சில வருடங்களாக புனித ஜெபமாலை இயக்கத்திற்கான இரு மாத இதழ் "பியோ குரல்" என்ற பெயரிலே வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கிய காலத்தில் இருந்து அந்த இதழ் நிறுத்தப்பட்டது. காரணம் அதற்குப் போதிய நிதி உதவி கிடைக்கவில்லை. ஆகவே, அதற்காக வருந்துகின்றேன். இனிவரும் காலங்களில் stpiorosarymovement என்ற bloggerஐ திரும்பவும் சீரமைப்பு செய்து அதன் வழியாக உங்களோடு தொடர்புகளை தொடரவும், நமது கத்தோலிக்க விசுவாசத்திற்கு தேவையான ஆன்மீக சிந்தனைகளை உங்களுக்கு வழங்கவும் ஆவலாய் இருக்கிறேன்.
ஆகவே, இதில் உங்களுடைய படைப்புகளை வெளியிட விரும்புகிறவர்கள் என்னோடு தொடர்பு கொண்டு ஒத்துழைக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த bloggerஐ பார்க்க விரும்புகிறவர்கள் பார்த்து பயனடையின்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. இறைவன் உங்கள் ஒவ்வொருவரோடும் இருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக!
மனித தந்தை பியோவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென்.
இப்படிக்கு,
தந்தை A. செல்வராஜ் க.ச.
புனித பியோ ஜபமாலை இயக்க நிறுவனர் & வழிகாட்டி,. பதோனி இல்லம், D- 127, 10வது கிராஸ் கிழக்கு, தில்லை நகர், திருச்சி -18
0 கருத்துகள்:
கருத்துரையிடுக