புனித தந்தை பியோ
# நற்கருணை ஆராதனை செய்வோரின் பாதுகாவலர்.# அவரை காணவில்லை என்று தேடவே தேவையில்லை. நற்கருணை பேழை இருக்கும் இடத்தில் போய் பார்த்தால் அவர் அங்கு தான் இருப்பார்.
# பல மணி நேரம் நற்கருணை ஆண்டவரின் பிரசன்னத்தில் மூழ்கி இருப்பதே அவருக்கு அலாதி இன்பம்.
#1920 களில் பியோவைப் பற்றிய விளம்பரத்தைக் குறைக்க வத்திக்கான் ஆரம்பத்தில் கடுமையான தடைகளை விதித்தது: அவர் பொதுவில் திருப்பலி செய்யவோ, மக்களை ஆசீர்வதிக்கவோ, கடிதங்களுக்கு பதிலளிக்கவோ, தனது ஐந்து காயங்களை பொதுவில் காட்டவோ, அவரது ஆன்மீக இயக்குநரான பத்ரே பெனடெட்டோவுடன் தொடர்பு கொள்ளவோ தடை விதிக்கப்பட்டது.
# பத்ரே பியோ உயிருடன் இருந்தபோது அதிகாரப்பூர்வ திருச்சபையால் சோதனைகள் மற்றும் தண்டனைகளை அனுபவித்தார் . 1922 ஆம் ஆண்டில், OFM இன் பாதிரியார் அகோஸ்டினோ ஜெமெல்லி, பத்ரே பியோவின் ஐந்து காயங்களை ஆராய்ந்து அவை ஒரு மோசடி என்று கூறினார். வத்திக்கான் திருப்பீடம் பத்ரே பியோவிற்கு எதிராக முறையே 1923, 1924 ஆம் ஆண்டுகளில் நான்கு ஆணைகளையும், 1926 ஆம் ஆண்டில் இரண்டு ஆணைகளையும் வெளியிட்டது.
# தந்தை பியோ நற்கருணை ஆண்டவரின் மீது ஆழமான அன்பு கொண்டிருந்தார். அவர் சொல்கிறார், " இயேசு எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கிறார். அவருடைய பிரசன்னம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. அவருக்காக நான் என்ன செய்ய முடியும் என்பது எனக்கு ஒரே குழப்பமா இருக்கிறது. "இயேசுவே என் ஆன்ம உணவே" என்று மீண்டும் மீண்டும் சொல்லி அழுகிறேன்.
# ஒவ்வொரு முறையும் நற்கருண பெற்ற பிறகு
எப்படி உணர்ந்தார் என சொல்லுகிறார். "இந்த உலகத்தில் நான் இருக்கிறேன் என்பதையே நான் மறந்துவிடுகிறேன். என் மனமும் இதயமும் வேறு எதையுமே விரும்புவதில்லை. சில சமயம் எனக்கு வேற ஏதாவது வேணுமா அப்படிங்கிறதையே என் மனதுக்கு வராது"
அதுதான் தந்தை பியோ நற்கருணை ஆண்டவரின் கொண்டிருந்த ஒன்றிப்புக்காண சிறப்பான அருள்.
கொலோசியர் 2: 13-14
"நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார். நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன் பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்துவிட்டார்."
திருப்பாடல் 138: 7-8
நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்;
உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்.
நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.
ஜெப உதவி:
1. சகாயராணி
2. ஆரோக்கிய மீனு பர்வதம் தேர்வில் வெற்றி பெறவும் குழந்தை பாக்கியத்திற்காகவும்
3. மகன் விரைவில் பணமாற்றமடைந்து தன்னிடம் வரவும் விரைவில் திருமணம் நடைபெறவும் வேண்டி.
4. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியசாமி விரைவில் சுயநினைவு பெற்று குணம் பெற வேண்டி.
5. அருட் சகோதரி ஜுடித்
அருட் சகோதரி ஜோஸ்பின் மொறாய்ஸ்
அருட் சகோதரி டென்னிஸ்
6. சகோதரி கரோலின் உடல் நலத்திற்காக.
6. பிரேமா உடல் நலத்திற்காக
7. நிர்மலா உடல் நலத்திற்காக
8. சில்வஸ்டர் வேலை வாய்ப்புகள் வேண்டி
பிள்ளைகளால் கைவிடப்பட்டு
9. விரட்டி அடிக்கப்படுகின்ற வயது முதிர்ந்த பெற்றோர்களுக்காக முதியவர்களுக்காக
10. Fr. அருள்தாஸ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக