உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்களுக்காக புனித மெக்டில்டேயின் 'எங்கள் தந்தை'
புனித மெக்டில்டே (ஒரு ஆன்மீக கன்னியாஸ்திரி 1241-1298) இந்த ஜெபத்தை வாசிக்கும் போதெல்லாம், உத்தரிக்கும் நிலையிலிருந்து ஆன்மாக்களின் படையணிகள் விண்ணகத்திற்கு ஏறுவதைக் கண்டார்:
விண்ணுலகில் இருக்கும் எங்கள் தந்தையே,
விண்ணக தந்தையே , உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆன்மாக்களை மன்னித்தருளும் , ஏனென்றால் அவர்கள் உம்மை போதுமான அளவு அன்பு செய்யவில்லை , உமக்குச் செலுத்த வேண்டிய அனைத்து மரியாதையையும் உமக்கு செய்யவில்லை, அவர்களின் ஆண்டவரும் தந்தையுமான நீர், உமது தூய அருளால், அவர்களை உமது குழந்தைகளாக ஏற்றுக்கொண்டீர். அவர்களின் பாவங்களால், அவர்கள் உம்மை தங்கள் ஆன்மாக்களிலிருந்து விரட்டியடித்திருக்கிறார்கள், அங்கு நீர் எப்போதும் வாழ விரும்புவதில்லை. இந்தக் குறைகளுக்குப் பரிகாரமாக, மனு உருவான உம் திருமகன் இவ்வுலக வாழ்வில் எங்கள் அனைவருக்கும் காட்டிய அன்பையும் வணக்கத்தையும் நான் உமக்கு செலுத்துகிறேன், மேலும் அவர் செய்த தியாகங்கள் மற்றும் பரிகார செயல்கள் அனைத்தையும்
நான் உமக்கு அர்ப்பணிக்கிறேன்.
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெருக,
ஓ மிகவும் நல்ல தந்தையே, உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆத்மாக்களை மன்னிக்கும்படி உம்மை கெஞ்சி கேட்கிறேன், ஏனென்றால் அவர்கள் உமது தூய பெயரை எப்போதும் சரியான முறையில் மதிக்கவில்லை, ஆனால் அவர்கள் அதை வீணாக பயன்படுத்தி "கிறிஸ்தவர்" என்ற பெயருக்கு தகுதியற்றவர்கள் என்று தங்கள்
பாவம் நிறைந்த வாழ்க்கையால் நிரூபித்தனர். அவர்களின் தவறுகளுக்குப் பரிகாரமாக, உம் அன்பான திருமகன் உமது பெயருக்கு அவரது வார்த்தைகளாலும் செயலாலும் செய்த அனைத்து மரியாதைகளையும் நான் உமக்கு காணிக்கையாக்குகிறேன்.
உமது அரசு வருக;
மிகவும் நல்ல தந்தையே, உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆத்மாக்களை மன்னிக்க வேண்டும் என உம்மை வேண்டுகிறேன், ஏனென்றால் அவர்கள் எப்போதும் உமது அரசை போதுமான ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் தேடவில்லை அல்லது வணங்கவில்லை; இந்த அரசு, உண்மையான ஓய்வு மற்றும் அமைதி ஆட்சி செய்யும் ஒரே இடம். அவர்கள் செய்த தவறுகளுக்குப் பரிகாரமாக, நல்லதைச் செய்வதில் அக்கறையின்மையால், உமது மகனின் புனிதமான விருப்பத்தை நான் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன், அதன் மூலம் அவர்களும் அவருடைய அரசின் வாரிசுகளாக மாற வேண்டும் என்று உம் மகன் விரும்பினார்.
உமது சித்தம் பரலோகத்தில் உள்ளபடியே பூமியிலும் செய்யப்படும்;
மிகவும் நல்ல தந்தையே, உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆத்மாக்களை மன்னியும், ஏனென்றால் அவர்கள் எப்போதும் தங்கள் விருப்பத்தை உங்கள் திட்டத்திற்கு கையளிக்க வில்லை. அவர்களின் கீழ்ப்படியாமைக்கு பரிகாரமாக, உமது புனித சித்தம் மற்றும் சிலுவையில் மரணம் வரை உமக்குக் கீழ்ப்படிவதில் அவர் வெளிப்படுத்திய உன்னதமான சமர்ப்பணத்துடன் உமது தெய்வீக சன்மார்க்கத்தின் அன்பினால் நிரம்பிய இதயத்தின் முழுமையான இணக்கத்தை நான் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
எங்கள் அன்றாட உணவை எங்களுக்குத் தாரும்.
மிகவும் நல்ல தந்தையே, உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆத்மாக்களை மன்னியும், ஏனென்றால் அவர்கள் எப்போதும் போதிய விருப்பத்துடன் நற்கருணையின் புனித சடங்கைப் கடைபிடிக்கவில்லை, ஆனால் பெரும்பாலும் சிந்திக்காமலும், அன்பில்லாமலும், தகுதியற்றவர்களாக பெறவும், அல்லது அதைப் பெறாமல் புறக்கணிக்கவும் செய்தனர். இந்தக் குறைகளுக்குப் பரிகாரமாக, உம் தெய்வீக திரு மகனாகிய எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது, அவருடைய எதிரிகளுக்கு ஆதரவாக உங்களிடம் பரிந்துபேசிய அவருடைய சிறந்த தூய்மை மிகுந்த மனதையும் நான் உமக்கு அர்ப்பணிக்கிறேன்.
எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களையும் மன்னியும். மிகவும் நல்ல தந்தையாகிய கடவுளே, உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆத்மாக்களை மன்னித்தருள வேண்டுமென மன்றாடுகிறேன். அவர்கள் ஏழு கொடிய பாவங்களுக்கு அடிபணிந்ததன் மூலமும், தங்கள் எதிரிகளை நேசிக்கவோ அல்லது மன்னிக்கவோ விரும்பாததன் மூலம் அவர்கள் செய்த அனைத்து தவறுகளையும் மன்னிக்க வேண்டுகிறேன். இந்தக் குறைகளுக்குப் பரிகாரமாக, உம் தெய்வீக மகனாகிய எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது அவருடைய எதிரிகளுக்கு ஆதரவாக பரிந்துரை செய்த அவருடைய சிறந்த தூய்மை மிகுந்த வேண்டுதலை நான் உமக்கு அர்ப்பணிக்கிறேன்.
எங்களை சோதனைக்கு உடபடுத்தாதையும்;
மிகவும் நல்ல தந்தையே , உத்தரிக்கும் நிலையில் உள்ள ஆத்மாக்களை மன்னியும், ஏனென்றால் அவர்கள் பிசாசு மற்றும் உடல் இச்சையின் ஆபத்துக்களை அடிக்கடி தவிர்க்க வில்லை, ஆனால் அவர்கள் எல்லா நன்மைகளின் எதிரியையும் பின்பற்றினார்கள். இந்த எல்லா பாவங்களுக்கும் பரிகாரமாக, சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றால், எம் ஆண்டவர் இயேசு உலகிற்கு எதிராக வென்ற மகிமையான வெற்றியையும், அவரது புனித வாழ்க்கை, அவரது பாடுகள் துக்கங்கள், அவரது துன்பம் மற்றும் அவரது மிகக் கொடூரமான மரணத்தையும் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
ஆனால் தீமையிலிருந்து எங்களை விடுவிக்கவும்; மற்றும் அனைத்து தண்டனைகளிலிருந்தும் உம் அன்பான மகனின் எல்லையற்ற தகுதிகள் மூலம் எங்களை வழிநடத்தும், அதே போல் உத்தரிக்கும் உள்ள ஆத்மாக்களையும் உமது நிலையான மகிமையின் ஆட்சிக்குள் அழைத்துச் செல்வீராக. ஆமென்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக