எனது அருமையானவர்களே!

வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். (உரோ. 12 : 13)

நம் மீட்பர் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட தயார் செய்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.

‘துன்புறுவோரின் துயர் துடைக்கும் இல்லம்‘  ஐரோப்பாவில் மிக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. சன் ஜிவான்ஜி ரொத்தொந்தோ புனித தந்தை பியோவின் தலைமையில் (1940-1956) உருவான இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருந்து மட்டுமல்ல.   அன்பும் கொடுக்கப்படுகிறது. இந்தத் திட்டம் தந்தை பியோவின் இதயத்திலிருந்து ஊற்றெடுத்தத் திட்டம். இது பல நாடுகளோடு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு செயல்படுகிறது. 1200 படுக்கை வசதிகளும் 3000 ஊழியர்களையும் கொண்ட இந்த திட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வெற்றிபெற செய்தவர்கள் அகிலமெங்கும் உள்ள புனித தந்தை பியோவின் ஜெபக்குழுக்கள்.

இந்த இல்லம் துன்புறும் சகோதர சகோதரிகளுக்கு அன்பின் பராமரிப்பை வழங்குகிறது. அவரே தன் வாழ்நாளில் அந்த இல்லத்தில் துன்புறும் நோயாளிகளை சந்தித்து அன்பின் பணி செய்தார். அன்பின் தூதராக வாழ்ந்தார். அன்பு பணியை அவர் தனது தலையாய பணியாக கொண்டிருந்தார்.

இந்த அன்பு பணியை பராமரிப்பின் மகள் என்று அழைக்கிறார். அவர் தனது வாழ்வில் ஏழ்மையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு எப்படியாவது உதவும் உள்ளம் கொண்டவராக இருந்தார். ‘‘கூhந அசையஉடந அயn, யீயனசந யீiடி’’ என்ற திரைப்படத்தில் யாருக்கும் தெரியாமல் கோவில் உண்டியலை திறந்து யாரும் அறியாதபடி இரண்டு பிள்ளைகளை உடைய ஒரு ஏழைத்தாய்க்கு கொடுப்பது, அவர் எப்படி தர்மம் செய்ய விழைகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. அன்பு பணியை எப்படியும் செய்தாக வேண்டும் என்பது தந்தை பியோவின் தாகம். இதோ அன்பு செயல் பற்றி அவரின் சிந்தனைகள்.  ‘

‘நூலிலே முத்துக்கள் கோற்கப்பட்டுள்ளது போல அன்பு செயல்களிலே புன்னியங்கள் கோற்கப்பட்டுள்ளன’’  ‘‘நூல் அறுந்து போகும் பொழுது முத்துக்கள் சிதறிப்போகும். அதுபோல் அன்பு செயல்கள் குறைகின்ற பொழுது புண்ணியங்கள் மறைந்து விடுகின்றன.’’

‘‘முழுமையின் மையம் அன்பு செயல். அன்பு செய்து வாழ்கிறவர் கடவுளில் வாழ்கிறார். ஏனென்றால் திருத்தூதர் யோவான் கூற்றுபடி ‘‘அன்பே கடவுள்’’.
‘‘கிறிஸ்துவ அன்புடன் மற்றவரை பொறுத்துக்கொள்ளுங்கள்.’’  ‘‘தனிமையை நாடுங்கள், ஆனால் அயலாருக்கு அன்பை மறுக்காதீர்கள்.’’ ‘‘அன்பு செயல்கள்தான் கடவுள் நம்மை தீர்ப்பிடும் உடன்பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள். (உரோ 12 : 10)
அளவுகோலாக உள்ளது.’’  ‘‘அன்பு செயல் புரிய வாய்ப்பு கிடைக்கும்பொழுது நடைமுறைகளையும் கடந்து செய்து விடு.’’  ‘‘அன்பு குறைவு இயற்கைக்கு எதிரான பாவம்’’ ‘‘அன்பு குறைவு மக்களுடைய கடவுளின் கண்களை காயப்படுத்துவது ஆகும்.’’ ‘‘அன்பு செயல்தான் பராமரிப்பின் மகள்’’  அன்பு செயலும் ஜெபவாழ்வும்தான் தந்தை பியோவின் வாழ்வும் கற்பித்தலுமாக இருந்தது. இப்படி தன் வாழ்வில் உறுதியாகவும் இருந்தார் என்பது தெளிவு. காரணம் நம் ஆண்டவரின் கட்டளை மிகவும் தெளிவாக இருக்கிறது. ‘‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும்  புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல் நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’’ (யோவா 13 : 34). கட்டளையை கருத்தாய்க் கடைப்பிடித்த தந்தை, இயேசுவின் உண்மை சீடராய் திகழ்ந்தார். காரணம் அவர் அன்பு செயல்களில் நிலைத்திருந்தார். ‘‘நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்’’ (யோவா 13 : 35) இயேசுவின் சீடராக அவர் மட்டுமல்ல அவரது ஜெபக் குழுவினரும் சீடராக வாழ வழிகாட்டினார். ஆண்டவரே நம்மை அன்பு செய்தார் ( 1 யோவா 4 : 19). மனிதனாக மாட்டுக்குடிலில் பிறந்து கல்வாரியில் நமக்கு மீட்பை வழங்கினார். அவரது அன்புக்கு இணையாக நம்மால் முழுமையான அன்பு காட்ட முடியுமா? ‘‘கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது’’(1 யோவா 4 : 20) என்கிறார் யோவான் திருத்தூதர். யார் என் சகோதர சகோதரிகள்? ‘‘ஒவ்வொரு மனிதரும் என் சகோதரன்’’ என்கிறார் திருத்தந்தை 6ஆம் பவுல். புனித தந்தை பியோ தன் சகோதர சகோதரிகளை அதுவும் துன்புறுவோரின் தேவைகளை சந்தித்து ஆறுதலாக இருந்தார். இதன் அடையாளமாகத்தான் ‘‘துன்புறுவோரின் துயர் துடைக்கும் இல்லம்’’ திகழ்கிறது. இது ஒரு மருத்துவமனை அல்லது சுகாதார மையம் என்று அழைக்க விரும்பவில்லை. மாறாக இல்லம் அல்லது வீடு என்று அழைத்தார். காரணம் இல்லம் தான் அன்பை அனுபவிக்கும் இடம். அன்பு பரிமாறப்படும் இடம். ‘‘துன்புறுவோரின் துயர் துடைக்கும் இல்லம்’’ அவ்வளவு முக்கியம் என்று தந்தையவர்கள் கருதியிருந்தார். அந்த இல்லம் ஏன் இவ்வளவு சொகுசு நிறைந்ததாக கட்டப்பட வேண்டும்? இது ஊதாரித்தனமான செலவு என்று குறைகூறப்பட்டபோது, அவர் துன்புறுவோரில் கிறிஸ்து இருக்கிறார். அந்த கிறிஸ்துவே துன்புறுகிறார். அவருக்காக இதை தங்கத்தால் செய்தாலும் அது தகும் என்றார். 

புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது... ‘‘நர்ஸ், ஒரு மொபைல் இருந்தா கொடுங்க’’, ‘‘எதுக்குடா செல்லம்?’’ நான் சேஃப்டியாக லேண்ட் ஆயிட்டேனு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டுகால் கொடுக்கனும்!’’ ஆம் இதுதான் இன்றைய மனித சமுதாய சூழ்நிலை. பிறக்கும் குழந்தையே பயத்தோடும் பாதுகாப்பின்றியும் பிறக்கிறது. ஆகவே இன்றைய உலகில் அன்பு செய்யும் மனிதர்கள் அதிகம் தேவை, ஆயுதம் மனிதர்கள் அல்ல. இருப்பது பகிறா குறையே, பற்றாக்குறை அல்ல. அன்பு பணி செய்து கிறிஸ்துவின் சீடர்களாய் இருப்போம். இனிதே கிறிஸ்துமஸ் கொண்டாடுவோம் எந்நாளுமே’’.

டிசம்பர் 8 நம் அன்னை மரியாவின் அமல உற்பவ திருநாள். நினைவு கூர்ந்து கொண்டாடுங்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியான அன்புநிறை கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்களும் ஆசீரும்.
-ஆன்மிக வழிகாட்டி அருட்தந்தை அ. செல்வராஜ், க.ச.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித பியோ நவநாள் ஜெபம்

அர்ப்பண ஜெபம்
இந்த புதிய நாளுக்காக நன்றி ஆண்டவரே. ஏன்னை அன்பு செய்து ஆதரிப்பவர்களுக்காக உமக்கு நன்றி.
இந்த நாளின் ஒவ்வொரு மணி நேரத்தையும் மிக சிறப்பாக பயன்படுத்த எனக்கு உதவியளும்.
பயம், சுயநலம் மற்றும் பேராசையிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
இன்று என்னால் யாரும் துன்புறாமல் இருப்பார்களாக.
எனது பேராசையால் யாரும் பசியால் வாடாதிருப்பார்களாக.
எனது ஆதரவு இல்லாததால் யாரும் தனிமையில் வாடாதிருப்பார்களாக.
நான் தேவைப்படுகறவர்களுக்கு எனது இதயம் திறந்திருப்பதாக.
என்னை கண்ணின் மணி போல் காப்பதற்காக நன்றி ஆண்டவரே. ஆமென்.

இயக்க ஜெபம்
இறையருளால் முழுமையாக நிரப்பப்பெற்ற முழுமையின் தாயே, எம் அன்னை மரியே, நீர் வாழ்க. பூவுலகில் வாழுகின்ற எமக்கு, அடைக்கலமும் ஆதரவும் நீரே, உம் மகனாம் எம் மீட்பர் இயேசுவை, அன்பு செய்ய அவர் நினைவாக வாழ, அவர் சொல்படி நடக்க பலம் தாரும் அம்மா. புனித பியோ ஜெபமாலை இயக்கத்தின், ஆன்மீக பிள்ளைகளாகிய நாங்கள், ஆன்ம உடல் நலத்தோடு உலகை வென்றிட, ஆற்றல் தாரும் அம்மா. மகிழ்ச்சியையும் அமைதியையும், அருள் மழையாக பொழிந்தருளும் தாயே, இம்மண்ணில் நிறை அமைதியும், இறைபிரசன்னமும் நிலைக்கட்டும். பாவிகளாகிய எங்களுக்காக, உம் மகன் இயேசுவிடம் மன்றாடும் அம்மா, ஆமென்.

புனித பியோ நவநாள் ஜெபம்
ஐந்து காய வரம் பெற்ற முதற்குருவே, புனித தந்தை பியோவே, அனைத்து ஆன்மாக்களும் விண்ணகம் சேர, தொடர்ந்து பரிந்து பேசி, பாவிகளை மனம் திருப்பி பரமனிடம் சேர்க்க உறுதியளித்தவரே, நற்கருணை நாதரோடு ஒன்றித்த ஒப்பற்றவரே, ஜெபமாலை பக்தியை சாத்தானை எதிர்க்கும் ஆயுதமாகக் கொண்டவரே, தவத்தை ஏற்று ஏழ்மை, தாழ்ச்ச,p பிறரன்புப் புண்ணியங்களில் சிறந்து இடைவிடா மன்றாட்டால் தீராத நோய்களைக் குணமாக்கும் வரம் பெற்ற வள்ளலே, எதிர்காலத்தை முன்னறிவிக்கும் இறைவாக்கினரே, ஐந்து காயங்களிலிருந்து நறுமணம் பரப்பும் நாயகரே, ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றும் நல்லவரே, இறையால் இவ்வுலகுக்கு அருளப்பட்ட மாபெரும் புனிதரே, தூய பியோவே, இதோ வேதனைகளோடும் வாழ்க்கை சுமைகளோடும் உம்மை நாடித் தேடி வரும் எங்களைக் கண்ணோக்கிப்பாரும். நாங்கள் விரும்பிக் கேட்கும் மன்றாட்டுக்களை ( உங்கள் விண்ணப்பங்களை அமைதியாக சொல்லவும்) இறைவனிடம் பரிந்து பேசி தயவாய் எமக்குப் பெற்றுத்தாரும்;

அகிலம் போற்றும் அற்புதத் தந்தை புனித பியோவே, இயேசுவின் ஐந்து காயங்களை தனது உடலில் சுமந்து வேதனைகளை அனுபவித்து துன்பத்தில் இறைவனை உணர்ந்தவரே, நாங்களும் எங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை ஏற்று புனித வாழ்வு வாழவும் உலகிற்கு அமைதியைக் கொணரவும் தேவையான வரங்களை இறைமகன் இயேசுவிடமிருந்து பெற்றுத்தாரும். ஆமென். 1பர, 1 அரு, 1திரி

இயேசுவின் திரு இருதயத்திடம் புனித பியோ ஜெபித்த சக்தி வாய்ந்த நவநாள் ஜெபம்
1. “உண்மையிலும் உண்மையாக உங்களுக்கு சொல்கிறேன். கேளுங்கள் தரப்படும் தேடுங்கள் அகப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்என மொழிந்த என் இயேசுவே இதோ நான் தட்டுகிறேன். தேடுகிறேன். நான் கேட்கிறேன். என் மன்றாட்டுக்களை கேட்டருள்வீராக (உங்களுடைய தேவைகளை கேளுங்கள்) 1பர 1அரு 1திரி

இயேசுவின் திரு இருதயமே என் முழு நம்பிக்கையையும் உம்மில் வைக்கிறேன்.

2. “உண்மையிலும் உண்மையாக உங்களுக்கு சொல்கிறேன். என் பெயரால் தந்தையிடம் நீங்கள் எதைக்கேட்டாலும் அதை உங்களுக்கு அவர் அருள்வார்என்று கூறிய என் இயேசுவே இதோ உமது தந்தையிடம் உமது திருப்பெயரால் பணிவோடும் அவசரமாகவும் நான் எழுப்பும் மன்றாட்டுக்களை கேட்டு அருள்வீராக (உங்களுடைய தேவைகளை கேளுங்கள்) 1பர 1அரு 1திரி
இயேசுவின் திரு இருதயமே என் முழு நம்பிக்கையையும் உம்மில் வைக்கிறேன்.

3. “உண்மையிலும் உண்மையாக உங்களுக்கு சொல்கிறேன். விண்ணும் மண்ணும் அழிந்து போகும் ஆனால் என் வார்த்தையோ அழியாதுஎன்று உரைத்த என் இயேசுவே இதோ என் மன்றாட்டுகளை கேட்டு அருள்வீர் என்று உண்மையாகவே நம்புகிறேன். (உங்களுடைய தேவைகளை கேளுங்கள்) 1பர 1அரு 1திரி
இயேசுவின் திரு இருதயமே என் முழு நம்பிக்கையையும் உம்மில் வைக்கிறேன்.

ஆதறவற்றோர் மீதும் துன்புறுவோர் மீதும் இரக்கப்படாமல் இருக்க இயலாத இயேசுவின் திரு இருதயமே, மிகப்பெரும் பாவிகளாகிய எங்கள் மேல் இரக்கமாயிருக்க, உமது அன்புத்தாயும் எங்கள் அன்னையுமான தூய மரியாயின் மாசற்ற இதயத்தின் பரிந்துரை வழியாக, நாங்கள் பணிவுடன் கேட்கும் அருளை எங்களுக்கு வழங்குவீராக. ஆமென்


திரு இருதயத்தின் வளர்ப்புத் தந்தையான, தூய யோசேப்பே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS