இயேசு போற்றி போற்றி

அருட்திரு தேவ தேவன் போற்றி..

அருட்திரு தேவ தேவன் போற்றி.. 
அவர்தம் திருநாமம் போற்றி அவர்தம் திருநாமம் போற்றி

இயேசு இயேசு இயே...சு

கருணை பொழியும் தேவன்
 போற்றி
கிருபை நிறைந்த இயேசு போற்றி
ஒளியாய் வந்த ஆண்டவர் போற்றி 
உயிராய் வாழும் தேவன் போற்றி

போற்றி போற்றி போற்றி போற்றி

சிலுவை சுமந்த இரட்சகர் போற்றி
சிந்திய ரத்தம் போற்றி 
பாவம் நீக்கும் பரிசுத்தர் போற்றி  பாதை காட்டும் நாதர் போற்றி

 
இயேசுவே இயேசுவே இயேசுவே

 நோய் நீக்கும் நாமம் போற்றி
 நம்பிக்கை தரும் தேவன் போற்றி  
கண்ணீர் துடைக்கும் இயேசு போற்றி 
காயம் ஆற்றும் நாதர் போற்றி  

இயேசுவே போற்றி இயேசுவே போற்றி

சாந்தம் தரும் அரசர் போற்றி சமாதானத்தின் தேவன் போற்றி   இருளகற்றும் ஒளி போற்றி இதயம் மாற்றும் வல்லமை போற்றி 

ஆல்பா 
ஒமேகா 
இயேசு 

ஆதியும் அந்தமும் நீர் போற்றி ஆண்டவர் இயேசு போற்றி காலம் தாண்டும் அன்பு போற்றி கருணை கடல் போற்றி

போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி இயேசுவே போற்றி

 தாழ்மையாய் வந்த அரசர் போற்றி 
மகிமையோடு வருபவர் போற்றி வாழும் தேவன் போற்றி வல்லமை நிறைந்த நாதர் போற்றி 

இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே

எங்கள் மூச்சில் இயேசு
 போற்றி 
எங்கள் வாழ்வில் இயேசு
போற்றி 
எங்கள் எல்லாமே  நீர் போற்றி  எங்கள் தேவன் போற்றி

 ஆ...ஆ....
இயேசுவே  போற்றி 

அருள் திரு தேவ தேவன் போற்றி  
அருள்திரு தேவ தேவன் போற்றி அவர்தம் திருநாமம் போற்றி  அவர்தம் திருநாமம் போற்றி

ஆமென் ... 
ஆமென் ... 
ஆமென்... 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS