இந்த புதிய நாளுக்காக நன்றி ஆண்டவரே. ஏன்னை அன்பு செய்து ஆதரிப்பவர்களுக்காக உமக்கு நன்றி.
இந்த நாளின் ஒவ்வொரு மணி நேரத்தையும் மிக சிறப்பாக பயன்படுத்த எனக்கு உதவியளும்.
பயம், சுயநலம் மற்றும் பேராசையிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
இன்று என்னால் யாரும் துன்புறாமல் இருப்பார்களாக.
எனது பேராசையால் யாரும் பசியால் வாடாதிருப்பார்களாக.
எனது ஆதரவு இல்லாததால் யாரும் தனிமையில் வாடாதிருப்பார்களாக.
நான் தேவைப்படுகறவர்களுக்கு எனது இதயம் திறந்திருப்பதாக.
என்னை கண்ணின் மணி போல் காப்பதற்காக நன்றி ஆண்டவரே. ஆமென்.
இயக்க ஜெபம்
இறையருளால் முழுமையாக நிரப்பப்பெற்ற முழுமையின் தாயே, எம் அன்னை மரியே, நீர் வாழ்க. பூவுலகில் வாழுகின்ற எமக்கு, அடைக்கலமும் ஆதரவும் நீரே, உம் மகனாம் எம் மீட்பர் இயேசுவை, அன்பு செய்ய அவர் நினைவாக வாழ, அவர் சொல்படி நடக்க பலம் தாரும் அம்மா. புனித பியோ ஜெபமாலை இயக்கத்தின், ஆன்மீக பிள்ளைகளாகிய நாங்கள், ஆன்ம உடல் நலத்தோடு உலகை வென்றிட, ஆற்றல் தாரும் அம்மா. மகிழ்ச்சியையும் அமைதியையும், அருள் மழையாக பொழிந்தருளும் தாயே, இம்மண்ணில் நிறை அமைதியும், இறைபிரசன்னமும் நிலைக்கட்டும். பாவிகளாகிய எங்களுக்காக, உம் மகன் இயேசுவிடம் மன்றாடும் அம்மா, ஆமென்.
புனித பியோ நவநாள் ஜெபம்
ஐந்து காய வரம் பெற்ற முதற்குருவே, புனித தந்தை பியோவே, அனைத்து ஆன்மாக்களும் விண்ணகம் சேர, தொடர்ந்து பரிந்து பேசி, பாவிகளை மனம் திருப்பி பரமனிடம் சேர்க்க உறுதியளித்தவரே, நற்கருணை நாதரோடு ஒன்றித்த ஒப்பற்றவரே, ஜெபமாலை பக்தியை சாத்தானை எதிர்க்கும் ஆயுதமாகக் கொண்டவரே, தவத்தை ஏற்று ஏழ்மை, தாழ்ச்ச,p பிறரன்புப் புண்ணியங்களில் சிறந்து இடைவிடா மன்றாட்டால் தீராத நோய்களைக் குணமாக்கும் வரம் பெற்ற வள்ளலே, எதிர்காலத்தை முன்னறிவிக்கும் இறைவாக்கினரே, ஐந்து காயங்களிலிருந்து நறுமணம் பரப்பும் நாயகரே, ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றும் நல்லவரே, இறையால் இவ்வுலகுக்கு அருளப்பட்ட மாபெரும் புனிதரே, தூய பியோவே, இதோ வேதனைகளோடும் வாழ்க்கை சுமைகளோடும் உம்மை நாடித் தேடி வரும் எங்களைக் கண்ணோக்கிப்பாரும். நாங்கள் விரும்பிக் கேட்கும் மன்றாட்டுக்களை ( உங்கள் விண்ணப்பங்களை அமைதியாக சொல்லவும்) இறைவனிடம் பரிந்து பேசி தயவாய் எமக்குப் பெற்றுத்தாரும்;
அகிலம் போற்றும் அற்புதத் தந்தை புனித பியோவே, இயேசுவின் ஐந்து காயங்களை தனது உடலில் சுமந்து வேதனைகளை அனுபவித்து துன்பத்தில் இறைவனை உணர்ந்தவரே, நாங்களும் எங்கள் வாழ்க்கையில் வரும் துன்பங்களை ஏற்று புனித வாழ்வு வாழவும் உலகிற்கு அமைதியைக் கொணரவும் தேவையான வரங்களை இறைமகன் இயேசுவிடமிருந்து பெற்றுத்தாரும். ஆமென். 1பர, 1 அரு, 1திரி
இயேசுவின் திரு இருதயத்திடம் புனித பியோ ஜெபித்த சக்தி வாய்ந்த நவநாள் ஜெபம்
1. “உண்மையிலும் உண்மையாக உங்களுக்கு சொல்கிறேன். கேளுங்கள் தரப்படும் தேடுங்கள் அகப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்” என மொழிந்த என் இயேசுவே இதோ நான் தட்டுகிறேன். தேடுகிறேன். நான் கேட்கிறேன். என் மன்றாட்டுக்களை கேட்டருள்வீராக (உங்களுடைய தேவைகளை கேளுங்கள்) 1பர 1அரு 1திரி
இயேசுவின் திரு இருதயமே என் முழு நம்பிக்கையையும் உம்மில் வைக்கிறேன்.
2. “உண்மையிலும் உண்மையாக உங்களுக்கு சொல்கிறேன். என் பெயரால் தந்தையிடம் நீங்கள் எதைக்கேட்டாலும் அதை உங்களுக்கு அவர் அருள்வார்” என்று கூறிய என் இயேசுவே இதோ உமது தந்தையிடம் உமது திருப்பெயரால் பணிவோடும் அவசரமாகவும் நான் எழுப்பும் மன்றாட்டுக்களை கேட்டு அருள்வீராக (உங்களுடைய தேவைகளை கேளுங்கள்) 1பர 1அரு 1திரி
இயேசுவின் திரு இருதயமே என் முழு நம்பிக்கையையும் உம்மில் வைக்கிறேன்.
3. “உண்மையிலும் உண்மையாக உங்களுக்கு சொல்கிறேன். விண்ணும் மண்ணும் அழிந்து போகும் ஆனால் என் வார்த்தையோ அழியாது” என்று உரைத்த என் இயேசுவே இதோ என் மன்றாட்டுகளை கேட்டு அருள்வீர் என்று உண்மையாகவே நம்புகிறேன். (உங்களுடைய தேவைகளை கேளுங்கள்) 1பர 1அரு 1திரி
இயேசுவின் திரு இருதயமே என் முழு நம்பிக்கையையும் உம்மில் வைக்கிறேன்.
ஆதறவற்றோர் மீதும் துன்புறுவோர் மீதும் இரக்கப்படாமல் இருக்க இயலாத இயேசுவின் திரு இருதயமே, மிகப்பெரும் பாவிகளாகிய எங்கள் மேல் இரக்கமாயிருக்க, உமது அன்புத்தாயும் எங்கள் அன்னையுமான தூய மரியாயின் மாசற்ற இதயத்தின் பரிந்துரை வழியாக, நாங்கள் பணிவுடன் கேட்கும் அருளை எங்களுக்கு வழங்குவீராக. ஆமென்
திரு இருதயத்தின் வளர்ப்புத் தந்தையான, தூய யோசேப்பே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக