத்து ஆன்மாக்களும் விண்ணகம் சேர, தொடர்ந்து பரிந்து பேசி, பாவிகளை மனம் திருப்பி, பரமனிடம் சேர்க்க உறுதியளித்தவரே, நற்கருணை நாதரோடு ஒன்றித்த ஒப்பற்றவரே, செபமாலை பக்தியை சாத்தனை எதிர்க்கும் ஆயுதமாகக் கொண்டவரே. தவத்தை ஏற்று ஏழ்மை, தாழ்ச்சி, பிறரன்புப் புண்ணியங்களில் சிறந்து, இடைவிடா மன்றாட்டால் தீராத நோய்களைக் குணமாக்கும் வரம் பெற்ற வள்ளலே. எதிர்காலத்தை முன்னறிவிக்கும் இறைவாக்கினரே, ஐந்து காயங்களிலிருந்து நறுமணம் பரப்பும் நாயகரே, ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றும் நல்லவரே. இறையால் இவ்வுலகுக்கு அருளப்பட்ட மாபெரும் புனிதரே, தூய பியோவே. இதோ வேதனைகளோடும், பிரச்சனைகளோடும், தீராத நோய்களோடும், வாழ்க்கை சுமைகளோடும் உம்மை நாடி தேடி வரும் எங்களைக் கண்ணோக்கிப் பாரும். நாங்கள் விரும்பிக் கேட்கும் மன்றட்டுகளை ( உங்கள் விண்ணப்பங்களை அமைதியாக சொல்லவும் ) இறைவனிடம் பரிந்து பேசி தயவாய் எமக்குப் பெற்றுத்தாரும்.

அகிலம் போற்றும் அற்ப்புத தந்தை புனித பியோவே, இயேசுவின் ஐந்து காயங்களை தனது உடலில் சுமந்து, வேதனைகளை அனுபவித்து துன்பத்தில் இறைவனை உணர்ந்தவரே, நாங்களும் எங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை ஏற்று புனித வாழ்வு வாழவும், உலகிற்கு அமைதியை கொணரவும் தேவையான வரங்களை இறைமகன் இயேசுவிடமிருந்து பெற்றுத்தாரும். ஆமென். (1 பர, 1 அருள், 1 திரி )

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மூவொரு இறைவன் புகழ்:

தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக. தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மங்கள வார்த்தை மன்றாட்டு:

அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! / ஆண்டவர் உம்முடனே. / பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. / உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் / ஆசி பெற்றவரே./

தூய மரியே / இறைவனின் தாயே / பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக / இப்பொழுதும் / எங்கள் இறப்பின் வேளையிலும் / வேண்டிக்கொள்ளும். / ஆமென்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல்:

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விசுவாச பிரமாணம்

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேஸ்வரனை விசுவசிக்கிறேன்.

இவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன்.
இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னி மரியிடமிருந்து பிறந்தார்.
போஞ்சுப் பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கஞ்செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேஸ்வரனின் வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.

பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன்.
பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.
புனிதர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.
பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன்.
நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன்.
சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன் - ஆமென்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மூவேளை மன்றாட்டு:

ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூது உரைத்தார்.மரியா தூய ஆவியாரால் கருவுற்றார் அருள் மிகப்-

இதோ ஆண்டவரின் அடிமை.உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்.
அருள் மிகப்-

வாக்கு மனிதர் ஆனார்.நம்மிடையே குடிகொண்டார். அருள் மிகப்-

கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி / இறைவனின் தூய அன்னையே / எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


மன்றாடுவோமாக:
இறைவா / உம் திருமகன் மனிதர் ஆனதை / உம்முடைய வானதூதர் வழியாக / நாங்கள் அறிந்திருக்கிறோம். / அவருடைய பாடுகளினாலும் இறப்பினாலும் / நாங்கள் உயிர்ப்பின் மாட்சி பெற / உமது அருளைப் பொழிவீராக. / எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக / உம்மை மன்றாடுகிறோம். / ஆமென்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS