கிறிஸ்து அரசர் பெருவிழா

அரசர்களின் அரசர் இங்கே இருக்கின்றார் 
முதிர்ந்த வயது கர்தினால், ஹக் லாடிமர், அடிக்கடி இங்கிலாந்து அரசர் 8ஆம் ஹென்றிக்கு முன்பாக பிரசங்கம் செய்தார். அரண்மனை பிரசங்கி மன்னரின் பிறந்தநாளில் ஏதாவது ஒன்றைப் பரிசளிப்பது வழக்கம், மேலும் கார்டினல் லாடிமர் அரசர் 8ஆம் ஹென்றிக்கு ஒரு பாக்கெட் கைக்குட்டையைக் கொடுத்தார் - "வேசிக்காரர்களையும் விபச்சாரம் செய்பவர்களையும் கடவுள் தீர்ப்பார்" என்ற வாசகம் ஹென்றி மன்னருக்கு மிகவும் பொருத்தமானது. . பின்னர் அவர் காமத்தின் பாவங்களைப் பற்றி மிகவும் வலுவாகப் போதித்தார்,  இதை அரசனுக்காகவே போதித்தார் . மேலும் அடுத்த முறை (அடுத்த ஞாயிற்றுக்கிழமை) கர்தினால் பிரசங்கம் செய்யும் போது, ​​அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மன்னர் கூறினார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை, கர்தினால் பிரசங்க மேடையில் நின்றபோது, ​​"லாடிமர், நீ சொல்வதைப் பற்றி கவனமாக இரு, இங்கிலாந்து மன்னர் இங்கே இருக்கிறார்" என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டார். அதே சமயம் அவரது இதயத்தில் ஒரு குரல், "லடிமர், லாடிமர், நீ சொல்வதில் கவனமாக இரு, மன்னர்களுக்கெல்லாம் மன்னர், அரசர் இங்கே இருக்கிறார்." இதனால் பலமடைந்த அவர், கடவுள் எதைப் பிரசங்கிக்க வேண்டுமென்று விரும்புகிறாரோ அதைப் பிரசங்கித்தார். - இன்று நாம் கிறிஸ்து அரசரின் விழாவைக் கொண்டாடுகிறோம். நம் இதயங்களிலும் நம் வீடுகளிலும் இயேசுவை அரசராக அமர வேண்டும்.

🌹இந்த மண்ணுலக மன்னர்கள் சர்வாதிவாதிகாரர்கள். Joseph Stalin - Soviet Union; Adolf ஹிட்லர் -Germany; Augusto Pinochet - Chile; Mao ஸிடோங் - Chinese; Benito Musolini - Italy; and Kim Il Sung -North Korea. சர்வாதிகாரிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள மக்களை கொலைசெய்பவர்கள்.
கிறிஸ்து அரசரோ  மக்களுக்காக தன்னை தியாகம் செய்தவர்.

🌹இயேசு அரசர் ஆக்கப்படுவதை தவிர்த்தத்தார் / விரும்பவில்லை.

🌹1925 ஆம் ஆண்டு திருதந்தை 11ஆம் பயஸ் கிறிஸ்து அனைத்துலகின் அரசர் பெருவிழாவை ஏற்படுத்தினார்.

கிறிஸ்து ஏன் நமது அரசர்:

 1) கிறிஸ்து கடவுள், பிரபஞ்சத்தின் படைப்பாளர், எனவே, எல்லாவற்றின் மீதும் ஒரு உயர்ந்த சக்தியைப் பயன்படுத்துகிறார்; "எல்லாமே அவர் மூலம் படைக்கப்பட்டன"; 
2) கிறிஸ்து நம் மீட்பர், அவர் தம் விலைமதிப்பற்ற இரத்தத்தால் நம்மை விலைக்கு வாங்கினார், மேலும் அவருடைய சொத்தாகவும் உடைமையாகவும் ஆக்கினார்; 
3) கிறிஸ்து திருச்சபையின் தலைவர், "எல்லாவற்றிலும் முதன்மையானவர்"; 
4) கடவுள் உலக நாடுகளை கிறிஸ்துவுக்கு தனது சிறப்பு உடைமையாகவும் ஆதிக்கம் செலுத்தவும் அதிகாரம் வழங்கினார்.


விவிலிய அதாரங்கள் :
A) பழைய ஏற்பாடு :
"கிறிஸ்து அரசர் " என்ற தலைப்பு பழைய ஏற்பாட்டில் வரும்  மேசியா பற்றிய அணைத்து இறைவாக்குகளிலும் சொல்லப்படுகிறது. books of Samuel, Isaiah, Jeremiah, and Daniel

B) புதிய ஏற்பாடு
1. காபிரியேல் தூதரின் வாழ்த்து:  
லூக்கா 1:32
... அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.
லூக்கா 1:33
அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.
இயேசுவின் போதனைகள் இறையாட்சியை மைய படுத்தியாதாகவே உள்ளது. நற்செய்தி நூல்களில் "இறையாட்சி" என்ற வார்த்தை 122 முறைகள் வருகிறது, இயேசு மட்டும் 90 முறை பயன்படுத்துகிறார்.

2. ஞானிகளின் வருகை :
மத்தேயு 2:2
“யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள்.

3. எருசலேமில் இயேசுவின் வெற்றிப்பவணி :
லூக்கா 19:38
“ஆண்டவர் பெயரால்  அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக!  விண்ணகத்தில் அமைதியும்  மாட்சியும் உண்டாகுக!” என்றனர்.

4. கைது செய்யப்பட்டு விசாரிப்பு :
யோவான் 18:33
பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான்.
யோவான் 18:37
பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன்தானோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்” என்றார்.

5. இயேசுவின் சிலுவை வைக்கப்பட்ட பலகை :
"நாசரேத்தூர் இயேசு யூதர்களின் அரசர் "

6. விண்ணேற்புக்கு முன் இயேசு சொன்னது :
மத்தேயு 28:18
இயேசு அவர்களை அணுகி, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.
மத்தேயு 28:19
எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.

7. இறுதி தீர்ப்பு :
மத்தேயு 25:31
“வானதூதர் அனைவரும் புடைசூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்.


வாழ்க்கைச் செய்திகள்:

 1) கிறிஸ்து அரசராகிய நம் ஆண்டவர் , நம் அரசர், நம் இரட்சகர் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு நம் வாழ்க்கையை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

2) சேவை செய்யும் அரசனுக்கு நாம் சேவை செய்யும் சீடர்களாக இருக்க வேண்டும்.

3) இயேசு கிறிஸ்துவை அன்பின் அரசராக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

🌹புனித அன்னை தெரசா - தொழு நோயாளியின் புண்ணில் உள்ள புழுவை எடுத்தார்.
🌹அசிசி புனித பிரான்சிஸ் தொழுநோயாளியை கட்டியணைத்து முத்தம் கொடுத்தப்ப இயேசுவின் முகத்தை கண்டார்.

ஜோக் :
புலவர்கள் அரசவையில் என்னைப்பற்றி புகழ்ந்து பாடவே
மாட்டேங்கிறாங்களே ஏன் அமைச்சரே..?

அதற்கு அமைச்சர்: அரசவையில் பொய் பேசக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறீர்களே அரசே!
=========================
🌹மண்ணக அரசர்களின் அதிகாரம் விண்ணக அரசரின் அதிகாரத்தையும் திருவுளத்தையும் சார்ந்து இருக்கிறது.


தானியேல் 2:21
காலங்களையும் பருவங்களையும் மாற்றுபவர் அவரே!
 அரசர்களை விலக்கி மாற்று அரசர்களை நிலைநிறுத்துபவர் அவரே!
 ஞானிகளுக்கு ஞானம் வழங்குபவர் அவரே! அறிவாளிகளுக்கு அறிவை அருள்பவர் அவரே!

🌹1 கொரிந்தியர் 15:25
எல்லாப் பகைவரையும் அடிபணியவைக்கும்வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும்.

1 கொரிந்தியர் 15:26
சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும்.

1 கொரிந்தியர் 15:27
ஏனெனில், “கடவுள் எல்லாவற்றையும் அவருக்கு அடிபணியச் செய்தார்.” ஆனால் எல்லாம் அடிபணிந்தன என்று சொல்லும்போது அனைத்தையும் கிறிஸ்துவுக்கு அடிபணிய வைக்கும் கடவுளைத் தவிர மற்றவை யாவும் அடிபணிந்தன என்பது தெளிவாகிறது.

🌹திருவெளிப்பாடு 17:14
"... ஆட்டுக் குட்டி ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அரசருக்கெல்லாம் அரசர்.”

Encyclical letter by pope Pius XI 
1) 1922 Dec,23 முதல் உலகப்பொருக்கு பிறகு 
on the peace of christ in the kingdom of christ
கிறிஸ்துவின் ஆட்சியில் கிறிஸ்துவின் அமைதி குறித்து
📢 கிறிஸ்து தம் போதனையாலும் அன்பினாலும் அவரை நம்பிக்கையோடு ஏற்றுக்கொண்டவர்களின் உள்ளங்களில் ஆட்சி செய்கிறார்.
2) 1925 Dec 11 - Quas Primas ( in the begining - தொடக்கத்தில் )
இயேசு வன்முறையினால் ஆட்சியை கைப்பற்றி அரசாராகவில்லை. அது அவருக்கு நித்ய அரசாரால் அவருக்கு கொடுக்கப்பட்டது.
1925 ஆம் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக