தவக்காலம் முதல் ஞாயிறு பாலைவன அனுபவம்

லூக்கா : இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றைவிட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார்.


மத்தேயு 4:1
அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்.

மத்தேயு 4:2
அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார்.

மாற்கு 1:12
உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மாற்கு 1:13
 பாலைவனத்தில் அவர் 40 நாள்கள் இருந்தார். அப்போது அவர் சாத்தானால் சோதிக்கப்பட்டார். அங்கு காட்டு விலங்குகள் இடையே இருந்தார். கடவுளின் தூதர் அவருக்கு பணிவிடை செய்தார்.

 மூன்று சோதனைகள்:

1. உணவு (பசி )
# தனக்கு for oneself சோதனை 
#கடவுள்? மற்றவர்கள்?

சாத்தான் “நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்”.  இயேசு , “ ‘மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை’ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.

இணைச் சட்டம் 8:3
,மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார்....

2. அதிகாரம் :

சாத்தான் "இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்” என்றது. 

இயேசு  , “ ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” இ. ச 6:13

3. புதுமை செய்து மக்களை கவர்ந்தந்திடும் சோதனை / தன்னை காத்துக்கொள்ள சோதனை 

தி பா 91
“நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; ‘உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்’ என்றும் ‘உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றது. இயேசு அதனிடம் மறுமொழியாக, “ ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ என்றும் சொல்லியுள்ளதே”

🌹குறுக்கு வழியில் வெற்றி பெறுவதை விட நேர்மையான வழியில் தோற்று போவதே மேலானது.
முடிவு முக்கியமா அதை அடையும் வழி முக்கியமா?

அன்னை தெரசா 
"கடவுள் என்னை வெற்றிபெற அழைத்ததில்லை, மாறாக உண்மையாக இருக்கவே அழைத்திருக்கிறார்."
God has not called me to be successful, but to be faithful.”

இயேசுவுக்கு வெற்றி 
சாத்தானுக்கு தோல்வி 

🌹இயேசுவை சோதித்து தோற்கடிக்க முயற்சித்த சாத்தான் தொற்றுப்போனான்.
சாத்தான் இயேசுவை இறுதிவரையும் சோதித்தான்.
🌹இயேசு தன் பாடுகளை முன்னறிவித்தபோது பேதுரு அதை நிராகரித்தார். உமக்கு அப்படி நடக்கவே கூடாது என்றார். ஆனால் இயேசு அவரை அப்பாலே போ சாதாத்தானே என்று கடிந்து கொண்டார்.
🌹இயேசுவின் பாடுகள்- துன்பங்கள் சாத்தானுக்கு சாட்டையடி.
இயேசுவின் சிலுவை சாவு சாத்தான் தலையில் விழுந்த சம்பட்டி அடி.
இயேசுவை தோற்கடிக்க முயற்சித்த சாத்தனை இயேசு தோற்கடித்தார். 
வெற்றி இயேசுவுக்கே.
காரணம் இயேசு தந்தையை நம்பினார் தந்தையின் திட்டத்தை நிறைவேற்றினார்.
🌹மனுக்குலத்தை அன்பு செய்தார். நண்பர்களுக்காக உயிரை கொடுப்பதை விட மேலான அன்பு யாரிடமும் இல்லை என்றார்.
பாவிகளுக்காக தன் உயிரை கொடுத்தார் இரத்தத்தை சிந்தினார். தன்னை இழந்து பாவிகளாகிய நம்மை மீட்டுக்கொண்டார். வெற்றி இயேசுவுக்கே.

 இயேசுவைப்போல நாமும் சோதனையை வெல்ல அழைக்கப்படுகிறோம்.

புனித தந்தை பியோ 
19, 20ஆம் நூற்றாண்டுகளில் இத்தாலி தேசத்தில் வாழ்ந்த ஒரு கப்புச்சின் துறவி.

🌹padre பியோ 
சோதனைகள் என்பது ஆன்மா இறைவனுக்குப் பிரியமானது என்பதற்கான அறிகுறியாகும். சோதனைகள் ஆன்மீக வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக இருக்கலாம் என்றும் அவர் நம்பினார்.

🌹ஆரம்பகால சோதனைகள் பத்ரே பியோவுக்கு 4 அல்லது 5 வயது இருக்கும் போது தேவதூதர்கள், பேய்கள் மற்றும் சாத்தானின் காட்சிகள் கிடைத்தன. பேய்கள் அவருக்கு அசிங்கமான விலங்குகளாகவோ, இளம் பெண்களாகவோ அல்லது அவரது மேலதிகாரிகளில் ஒருவரின் வடிவத்திலோ தோன்றும்.

🌹அவர் செய்தவை :
1. செபம் தவம் 
2. திருப்பலி - நற்கருணை  நிறைவேற்றினார்.
3. ஒப்புரவு அருட்சாதனம்
 வழங்கினார் 
4. புனித கன்னி மரியா மீது பற்று - ஜெபமாலை பக்தி 


அவர் பெற்ற வரங்கள் 
 💐ஆன்மாக்களை சோதித்தறியும் வரம், 
💐பிறர் மனதில் உள்ளதை வாசித்து அறியும் வரம், 
💐புதுமையாக குணமாக்கும் வரம், 
💐ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றும் வரம், 
💐மேல் எழும்பி செல்லும் வரம், 💐திருப்பலியில் மெய் மறந்து இயேசுவின் பாடுகளில் இணைந்து கண்ணீர் சிந்து வரம், 💐நறுமணம் பரப்பும் வரம், 
💐ஐந்து காய வரம் 50 ஆண்டுகள் 

🌹 ஜெபமாலை : 
    -   ஜெபமாலையில் கிறிஸ்து மையம் கொள்கிறார்
 - இறை வார்த்தை மையப்படுத்தப்படுகிறது
- ஜெபமாலை நமக்கும் நம் அன்னை மரியாவுக்கும் இடையே உள்ள உரையாடல்
 -ஜெபமாலை ஒரு விவிலிய ஜெப தியானம்
 -ஜெபமாலை ஒரு சுருக்கமான முழுமையான நற்செய்தி புத்தகம்
- ஜெபமாலையில் மீட்பின் வரலாற்றை தியானிக்கிறோம்

🌹 புனித தந்தை பியோ 
      Padre Pio 
- ஜெபமாலை எனது ஆயுதம். சாத்தனை விரட்டும் ஆயுதம் ஜெபமாலை 
- மாமரியை நேசியுங்கள், பிறர் அவரை நேசிக்க செய்யுங்கள் அடிக்கடி ஜெபமாலை சொல்லுங்கள்.
- எல்லா நேரமும் ஜெபமாலையே சொல்லிக் கொண்டே இருப்பார்
- அன்னை மேரி என்னும் படகில் பயணிக்காமல் மீட்பின் கரையை அடைந்து விட முடியும் என்று எண்ணுபவர்கள் முட்டாள்கள் அனைவரிடத்தில் அனைத்து அருள் வரங்களையும் ஆண்டவர் ஒப்படைத்திருக்கிறார்
- அன்னை மரியே அம்மா என்று அழைத்துக் கொண்டே இருப்பார்
-வாழ்வின் இறுதி காலத்தில் தன் ஞான பிள்ளைகளுக்கு விட்டு சென்ற ஒரே சொத்து ஜெபமாலை 

 🌹ஜெப குழுக்கள்: 
புனித பியோ ஜெபமாலை இயக்கம் 

🌹விவிலியம் 
1 தெசலோனிக்கர் 5:11
ஆகவே நீங்கள் இப்பொழுது செய்து வருவது போல, ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்; ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்.

மத்தேயு 18:19
❮19-20❯உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

"Family that prays together, stays together " catechism 
இணைந்து ஜெபிக்கும் குடும்பமே இணைந்து வாழும் குடும்பம். 

இணைந்து ஜெபிப்பது நம்பிக்கையாளர்களை இணைத்து வைக்கிறது.
ஆன்மீக உறவு குடும்பம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக