வரவேற்புரை (Welcome Speech)
"இதோ, ஒரு கன்னியிடமிருந்து மீட்பர் பிறப்பார்; அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவர்."
புனித பியோ ஜெபமாலை இயக்கத்தின் அன்பிற்குரிய உறுப்பினர்களே, நமது மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் இந்த புனிதமான வேளையில், உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். புனித பியோவின் ஆன்மீக வழிகாட்டுதலில் ஜெபமாலையை ஆயுதமாகக் கொண்டு பயணிக்கும் நாம், இன்று ஒரு குடும்பமாக இங்கே கூடியுள்ளோம்.
இன்றைய விழாவிற்குத் தலைமை தாங்கி, நம்மை வழிநடத்த வருகை தந்துள்ள ஆலம்பாக்கம் பங்குத்தந்தை, அருள்தந்தை ஏ. சகாயராஜ் அவர்களை நமது இயக்கத்தின் சார்பில் மிகுந்த அன்போடு வரவேற்கிறேன்.
"கிறிஸ்மஸ் செய்தி" வழங்க வருகை தந்துள்ள கப்புச்சின் சபையைச் சேர்ந்த திருத்தொண்டர் சகோதரர் ஜூடு ததேயூஸ் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.
நமது இயக்கத்திற்கு எப்போதும் பக்கபலமாக இருந்து, ஆன்மீகப் பாதையில் நம்மை வழிநடத்தும் தேசிய பணியாளர்களையும், அவர்களை வழிநடத்தும் நமது ஆன்மீக வழிகாட்டி தந்தை செல்வராஜ் கப்புச்சின் அவர்களையும் அன்போடு வரவேற்கிறேன்.
இன்று வாழ்த்துப் பெறவிருக்கும் புதிய மணமக்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் புனித பியோவின் ஆன்மீகப் பிள்ளைகள் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வரவேற்று, இந்த விழாவைத் தொடங்கி வைக்கிறேன்.






0 கருத்துகள்:
கருத்துரையிடுக