நன்றி வழிபாடு 2024 கூவத்தூர்

நன்றி.. நன்றி..நன்றி..நன்றி..
தன்னானா  தன்னனா 
தன்னானா  தன்னனா 
தன்னானா  தன்னனா னா 
நன்றி.. நன்றி..நன்றி..நன்றி..

 நன்றி பாடி நன்றி பாடி நாதனைப் போற்றிடுவோம்
நாளும் அவரின் வல்ல செயலுக்கு நன்றிப் பண் பாடிடுவோம்
நன்றி -2 என் இயேசுவே உமக்கு நன்றி
நன்றி -2 என் தேவனே உமக்கு நன்றி

1. அன்னை தந்தை அன்பினைத் தந்தாய்
அளவில்லாத ஆற்றல் தந்தாய் (2)
இனிய உறவுகள் இகமதில் தந்தாய் - 2
இதயத்தில் அமைதி தந்தாய் - 2 நன்றி ...

2. இருளின் பாதையில் ஒளியாய் வந்தாய்
இனிய நண்பனாய் துணையாய் நின்றாய் (2)
புதிய உலகம் படைக்கச் சொன்னாய் - 2
புதிய மனிதனாய் மாறச் செய்தாய் - 2 நன்றி ...


🌹லூக்கா 17:11
இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.
லூக்கா 17:12
ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே,
லூக்கா 17:13
“ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.
லூக்கா 17:14
அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று.
லூக்கா 17:15
அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்;
லூக்கா 17:16
அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.
லூக்கா 17:17
இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?
லூக்கா 17:18
கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.

🌹ஒரு கிராமத்தில் பஞ்சம் எர்ப்பட்டது... அதியம் என்ற ஒரு விவசாயி... புலி, குரங்கு, பாம்பு, ஒரு மனிதன்.........

🌹John F. கென்னடி 
நன்றியை தெரிவிக்கும்போது, ​​வார்த்தைகளை உச்சரிப்பதல்ல, அவற்றால் வாழ்வதே உயர்ந்த பாராட்டு என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

🌹fredric nitche❤️
நன்றியை தெரிவிக்கும்போது, ​​வார்த்தைகளை உச்சரிப்பதல்ல, அவற்றால் வாழ்வதே உயர்ந்த பாராட்டு என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

🌹ஷேக்ஸ்பியர்
ஆண்ட்வனே எனக்கு உயிர் அளித்ததுபோல், நன்றி நிறைந்த இதயத்தையும் அளிப்பாயாக. -

🌹புனித தந்தை பியோ 
நீங்கள் கடவுளுக்கு செலுத்தும் நன்றி நீங்கள் கடவுளிடம் பெற்றுக்கொண்ட கொடைகளை விட உயர்ந்து இருக்கவேண்டும். நீங்கள் செலுத்தும் நன்றிக்கேற்ப கடவுள் உங்களை ஆசீர்வாதிப்பார்.

🌹2024 ஆம் ஆண்டின் இறுதி நாள்....

நன்றி சொல்லுங்கள் நல்லதே நடக்கும்

நன்றியையும் பாராட்டையும் மனதில் நினைத்தால் மட்டும் போதாது.

உடனே அதை வெளிப்படுத்த வேண்டும்.

நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவருக்கு அதை உடனே தெரிவித்துவிட வேண்டும்.

நன்றி, பாராட்டு மற்றும் மதிப்பை உரியவருக்கு கொடுக்கும் போதுதான் அவர்கள் மீண்டும் அதை கூடுதல் மதிப்புடன் திருப்பிக் கொடுப்பார்கள்.

நாம் மற்றவர்களுக்கு நன்றியுள்ளவராக இருந்து,

அதை உடனே தெரிவிப்பதன் மூலம்,

அவர்கள் நமக்கு மீண்டும் கூடுதல் உதவியைச் செய்வார்கள்.

உங்களது நன்றியை தெரிவிக்காவிட்டால்,

அத்துடன் அவர்களின் தொடர்பு முடிந்து போகவோ அல்லது அவர்களின் உதவி குறைந்துபோகவோ கூடும்.

• நன்றி சொல்லும்போது அதை உண்மையாக சொல்லுங்கள்.

• நன்றியைத் தெளிவாகவும் திருத்தமாகவும் சொல்லுங்கள்.

• நன்றி சொல்லும் போது வார்த்தைகளை விழுங்காதீர்கள். முணுமுணுக்காதீர்கள்.

• மகிழ்ச்சியுடன் நன்றி சொல்வது, உங்களின் சொல்லில் வெளிப்பட வேண்டும்.

• நன்றி சொல்பவரை, நேருக்கு நேர் அவர் கண்களைப் பார்த்துச்சொல்லுங்கள்.

• நேருக்கு நேர் பார்ப்பது, கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும். நன்றிக்கு உரியவர் பார்க்கவும் கூடியவராவர்.

• நன்றி சொல்லும் போது அவர்களின் பெயரையும் சேர்த்துச் சொல்லுங்கள்.

தனிப்பட்ட தனியொருவருக்கானதாக இருக்கும்படி நன்றியைப் பெயருடன் சேர்த்துச் சொல்லுங்கள் .

• நன்றி என்றுசொல்வதை விட நன்றி ராணி/ ராஜா என்பது வித்தியாசமாகவும், கூடுதல் நெருக்கத்துடனும் இருக்கும்.

• காலத்தைக் கணித்து நன்றி சொல்லுங்கள்.

• உங்கள் பாராட்டை, நன்றியைக் கூற சரியான நேரத்தைப் பார்த்துத் தேர்வு செய்யுங்கள்.

• சாதாரணமானவர்கள் வெளிப்படையாகத் தெரிபவற்றுக்கு மட்டும் நன்றி சொல்வார்கள்.

உயர்ந்தவர்கள் வெளிப்படையாகத் தெரியாத உதவிகளையும் அறிந்து நன்றி சொல்வார்கள்.

• சரியான இடத்தில் முறையாக நன்றி சொல்லும் பழக்கம் உங்களுக்கு ஒரு வாழ்நாள் முழுமைக்குமான சொத்தாக இருக்கும்.

• நன்றி சொல்வோம் இவர்களுக்கு....

• *நாள்தோறும் அதிகாலையில் பேப்பர் போடும் பையனுக்கு..

• *பூக்கள் விற்கும் சிறுமிக்கு..

• *தொலைதூரப் பேருந்துகளில் ஓட்டுநருக்கு..

• *தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு..

• *ஓட்டலில் பணிபுரியும் சர்வருக்கு..

'நல்லதே நினைப்போம்;

நல்லதே செய்வோம்;

நல்லதே நடக்கும் என்று நம்புவோம்'

🌹வாசகம்: 1தெச 5:16-18

1 தெசலோனிக்கர் 5:16
எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள்.
1 தெசலோனிக்கர் 5:17
இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.
1 தெசலோனிக்கர் 5:18
எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.

🌹 முடிவுறும் 2024 ஆம் ஆண்டுக்காக கடவுளுக்கு நன்றி..

🌹திருப்பாடல் 105:1-8
பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள் ஏனெனில் அவர் நல்லவர் (இதனை பாடுதல் சிறந்தது

1. கடந்த ஆண்டு எங்களை நோய் நொடியிலிருந்து காத்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.

2. கடந்த ஆண்டு நல்ல மழையைக் கொடுத்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.

3. வேலையின்றி இருந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை தந்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.

4. எங்கள் குடும்பத்தில் ஒற்றுமையையும், சமாதானத்தையும் தந்தமைக்காக இறைவா உமக்கு நன்றி கூறுகிறோம்.

5. எம் பங்கையும், பங்கு மக்களையும், பங்கு குருவையும், கன்னியர்களையும் நல் வழியில் காத்து வந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.

6. எம் பங்கு குழந்தைகள் படிப்பிலும், நல்லொழுக்கத்திலும், ஞானத்திலும் வழிநடத்தி வந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.

7. இந்ந வருடத்திற்கு சிறந்த விளைச்சலையும், வருமானத்தையும் தந்தமைக்காக இறைவா நன்றி கூறுகின்றோம்.
 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக