புனிதர் தந்தை பியோ அவர்கள் இருக்கும் புனித கொவாணி ரொட்டெடோ இடத்திற்கு விடுமுறையை கழிக்க துறவி மொடெஸ்டீனோ (Friar Modestino) சென்றிருந்தார். அப்பொழுது ஒரு நாள் காலை தந்தை பியோ அவர்கள் கொண்டாடும் திருப்பலிபூசைக்கு உதவி செய்ய செக்கரிஸ்சுக்கு சென்றார் . அங்கே அவரைப் போன்ற இன்னும் மற்ற துறவிகள் யார் தந்தைக்கு பூசை உதவி செய்வது என்று தர்க்கம் செய்துக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்த தந்தை அவர்கள் வாதத்தை இடைமரித்து துறவி மொடெஸ்டீனோ இன்று பூசை உதவி செய்யட்டும் என்று அவரை சுட்டிக்காட்டினார். அவ்வாறே துறவி மொடெஸ்டீனோவும் தந்தை பியோவை பின்தொடர்ந்து புனித சவேரியாரின் பீடத்துக்கு சென்று உற்சாகம் கலந்த பக்தியுடன் பூசை உதவி செய்தார். நற்கருணை மன்றாட்டின் போது தூயவர், தூயவர் என்ற தந்தை பியோவிடமிருந்து விண்ணகத்துக்குரிய தெய்வீக நறுமணம் ஆர்ப்பரிப்பின் பகுதிக்கு வந்த போது பூசை உதவி செய்த துறவி மொடெஸ்டீனோ அவர்கள் சொல்வதற்கரிய நறுமண வாசத்தை முகர்ந்தார். இந்த தெய்வீக நறுமணத்தை முதன் முதலில் தந்தை பியோவைக் காண வந்த நேரத்தில் தந்தையின் கையை முத்தி செய்யும் போது உணர்ந்தேன். அதே நறு மணம் என்று பிரமித்தார். துறவி மொடெஸ்டீனோ. சற்று நேரத்தில் நறுமணம் அதிகரிக்க அவருக்கு மூச்சு தினறல் ஏற்ப்பட்டது. தான் மயங்கி விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் மனதளவில் தந்தை பியோவிடம் தந்தையே என்னை இந்த மயக்க நிலையிலிருந்து காத்து எல்லோர் முன்னிலையிலும் மயங்கி விழாமல் காத்திடும் என்று மன்றாடினார். மன்றாடி முடிந்த உடனேயே அந்த நறுமணம் மறைந்தது. அன்று மாலை தந்தையின் அறைக்கு துறவி மொடெஸ்டீனோ சென்ற போது தந்தையிடம் தனக்கு காலையில் திருப்பலியின் போது நடந்த நிகழ்வைப் பற்றி விளக்கம் கேட்ட போது, அதற்கு தந்தை அளித்த பதில் குழந்தாய் எனக்கு இதற்கான விளக்கம் தெரியாது. எப்பொழுதெல்லாம் இறைவன் விரும்புகிறாரோ அப்பொழுதெல்லாம் இறைவன் குறுக்கிட்டு ஒருவரை தெரிவு செய்து நறுமணத்தை நுகரச் செய்வார்.
- ANTHONY, SINGAPORE
0 கருத்துகள்:
கருத்துரையிடுக