நம்புங்கள் ஜெபியுங்கள்

இரண்டு சிறுவர்கள் தங்களது விடுமுறை நாட்களில் நல்ல வசதியான அவருடைய பாட்டி வீட்டிற்கு சென்றார்கள். பேரன்களை பார்த்த பாட்டி எந்த சந்தோஷப்பட்டார். மொட்டையாய் தின்பண்டங்களை செய்து கொடுத்தார். கதைகள் எல்லாம் சொன்னார். இரவு படுக்கப் போகும் போது அவர்களுக்கு படுக்கை அறையை தயார் செய்து கொடுத்தார். அப்பொழுது அவர்களிடத்தில் தூங்க போறதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் ஜெபம் பண்ணனும் என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டார். பாட்டி அங்கேயே ஜெபித்துக் கொண்டிருந்தார். பேரன்களை படுக்க வைத்து தூங்க வைப்பதற்காக வந்தார். இந்த இரண்டு சிறுவர்களும் அங்கே ஜெபித்தார்கள். முதலில் பெரியவன் ஜெபித்தான். அடுத்தது அண்ணன் போலவே தம்பியும் அப்படியே கிடைத்தான். இறுதியாக "கடவுளே எனக்கு ஒரு நல்ல ஸ்கூட்டரும் விளையாட்டுப் பொருள்களும் வாங்கி கொடுங்க" என்று சத்தமாக கத்தி ஜெபித்தான். அதற்கு அவனுடைய அண்ணன் சொன்னான். ஏன்டா இப்படி கத்துற கடவுளுக்கு என்ன காது கேட்காதா? என்று கேட்டான். தம்பி சொன்னா "கடவுளுக்கு காது கேட்கும் ஆனா பாட்டிக்கு காது கேட்காதே" அப்படின்னான்

தந்தை பியோ 

"ஜெபம் நம்மிடம் உள்ள சிறந்த ஆயுதம்; அது கடவுளின் இதயத்தின் திறவுகோல். நீங்கள் இயேசுவிடம் உங்கள் உதடுகளால் மட்டுமல்ல, உங்கள் இதயத்தாலும் பேச வேண்டும்."

"பணிவும், வாழ்க்கையின் தூய்மையும் நம்மை கடவுளிடம் உயர்த்தும் சிறகுகள். நல்ல நோக்கத்துடனும், நல்லெண்ணத்துடனும் செய்யப்படும் ஜெபங்கள் அனைத்தும் நல்லவை."

"ஜெபியுங்கள் நம்புங்கள் கவலைப்படாதீர்கள்" "கவலை பயனற்றது" 

பத்ரே பியோ இயேசுவிடம் செய்த பிரார்த்தனை

"உமது நன்மைகளையும், உமது துன்பங்களையும், உமது பரிகாரத்தையும், உமது கண்ணீரையும் என் முழு பலத்தோடு பற்றிக் கொள்கிறேன், இதனால் இரட்சிப்பின் பணியில் நான் உங்களுடன் ஒத்துழைக்க முடியும். உமது வேதனைக்கும், உமது இரத்த வியர்வைக்கும், உமது மரணத்திற்கும் ஒரே காரணமான பாவத்திலிருந்து தப்பிக்க எனக்கு பலம் கொடுங்கள்."

நற்செய்தி: லுக்கா 11: 1-13

# இயேசு ஜெபிக்க கற்றுக் கொடுக்கிறார் .
#  விடாமுயற்சியுடன் ஜெபிக்க சொல்லுகிறார்.

1. இயேசுவே ஜெபிக்கிறார். இயேசு கடவுளின் மகன் பாவமே இல்லாதவர் தந்தையிடத்திலே ஜெபிக்கிறார். மிகப்பெரிய முன்மாதிரி.

2. சீடர்கள் ஜெபிக்க கற்றுத் தரும்படி கேட்கிறார்கள்.

3. இயேசு அருமையான ஒரு ஜெபத்தை கற்றுக் கொடுக்கிறார். 
# விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே...
# மிக முக்கியமான ஜெபம். இயேசுவே கற்றுக் கொடுத்த ஜெபம்.

# மீட்டரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம் இன்று திருப்படியிலே அனைவரும் நம்பிக்கையோடு ஜெபிப்பதற்கு திருச்சபை அழைக்கிறது. மிக முக்கியமான ஜெபம். உணர்ந்து ஜெபிக்க வேண்டும் நம்பிக்கையோடு ஜெபிக்க வேண்டும். 

4.  மூன்று விதமான ஜெபம் ஜெபமாக அமைந்திருக்கிறது. 
1) கடவுளை நோக்கிய ஜெபம் 
2) தன்னை நோக்கிய ஜெபம் 
3) பிறரை நோக்கிய ஜெபம்
# ஒரு முழுமையான ஜெபம் இயேசு கற்றுக்கொடுத்த ஜெபம். 

5. நம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் அந்த நண்பனைப் போல ஜெபிக்க வேண்டும். 
# ஆபிரகாமை போல ஜெபிக்க வேண்டும். (தொ. நூல்18: 20-32)

# கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்.......
தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!”

நம்மை ஆய்வுக்கு உட்படுத்துவோம்: 
1. நாம் ஜெபிக்கிறோமா? 
2. நம் ஜெபம் கேட்கப்படுகிறதா?

எபிரேயர் 4:16
எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

மாற்கு 11:24
ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்.
மாற்கு 11:25
நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நற்கருணை ஆராதனை 27/07/2025

புனித தந்தை பியோ
# நற்கருணை ஆராதனை செய்வோரின் பாதுகாவலர்.

# அவரை காணவில்லை என்று தேடவே தேவையில்லை. நற்கருணை பேழை இருக்கும் இடத்தில் போய் பார்த்தால் அவர் அங்கு தான் இருப்பார்.

# பல மணி நேரம் நற்கருணை ஆண்டவரின் பிரசன்னத்தில் மூழ்கி இருப்பதே அவருக்கு அலாதி இன்பம்.

#1920 களில் பியோவைப் பற்றிய விளம்பரத்தைக் குறைக்க வத்திக்கான் ஆரம்பத்தில் கடுமையான தடைகளை விதித்தது: அவர் பொதுவில் திருப்பலி செய்யவோ, மக்களை ஆசீர்வதிக்கவோ, கடிதங்களுக்கு பதிலளிக்கவோ, தனது ஐந்து காயங்களை பொதுவில் காட்டவோ, அவரது ஆன்மீக இயக்குநரான பத்ரே பெனடெட்டோவுடன் தொடர்பு கொள்ளவோ தடை விதிக்கப்பட்டது.

# பத்ரே பியோ உயிருடன் இருந்தபோது அதிகாரப்பூர்வ திருச்சபையால் சோதனைகள் மற்றும் தண்டனைகளை அனுபவித்தார் . 1922 ஆம் ஆண்டில், OFM இன் பாதிரியார் அகோஸ்டினோ ஜெமெல்லி, பத்ரே பியோவின் ஐந்து காயங்களை ஆராய்ந்து அவை ஒரு மோசடி என்று கூறினார். வத்திக்கான் திருப்பீடம் பத்ரே பியோவிற்கு எதிராக முறையே 1923, 1924 ஆம் ஆண்டுகளில் நான்கு ஆணைகளையும், 1926 ஆம் ஆண்டில் இரண்டு ஆணைகளையும் வெளியிட்டது.

# தந்தை பியோ நற்கருணை ஆண்டவரின் மீது ஆழமான அன்பு கொண்டிருந்தார். அவர் சொல்கிறார், " இயேசு எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கிறார். அவருடைய பிரசன்னம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. அவருக்காக நான் என்ன செய்ய முடியும் என்பது எனக்கு ஒரே குழப்பமா இருக்கிறது. "இயேசுவே என் ஆன்ம உணவே" என்று மீண்டும் மீண்டும் சொல்லி அழுகிறேன். 

# ஒவ்வொரு முறையும் நற்கருண பெற்ற பிறகு
 எப்படி உணர்ந்தார் என சொல்லுகிறார். "இந்த உலகத்தில் நான் இருக்கிறேன் என்பதையே நான் மறந்துவிடுகிறேன். என் மனமும் இதயமும் வேறு எதையுமே விரும்புவதில்லை. சில சமயம் எனக்கு வேற ஏதாவது வேணுமா அப்படிங்கிறதையே என் மனதுக்கு வராது" 
அதுதான் தந்தை பியோ நற்கருணை ஆண்டவரின் கொண்டிருந்த ஒன்றிப்புக்காண சிறப்பான அருள்.

கொலோசியர் 2: 13-14
"நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார். நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன் பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்துவிட்டார்."

திருப்பாடல் 138: 7-8

நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; 
உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.
நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். 

ஜெப உதவி:

1. சகாயராணி 

2. ஆரோக்கிய மீனு பர்வதம் தேர்வில் வெற்றி பெறவும் குழந்தை பாக்கியத்திற்காகவும்

3. மகன் விரைவில் பணமாற்றமடைந்து தன்னிடம் வரவும் விரைவில் திருமணம் நடைபெறவும் வேண்டி.

4. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியசாமி விரைவில் சுயநினைவு பெற்று குணம் பெற வேண்டி.
 
5. அருட் சகோதரி ஜுடித் 
அருட் சகோதரி ஜோஸ்பின் மொறாய்ஸ்
அருட் சகோதரி டென்னிஸ்

6. சகோதரி கரோலின் உடல் நலத்திற்காக. 
6. பிரேமா உடல் நலத்திற்காக 
7. நிர்மலா உடல் நலத்திற்காக

8. சில்வஸ்டர் வேலை வாய்ப்புகள் வேண்டி
பிள்ளைகளால் கைவிடப்பட்டு 

9. விரட்டி அடிக்கப்படுகின்ற வயது முதிர்ந்த பெற்றோர்களுக்காக முதியவர்களுக்காக

10. Fr. அருள்தாஸ் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும்

என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும் 
எந்நாளும் உன் அன்பில் நான் வாழ வேண்டும் 
                 1
என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும்
எந்நாளும் உன் புகழ் நான் பாட வேண்டும் 
                 2
என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும்
இல்லாதார் குறையெல்லாம் நான் தீர்க்க வேண்டும் 
                 3
என் நெஞ்சில் இயேசுவே நீ வாழ வேண்டும்
சமதர்ம சமுதாயம் நான் காண வேண்டும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒரு திருமண விருந்தில் ஒருவர் நான்கு பந்தியிலும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பந்தி பரிமாறியவர் அவரிடம், "என்னப்பா! நான்கு பந்தியிலும் தொடர்ந்து சாப்பிடுகிறாய்; எனக்கு ஞாபக சக்தி இல்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர், “நான் என்ன செய்வது? உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம்: எனக்கு ஜீரண சக்தி அதிகம்” என்றார்.

பொதுவாக நமக்கு ஞாபக சக்தியைவிட ஜீரண சக்திதான் அதிகமாக இருக்கின்றது. மூளைக்கு வேலை கொடுப்பதைவிட வயிற்றுக்கு அதிகமாக வேலை கொடுக்கின்றோம். நாம் உணவு வகைகளைச் சுவைத்துச் சாப்பிடுகிறோம். ஆனால் கடவுளுடைய வார்த்தையைச் சுவைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. வாய்வழியாக உட்கொள்ளும் உணவைவிடச் செவிவழியாக உட்கொள்ளும் உணவு மேலானது. உண்மையில், செவிக்கு உணவு இல்லாதபோதுதான் வயிற்றுக்குச் சிறிதளவு உணவு கொடுக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். (குறள் 412)

இன்றைய நற்செய்தியில் வருகின்ற அக்காள் மார்த்தா வயிற்று உணவைச் சமைப்பதில் சிரமம் எடுத்துக் கொள்கின்றார். ஆனால் அவரின் தங்கை மரியாவோ செவி உணவுக்கு முன்னுரிமை கொடுத்து, இயேசுவின் வார்த்தையைக் கேட்டுச் சுவைத்து மகிழ்கின்றார். தனக்கு வேலையில் உதவி செய்யும்படி மரியாவைப் பணிக்க வேண்டுமென்று இயேசுவிடம் மார்த்தா கேட்கிறார். இயேசுவோ மரியாவிடம், "மார்த்தா நீ எனக்குக் கொடுக்கும் உணவைச் சுவைப்பதைவிட நான் உனக்குக் கொடுக்கும் உணவைச் சுவைப்பதுதான் மேலானது. உன் தங்கை புத்திசாலி, அவளுக்குத் தெரிந்தது உனக்குத் தெரியவில்லையே" என்று கூறுகிறார்.

இன்றைய உலகில் மனிதர், தொகை தொகையாகச் செலவழித்து வகைவகையாக உணவை உட்கொள்வதில் அதிகம் நாட்டம் கொண் டுள்ளனர். ஆனால், "ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்" (திப 34:8) என்பதையும், "உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை" (திபா 119:103) என்பதையும் அடியோடு மறந்து விட்டனர். "மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல. மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்" (இச &:3) என்பதைக் கருத்திற் கொண்டு, மரியாவைப் பின்பற்றி, கடவுளின் வார்த்தையைச் சுவைத்து உயிர் வாழ்வோம்.

இயேசுவின் காலத்தில் பெண்கள் ஒரு குருவின் சீடராக முடியாது. எந்தவொரு 'ரபியும்' (போதகர்) ஒரு பெண்ணுக்கு மறைநூல் சுற்றுக் கொடுக்கமாட்டார். ஏனெனில், பெண்கள் மறைநூலைப் பயில அருகதையற்றவர்கள். ஆனால் இயேசு இம்மரபை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டார். மரியா இயேசுவின் காலடியில் அமர்த்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். இங்கு இயேசு குருவாகவும் மரியா சீடத்தியாகவும் திகழ்கின்றனர். இயேசுவுக்குப் பெண் சீடர்கள் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார் நற்செய்தியாளர் லூக்கா (லூக் 8:1-3).

பெண்கள் தங்களுக்குத் திருச்சபை திருப்பட்டங்களை வழங்க மறுக்கின்றது என்று ஆதங்கப்படத் தேவையில்லை. திருப்பட்டங்கள் பெறுவது முக்கியமில்லை; இயேசுவின் சீடராவதே முக்கியம். பெண்கள் இயேசுவின் சீடர்களாக முடியும். திருப்பட்டங்கள் பெறாமலே பெண்கள் திருச்சபையில் ஏராளமான பணிகளைத் தாராளமாக ஆற்ற முடியும்; ஆற்றவும் வேண்டும்.

ஒரு சிறுவன் தன் அப்பாவிடம், "காக்கா சுத்தினா விருந்தாளிகள் வருவார்களா?" என்று கேட்டாள். அதற்கு அப்பா அவனிடம், "ஆமா, காக்கா கத்தினால் விருந்தாளிகள் வருவார்கள்; உன் அம்மா கத்தினால் விருந்தாளிகள் போய்விடுவார்கள்" என்றார். விருந்தினரை உபசரிப்பது பெண்களின் தனிப்பண்பு. மார்த்தாவிடம் இருந்த விருந்தோம்பல் என்ற பண்பை நாமும் பின்பற்ற வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் மனிதர் உருவில் வந்த ஆண்டவருக்கு ஆபிரகாமும் சாராவும் விருந்தளிக்கின்றனர். அதற்குக் கைமாறாக, மலடியாக இருந்த சாராவுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கிறது (தொ நூ 18:1-10). இல்லறத்தாரின் தலையாய கடமை விருந்தோம்பல் ஆகும் என்கிறார் திருவள்ளுவர்.

இருந்துஓம்பி இல்வாழ்வது எவ்வாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு(குறள் 81)

"வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள் விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்" (உரோ 12:13) என்று அறிவுறுத்துகிறார் திருத்தூதர் பவுல்.

ஒரு கணவர் தன் மனைவியைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்: “என் மனைவியும் பத்தினி, அவர் வைக்கிற குழம்பும் பத்தி மனைவி பத்தினி, ஏனென்றால் என்னைத் தவிர வேறு எவரும் அவளைத் தொட முடியாது. அவள் வைக்கும் குழம்பும் பத்தினி, ஏனெனில் என்னைத் தவிர வேறு எவரும் அதைச் சாப்பிட முடியாது." மனைவியர் நாக்குக்கு ருசியாகச் சமைத்துப் போடவேண்டும் என்று கணவர்களும் குழந்தைகளும் எதிர்பார்க்கின்றனர். பெண்கள் சமையல் கலையைக் கற்றுக்கொண்டால், குடும்ப வாழ்வு சுவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

முடிவாக, மரியா செபவாழ்வுக்கும், மார்த்தா செயல் வாழ்வுக்கும் சிறந்த எடுதுக்காட்டாகத் திகழ்கின்றனர். வாழ்விலே செபம், செயல் ஆகிய இரண்டுமே முக்கியமானது. செபமில்லாத செயல் வேரில்லாத மரம்: செயவில்லாத செபம் கனிதராத மரம். இயேசுவின் வாழ்வில் இரண்டு மையப்புள்ளிகள்: ஒன்று மலை, மற்றொன்று மக்கள். மலையில் இரவெல்லாம் செபத்தில் மூழ்கித் திளைத்தார்; பகலெல்லாம் மக்களுக்கு நன்மை செய்தார். இயேசுவைப் பின்பற்றிச் செபத்தையும் செயலையும் நமது வாழ்வின் இரு கண்களாகக் கொள்வோம்: நம் வாழ்வு சுவைபெறும்.

ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள் (திப 34:8).

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விருந்தோம்பல்

விருந்தோம்பல் 


"விருந்தும் மருந்தும் மூன்று நாள்" - பழமொழி 

"மருந்தே ஆனாலும் விருந்தோடு உண்" - கொன்றை வேந்தன் 
70. 
மருந்தே ஆயினும் - (உண்ணப்படுவது கிடைத்தற்கு அரிய) தேவாமிர்தமேயானாலும், விருந்தோடு - வந்த விருந்தாளிகளோடு கூடி, உண் - உண்ணு.
(பொழிப்புரை) கிடைத்தற்கரிய தேவாமிர்தமே யானாலும் விருந்தினரோடு புசி.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (புறநானூறு 18) 


மாமியாரும் மருமகளும் விருந்துக்கு போனாங்க. வாழை இலையில சாப்பாடு பரிமாறி ஆயிடுச்சு. சாப்பிட்டுகிட்டு இருக்கும் போது மருமக மாமியாருடைய இலையை பார்த்தாங்க. "அத்தை உங்களுக்கு  லெக் பீஸ் வேணுமா ?" வேணாம் வேணாம் ன்னு சொல்ல, மருமக மாமியார் இலையில் இருந்த லெக் பீஸ் எல்லாத்தையும் அள்ளிட்டாங்க. மாமியார் கடுப்பாயிட்டான் என்ன செய்ய அவங்க மருமகளே பார்த்தாங்க அங்கிருந்து சிக்கன் பிரை சுற்றலாம்னு நெனச்சா சோ மர்ம வேட்டை கேட்டாங்க "உனக்கு சிக்கன் பிரை வேணுமா" அதற்கு மருமக ரொம்ப விவரத்தோட அம்மா எனக்கு வேணும் அப்படின்னு சொல்லி மாமியார் இலையில இருந்த சிக்கன் பிறைய  அள்ளிட்டாங்க....


ஒரு சில விருந்தாளி தான ரொம்ப  விவரமானவங்க: 
"உங்க வீட்டுக்கு நாங்க வந்த என்ன தருவீங்க.
எங்க வீட்டுக்கு நீங்க வரும்போது என்ன கொண்டு வருவீங்க"

"சோத்துக்கு கையால காக்கா விரட்டாதவன்"

விருந்தோம்பல் என்பது தமிழர்களின் பண்பாடு:

 Thirukural
விருந்தோம்பல்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.   (௮௰௩ - 83)
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.  (௮௰௩)
— மு. வரதராசன்

முதல் வாசகம்

தன்னைத் தேடி வந்த இறையவர்களுக்கு ஆபிரகாம் விருந்து படைக்கிறார்

ஆசீர்வாதம்: மகன்

நற்செய்தி வாசகம்: 

தன் வீட்டிற்கு வந்த இயேசுவுக்கு மார்த்தா விருந்து படைக்கிறார் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறார்.

ஆசீர்வாதம் : சீடத்துவ வாழ்வுக்கான அழைப்பு.

இரண்டாம் வாசகம்: 

உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன். என் மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எங்கள் அன்பான விண்ணக தந்தையே,

இன்று நாங்கள் நன்றியுள்ள இதயங்களுடன் உம்மிடம் வருகிறோம், எங்கள் புனித பியோ ஜெபமாலை இயக்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் உம்மிடம் ஒப்படைக்கின்றோம்.  ஆன்மீக குடும்பம் என்னும் கொடைக்கானல், எங்களை ஒன்றிணைக்கும் விசுவாசப் பிணைப்பிற்காகவும், எங்கள் சுமைகள், மகிழ்ச்சிகள் மற்றும் கோரிக்கைகளை ஒருவருக்கொருவர் மற்றும் உம்முடன் பகிர்ந்து கொள்ளும் பாக்கியத்திற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம்.

ஆண்டவரே, நீர் ஒவ்வொரு உறுப்பினரையும் **அதிகமாக** ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் மன்றாடுகிறோம். அவர்களின் விசுவாசத்தை பலப்படுத்தும், உமது வார்த்தையைப் புரிந்துகொள்வதை ஆழப்படுத்துங்கள், மேலும் அவர்களின் இதயங்களில் உமது மீது தீவிரமான ஆர்வத்தைத் தூண்டுங்கள். அவர்கள் கிருபையிலும் எங்கள் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் அறிவிலும் வளரட்டும்.

அவர்களின் வாழ்க்கையில் உமது **தெய்வீக ஞானத்தையும் வழிகாட்டுதலையும்** நாங்கள் கேட்கிறோம். அவர்களின் படிகளை வழிநடத்துங்கள், அவர்களின் பாதைகளை ஒளிரச் செய்யுங்கள், மேலும் அவர்களின் அனைத்து முடிவுகளிலும் அவர்களுக்கு பகுத்தறிவை வழங்குங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக எப்போதும் உமது சித்தத்தைத் தேட அவர்களுக்கு உதவுங்கள்.

ஒவ்வொரு உறுப்பினருக்கும் **உடல், உணர்ச்சி மற்றும் ஆன்மீக நல்வாழ்வு** என்று நாங்கள் ஜெபிக்கிறோம். நோய் மற்றும் தீங்குகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும், தேவைப்படும் இடத்தில் குணப்படுத்துதலைக் கொண்டு வரவும், எல்லா புரிதல்களையும் மீறும் அமைதியை அவர்களுக்கு வழங்கவும். துக்கப்படுபவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள், சோர்வடைந்தவர்களை ஊக்குவிக்கவும், பலவீனமாக உணருபவர்களை உயர்த்தவும்.

ஒரு குழுவாக, ஒருவருக்கொருவர் **ஊக்கமளிக்கும், ஆதரிக்கும் மற்றும் பொறுப்புணர்வு** அளிக்கும் ஆதாரமாக இருக்க எங்களை ஊக்குவிக்கவும். ஒருவருக்கொருவர் எங்கள் பிரார்த்தனைகள் சக்திவாய்ந்ததாகவும் பயனுள்ளதாகவும் இருக்கட்டும், மேலும் எங்கள் கூட்டுறவு உமது அன்பையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கட்டும். உமக்கு உண்மையாக சேவை செய்யவும், உலகில் உமது கைகளாகவும் கால்களாகவும் இருக்கவும், நாங்கள் எங்கு சென்றாலும் உமது ஒளியைப் பிரகாசிக்கவும் எங்களுக்கு உதவுங்கள்.

எங்கள் பிரார்த்தனைக் குழுவில் உமது பிரசன்னம் எப்போதும் வலுவாக இருக்கட்டும், உமது சமாதானத்தின் கருவிகளாகவும் உமது கிருபையின் வழித்தடங்களாகவும் எங்களை ஆக்கட்டும்.

எங்கள் கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் வல்லமைமிக்க நாமத்தில் இந்த ஜெபத்தை நாங்கள் வழங்குகிறோம்.

ஆமென்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நன்றி

"உனக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை, என் உயிரையே உனக்குத் தரலாம் போலிருக்கிறது" என்று ஒருவர் சொல்ல, அதற்கு இன்னொருவர், "பரவாயில்லை, உன்னுடைய உயிரை நீயே வைத்துக்கொள், எனக்கு கொஞ்சம் டீ வாங்கித் தா" என்று சொல்லலாம். - நகைச்சுவை

"நன்றியுள்ள மனம் என்பது இறுதியில் தன்னை நோக்கி பெரிய விஷயங்களை ஈர்க்கும் ஒரு சிறந்த மனம்."
- பிளேட்டோ

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS