அப்பா: "ரேங் கார்ட் எங்கடா?"
மகன்: "இந்தாங்கப்பா ரேங் கார்ட்"
அப்பா: "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா"
மகன்: "சரிடா மச்சான், கையெழுத்து போடு"
&&&&&&&
கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.
மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
@########
மாணவன் சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…
####₹₹₹
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
########
செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.
#######₹₹
டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக்
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்"
நோயாளி: "டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்"
##########
டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக்
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்"
நோயாளி: "டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்"
####₹₹
கணவர்: இது மாதிரி என்கிட்டே தொடர்ந்து சண்டை போட்டுக்கிட்டே இருந்தால், ஒரு நாள் மிருகமா மாறப் போறேன். ஜாக்கிரதை.
மனைவி: நான் எலியைப் பார்த்தெல்லாம் பயப்பட மாட்டேன்!
$$$₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹%%%%%
நற்கருணையால் மட்டும் வாழ்ந்த புனிதர்கள்
St. Catherine of Siena: 7 ஆண்டுகள்
St. Nicholas of Flüe: 20 years,
அருளாளர் Alexandrina Maria da Costa: 13 years of her life.
Marthe Robin: 51 years
Brazil இறை ஊழியர் Floripes Dornellas de Jesus (Lola): 60 years on the Eucharist alone. 16 வயதில் மரத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி அவருடைய உடலின் கீழ்பாகங்கள் முழுமையாக செயலிழந்து விட்டன. இந்த ஒரு நிலையில் அவருக்கு பசி இல்லை தாகம் இல்லை தூக்கம் இல்லை.
நற்கருணை மட்டுமே தினம் தோறும் உட்கொண்டு 60 ஆண்டுகள் வாழ்ந்தா 1999இல் மரித்தார்.
ஆகவே இந்த புனிதர்கள் அருளாளர்கள் இறை ஊழியர்கள் நற்கருணை ஆண்டவர் மட்டுமே எனக்கு போதும் வேற எதுவும் இந்த உலகத்தில் வேண்டாம் என்று கிறிஸ்துவை முழுமையாக நம்பி நற்கருணையில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தார்கள். அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை. அது உண்மையாயிற்று.
பெரிய வியாழன்
யூதர்கள் எகிப்திலிருந்து வெளியேறிய முதல் பஸ்காவை நினைவுகூரும் வகையில் பஸ்கா விருந்து மாலையில் கொண்டாடப்பட்டது போல,
ஆண்டவருடைய இரா உணவு / பாஸ்கா உணவு மாலையில் கொண்டாடப்படுகிறது.
ஆட்டுக்குட்டியின் இரத்தம் யூதர்களைக் காப்பாற்றியது போல, கிறிஸ்துவின் இரத்தம் உலகம் முழுவதும் மீட்பை/ இரட்சிப்பை கொண்டுவருகிறது.
விடுதலைப் பயணம் புத்தகத்திலிருந்து வாசிக்கப்பட்ட முதல் வாசகம், பஸ்கா விருந்து குறித்து மக்களுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளை விவரிக்கிறது.
கிறிஸ்து தனது சீடர்களுக்கு அப்பத்தையும் திராட்சை ரசத்தைத்தையும் தனது சொந்த உடலாகவும் இரத்தமாகவும் கொடுத்தபோது நற்கருணை நிறுவப்பட்டது பற்றி புனித பவுலின் கடிதம் கூறுகிறது.
மேல் அறையில் உள்ள காட்சியை நற்செய்தி நமக்குக் காட்டுகிறது, அதில் இயேசு தன்னுடன் இருந்தவர்களின் கால்களைக் கழுவுவதைக் காண்கிறோம். இந்த வழியில் அவர்கள் அனைவருக்கும் பணியாளர்களாக / தொண்டு புரிபவர்களாக/ சேவை ஆற்றுகிறதுக்காக இருக்க வேண்டும் என்று அவர் காட்டினார். நற்செய்தி வாசிக்கப்பட்ட பிறகு, கால்களைக் கழுவுதல் இன்று கிறிஸ்து நமக்குக் கொடுத்த அறிவுறுத்தலை நினைவூட்டுவதாக நடைபெறுகிறது.
நற்கருணை கொண்டாட்டத்தின் முடிவில், அதி உன்னதமான நற்கருணையை பலிபீடத்திலிருந்து ஆராதனைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றொரு பீடத்திற்கு எடுத்துச் சென்று தற்காலிகமாக அங்கே நிறுவப்படுகிறது.
பலிபீட துகில்கள் அகற்றப்பட்டு சிலுவைகள் மூடப்பட்டிருக்கும். இது ஆண்டவர் நம்மிடமிருந்து எடுக்கப்பட்டுவிட்டார் என்பதை நமக்குக் காட்டுகிறது.
ஆக இன்று நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
1. நற்கருணையை ஏற்படுத்தியதையும்
2. குருத்துவத்தை ஏற்படுத்தியும்
நினைவு கூர்ந்து கொண்டாடுகின்றோம்
3. அன்பு கட்டளை
நற்கருணை:
யோவான் 6:55
எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.
யோவான் 6:56
எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.
"நம்பிக்கை உள்ளவருக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. நம்பிக்கை இல்லாதவருக்கு எந்த விளக்கமும் சாத்தியமில்லை."
+ புனித தாமஸ் அக்வினாஸ்
+ நற்கருணையை கத்தோலிக்க திருச்சபை மட்டுமே நமக்கு வழங்குகிறது. வழங்க முடியும்.
+ நற்கருணை கத்தோலிக்க கிறிஸ்தவனுக்கு வாழ்வின் மையமாக விளங்குகிறது.
+ நாம் நற்கருணை ஆண்டவரை தகுதியோடு உட்கொள்ள அழைக்கப்படுகிறோம். (ஒப்புரவு அருட்சாதனம் )
+"அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள்". புனித பவுல்
+ நல்ல கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தினம் தோறும் நற்கருணை பலியில் பங்கு கொண்டு கிறிஸ்துவை நம் உள்ளத்தில் ஏற்று கிறிஸ்துவாக வாழ அழைக்கப்படுகிறோம்.
2. குருத்துவம்
நற்கருணை ஏற்படுத்திய அதே வேளையில் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து குருத்துவத்தையும் ஏற்படுத்தினார். இராவணவு பந்தியில் அமர்ந்திருந்த இயேசு கிறிஸ்து எழுந்து ஒரு துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு அடிமை வேலை செய்பவரை போல தன்னுடைய அப்போஸ்தலர்களின் பாதங்களை கழுவி நீங்களும் இப்படி பணி செய்து வாழ வேண்டும் என்று பாடம் சொன்னார். ஆகவே இயேசு கிறிஸ்துவே அவருக்குப் பின் அவரைப் போல பணி செய்வதற்காக குருத்துவத்தை ஏற்படுத்திய நாள் இன்று.
குருத்துவம் இல்லாமல் நற்கருணை இல்லை, நற்கருணை இல்லாமல் குருத்துவம் இல்லை. நற்கருணையும் குருத்துவத்தையும் பிரித்துப் பார்க்க முடியாத ஒரு மாபெரும் கொடை.
ஒரு குருவானவர் இயேசுவைப் போல வாழ, பணி செய்ய அழைக்கப்பட்டு இருக்கிறார்.
கிறிஸ்தவர்களுக்காக மட்டுமல்ல இயேசுவைப் போல எல்லா மனிதர்களுக்காகவும் உருவாக உயர்த்தப்பட்டிருக்கிறார். அவர் கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஆகவே இந்த நாளில் உங்களுடைய குருவானவருக்காக ஜெபிக்கவும் வாழ்த்தவும் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.
+ திருப்பலியின் போது ஆண்டவர் இயேசு கிறிஸ்து சாதாரண அப்பத்தின் திராட்சை ரசத்தின் வழியாக மிகவும் எளிமையாக உருவானவரின் கரங்களில் தவழ்கிறார். குருத்துவத்தின் வழியாக இயேசு உண்மையாகவே செயல்படுகிறார். அவர் இயேசுவின் இதயத்திற்கு நெருக்கமானவராக இருக்கிறார். சாதாரணமாக நாம் பார்க்கிற பழகுகிற குருவானவர் மறு கிறிஸ்துவாக இருக்கிறார் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா ?
+ கத்தோலிக்க கிறிஸ்தவனுடைய வாழ்விலே அவன் பிறப்பிலிருந்து இறப்பு வரையிலும் குருவானவருடைய பணி முக்கியத்துவம் பெறுகிறது.
+ குருவானவர் மீது குறை கண்டுபிடிக்கிற அவரைப் பற்றி புறணி பேசுகிற மனநிலையில் தான் அதிகமான கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனைத்தையும் துறந்து கிறிஸ்துவுக்காகவும் உங்களுக்காகவும் அர்ப்பணிப்போடு பணி செய்கிற குருக்களை பாராட்டி இருக்கிறீர்களா? உங்களைத் தாங்குவதற்கும் உடன் இருப்பதற்கும் குடும்பம் இருக்கிறது. குடும்பத்தைத் துறந்து தனியாக வாழுகின்ற குருக்களை தாங்க வேண்டியது நீங்கள் தான் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?
+ இயேசுவின் இறையாட்சி பணியை அவருடைய அப்போஸ்தலர்கள் தொடர்ந்து ஆற்றினார்கள். இப்பொழுது குருக்களும் ஆயர்களும் திருத்தந்தையும் தொடர்கிறார்கள். இயேசுவின் பணியை தொடர்ந்து செய்ய உங்களுடைய பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என உணர்ந்திருக்கிறீர்களா? நாம் திருச்சபையை தொடர்ந்து வழிநடத்த இன்னும் அதிகமான குருட்கள் தேவை.
3. அன்பு கட்டளை
யோவா 13: 34
'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர்.