புனித பியோ ஜெபமாலை இயக்க ஒழுங்குமுறைகள்

புனித ஜெபமாலை இயக்கம்

 ஒழுங்கு முறைகள் 

 உறுப்பினர்கள் வாழ்வு முறை: 

1) புனித பியோ ஜெபமாலை இயக்க சகோதர சகோதரிகள் திருச்சபையின் படிப்பினைகளின் படி நல்ல கத்தோலிக்க   நம்பிக்கையாளர்களாக வாழும் ஆர்வம் கொண்டிருப்பார்களாக.

2) ஒழுக்க நெறியில் சிறந்து இருபர்களாக. எவ்விதத்திலும் பிறருக்கு துர் மாதிரிக்கையாக  இருப்பதை தவிர்ப்பறார்களாக.

3) தனி ஜெபத்திலும்  தங்களது குடும்ப ஜெபத்திலும் நாள்தோறும் இறைவனின் பிரசன்னத்தில் இணைந்திருக்கும் நம்பிக்கையாளர்களாக திகழ் வார்களாக.

4) தினந்தோறும்  திரு விவிலியத்தை வாசித்து தியானித்து இறைவார்த்தையின் வழிகாட்டுதல்களை பின்பற்ற முயற்சிப்பார்களாக.

5) வாரம் தோறும் ஒப்புரவு அருட்சாதனத்தை மேற்கொண்டு, தவறாமல் ஞாயிறு திருப்பலியில் முழுமையாக பங்கேற்று நற்கருணை பெறு வார்களாக.

6) கிறிஸ்துவின் பிரதிநிதிகளான குருக்களுக்கு குறிப்பாக பங்கு குருக்களுக்கு எல்லா விதத்திலும் ஆதரவுடன் செயல்பட்டு அவர்களது வழி கா ட்டுத்தல்களை மதித்து நடப்பார்களாக .

7) தினமும் குறைந்தது ஒரு 53 மணி ஜெபமாலை ஜெபித்து புனித பியோ ஜெபமாலை இயக்க உறுப்பினர்களுக்காகவும் திருத்தந்தைக்காகவும் திருச்சபைக்காகவும் ஒப்புக்கொடுப்பார்களாக.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக