L

​படைப்புகளின் கீதம் (Praise Hymn of Creation)

புகழ் உமக்கே ஆண்டவரே! புகழ் உமக்கே!

படைப்புகள் யாவும் பாடிடும் கீதம்,

புகழ் உமக்கே! புகழ் உமக்கே!

​மிக உன்னதரே, சர்வ வல்லவரே,

உமக்கே புகழ்ச்சி, உமக்கே மகிமை.

சகோதர உணர்வுடன் படைப்புகள் யாவும்

உம் நாமம் போற்றி உம்மைப் பணிகிறோம்.

உமக்கே சொந்தம்! உமக்கே சொந்தம்!

எல்லா வரங்களும் உமக்கே சொந்தம்!


​சகோதரன் சூரியனால் உமக்கே புகழ்!

பகலைத் தந்து எமக்கு ஒளி தருகிறான்;

அழகும் ஒளிவீச்சும் கொண்டவன் அவனே,

உம் மகிமையைத் தாங்கி நிற்கிறான்.

சகோதரி சந்திரனும் நட்சத்திரங்களும்

வானில் பிரகாசமாய் ஒளிரும்

தெளிவான அழகுக்காய் உமக்கே புகழ்!

நன்றி! நன்றி! ஆண்டவரே! 

​சகோதரன் காற்றினால் உமக்கே புகழ்!

மேகங்கள், அமைதியான வானிலை;

படைப்புகள் யாவும் வாழ்கின்றன.

சகோதரி தண்ணீரோ தாழ்மையும் தூய்மையும்;

விலையேறப் பெற்றதாய் இருக்கிறாள்.

சகோதரன் நெருப்பினாலும் உமக்கே புகழ்!

இரவை ஒளியாக்கி, வலிமை தருகிறான்.

உமக்கே புகழ்! உமக்கே நன்றி! 


​சகோதரி தாய் பூமிக்காக உமக்கே புகழ்!

எம்மைத் தாங்கி, வளர்த்து ஆளுகிறாள்;

பலவகை கனிகள், வண்ண மலர்கள் – அவள்

உற்பத்தி செய்யும் மருந்துகள்.

அவளின் கருணைக்காய், செழிப்புக்காய்

மனதார நன்றி செலுத்துகிறோம்;

எங்கள் தேவையெல்லாம் ஈடு செய்கிறாள்.

நன்றி! நன்றி! ஆண்டவரே! 


​உம் அன்பினிமித்தம் மன்னிப்பவர்க்காய் புகழ்!

துன்பம், வேதனை தாங்கி சகிப்பவர்க்காய்;

அமைதியுடன் சகிப்போர் வேறுபெற்றவர்கள்

உம்மாலே மகுடம் சூட்டப்படுவார்கள்.

சகோதரி மரணத்திற்காய் உமக்கே புகழ்!

அதனிடமிருந்து எவரும் தப்ப முடியாது.

உம் திருவுளத்தில் இறப்போர் பேறுபெற்றவர்கள். 

இரண்டாம் மரணமும் அண்டாது.

பணிவுடன் உம்மைப் போற்றுகிறோம்! 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக