கடிதம்

புனித பியோ ஜெபமாலை இயக்கம்
அமலாசிரமம், அம்மா மண்டபம் ரோடு,
ஸ்ரீரங்கம், திருச்சி - 6
நாள்: 07.09.2026

​பெறுநர்:
பெரும் மதிப்பிற்குரிய பங்குத்தந்தை அவர்களுக்கு,

​பொருள்: புனித பியோ திருவிழா அழைப்பு மற்றும் அறிவிப்பு - சார்பாக.

​வணக்கம்,

​வரும் செப்டம்பர் மாதம் 19 மற்றும் 20 (19.09.2026 - 20.09.2026) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், திருச்சி அமலாசிரமத்தில், புனித பியோ ஜெபமாலை இயக்கம் சார்பாக புனித தந்தை பியோவின் ஆண்டுத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறது.

​இப்புனிதரின் திருவிழா திருப்பலியில் தாங்களும் கலந்துகொண்டு, எங்களை ஆசீர்வதிக்க அன்போடு அழைக்கின்றோம்.

​மேலும், தங்கள் பங்கில் இயங்கி வரும் புனித பியோ ஜெபமாலை இயக்கத்தின் உறுப்பினர்களையும் இத்திருவிழாவில் பங்கேற்க அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், வரும் 13.09.2026 ஞாயிற்றுக்கிழமை திருப்பலியில், இத்திருவிழா குறித்த அறிவிப்பைச் செய்து உதவுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

​தங்களின் மேலான வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
​நன்றி!

​இங்ஙனம்,
அருள்தந்தை. செல்வராஜ், கப்புச்சின் சபை.
ஆன்மீக இயக்குனர்,
புனித பியோ ஜெபமாலை இயக்கம்.
7598306107 / 9597166607

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS