Mass லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Mass லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புனித பிரான்சிஸ் திருப்பலி ஜெபங்கள்

அக்டோபர் 4

நமது செராபிக் புனித தந்தை பிரான்சிஸ் அசிசி
பிரான்சிஸ்கன் இயக்கத்தின் நிறுவனர்

 பெருவிழா

 வருகை பல்லவி 

புனித பிரான்சிஸில் கடவுளின் மகிமையைக் கொண்டாடுவோம்;
கிறிஸ்துவின் மகிழ்ச்சியான விண்ணக புகழ்ச்சி  குழுவிசையில் இணைவோம்

தொடக்க மன்றாட்டு

இறைவா, நற்செய்தியைத் தழுவி கிறிஸ்துவின் உயிருள்ள உருவமாக மாற்றப்பட்ட எங்கள் சகோதரர் புனித பிரான்சிஸ் மூலம் எல்லாப் புகழும் உமக்கே உரித்தாகுக. நாங்கள் நற்செய்திக்கு  உண்மையுள்ளவர்களாக இருக்கவும், நாங்கள் சந்திக்கும் அனைவருக்கும் கிறிஸ்துவாக மாறவும்,  உமது ஆவியின் வல்லமையால் எங்களை வழிநடத்தும். உம்மோடும் , தூய ஆவியாரோடும் , ஒரே கடவுளாக, என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற , எங்கள் மீட்பர், அதே இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் 

 காணிக்கை மன்றாட்டு 

 இறைவா, அனைத்தையும் படைத்தவரே, எங்கள் காணிக்கைகளையும் புகழ்ச்சிகளையும் ஏற்றுக்கொள்ளும். உமது அருளினால் எங்களை மாற்றியருளும், அதனால் புனித பிரான்சிஸைப் போல, நாங்கள் உமக்கு உண்மையாக சேவை செய்து, இப்போதும் என்றென்றும் உமது புகழைப் பாடுவோமாக. இங்கிலாந்தவராக்கிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

 நற்கருணை பல்லவி

கிறிஸ்துவின் துன்பங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட பிரான்சிஸ், இப்போது கிறிஸ்துவின் மகிமையை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார்.

 நற்கருணை மன்றாட்டு

இறைவா, எங்கள் நம்பிக்கை மற்றும் இரட்சிப்பு, இந்த புனிதமான மர்மங்கள் மற்றும் புனித பிரான்சிஸின் முன்மாதிரியால் ஈர்க்கப்பட்டு, நாங்கள் முதலில் எங்கள் சொந்த மனமாற்றத்தை நாடுவோம், மற்றவர்களுக்கு உமது கிருபையின் மாற்றும் சக்தியின் வாழும் சாட்சிகளாக மாறுவோம். நம்முடைய இரட்சிக்கும் கர்த்தராகிய கிறிஸ்துவின் மூலமாக இதைக் கேட்கிறோம்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித தந்தை பியோ தொடக்கவுரை


புனித தந்தை பியோ தொடக்கவுரை
 
ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
 
இதயங்களை மேலே எழுப்புங்கள்.
 
நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

ஆண்டவரே, தூயவரான தந்தையே , என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா , எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது, மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும், எங்கள் கடமையும் மீப்புக்குரிய செயலும் ஆகும் .

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் மீது பியத்ரெல்சினா, புனித தந்தை பியோவின் இதயம் மிகுந்த அன்பினால் பற்றி எரிந்து, கிறிஸ்துவின் துன்பங்களில் பரிவிரக்கத்துடன் பங்கேற்று  அவர் சிலுவை மரணம் வரை அவரைப் பின்தொடர்ந்தார். இவ்வாறு அன்பினால் அறிவுறுத்தப்பட்ட அவர், உடலாலும் ஆன்மாவாலும் பாதிக்கப்பட்ட அனைத்து துன்புறும் சகோதர சகோதரிகளுக்கும் நம் கடவுளின் எல்லையற்ற கருணையைக் வெளிப்படுத்தினார் .

எனவே , வனத்தூதர்கள்  புனிதர்கள் அனைவரோடும் இணைந்து நாங்களும் புகழ்ச்சிப் பண் இசைத்து முடிவின்றி ஆர்ப்பரிப்பதாவது.

தூயவர்... தூயவர்... தூயவர்... 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

திருப்பலி ஜெபங்கள்


செப்டம்பர் 23

பியத்ரெல்சினா புனித தந்தை பியோ, அருப்பணியாளர்
 
வருகை பல்லவி : தானியேல் (இ) 1:61, 64

ஆண்டவரின் குருக்களே, ஆண்டவரை வாழ்த்துங்கள். தூய்மையும் மனத்தாழ்ச்சியும் உள்ளோரே, ஆண்டவரை வாழ்த்துங்கள்.
 
தொடக்க மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகனின் பாடுகளில் பங்கேற்கும் பேற்றைத் தனிப்பட்ட அருளால் அருள்பணியாளரான புனித பியோவுக்கு வழங்கி அவரது பணியால் உமது இரக்கத்தின் வியத்தகு செயல்களை மீண்டும் நிகழ்த்தினீரே, அவரது பரிந்துரையால் கிறிஸ்துவின் துன்பங்களில் நாங்கள் என்றும் பங்குபெற்று உயிர்ப்பின் மாட்சிக்கு மகிழ்ச்சியுடன் வந்து சேருவோமாக. உம்மோடு...

காணிக்கை மன்றாட்டு
 
ஆண்டவரே, பீயத்ரெல்சினாவின் புனித தந்தை பியோவின் நினைவாக நாங்கள் அளிக்கும் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ளும்,  இப்புனிதமான மறைநிகழ்வுகளில் பங்கேற்பதன் வழியாக , எம் ஆண்டவராகிய கிறிஸ்துவினுடைய மீட்பின் பலனைப் பெற நாங்கள் தகுதியுடையவர்களாக மாறுவோமாக, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றடுகிறோம்.

நற்கருணை பல்லவி : ஏசா 61:1,2

ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்; ஆண்டவரின் அருள் தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் கடவுள் என்னை அனுப்பியுள்ளார்.

நன்றி மன்றாட்டு

ஆண்டவரே, உமது தெய்வீக இரக்கத்தின் மீது அளவற்ற நம்பிக்கையையும் பற்றுறு தியையும் கொண்டிருக்க வேண்டுகிறோம். புனித தந்தை பியோவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, விடாமுயற்சியுடன் உமக்கு சேவை செய்ய , எங்கள் ஆண்டவராகி கிறிஸ்துவின் மூலம் அனைவருக்கும் அயராத தொண்டு செய்வோமாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றடுகின்றோம்.

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS