மக்கள் புனிதர் இவர்: புனித தந்தை பியோ ஓர் ஏழைப் பெற்றோருக்கு எட்டாவது தவப் புதல்வராகப். பிறந்த இவர், எட்டாவது நாளிலே தன் பணி வாழ்வின் வாழ்க்கை முறை என்ன வென்று காட்டியுள்ளார். பரிந்துரை செய்வதே தனது பணி, அதுவும் ஆன்ம மீட்பிற்கான பணி ஆர்வமே அவரது வாழ்வை உந்தித்தள்ளியது. எண்பத்தோறு ஆண்டுகள் இதே பணியைச் செய்து வாழ்வை நிறைவு செய்தாலும் அவர் இறப்பிற்குப் பிறது செய்யப் போவதாகச் சொல்லிச் பணிவாழ்வை முழுமையாக நிறைவு செய்துவிட்டுப் போனதன் அளவுகோல் என்னவென்று கொள்ளலாம்? போக்குவரத்து வசதியே இல்லாத நிலையிலும் செப்டம்பர் 23, 1968 ஆம் ஆண்டிலே ஓர் இலட்சத்திற்கும் மேல் அவரது இறுதிப் பயணத்தில் பங்கெடுத்தனர்.. இவரின் மகிமையின் விழாக்களான முத்திப்பேறு பட்டம், புனிதர் பட்டம் அளிக்கும் விழாக்களில் உரோமை நகரிலுள்ள புனித பேதுரு பேராலயதில் மட்டுமல்ல அகில உலகமே மகிழ்ச்சி வெள்ளத்தில் திழைத்தது. மூன்று இலட்சத்துக்கு மேற்பட்டோர் இந்தப் பெரும் விழாக்களில் கலந்து கொண்டார்கள் என்றால் என்ன மக்கள் இவர் மேல் வைத்துள்ள பற்று, பாசம், அன்பு. இவரது பரிந்துரையில் உள்ள மேலான நம்பிக்கை. இவ்வளவு சிறப்பு செய்து வாழ்ந்த வாழ்க்கை முறை தான் என்னவென்று தியானிப்போம்.
விகாரமான தோற்றத்துடனும் தன்னால் ஒன்றுமே செய்ய இயலாமல் இருந்த பத்து வயது சிறுவனின் தாய் ஆலயத்தில் கீழ் நின்று கண்ணீர் விட்டு சென்றுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. “After my death of will do more my real mission will begin after my death“ ‘நான் இறந்த பிறகு இன்னும் அதிகம் செய்வேன். என் உண்மையான பணி என் இறப்பிற்குப் பிறகே தொடங்கும்’ என்று அவரே கூறி இருக்கிறார்.”
அவரது பணி வாழ்வின் தனிச்சிறப்பைப் பறைசாற்றுகிறது இந்த வாக்கியம். அவரது மிகச்சிறந்த அறிவுரை ‘இறைவேண்டல் செய், நம்பு, கவலைப்படாதே! ‘இந்தத் தாரக மந்திரமே அவர் அனுபவித்து வாழ்ந்த வாழ்வின் சாராம்சம் எனலாம். “Pray, Hope and Don’t Worry”‘வேண்டு, நம்பு , கவலைக் கொள்ளாதே’ ஆம் இறைவேண்டல் செய்து நம்பிக்கை கொள்ள ஆரம்பித்து விட்டால் கவலைக்கே இடமிருக்கக்கூடாது. கவலை இருக்குமானால் நம்பிக்கை இல்லை என்றே சொல்ல வேண்டும். நம்பிக்கை என்றாலே ஒளிதான். ஒளியேற்றிய பின் கவலையாகிய இருளுக்கு இடமிருக்க முடியாது தானே ! அழுவதைக் கண்டு அந்தத் திருத்தலப் புனிதரிடம் சிறுவன் பிரான்சிஸ்கோ (புனித பியோ) கெஞ்சி மன்றாடினார். என்ன ஆச்சிரியம் பத்து ஆண்டுகள் ஒன்றுமே செய்ய இயலாமல் தாவர வாழ்வு வாழ்ந்து வந்த சிறுவன் பூரண குணமடைந்து தம் தாயுடன் வீடு சென்றான். அன்றே தொடங்கியது இந்தப் பரிந்துரை பிறரன்புச் செயல்.
இந்ததச் சிறப்பு வாய்ந்த பரிந்துரையாளர் தன் வாழ்வு முழுவதுமே பல விதமான தொல்லைகள் நோய் முதலியவற்றால் வாடி வதைக்கப் பட்டாலும் அவரது பெற்றோர் உடன் பிறந்தோரின் பரிந்துரையால் பதினைந்தாம் ஆண்டு கிராமப் பள்ளி படிப்பை முடித்து கப்புச்சின் குரு மடத்தில் சேர்ந்தார். ஆண்டவரின் அருள் துணையை மண்டியிட்டு வேண்டி மன்றாடியே தனது குருத்துவக் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார். 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி குருவாக திரு நிலைப்படுத்திய அன்றே தன்னையே முழுமையாகக் கையளித்து விட்டார்..
உம்மை பலியாய் எனக்குத் தந்தாய் என்னை முழுவதும் உமக்கே தந்தேன் என்னும் பாணியில் அர்ப்பண வாழ்வு வாழ்ந்தார். அவர் பணி வாழ்வின் ஆயுதங்கள் திருப்பலி ஜெபமாலை, ஒப்புரவு, அருட்சாதனம். இயேசுவின் சிலவைப்பாடுகளை எப்போதும் தியானிப்பார்.
கடவுளின் அன்பைத் துன்பத்திலிருந்து பிரிக்க முடியாது என்றும் கடவுளுக்காக எல்லா துன்பங்களையும் அனுவிப்பதே ஆன்மா கடவுளை அடையும் வழி என்றும் புனித தந்தை பியோ நம்பினார். அவரது ஆன்மா துன்பத்தை அனுபவிக்கும் போது ஆழமான நரகக் குழியில் இருப்பது போல முழுவதும் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதை உணர்ந்தது போல கொடிய வேதனை அடைந்திருக்கிறார். இத்தகைய துயர நேரத்தில் உடலிலும் ஆன்மாவிலும் சாத்தான் அவரைத் தாக்கியதாக அவரைப் பின்பற்றியவர்கள் நம்பினர். ஒளியின் தூதனாக நடித்து அவரைத் துன்பப்படுத்தினான். அவர் எழுதிய கடிதங்களை மாற்றி எழுதச் செய்து அல்லது அவற்றைச் சேதப்படுத்தி துன்பங்கள் பல கொடுத்துக் கொண்டேயிருந்தான்.
இயேசுவுக்காகத் தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்து வந்த வாழ்வு, அவரது பாடுகளைத் தியானித்து வந்ததால் 1918ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி சிலுவையில் மூன்று ஆணிகளில் தொங்கியதாலும் விலாகுத்தி திறக்கப்பட்டதாலும் உண்டான ஐந்து காயங்களையும் தன் உடலில் சுமக்கும் முதல் அருட்பணியாளர் ஆகிறார். இந்த ஐந்து திருக்காயங்களையும் ஐம்பது ஆண்டுகள் தமது உடலிலும் உள்ளத்திலும் சுமந்து மக்களின் சுமையை விரும்பி சுமக்கும் சுமைதாங்கி ஆனார். தினமும் 15 மணி அல்லது 16 மணி நேரம் மக்களின் பாவங்களை மன்னித்து இறை தந்தையோடு ஒப்புரவு செய்து கொண்டே வந்தார். உயிரளிக்கும் நற்கருணை நாதரைப் பலியிடும் பொருளாகவே மாற்றி அல்லது இயேசுவோடு ஒன்றித்து மணிக்கணக்காக இறைவேண்டலில் நிலைத்திருந்தார். இயேசுவின் பாடுகளைத் தன் உடலில் தாங்கிய அருட்பணியாளர் திருப்பலி நிறைவேற்றுவதில் பங்குபெற அதி காலை 2 மணி முதல் மக்கள் கூட்டம் கூட்டமாக கட்டாந்தரையில் காத்துக் கொண்டே இருப்பார்கள். பிறகு திருப்பலியில் பங்கேற்று அவரின் உருக்கமான பக்தி பரவசம் ஊட்டும் திருப்பலியின் அருளைப் பெற்றுச் செல்வர். ‘மக்களுக்காக செபிக்கும் ஒரு ஏழ்மை கப்புச்சின் குரு’ வின் புகழ் எங்கும் பரவி வரத் தொடங்கியது. புகழ் மணம் வீச வீச பொறாமையும் காய்மாகரமும் வளர்ந்தது. கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பீடத்திற்கு, உரோமை மாநகருக்குச் செய்தி எட்டியது.
இந்தக் கப்புச்சின் குருவை சோதிக்கவும் ஒரு முன்னெச்சரிக்கையாகவும் மக்கள் முன் திருப்பலி நிறைவேற்றவோ, ஒப்புரவு அருட்சாதனம் வழங்கவோ கூடாது. அடைப்பட்ட வாழ்வுதான் வாழ வேண்டும் என்று ஆணை கொடுக்கப்பட்டது. கீழ்ப்படிதல் என்ற வார்த்தைப்பாட்டை மனமுவந்து ஏற்றுக் கொண்ட நம் தந்தை பியோ. திருத்தந்தையின் கட்டளையை மனம் விரும்பி ஏற்றுக் கொண்டார். மூன்று ஆண்டுகள் ஆசிரமத்திற்குள்ளே அடைப்பட்ட வாழ்வு வாழ்ந்தார். இந்த நேரத்தில் தன் நேரத்தை எல்லாம் இறைவேண்டலிலும், .திரு.விலியம் மற்றும் ஞான நூல்கள் வாசிப்பதிலும் குறிப்பெடுப்பதிலும் செலவு செய்தார். ஆசிரமத்தில் சிறுசிறு பணிகளைச் செய்வதிலும் தம் நேரத்தைப் பயன்படுத்தினார். இந்தக் கீழ்ப்படிதல்தான் இவரை வெற்றிக்குக் கொண்டு செல்லும் ஏணிப்படியாக மாற்றியது. இதனால்தான் ‘மக்கள் புனிதர்’ என்று எந்த மனிதருக்கும் கிடைக்காத புதிய பட்டம் பெற்றுத் தொடர்ந்து தம் பரிந்துரைப் பணியைச் செய்து கொண்டே வருகின்றார். மக்கள் இவர்மேல் வைத்து உள்ள பற்றுப்பாசம் அன்பு இவரின் பரிந்துரையில் உள்ள நம்பிக்கையை என்னவென்று சொல்வது? இத்தகைய பற்றும் பாசமும் அதிகமாகி வருவதைக் காண முடிகிறது. அதற்குக் காரணம் விண்ணக வாழ்விற்குக் கடந்து சென்ற பின்னும் அவரது ஆத்ம தாகம் அதிமாகி ஆன்மா மீட்கப்படுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
துன்பத்தை ஏற்கும் துணிவு: தந்தை பியோ இளமையில் இருந்த பலவீனமான தோற்றம் மாறிவிட்டது. சிலுவையின் சின்னம் அவரில் நிலைத்துவிட்ட நிலையில், சாத்தானின் சோதனைகளைத் துணிவோடு ஏற்க துணிந்துவிட்டார். ஒரு தடவை, ‘இப்பொழுது இயேசு சாத்ததகளின் கோபத்தினை என்மீது காட்ட அனுமதித்ததிலிருந்து இருபத்தி இரண்டு நாட்கள் கடந்துபோய் விட்டது. என் தந்தையே, என் உடல் முழுவதும் நம்முடைய எதிரிகளிடமிருந்து பெற்றுக் கொண்ட அடிகளால் சிதைந்து காயப்பட்டிருக்கிறது. பலமுறைகள், அவைகள் என் சட்டையைக் கிழி.த்திருக்கின்றன. அப்போதுதானே என் வெளியே தெரியும் சதையின் மீது அடிக்கொடுக்க முடியும்’ என்று ஒரு அருட்தந்தையிடம் சொல்லியிருக்கிறார்.
வத்திக்கான் நகரத்தில் பேயோட்டக் கூடிய அனுபவம் உள்ள அருட்தந்தை கபிரியேல் அமோர்த் என்பவர் .புனித தந்தை பியோவிடம் நடந்த இன்டர்வியூவின்போது அறிந்த உண்மையை இவ்வாறு எடுத்துரைக்கிறார்.
உருவத் தோற்றங்கள் வெளிப்படும்போது, இயேசுவைப் போல, மரியா மற்றும் புனிதர்களைப் போலத் தோன்றி அலகை ஏமாற்றும் போது கூட அவை உண்மையான தோற்றங்களா அல்லது சாத்தான் உருவாக்கிய ஏமாற்றுத் தோற்றங்களா என்று பொறுமையாக காத்திருந்து அப்போது இருக்கும் மனநிலைகளை ஆராய்ந்து கவனமாய் அறிந்து கொள்வதன் மூலமும், அந்த உருவத்தோற்றங்களைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சிகளைக் கொண்டும் அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார். ஒரு கடிதத்தில், ‘சோதனை வேளையில் இயேசு மரியா என்று காவல் தூதர், புனித யோசேப்பு மற்றும் புனித பிரான்சிஸ் எப்போதும் அவரோடு இருந்ததாலும், எப்போதும் உதவி செய்ததாலும் அவரால் சோதனையின் நடுவிலும் அவர் பொறுமையோடிருக்க முடிந்தது என்று எழுதியிருந்தார்.
எந்தச் சோதனையையும் இறைவன் அனுமதிக்காமல் நம்மிடம் வந்து சேர்வதே இல்லை. நாம் அடையும் இன்னல்கள் மிக எளிதில் தாங்கக் கூடியவை, சிறு காலம்தான் நீடிக்கும் (2 கோரி 4 – 17) என்பதை அவர் உறுதியாய் அறிந்திருந்தார். துன்பங்கள் ஈடு இணையற்ற மாட்சியை விளைவிக்கும் என உறுதியாய் அறிந்திருந்தார். காண்பவற்றை அல்ல காணாதவற்றையே எதிர்நோக்கி வந்தால் துன்பத்தில் இறுதிவரை துணிவோடிருந்தார், ஆம் காண்பவை நிலையற்றவை காணாதவை என்றென்றும் நிலைதிருப்பவை. துன்பங்கள் கடந்துபோகும் என்ற உறுதியிருந்தால் அதைத் தாங்கும் உறுதியும் மனத்துணிவும் இறுதிவரை புனித தந்தை பியோவிடம் இருந்தது.
தொடரும் .. .. ..
போராசிரியை இம்மாகுலேட் பிலிப்
கணிதவியல் திருச்சிலுவை கல்லூரி, நாகர்கோவில்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக