ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருப்பதையும் – தெய்வீக மணம் பரப்புவதையும் அற்புத கொடையாக பெற்றவர் புனித தந்தை பியோ அவர்களே. அவருக்கு கிடைத்த இந்த கொடை மிக, மிக அரிய கொடையாகும். இவரின் இந்த அற்புத தோற்றத்தை, இரண்டு இடங்களில் தோன்றுவதை பலர் பல இடங்களில் கண்கூடாக கண்டுள்ளனர். அவரின் ஆன்ம வருகையை ரோஜா மலரின் மணத்தால், புகைஇலையின் மணத்தால் உணர்ந்துள்ளனர். இந்த அரிய தெய்வீக மணம் அவரின் காயங்கிளின் வழி வெளியாகும் இரத்தத்தில் இருந்து வருவதாக ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. இன்னும் ஓர் முக்கிய செய்தி என்ன வெனில் தந்தை அவர்கள் நறுமண வாசனை திரவியங்களை பயன்படுத்துவதே இல்லை. இந்த தெய்வீக மணமாகப்பட்டது, எப்பொழுது ஒரு விசுவாசி தந்தையை நினைத்து மனமுறுகி அவரிடம் மன்றாடும் நேரத்தில் இந்த அறிய நறுமணம் வெளிப்படுமாம். இந்நிகழ்வு இன்றளவும் நடக்கின்ற ஒரு நிகழ்வாக இருக்கின்றது. பலர் இந்நிகழ்வை பற்றி சாட்சி பகர்ந்துள்ளனர்.
ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றும் நிகழ்வுகளில் மிக முக்கியமான நிகழ்வு ஒன்று, இரண்டாம் உலக யுத்தத்தின் போது நிகழ்ந்ததாகும். இரண்டாம் உலக யுத்தத்தின் போது தென் இத்தாலி, ஜெர்மனி இட்லரின் நாசிபடையின் கையில் அடிமைப்பட்டு இருந்தது. அப்போது நேசப்படைகள், அமெரிக்க ஆகாய குண்டு வீச்சு படையினரிடம் சென் கொவாணி ரொட்டெண்டோ நகரை தாக்கும் பொருப்பினை ஒப்டைத்திருந்தார்கள். அமெரிக்க விமான படையினர் ரொட்டெண்டோ நகரின் மேல் விண்வெளியில் தோன்றி குண்டுகளைப் பொழிய இருந்த நேரத்தில், ஆகாயத்தில் அமெரிக்க விமானத்தின் முன் சாக்கலேட் நிற அங்கி அணிந்த துறவி ஒருவர் தோன்றினார். அவரின் தோற்றத்தினால் குண்டுகள் பொழியும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதன் வழி தந்தை பியோ யுத்தத்துக்கு முன் ரொட்டெண்டோ குடிமக்களுக்குச் சொன்ன தீர்க்கதரிசன வார்த்தை நிறைவேறியது. யுத்தத்தின் போது ரொட்டெண்டோ நகரம் யுத்தத்தின் அழிவிலிருந்து காக்கப்படும் என்பதாகும்.
சில காலங்களுக்கு பின் ரொட்டெண்டோவுக்கு பக்கத்தில் சில மைல்களுக்கு அப்பால் ஃபோகியா என்ற இடத்தில் அமெரிக்க படையின் விமானத்தளம் ஒன்று நிறுவப்பட்டது. அதில் பணிபுரிந்த விமானி ஒருவர் ரொட்டெண்டோவில் துறவிகள் இருந்த மடத்திற்கு வந்திருந்தார். அங்கே அவர் கண்ட ஆச்சரியம்! யுத்தத்தின் போது ரொட்டெண்டோவில் இருந்த நாசிப் படைகளை அழித்தொழிக்க விண்ணில் குண்டுகள் தாங்கிய விமானத்தில் வந்த போது விண்ணில் கண்ட அந்த துறவியைக் அங்கே கண்டார். அவர்தான் தந்தை பியோ என அறிந்து அவரிடம் விளக்கம் கேட்டார். அப்போது தந்தை அவர்கள் சொன்ன பதில் இறைவனின் துணையுடன் தான் இவ்வகையான அறியச் செயலை செய்ய முடிந்தது என்றார். இறைவன் அளித்துள்ள அநேக கொடைகளில் ஒன்று, இரண்டு இடங்களில் ஒரே நேரத்தில் தோன்றும் காட்சி. இரண்டு இடங்களில் தோன்றும் இந்த முறையை யாரும் தவறாக புரிந்துக் கொண்டு நீக்கமற எவ்விடத்திலும் இருக்கிறவர் என்று நினைக்கக்கூடாது. நீக்கமற எவ்விடத்திலும் இருப்பவர் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கு மாத்திரமே உரியது.
-Anthony,Singapore.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக