மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே மறவாதே என்றும்...
இன்றைய நாள் 'சாம்பல் புதன்', 'விபூதி புதன்', 'திருநீற்றுப் புதன்' (Ash Wednesday) என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
நெற்றியில் சாம்பலை பூசி தவக்கால தவமுயற்சிகளை தொடங்குகிறோம்
"நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும்வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்” என்றார். தொ நூல் 3:19
இன்றைய வாசகங்கள்....
@ உடைகளை அல்ல உங்கள் உள்ளத்தை கிழித்து கொள்ளுங்கள்
@ ஜெபம்
தவம்
தர்மம்
ஜூபிலி ஆண்ட்டில் தவக்காலம்
திருத்தந்தை பிரான்சிஸ் for this lent, let us journey together in hope
"நம்பிக்கையில் இணைந்து பயணிப்போமாக "
'சாம்பல் புதன்', 'விபூதி புதன்', 'திருநீற்றுப் புதன்' (Ash Wednesday) என்று பல பெயர்களில் அழைக்கப்படும் கிறிஸ்தவர்களின்
40 நாள் தவக்காலம், இன்றிலிருந்து தொடங்குகிறது.
ஆனண்டிற்கு ஒருமுறை ஆண்டவர் இயேசுவின் சிலுவை சாவையும் உயிர் ப்பையும் கொண்டாட நம்மை தயார் செய்யும் காலம்.
விவிலியத்தில் 40 நாள்...
நோவா காலத்தில் 40 நாள்கள் இரவும் பகலும் மழை பெய்தது.
இஸ்ரயேல் மக்கள் 40 ஆண்டுகளாகப் பாலைவனத்தில் கடவுளால் நெறிப்படுத்தப்பட்டனர்.
மோசே சீனாய் மலையில் 40 நாள்கள் தங்கியிருந்து திருச்சட்டம் பெற்றார்.
இயேசு அலகையால் சோதிக்கப்படுவதற்கு முன் 40 நாள்கள் உண்ணா நோன்பிருந்தார்.
இவற்றின் அடிப்படையில் 40 நாள்கள் என்பது மனம் வருந்தி மனம் மாற்றம் பெற்று, இறைவனின் கொடைகளையும் வரங்களையும் பெறும் காலமாகக் கருதப்படுகிறது.
ஏழைகளுக்கு இறங்குவோம்.
உறவுகளுக்கு இணங்குவோம்.
மாற்றக்கூடியதை மாற்றுவோம். மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்வோம்.
மனந்திரும்பும் காலம் !
இன்று சாம்பல் புதன். தவக்காலத்தின் தொடக்கம்.
நம் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டு நாம் மண்ணுக்குரியவர்கள் என நினைவூட்டப்படும் நாள். தவக்காலம் என்பது மகிழ்வின் காலமா, துயரத்தின் காலமா? இரண்டும் கலந்த காலம்.
நமது வாழ்வை ஆய்வு செய்து, தீமைகள், தவறுகள், பாவங்களை இனம் கண்டு, அதற்காக வருந்தும் காலம்.
எனவே, நாம் சில தவ முயற்சிகளைச் செய்ய அழைக்கப்படுகிறோம். குறிப்பாக, நோன்பிருந்து, நம்மையே ஒறுத்து, வாழ்வின் இன்பங்கள் சிலவற்றை இழக்க முன்வர அறைகூவல் விடப்படுகிறது.
ஆனால், அதே நேரத்தில் தவக்காலம் என்பது மகிழ்வின் காலம், காரணம் அது அருளின் காலம், ஆண்டவரின் இரக்கத்தின் காலம்.
இறைவன் நம்மீது சிறப்பான பரிவு கொண்டு, நம் வாழ்வை அவருக்கேற்றதாக மாற்ற, சிறப்பான அருள்வரங்களைப் பொழியும் காலம் இத்தவக்காலம்.
எனவே, நாம் மகிழ்வோம். மீட்பின் காலம் இதுவே, அருளின் காலம் இதுவே. இத்தவக்காலத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். நாற்பது நாள்களையும் அருளின் நாள்களாக செலவழிக்க உறுதிபூணுவோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக