மனம் வருந்தும் மனிதா...நீ மனம் திருந்த மாட்டாயோ (சிலுவைப்பாதை பாடல்)

மனம் வருந்தும் மனிதா....
நீ மனம் திருந்த மாட்டாயோ- 2
மானிடமே மானிடமே மனம் திருந்திடு -2
மனம் வருந்தும் மனிதா....
நீ மனம் திருந்த மாட்டாயோ...

இயேசு மரண தண்டனை பெறுகிறார்

உலக வாழ்க்கை பெரியதென்று
உறவை மறந்தாயோ
பணம் பதவி பெருமைக்காக
உனை இழந்தாயோ
அன்பு செய்ய காத்திருக்கும்
இயேசு உன்னை அழைக்கிறார்
திரும்பி வா திரும்பி வா
நம் தேவனிடம்

மனம் வருந்தும் மனிதா...
நீ மனம் திருந்த மாட்டாயோ- 2

இயேசு சிலுவையை ஏற்கிறார்

சிலுவை பாரம் கனமென்று உதறி சென்றாயோ
தேவன் தந்த சிலுவையதை
நீ வெறுத்தாயோ
பாவச் சுமையை இறக்கிட
இயேசு உன்னை அழைக்கிறார்
திரும்பி வா திரும்பி வா
நம் தேவனிடம்

மனம் வருந்தும் மனிதா...
நீ மனம் திருந்த மாட்டாயோ-

இயேசு முதல் முறையாக விழுகிறார்

வாழ்வில் சோகம் வந்தபோது
நீ தளர்ந்தாயோ
முதல் வீழ்ச்சியிலே நம்பிக்கையை
நீ இழந்தாயோ
விழுந்தபோதும் எழச் சொல்லி
இயேசு உன்னை அழைக்கிறார்
திரும்பி வா திரும்பி வா
நம் தேவனிடம்

மனம் வருந்தும் மனிதா....
நீ மனம் திருந்த மாட்டாயோ- 2

இயேசு தன் தாயை சந்திக்கிறார்

தாயின் அன்பு முன் நின்றும்
நீ கடந்தாயோ
துன்பம் நிறைந்த பார்வையினை
நீ உணராயோ
அன்பின் முகம் காண  எண்ணி
இயேசு உன்னை அழைக்கிறார்
திரும்பி வா திரும்பி வா
நம் தேவனிடம்

மனம் வருந்தும் மனிதா...
நீ மனம் திருந்த மாட்டாயோ- 2

சீமோன் சிலுவை சுமக்க உதவுகிறார்

பிறர் சுமைகள் உனதல்ல என நினைத்தாயோ
உதவி கேட்கும் நேரத்திலே
நீ அகன்றாயோ
சுமக்க முடியா ஏக்கத்தோடு
இயேசு உன்னை அழைக்கிறார்
திரும்பி வா திரும்பி வா
நம் தேவனிடம்

மனம் வருந்தும் மனிதா...
நீ மனம் திரும்ப மாட்டாயோ- 2

வேரோனிக்கா முகம் துடைக்கிறார்

குருதி படிந்த முகம் கண்டும் மனம் பொறுக்கலயோ
வெரோனிக்க துணிவைப் பார்த்தும் எனை நெருங்களையோ
முக முகமாய் நோக்கிடவே
இயேசு உன்னை அழைக்கிறார்
திரும்பி வா திரும்பி வா
நம் தேவனிடம்

மனம் வருந்தும் மனிதா...
நீ மனம் திருந்த மாட்டாயோ- 2

மீண்டும் வீழ்ச்சி வந்தபோது
நீ தளர்ந்தாயோ...
இனி  மீள முடியாதென்றென்னி
நீ சோர்ந் தாயோ
எழுந்து வர சொல்லியே
இயேசு உன்னை அழைக்கிறார்
திரும்பி வா திரும்பி வா
நம் தேவனிடம்

மனம் வருந்தும் மனிதா...
நீ மனம் திருந்த மாட்டாயோ 2

பிறர் துயரம் துடைக்கும் வேளை நீ துறந்தாயோ
அவர் கண்ணீர் சிந்தும் காரணத்தை
நீ அறியாயோ
உன் பாவ வாழ்வை  மாற்றிட
இயேசு உன்னை அழைக்கிறார்
திரும்பி வா திரும்பி வா
நம் தேவனிடம்

மனம் வருந்தும் மனிதா...
நீ மனம் திருந்த மாட்டாயோ 2

மூன்றாம் வீழ்ச்சி வந்தபோது உடல் நொறுங்கியதோ
எழுந்து வர ஆற்றல் இன்றி உள்ளம் வருந்தியதோ
மீண்டு எழுந்து வர வேண்டி
இயேசு உன்னை அழைக்கிறார்
திரும்பி வா திரும்பி வா
நம் தேவனிடம்

மனம் வருந்தும் மனிதா...
நீ மனம் திருந்த மாட்டாயோ 2

பிறர் வாழ்வின் நற்புகழை நீ இகழ்ந்தாயோ
அவர் வாழ்வின் தாழ்வுகளில் நீ மகிழ்ந்தாயோ
உன் எண்ணங்களை மாற்றிட
இயேசு உன்னை அழைக்கிறார்
திரும்பி வா திரும்பி வா
நம் தேவனிடம்

மனம் வருந்தும் மனிதா...
நீ மனம் திருந்த மாட்டாயோ 2

கூரிய  உன் வார்தைகளால் காயமானதோ
மனம் காயமாகி வேதனையில் நொந்து போனதோ
அன்பை நீயும் கொடுத்திட
இயேசு உன்னை அழைக்கிறார்
திரும்பி வா திரும்பி வா
நம் தேவனிடம்

மனம் வருந்தும் மனிதா...
நீ மனம் திருந்த மாட்டாயோ 2

உம் உயிர் தந்து அளவில்லா அன்பை கொடுத்ததேன்
என் வாழ்வை என்றும்  உனக்காக வாழ வைக்கவே
உறுதியுடன் வாழவே
இயேசு உன்னை அழைக்கிறார்
திரும்பி வா திரும்பி வா
நம் தேவனிடம்

மனம் வருந்தும் மனிதா...
நீ மனம் திருந்த மாட்டாயோ 2

உயிர் துடிப்பின் ஓட்டமதை உணர்ந்து பார்த்தாயோ
தாயுணர்வின் வேதனையை நீ உணர்வாயோ
தாயின் மடி தேடிட
இயேசு உன்னை அழைக்கிறார்
திரும்பி வா திரும்பி வா
நம் தேவனிடம்

மனம் வருந்தும் மனிதா...
நீ மனம் திருந்த மாட்டாயோ

முடங்கிப்போன உணர்வின்று முடிந்து போனதோ
மறுவாழ்வு உண்டென்று உனக்கு தோனலையோ
நம்பிக்கையில் நிலைத்திட
இயேசு உன்னை அழைக்கிறார்
திரும்பி வா திரும்பி வா
நம் தேவனிடம்

மனம் வருந்தும் மனிதா...
நீ மனம் திருந்த மாட்டாயோ

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS