கன்னி மரியே, தூயவளே,
கடவுள் உன்னைக் கண்டார்;
அன்பின் ஒளியாய் இருந்ததால்
அவர் உன்னைத் தேர்ந்தெடுத்தார்.

அஞ்சேல், மரியே, அஞ்சேல் என்றார்;
தூதர் காபிரியேல் வந்தார்;
இறை மகனை சுமக்கும்
பேறு உனக்கே என்றார்.

எப்படி நடக்கும் இதுவோ?
நான் கன்னியாகவே இருக்கிறேனே!
கற்பனைக் கெட்டா  ஒரு காரியம்
கண்முன்னே நடக்கிறதே.

தூய ஆவியால் உனக்குள்
புனிதக் குழந்தை உண்டாகும்;
உன் பனித்துளி கருவில்
உலகை மீட்கும் இறைமகன் பிறப்பார்.

மகிழ்வுடனும் பணிவுடனும்
"உமது சித்தமே ஆகட்டும்!" என்றாய்;
உன் கீழ்ப்படிதலின் மூலம்
உலகம் மீட்சி கண்டது.

நன்றி, மரியே, நன்றி!
உன் கீழ்ப்படிதலுக்கு நன்றி!
தேவ சித்தம் உன் வாழ்வானது;
அது எங்கள் வாழ்விற்கும் ஒளியானது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக