புகழ் உமக்கே ஆண்டவரே! புகழ் உமக்கே!
படைப்புகள் யாவும் பாடிடும் கீதம்,
புகழ் உமக்கே! புகழ் உமக்கே!
மிக உன்னதரே, சர்வ வல்லவரே,
உமக்கே புகழ்ச்சி, உமக்கே மகிமை.
சகோதர உணர்வுடன் படைப்புகள் யாவும்
உம் நாமம் போற்றி உம்மைப் பணிகிறோம்.
உமக்கே சொந்தம்! உமக்கே சொந்தம்!
எல்லா வரங்களும் உமக்கே சொந்தம்!
சகோதரன் சூரியனால் உமக்கே புகழ்!
பகலைத் தந்து எமக்கு ஒளி தருகிறான்;
அழகும் ஒளிவீச்சும் கொண்டவன் அவனே,
உம் மகிமையைத் தாங்கி நிற்கிறான்.
சகோதரி சந்திரனும் நட்சத்திரங்களும்
வானில் பிரகாசமாய் ஒளிரும்
தெளிவான அழகுக்காய் உமக்கே புகழ்!
நன்றி! நன்றி! ஆண்டவரே!
சகோதரன் காற்றினால் உமக்கே புகழ்!
மேகங்கள், அமைதியான வானிலை;
படைப்புகள் யாவும் வாழ்கின்றன.
சகோதரி தண்ணீரோ தாழ்மையும் தூய்மையும்;
விலையேறப் பெற்றதாய் இருக்கிறாள்.
சகோதரன் நெருப்பினாலும் உமக்கே புகழ்!
இரவை ஒளியாக்கி, வலிமை தருகிறான்.
உமக்கே புகழ்! உமக்கே நன்றி!
சகோதரி தாய் பூமிக்காக உமக்கே புகழ்!
எம்மைத் தாங்கி, வளர்த்து ஆளுகிறாள்;
பலவகை கனிகள், வண்ண மலர்கள் – அவள்
உற்பத்தி செய்யும் மருந்துகள்.
அவளின் கருணைக்காய், செழிப்புக்காய்
மனதார நன்றி செலுத்துகிறோம்;
எங்கள் தேவையெல்லாம் ஈடு செய்கிறாள்.
நன்றி! நன்றி! ஆண்டவரே!
உம் அன்பினிமித்தம் மன்னிப்பவர்க்காய் புகழ்!
துன்பம், வேதனை தாங்கி சகிப்பவர்க்காய்;
அமைதியுடன் சகிப்போர் வேறுபெற்றவர்கள்
உம்மாலே மகுடம் சூட்டப்படுவார்கள்.
சகோதரி மரணத்திற்காய் உமக்கே புகழ்!
அதனிடமிருந்து எவரும் தப்ப முடியாது.
உம் திருவுளத்தில் இறப்போர் பேறுபெற்றவர்கள்.
இரண்டாம் மரணமும் அண்டாது.
பணிவுடன் உம்மைப் போற்றுகிறோம்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக