திருப்பாடல்கள் 146:2
நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன்.
சகோ. சாந்தி ஆரோக்கிய மரி
🌹Thirukkural 108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. (108)
ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு அல்ல; ஆனால், அவர் செய்த தீமையை அன்றைக்கே மறந்து விடுவது மிகவும் நல்லது.
மனிதன் செய்யும் நன்மையையே மறக்கக்கூடாது என சொல்லும்போது நன்மையே உருவான கடவுளை நான் மறக்கலாமா.
🌹நன்றி உள்ளவர்கள் புகழப்படுகிறார்
நன்றி கெட்டவர்கள் இகழப்படுகிறார்கள்
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு பெரிய ஹோட்டலில் உணவருந்த சென்றார்...
☝️ஒருவருக்கு நன்றி சொல்லும் போது அவரை மதிக்கின்றோம் அன்பு செய்கின்றோம் என்பது பொருள்
இயேசு
லூக்கா 10:21
அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்” என்றார்.
🌹 பத்து பேரும் குணம் பெறவில்லையா கடவுளுக்கு நன்றி சொல்ல இந்த அந்நியனைத் தவிர வேறவரும் வரவில்லை.
லூக்கா 17:16 -18
அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர்.
இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?
கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.
மரியா
லூக்கா 1:47
“ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது.
புனித இரண்டாம் ஜான் பால்
கடந்த காலத்தை நன்றியுடன் நினைவில் கொள்ளுங்கள். நிகழ்காலத்தை உற்சாகத்துடன் வாழுங்கள். எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்குங்கள். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால்
1 தெசலோனிக்கர் 5:16
எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள்.
1 தெசலோனிக்கர் 5:17
இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள்.
1 தெசலோனிக்கர் 5:18
எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.
நன்றி உணர்வின் பயன்கள்:
நன்றியுணர்வு கடவுளைப் பார்க்க நமக்கு உதவுகிறது.
நன்றியுணர்வு நம் ஆன்மீகக் கண்களைத் திறக்கிறது. ...
நன்றியுணர்வு நம்மை கடவுளின் சித்தத்தில் நேரடியாக வைக்கிறது. ...
நன்றியுணர்வு அமைதியைக் கொண்டுவருகிறது. ...
நன்றியுணர்வு நம்மை கடவுளிடம் ஈர்க்கிறது. ...
நன்றியுணர்வு மனநிறைவைக் கொண்டுவருகிறது. ...
நன்றியுணர்வு நம்பிக்கையை ஆழப்படுத்துகிறது. ...
நன்றியுணர்வு மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. ...
நன்றியுணர்வு சாத்தானின் பொய்களை புறக்கணிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக