தவமே தவம் ! தவத்தினால்ஒருவர் தனது உடல் உள்ளம் ஆன்மா அனைத்தையும் தூய்மை ஆக்குகிறார். மனித உணர்வுகள் பாவத்திற்கும் அடிமையாகின்ற போது உடல், உள்ளம், ஆன்மா அனைத்துமே கறைபடிந்து சிதைய தொடங்குகிறது. கவனம் இல்லை என்றால் அவை அழிந்தே விடும். இ.ந்த அழிவை மனிதனே தேடிக் கொள்கிறான். ஆகவே பாவத்திற்கு கிடைக்கும் கூலி சாவு. (உரோ - 6 : 23). சாவு ஒரு நிரந்தரமான அழிவு. தன்னிலிருந்தும் கடவுளிடமிருந்தும் சக மனிதரிடமிருந்தும் நிரந்தரமான பிரிவு. அந்தோ, பரிதாபம் யாராலும் அவனுக்கு உதவிடவே முடியாது. ஆனால் கடவுள் பல வாய்ப்புகளை வழங்கி திருந்தி வாழ நிலை வாழ்வை உரிமை மாக்கிக் கொள்ள அழைக்கிறார்.

அதற்குத் தகுந்த காலமே தவக்காலம். இதுவே தகுந்த காலம். நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கின்றோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே ‘கடவுளோடு ஒப்புரவாகுங்கள்’ என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். இதுவே மீட்பின் நாள்’ (2 கொரி 5 : 20, 6 : 2) என்று புனித பவுலடியார் அழைக்கிறார். உலகினரின் பாவங்களை பொருட்படுத்தாமல் கடவுள் அவர்களை கிறிஸ்துவின் வழியாக தம்மோடு ஒப்புரவாக்கினார். (2 கொரி 5 : 19) கடவுளோடு ஒப்புரவாக இந்த அருமை யான காலத்தைதத் தவற விடாமல் பயன்படுத்துவதான் விவேகமானது.

இக்காலத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்? இறைவாக்கினார் யோவே 2 : 12-13ல் கூறுகிறார், “இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக் கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு, என்னிடம் திரும்பி வாருங்கள்.” வெளியில் மற்றவர்கள் பார்க்கும்படி காட்டிக் கொள்ளாமல் உள்ளத்திலே உங்களுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்படி தவம் செய்யுங்கள். உடைகளை அல்ல உள்ளதைதைக் கிழித்துக் கொண்டு ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். 

இக்காலத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது கிறிஸ்துவின் உண்மையான சீடராக இருப்பதுதான். ‘என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டு.ம். (மாற்கு 8 34) என்கிறார் இயேசு. பல நேரங்களில் சிலுவைகளைக் கண்டு துன்பங்களைக் கண்டு மிகவும் அஞ்சுகிறோம். புனித பியோ கூறுகிறார், ‘நம்மை அழிக்கும் அளவுக்குத் தொடர்ந்து நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது, மாறாக மறைவாய் இருக்கிற உங்க தந்தைக்கு மட்டுமே தெரியும் (மத். 6-18) பயமுறுத்துகின்ற கொந்தளிக்கும் கடலை கடக்காமல் மீட்பை அடைய முடியாது. கல்வாரிதான் புனிதர்களின் மலை. ஆனால் அங்கிருந்துதான் மற்றொரு மலைக்கு (விண்ணகம்) கடந்து செல்கிறோம்’. அந்த நாளுக்காக நாம் காத்திருக்கிறோம். அதுதான் கடவுள் நீதி
வழங்கும் நாள்.

அவர் மீண்டும் கூறுகிறார்: ‘சிலுவையின் அடியில்தான் ஒருவர் அன்பு செய்ய
கற்றுக் கொள்கிறார்’. ‘எனது அனுபவத்திலிருந்து எனக்குத் தெரிவது என்னவென்றால் நமது மீட்புக்காக விரும்பி சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டு அவரது சிலுவையில் சாய்ந்து கொண்டால் தோல்விகளைத் தவிர்க்கலாம்.’ “ஆண்டவர் நம்மீது சுமைகளைச் சுமத்துகிறார், நம் சுமைகளிலிருந்து நம்மை விடுவிக்கிறார். தன்னால் தேர்ந்து கொள்ளப்பட்டவர் மீது அவர் தம் சிலுவையை சுமத்துகின்றபோது அவரது கடினமான சிலுவையும் எளிதாகின்ற வகையில் அவரது ஆன்மாவை உறுதிப்படுத்துகின்றார். ஆகவே பியோவின் அன்பு பிள்ளைகளே அம்மாவின் அற்புதமான குழந்தைகளே, இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு நிகழ்வுகளைத் தகுந்த முறையில் கொண்டாட சிறப்பான தவமுயற்சிகளை மேற்கொண்டு அதன் பலனைப் பெறுங்கள். இத் தவக் காலத்தில் நம் அன்னை தம் மகன் சிலுவைப்பாடுகள் குறித்து எவ்வளவு வேதனைக்கு உள்ளாகியிருப்பார் எனத் தியானியுங்கள். இயேசுக்கு எவ்வளவு உதவியாக இருந்தார் என்றால் கல்வாரி சிலுவையடி வரைச் சென்றார். எனவே நீங்களும் சிலவைகளைச் சுமக்கும் வீரர்களாகவும் உயிர்ப்பின் சொந்தங்களாகவும் வாழ எனது வாழ்த்துகளும் ஆசீரும்!

- ஓமனிலிருந்து அருட்தந்தை A. செல்வராஜ்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS


ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருப்பதையும் – தெய்வீக மணம் பரப்புவதையும் அற்புத கொடையாக பெற்றவர் புனித தந்தை பியோ அவர்களே. அவருக்கு கிடைத்த இந்த கொடை மிக, மிக அரிய கொடையாகும். இவரின் இந்த அற்புத தோற்றத்தை, இரண்டு இடங்களில் தோன்றுவதை பலர் பல இடங்களில் கண்கூடாக கண்டுள்ளனர். அவரின் ஆன்ம வருகையை ரோஜா மலரின் மணத்தால், புகைஇலையின் மணத்தால் உணர்ந்துள்ளனர். இந்த அரிய தெய்வீக மணம் அவரின் காயங்கிளின் வழி வெளியாகும் இரத்தத்தில் இருந்து வருவதாக ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. இன்னும் ஓர் முக்கிய செய்தி என்ன வெனில் தந்தை அவர்கள் நறுமண வாசனை திரவியங்களை பயன்படுத்துவதே இல்லை. இந்த தெய்வீக மணமாகப்பட்டது, எப்பொழுது ஒரு விசுவாசி தந்தையை நினைத்து மனமுறுகி அவரிடம் மன்றாடும் நேரத்தில் இந்த அறிய நறுமணம் வெளிப்படுமாம். இந்நிகழ்வு இன்றளவும் நடக்கின்ற ஒரு நிகழ்வாக இருக்கின்றது. பலர் இந்நிகழ்வை பற்றி சாட்சி பகர்ந்துள்ளனர்.

ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றும் நிகழ்வுகளில் மிக முக்கியமான நிகழ்வு ஒன்று, இரண்டாம் உலக யுத்தத்தின் போது நிகழ்ந்ததாகும். இரண்டாம் உலக யுத்தத்தின் போது தென் இத்தாலி, ஜெர்மனி இட்லரின் நாசிபடையின் கையில் அடிமைப்பட்டு இருந்தது. அப்போது நேசப்படைகள், அமெரிக்க ஆகாய குண்டு வீச்சு படையினரிடம் சென் கொவாணி ரொட்டெண்டோ நகரை தாக்கும் பொருப்பினை ஒப்டைத்திருந்தார்கள். அமெரிக்க விமான படையினர் ரொட்டெண்டோ நகரின் மேல் விண்வெளியில் தோன்றி குண்டுகளைப் பொழிய இருந்த நேரத்தில், ஆகாயத்தில் அமெரிக்க விமானத்தின் முன் சாக்கலேட் நிற அங்கி அணிந்த துறவி ஒருவர் தோன்றினார். அவரின் தோற்றத்தினால் குண்டுகள் பொழியும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதன் வழி தந்தை பியோ யுத்தத்துக்கு முன் ரொட்டெண்டோ குடிமக்களுக்குச் சொன்ன தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறியது. யுத்தத்தின் போது ரொட்டெண்டோ நகரம் யுத்தத்தின் அழிவிலிருந்து காக்கப்படும் என்பதாகும். 

சில காலங்களுக்கு பின் ரொட்டெண்டோவுக்கு பக்கத்தில் சில மைல்களுக்கு அப்பால் ஃபோகியா என்ற இடத்தில் அமெரிக்க படையின் விமானத்தளம் ஒன்று நிறுவப்பட்டது. அதில் பணிபுரிந்த விமானி ஒருவர் ரொட்டெண்டோவில் துறவிகள் இருந்த மடத்திற்கு வந்திருந்தார். அங்கே அவர் கண்ட ஆச்சரியம்! யுத்தத்தின் போது ரொட்டெண்டோவில் இருந்த நாசிப் படைகளை அழித்தொழிக்க விண்ணில் குண்டுகள் தாங்கிய விமானத்தில் வந்த போது விண்ணில் கண்ட அந்த துறவியைக் அங்கே கண்டார். அவர்தான் தந்தை பியோ என அறிந்து அவரிடம் விளக்கம் கேட்டார். அப்போது தந்தை அவர்கள் சொன்ன பதில் இறைவனின் துணையுடன் தான் இவ்வகையான அறியச் செயலை செய்ய முடிந்தது என்றார். இறைவன் அளித்துள்ள அநேக கொடைகளில் ஒன்று, இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் தோன்றும் காட்சி. இரண்டு இடங்களில் தோன்றும் இந்த முறையை யாரும் தவறாக புரிந்துக் கொண்டு நீக்கமற எவ்விடத்திலும் இருக்கிறவர் என்று நினைக்கக்கூடாது. நீக்கமற எவ்விடத்திலும் இருப்பவர் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கு மாத்திரமே உரியது.
-Anthony,Singapore.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

திருத்தந்தையின் தவக்கால செய்தி


தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் ஒருவர் ஒருவருக்குப் ”பாதுகாவலர்களாக” இருக்குமாறு 07-2-2012 அன்று அழைப்பு விடுத்தார். இம்மாதம் 22ம் தேதி திருநீற்றுப் புதனுக்காக ஆரம்பிக்கும் தவக்காலத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் அன்புக்கும் விசுவாச வாழ்வுக்கும் நற்சான்றுகளாய் இருப்பதற்குச் சவால் விடுக்கப்படும் இவ்வுலகில், கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஒரே உடலின் உறுப்பினர்கள் என்ற உணர்வில், பிறரன்பு, சேவை, நற்பணி ஆகியவற்றில் ஒருவர் ஒருவருக்குத் தூண்டுதலாய் இருக்க வேண்டிய உடனடித் தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 

சகோதரத்துவம் சமூகத்தன்மை கொண்டது என்பதால், இது, பிறரின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதிலும், சகோதரத்துவத் திருத்தத்திற்கு இட்டுச் செல்லும் ஆன்மீக வாழ்க்கை மீது கருத்தாய் இருப்பதிலும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலுள்ள, “அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக(எபி.10,24)” என்ற பகுதியைத் தலைப்பாக வைத்து தவக்காலச் செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை, தனியாள் மற்றும் சமூகத்தின் விசுவாசப் பயணத்தில் புதுப்பித்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

பிறர்மீது கருத்தாய் இருப்பதென்பது, பிறரின் உடல், நன்னெறி மற்றும் ஆன்மீக வாழ்க்கைக்கு நன்மையான அனைத்தையும் செய்வதாகும் என்று கூறியுள்ள திருத்தந்தை, இக்காலத்திய கலாச்சாரம், நன்மை, தீமை இவை பற்றிய உணர்வை இழந்து விட்டது போல் தெரிகிறது, எனினும், நன்மை உலகில் இருக்கிறது, அது தீமையை மேற்கொண்டுவிடும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிறரிடம் பொறுப்புடன் நடந்து கொள்வது என்பது, பிறரின் நன்மையை விரும்பி, அதற்காக உழைப்பது என்ற திருத்தந்தை, தீமையின் முன்னர் நாம் மௌனம் காக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். கிறிஸ்தவ சகோதரத்துவத் திருத்தம், எப்பொழுதும் அன்பையும் இரக்கத்தையும் கொண்டிருக்க வேண்டுமென்றும் கூறியுள்ள திருத்தந்தை, சகோதரத்துவத் திருத்தம் நாம் அனைவரும் சேர்ந்து தூய்மையான வாழ்வு நோக்கிப் பயணம் செய்ய உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கன்னியின் காட்சிகள்


கி.பி. 1061 செப்டம்பர் 24: இங்கிலாந்து நாட்டின் வால்ஷின்காம் நகரில் வாழ்ந்த ரிசல்ட்டின் தே பவர் செஸ் என்ற பெண்மணிக்கு கி.பி. 1061ஆம் ஆண்டு அன்னை மரியா காட்சி அளித்தார். அப்போது அன்னை அவரிடம், ”நாசரேத் இல்லம் கி.பி. 

1531 டிசம்பர் 9-12: மெக்சிக்கோ நாட்டின் குவாடலூப் நகரில் வாழ்ந்த யுவான் டியகோ, யுவான் பெர்னார்டினோ ஆகியோருக்கு கி.பி. 1531ஆம் ஆண்டு அன்னை மரியா காட்சி அளித்தார். அப்போது மரியன்னை, ”வாழ்வளிக்கும் உண்மை கடவுளின் கன்னித் தாய் நான். என்னைத் தேடி வரும் அனைவருக்கும் அன்னைக்குரிய அன்பையும், தாய்க்குரிய கனிவையும் தருவேன். எனக்கு இங்கு ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்டும்” என்று மொழிந்தார்.

அன்னை தனது காட்சிக்கு ஆதாரமாக யுவான் போன்று, இங்கு எனக்கு ஓர் இல்லம் எழுப்பப்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அன்னை மரியாவின் வேண்டுகோளை ஏற்று அப்பெண்மணி அன்னைக்கு அந்த இடத்தில் நாசரேத் இல்லத்தைப் போன்று ஓர் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார். டியகோவின் தில்மாவில் தன் அழகிய உருவத்தையும் பதியச் செய்தார். பின்பு அன்னை காட்சி அளித்த இடத்தில் ஓர் அழகிய ஆலயம் கட்டி எழுப்பப்பட்டு இன்றளவும் புகழ்பெற்று விளங்குகிறது. தொடரும் .. .. ..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புனித தந்தை பியோவின் வாழ்க்கை முறை


மக்கள் புனிதர் இவர்:  புனித தந்தை பியோ ஓர் ஏழைப் பெற்றோருக்கு எட்டாவது தவப் புதல்வராகப். பிறந்த இவர், எட்டாவது நாளிலே தன் பணி வாழ்வின் வாழ்க்கை முறை என்ன வென்று காட்டியுள்ளார். பரிந்துரை செய்வதே தனது பணி, அதுவும் ஆன்ம மீட்பிற்கான பணி ஆர்வமே அவரது வாழ்வை உந்தித்தள்ளியது. எண்பத்தோறு ஆண்டுகள் இதே பணியைச் செய்து வாழ்வை நிறைவு செய்தாலும் அவர் இறப்பிற்குப் பிறது செய்யப் போவதாகச் சொல்லிச் பணிவாழ்வை முழுமையாக நிறைவு செய்துவிட்டுப் போனதன் அளவுகோல் என்னவென்று கொள்ளலாம்? போக்குவரத்து வசதியே இல்லாத நிலையிலும் செப்டம்பர் 23, 1968 ஆம் ஆண்டிலே ஓர் இலட்சத்திற்கும் மேல் அவரது இறுதிப் பயணத்தில் பங்கெடுத்தனர்.. இவரின் மகிமையின் விழாக்களான முத்திப்பேறு பட்டம், புனிதர் பட்டம் அளிக்கும் விழாக்களில் உரோமை நகரிலுள்ள புனித பேதுரு பேராலயதில் மட்டுமல்ல அகில உலகமே மகிழ்ச்சி வெள்ளத்தில் திழைத்தது. மூன்று இலட்சத்துக்கு மேற்பட்டோர் இந்தப் பெரும் விழாக்களில் கலந்து கொண்டார்கள் என்றால் என்ன மக்கள் இவர் மேல் வைத்துள்ள பற்று, பாசம், அன்பு. இவரது பரிந்துரையில் உள்ள மேலான நம்பிக்கை. இவ்வளவு சிறப்பு செய்து வாழ்ந்த வாழ்க்கை முறை தான் என்னவென்று தியானிப்போம்.

விகாரமான தோற்றத்துடனும் தன்னால் ஒன்றுமே செய்ய இயலாமல் இருந்த பத்து வயது சிறுவனின் தாய் ஆலயத்தில் கீழ் நின்று கண்ணீர் விட்டு சென்றுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. “After my death of will do more my real mission will begin after my death“  ‘நான் இறந்த பிறகு இன்னும் அதிகம் செய்வேன். என் உண்மையான பணி என் இறப்பிற்குப் பிறகே தொடங்கும்’ என்று அவரே கூறி இருக்கிறார்.”

அவரது பணி வாழ்வின் தனிச்சிறப்பைப் பறைசாற்றுகிறது இந்த வாக்கியம். அவரது மிகச்சிறந்த அறிவுரை ‘இறைவேண்டல் செய், நம்பு, கவலைப்படாதே! ‘இந்தத் தாரக மந்திரமே அவர் அனுபவித்து வாழ்ந்த வாழ்வின் சாராம்சம் எனலாம். “Pray, Hope and Don’t Worry”‘வேண்டு, நம்பு , கவலைக் கொள்ளாதே’ ஆம் இறைவேண்டல் செய்து நம்பிக்கை கொள்ள ஆரம்பித்து விட்டால் கவலைக்கே இடமிருக்கக்கூடாது. கவலை இருக்குமானால் நம்பிக்கை இல்லை என்றே சொல்ல வேண்டும். நம்பிக்கை என்றாலே ஒளிதான். ஒளியேற்றிய பின் கவலையாகிய இருளுக்கு இடமிருக்க முடியாது தானே !  அழுவதைக் கண்டு அந்தத் திருத்தலப் புனிதரிடம் சிறுவன் பிரான்சிஸ்கோ (புனித பியோ) கெஞ்சி மன்றாடினார். என்ன ஆச்சிரியம் பத்து ஆண்டுகள் ஒன்றுமே செய்ய இயலாமல் தாவர வாழ்வு வாழ்ந்து வந்த சிறுவன் பூரண குணமடைந்து தம் தாயுடன் வீடு சென்றான். அன்றே தொடங்கியது இந்தப் பரிந்துரை பிறரன்புச் செயல். 

இந்ததச் சிறப்பு வாய்ந்த பரிந்துரையாளர் தன் வாழ்வு முழுவதுமே பல விதமான தொல்லைகள் நோய் முதலியவற்றால் வாடி வதைக்கப் பட்டாலும் அவரது பெற்றோர் உடன் பிறந்தோரின் பரிந்துரையால் பதினைந்தாம் ஆண்டு கிராமப் பள்ளி படிப்பை முடித்து கப்புச்சின் குரு மடத்தில் சேர்ந்தார். ஆண்டவரின் அருள் துணையை மண்டியிட்டு வேண்டி மன்றாடியே தனது குருத்துவக் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி குருவாக திரு நிலைப்படுத்திய அன்றே தன்னையே முழுமையாகக் கையளித்து விட்டார்..

உம்மை பலியாய் எனக்குத் தந்தாய் என்னை முழுவதும் உமக்கே தந்தேன் என்னும் பாணியில் அர்ப்பண வாழ்வு வாழ்ந்தார். அவர் பணி வாழ்வின் ஆயுதங்கள் திருப்பலி ஜெபமாலை, ஒப்புரவு, அருட்சாதனம்.  இயேசுவின் சிலவைப்பாடுகளை எப்போதும் தியானிப்பார்.

கடவுளின் அன்பைத் துன்பத்திலிருந்து பிரிக்க முடியாது என்றும் கடவுளுக்காக எல்லா துன்பங்களையும் அனுவிப்பதே ஆன்மா கடவுளை அடையும் வழி என்றும் புனித தந்தை பியோ நம்பினார். அவரது ஆன்மா துன்பத்தை அனுபவிக்கும் போது ஆழமான நரகக் குழியில் இருப்பது போல முழுவதும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதை உணர்ந்தது போல கொடிய வேதனை அடைந்திருக்கிறார். இத்தகைய துயர நேரத்தில் உடலிலும் ஆன்மாவிலும் சாத்தான் அவரைத் தாக்கியதாக அவரைப் பின்பற்றியவர்கள் நம்பினர். ஒளியின் தூதனாக நடித்து அவரைத் துன்பப்படுத்தினான். அவர் எழுதிய கடிதங்களை மாற்றி எழுதச் செய்து அல்லது அவற்றைச் சேதப்படுத்தி துன்பங்கள் பல கொடுத்துக் கொண்டேயிருந்தான்.

இயேசுவுக்காகத் தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்து வந்த வாழ்வு, அவரது பாடுகளைத் தியானித்து வந்ததால் 1918ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி சிலுவையில் மூன்று ஆணிகளில் தொங்கியதாலும் விலாகுத்தி திறக்கப்பட்டதாலும் உண்டான ஐந்து காயங்களையும் தன் உடலில் சுமக்கும் முதல் அருட்பணியாளர் ஆகிறார். இந்த ஐந்து திருக்காயங்களையும் ஐம்பது ஆண்டுகள் தமது உடலிலும் உள்ளத்திலும் சுமந்து மக்களின் சுமையை  விரும்பி சுமக்கும் சுமைதாங்கி ஆனார். தினமும் 15 மணி அல்லது 16 மணி நேரம் மக்களின் பாவங்களை மன்னித்து இறை தந்தையோடு ஒப்புரவு செய்து கொண்டே வந்தார். உயிரளிக்கும் நற்கருணை நாதரைப் பலியிடும் பொருளாகவே மாற்றி அல்லது இயேசுவோடு ஒன்றித்து மணிக்கணக்காக இறைவேண்டலில் நிலைத்திருந்தார். இயேசுவின் பாடுகளைத் தன் உடலில் தாங்கிய அருட்பணியாளர் திருப்பலி நிறைவேற்றுவதில் பங்குபெற அதி காலை 2 மணி முதல் மக்கள் கூட்டம் கூட்டமாக கட்டாந்தரையில் காத்துக் கொண்டே இருப்பார்கள். பிறகு திருப்பலியில் பங்கேற்று அவரின் உருக்கமான பக்தி பரவசம் ஊட்டும் திருப்பலியின் அருளைப் பெற்றுச் செல்வர். ‘மக்களுக்காக செபிக்கும் ஒரு ஏழ்மை கப்புச்சின் குரு’ வின் புகழ் எங்கும் பரவி வரத் தொடங்கியது. புகழ் மணம் வீச வீச பொறாமையும் காய்மாகரமும் வளர்ந்தது. கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பீடத்திற்கு, உரோமை மாநகருக்குச் செய்தி எட்டியது. 

இந்தக் கப்புச்சின் குருவை சோதிக்கவும் ஒரு முன்னெச்சரிக்கையாகவும் மக்கள் முன் திருப்பலி நிறைவேற்றவோ, ஒப்புரவு அருட்சாதனம் வழங்கவோ கூடாது. அடைப்பட்ட வாழ்வுதான் வாழ வேண்டும் என்று ஆணை கொடுக்கப்பட்டது. கீழ்ப்படிதல் என்ற வார்த்தைப்பாட்டை மனமுவந்து ஏற்றுக் கொண்ட நம் தந்தை பியோ. திருத்தந்தையின் கட்டளையை மனம் விரும்பி ஏற்றுக் கொண்டார். மூன்று ஆண்டுகள் ஆசிரமத்திற்குள்ளே அடைப்பட்ட வாழ்வு வாழ்ந்தார். இந்த நேரத்தில் தன் நேரத்தை எல்லாம் இறைவேண்டலிலும், .திரு.விலியம் மற்றும் ஞான நூல்கள் வாசிப்பதிலும் குறிப்பெடுப்பதிலும் செலவு செய்தார். ஆசிரமத்தில் சிறுசிறு பணிகளைச் செய்வதிலும் தம் நேரத்தைப் பயன்படுத்தினார். இந்தக் கீழ்ப்படிதல்தான் இவரை வெற்றிக்குக் கொண்டு செல்லும் ஏணிப்படியாக மாற்றியது. இதனால்தான் ‘மக்கள் புனிதர்’ என்று எந்த மனிதருக்கும் கிடைக்காத புதிய பட்டம் பெற்றுத் தொடர்ந்து தம் பரிந்துரைப் பணியைச் செய்து கொண்டே வருகின்றார். மக்கள் இவர்மேல் வைத்து உள்ள பற்றுப்பாசம் அன்பு இவரின் பரிந்துரையில் உள்ள நம்பிக்கையை என்னவென்று சொல்வது? இத்தகைய பற்றும் பாசமும் அதிகமாகி வருவதைக் காண முடிகிறது. அதற்குக் காரணம் விண்ணக வாழ்விற்குக் கடந்து சென்ற பின்னும் அவரது ஆத்ம தாகம் அதிமாகி ஆன்மா மீட்கப்படுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 

துன்பத்தை ஏற்கும் துணிவு: தந்தை பியோ இளமையில் இருந்த பலவீனமான தோற்றம் மாறிவிட்டது. சிலுவையின் சின்னம் அவரில் நிலைத்துவிட்ட நிலையில், சாத்தானின் சோதனைகளைத் துணிவோடு ஏற்க துணிந்துவிட்டார். ஒரு தடவை, ‘இப்பொழுது இயேசு சாத்ததகளின் கோபத்தினை என்மீது காட்ட  அனுமதித்ததிலிருந்து இருபத்தி இரண்டு நாட்கள் கடந்துபோய் விட்டது. என் தந்தையே, என் உடல் முழுவதும் நம்முடைய எதிரிகளிடமிருந்து பெற்றுக் கொண்ட அடிகளால் சிதைந்து காயப்பட்டிருக்கிறது. பலமுறைகள், அவைகள் என் சட்டையைக் கிழி.த்திருக்கின்றன. அப்போதுதானே என் வெளியே தெரியும் சதையின் மீது அடிக்கொடுக்க முடியும்’ என்று ஒரு அருட்தந்தையிடம் சொல்லியிருக்கிறார். 
வத்திக்கான் நகரத்தில் பேயோட்டக் கூடிய அனுபவம் உள்ள அருட்தந்தை கபிரியேல் அமோர்த் என்பவர் .புனித தந்தை பியோவிடம் நடந்த இன்டர்வியூவின்போது அறிந்த உண்மையை இவ்வாறு எடுத்துரைக்கிறார்.

உருவத் தோற்றங்கள் வெளிப்படும்போது, இயேசுவைப் போல, மரியா மற்றும் புனிதர்களைப் போலத் தோன்றி அலகை ஏமாற்றும் போது கூட அவை உண்மையான தோற்றங்களா அல்லது சாத்தான் உருவாக்கிய ஏமாற்றுத் தோற்றங்களா என்று பொறுமையாக காத்திருந்து அப்போது இருக்கும் மனநிலைகளை ஆராய்ந்து கவனமாய் அறிந்து கொள்வதன் மூலமும், அந்த உருவத்தோற்றங்களைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சிகளைக் கொண்டும் அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார். ஒரு கடிதத்தில், ‘சோதனை வேளையில் இயேசு மரியா என்று காவல் தூதர், புனித யோசேப்பு மற்றும் புனித பிரான்சிஸ் எப்போதும் அவரோடு இருந்ததாலும், எப்போதும் உதவி செய்ததாலும் அவரால் சோதனையின் நடுவிலும் அவர் பொறுமையோடிருக்க முடிந்தது என்று எழுதியிருந்தார்.

எந்தச் சோதனையையும் இறைவன் அனுமதிக்காமல் நம்மிடம் வந்து சேர்வதே இல்லை. நாம் அடையும் இன்னல்கள் மிக எளிதில் தாங்கக் கூடியவை, சிறு காலம்தான் நீடிக்கும் (2 கோரி 4 – 17) என்பதை அவர் உறுதியாய் அறிந்திருந்தார். துன்பங்கள் ஈடு இணையற்ற மாட்சியை விளைவிக்கும் என உறுதியாய் அறிந்திருந்தார். காண்பவற்றை அல்ல காணாதவற்றையே எதிர்நோக்கி வந்தால் துன்பத்தில் இறுதிவரை துணிவோடிருந்தார், ஆம் காண்பவை நிலையற்றவை காணாதவை என்றென்றும் நிலைதிருப்பவை. துன்பங்கள் கடந்துபோகும் என்ற உறுதியிருந்தால் அதைத் தாங்கும் உறுதியும் மனத்துணிவும் இறுதிவரை புனித தந்தை பியோவிடம் இருந்தது. 
தொடரும் .. .. ..

போராசிரியை இம்மாகுலேட் பிலிப்
கணிதவியல் திருச்சிலுவை கல்லூரி, நாகர்கோவில்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

Pio Kural March - April 2012



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனது விசுவாச அனுபவம்

1960ல் எனது திருமணத்திற்குப் பின் இலங்கை வாழ் எனது சித்தி லூர்து செபமாலை முறாயிஸ் அவர்கள் வழியாக பியோ சுவாமி அவர்களின் வரலாறு அறிய வந்தேன். எனக்குத் தலைகுழந்தை பிறந்து இறந்த சோகமான நேரம் அது. 5 காயங்கள் பெற்றவர்கள், அவர் நம் மன்றாட்டை இறைவனிடம் கேட்டுப் பெற்றுத் தருவார், என்ற அசையாத நம்பிக்கையை என் உள்ளத்தில் பதிய வைத்தவர்கள் என் சித்தி, அவரின் ஆன்மா இறைவனில் அமைதியடையட்டும்.

1962ல் என் மாமா திடீரென்று இறந்த பின்பு சுவாமியவர்களுக்கு அவருடைய ஆன்மா சாந்தியடைய பலிபூசை ஒப்புக் கொடுக்குமாறு மடல் ஒன்று எழுதியிருந்தேன். வெகுநாட்களாக பதில் எதுவும் கிட்டவில்லை. ஒரு மாதம் சென்று ஒரு கனவு வந்தது. அதாவது கருப்பு ஆயத்தம் அணிந்து திருப்பலி ஒப்புக் கொடுக்கிறமாதிரி பியோ சுவாமியவர்களைப் பீடத்தில் கண்டேன். ஒருவாரம் சென்று சுவாமியவர்கள் நீங்கள் விரும்பியபடி மாமாவுக்காக திருப்பலி ஒப்புக் கொடுத்தார்கள் என்று அவரது கையொப்பத்துடன் அவரது உதவியாளர் எனக்கு ஒரு மடல் அனுப்பி இருந்தார். எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என மன்றாடினேன்.

1967ல் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்குப் பியோ என்னும் பெயரையே சூட்டினேன். குருவானவர் ஆக வேண்டும் எனவும் மன்றாடினேன்.

ஆனால் அவர் திருமணம் செய்து கொண்டான், பியோவின் ஆசியில் பிள்ளைகளும் பெற்றுக் கொண்டான். பின்னர் அசிசிரியர் சபையில் சேர்ந்து ஆபிஸ் வேலை நேரம் போக மற்ற நாட்களில் செபத்திலும், தவத்திலும் இயேசுவை அறியாத மக்களை அணுகி அவர்களை இறைவனுக்குள் கொண்டு வருவதிலும், இயேசுவில் மிகுந்த ஈடுபாடும் கொண்டு இப்போது வாழ்ந்து வாழ்கின்றான். எல்லா மகிமையும் புகழும் இறைவனுக்கே!

-பிரான்சிஸ்கா ராயன்,SFO, Chennai.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனது விசுவாச அனுபவம்

அன்பும் பாசமும் நிறைந்த அன்பு இறை யேசுவே,

உமக்காக வாழ்ந்து உமக்காகவே உயிர்விட்ட புனிர்தர்களை அதிகமாக நேசிக்கின்றீர். எங்கள் குடும்பத்திற்குப் புனித பியோ செய்த புதுமைகளை இங்கு நன்றியுடன் வரைகின்றேன்.

எங்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் முதல் குழந்தை லீனாபெர்பின், 2வது குழந்தை நிஷாபிரபா, 3வது குழந்தை அபிஷாபெர்பினா. முதல் மகள் லீனாவுக்கு 7.1.1999 இல் திருமணம் நடந்தது. 3.11.2000இல் ஆண் குழந்தை பிறந்தது. இரண்டாவது மகள் நிஷாபிரபாவிற்கு 21.7.2004இல் திருமணம் நடந்தது. 5வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தது. மனவேதனையும் கவலையும் எல்லோருக்கும் இருந்தது. புதுமைகள் நடந்து கொண்டு இருக்கும் தேவாலயங்களிலும் நேர்ச்சைகள் நேர்ந்து கொண்டோம். மகள் நிஷா. கணவர் எட்வர்ட்கிபி இருவரும் 25.1.2009இல் வேளாங்கண்ணி தேவாலயத்திற்குச் சென்று இருந்தார்கள். அன்னை வேளை நகரில் தான் புதுமை நடந்தது. தீடீர் என மகள் நிஷா வின் உடல நிலை சரி இல்லாமல் போனது. மருமகன் கிபி ஆலய வளாகத்திலே கன்னியர்களால் நடத்தப்படும்

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். உடலை பரிசோதனை செய்தசிஸ்டர் எலுஷா காயச்ச்லுககுரிய மருந்தைக் கொடுத்தார்கள். 5ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாத விஷயத்தை சிஸ்டர் இடம் சொன்னார்கள். உடனே தந்தை பியோவின் அற்புதங்களை எடுத்துச் சொன்னது

மட்டுமல்லாமல் ஐந்து திருக்காயங்களைக் கொண்ட போட்டோ அவர் ஜெபங்கள் எல்லாம் கொடுத்துக் கொண்டு தினம் தினம் ஜெபத்தைப் பக்தியுடன் செய்யவும் அடுத்த ஆண்டு வேளை நகருக்கு வரும்போது குழந்தையுடன் ஆலயத்திற்கு வருவீர்கள் என்று நம்பிக்கையுடன் மகளிடம்
கூறினார்கள். அத்துடன் மார்ச் மாதம் நல்ல செய்தி எனக்குத் தெரிவிப்பீர்கள் என்று நம்பிக்கையுடன் சொல்லி அனுப்பினார்கள். இறை யேசுவின் அருளாலும் மாதா பரிந்துரையாலும் புனித பியோவின் ஆசிராலும் பிப்ரவரி மாதமே சிஷ்டர் எலுசா அன்னைக்கு சந்தோஷ செய்தி தெரிவித்தோம். 4.11.2009இல் பியோ தந்தையின் முகசாயலில் அழகான ஆண் குழந்தையைக் கடவுள் கொடுத்தார்.

எங்கள் குடும்பம் அனைத்தும் இறையேசுவிற்கும் அன்னை மரியாளுக்கும் தந்தை பியோவிற்கும் கோடான கோடி நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

C. சூசைநாயகம் டென்சலின்
குளச்சல். கன்னியாகுமரி மாவட்டம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS