தவமே தவம் ! தவத்தினால்ஒருவர் தனது உடல் உள்ளம் ஆன்மா அனைத்தையும் தூய்மை ஆக்குகிறார். மனித உணர்வுகள் பாவத்திற்கும் அடிமையாகின்ற போது உடல், உள்ளம், ஆன்மா அனைத்துமே கறைபடிந்து சிதைய தொடங்குகிறது. கவனம் இல்லை என்றால் அவை அழிந்தே விடும். இ.ந்த அழிவை மனிதனே தேடிக் கொள்கிறான். ஆகவே பாவத்திற்கு கிடைக்கும் கூலி சாவு. (உரோ - 6 : 23). சாவு ஒரு நிரந்தரமான அழிவு. தன்னிலிருந்தும் கடவுளிடமிருந்தும் சக மனிதரிடமிருந்தும் நிரந்தரமான பிரிவு. அந்தோ, பரிதாபம் யாராலும் அவனுக்கு உதவிடவே முடியாது. ஆனால் கடவுள் பல வாய்ப்புகளை வழங்கி திருந்தி வாழ நிலை வாழ்வை உரிமை மாக்கிக் கொள்ள அழைக்கிறார்.

அதற்குத் தகுந்த காலமே தவக்காலம். இதுவே தகுந்த காலம். நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கின்றோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே ‘கடவுளோடு ஒப்புரவாகுங்கள்’ என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். இதுவே மீட்பின் நாள்’ (2 கொரி 5 : 20, 6 : 2) என்று புனித பவுலடியார் அழைக்கிறார். உலகினரின் பாவங்களை பொருட்படுத்தாமல் கடவுள் அவர்களை கிறிஸ்துவின் வழியாக தம்மோடு ஒப்புரவாக்கினார். (2 கொரி 5 : 19) கடவுளோடு ஒப்புரவாக இந்த அருமை யான காலத்தைதத் தவற விடாமல் பயன்படுத்துவதான் விவேகமானது.

இக்காலத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்? இறைவாக்கினார் யோவே 2 : 12-13ல் கூறுகிறார், “இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக் கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு, என்னிடம் திரும்பி வாருங்கள்.” வெளியில் மற்றவர்கள் பார்க்கும்படி காட்டிக் கொள்ளாமல் உள்ளத்திலே உங்களுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்படி தவம் செய்யுங்கள். உடைகளை அல்ல உள்ளதைதைக் கிழித்துக் கொண்டு ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். 

இக்காலத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது கிறிஸ்துவின் உண்மையான சீடராக இருப்பதுதான். ‘என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டு.ம். (மாற்கு 8 34) என்கிறார் இயேசு. பல நேரங்களில் சிலுவைகளைக் கண்டு துன்பங்களைக் கண்டு மிகவும் அஞ்சுகிறோம். புனித பியோ கூறுகிறார், ‘நம்மை அழிக்கும் அளவுக்குத் தொடர்ந்து நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது, மாறாக மறைவாய் இருக்கிற உங்க தந்தைக்கு மட்டுமே தெரியும் (மத். 6-18) பயமுறுத்துகின்ற கொந்தளிக்கும் கடலை கடக்காமல் மீட்பை அடைய முடியாது. கல்வாரிதான் புனிதர்களின் மலை. ஆனால் அங்கிருந்துதான் மற்றொரு மலைக்கு (விண்ணகம்) கடந்து செல்கிறோம்’. அந்த நாளுக்காக நாம் காத்திருக்கிறோம். அதுதான் கடவுள் நீதி
வழங்கும் நாள்.

அவர் மீண்டும் கூறுகிறார்: ‘சிலுவையின் அடியில்தான் ஒருவர் அன்பு செய்ய
கற்றுக் கொள்கிறார்’. ‘எனது அனுபவத்திலிருந்து எனக்குத் தெரிவது என்னவென்றால் நமது மீட்புக்காக விரும்பி சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டு அவரது சிலுவையில் சாய்ந்து கொண்டால் தோல்விகளைத் தவிர்க்கலாம்.’ “ஆண்டவர் நம்மீது சுமைகளைச் சுமத்துகிறார், நம் சுமைகளிலிருந்து நம்மை விடுவிக்கிறார். தன்னால் தேர்ந்து கொள்ளப்பட்டவர் மீது அவர் தம் சிலுவையை சுமத்துகின்றபோது அவரது கடினமான சிலுவையும் எளிதாகின்ற வகையில் அவரது ஆன்மாவை உறுதிப்படுத்துகின்றார். ஆகவே பியோவின் அன்பு பிள்ளைகளே அம்மாவின் அற்புதமான குழந்தைகளே, இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு நிகழ்வுகளைத் தகுந்த முறையில் கொண்டாட சிறப்பான தவமுயற்சிகளை மேற்கொண்டு அதன் பலனைப் பெறுங்கள். இத் தவக் காலத்தில் நம் அன்னை தம் மகன் சிலுவைப்பாடுகள் குறித்து எவ்வளவு வேதனைக்கு உள்ளாகியிருப்பார் எனத் தியானியுங்கள். இயேசுக்கு எவ்வளவு உதவியாக இருந்தார் என்றால் கல்வாரி சிலுவையடி வரைச் சென்றார். எனவே நீங்களும் சிலவைகளைச் சுமக்கும் வீரர்களாகவும் உயிர்ப்பின் சொந்தங்களாகவும் வாழ எனது வாழ்த்துகளும் ஆசீரும்!

- ஓமனிலிருந்து அருட்தந்தை A. செல்வராஜ்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக