1. கிறிஸ்மஸ் விழாவை சிறப்பாக நடத்திய தேசிய பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
2. புதிய காலண்டரில் இருக்கும் விபரங்களை பயன்படுத்தி அனைவருக்கும் காலண்டர்கள் சென்றடைய விரைந்து செயல்படும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
3. கிறிஸ்மஸ் புத்தாண்டு நேரத்தில நமது இயக்கம் இருக்கின்ற எல்லா பங்கு தந்தையர்களுக்கும் காலண்டர் கொடுத்து ஆசி வாங்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
4. புனித பியோ ஜெபமாலை இயக்கம் அந்தந்த பங்குகளில் ஒரு அங்கமாக இருக்கிறது என்பதை மனதில் கொண்டு பங்கு பணிகளில் பங்குத்தந்தையர்களுக்கு உதவி கரம் நீட்டுங்கள்.
5. உங்கள் பொறுப்பில் இருக்கிற புனித பியோ ஜெபமாலை இயக்கங்களோடு தொடர்பு கொண்டு அவர்களை பாராட்டுங்கள். இயக்கம் செயல்படாமல் இருக்கின்ற இடங்களை சந்தித்து செயல்பட அவர்களுக்கு உதவி
செய்யுங்கள்.
6. மண்டல அளவில் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்.
7. தேசிய முதன்மை பணியாளர் தேசிய அளவில் பணியாளர் பயிற்சிக்கு அனைவரையும் தயார் செய்ய தொடங்கும்படி வேண்டுகிறேன்.
8. நமது இயக்கத்தின் பொருள்களை விரைவாக பத்திரப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வது உங்களுடைய பொறுப்பு.
9. மேலே கூறப்பட்டு இருக்கிற அனைத்தையும் தேசிய பணியாளர்கள் கருத்தில் கொண்டு ஒருவர் மற்றவரோடு செயல்படுவதற்கு உறுதுணையாக இருங்கள்.
10. புனித பியோ ஜெபமாலை இயக்கத்தில் உள்ள சகோதர சகோதரிகளின் ஆன்ம சரீர நலங்களுக்காக தினமும் ஐந்து நிமிடமாவது ஒப்புக்கொடுத்து ஜெபிக்குமாய் கேட்டுக்கொள்கிறேன்
11. நான் மறந்து போன ஏதாவது காரியங்கள் இருந்தால் நினைவு படுத்தி இவற்றோடு இணைக்க உதவுங்கள்.
12. இந்த அறிவுறுத்தல்களை எல்லாம் நீங்கள் பார்த்து தெரிந்து கொண்டீர்கள் என்பதற்கான பதில் செய்தியை எனக்கு ஒவ்வொருவரும் அனுப்பி வைக்க வேண்டும்.
இறைவன் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!
இப்படிக்கு,
தந்தை. செல்வராஜ் க.ச
புனித பியை ஜெபமாலை இயக்கம்.
22/12/2025






0 கருத்துகள்:
கருத்துரையிடுக