இயேசுவின் திரு இருதயம், புனித பியோ எங்கள் குடும்பத்திற்குச் செய்து வரும் நன்மைகளுக்கு நன்றி கூறுகிறோம்.
கடவுளே உமக்கு நன்றி செலுத்துகிறோம். கடவுளே உமது பெயரைப் போற்றுகிறோம். உம் வியத்தகுசெயல்களை எடுத்துரைக்கின்றோம். (திரு. பா. 75- 1) எங்கள் வாழ்வில் கடவுள் செய்த வியத்தகு செயல்களை எழுதுகிறேன்.
என் கணவர் பீட்டருக்குப் பல வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது. அவ்வப்போது சோதனை செய்து மருந்து சாப்பிட்டு வருகிறார். சென்ற ஆண்டு ஒருமுறை மருத்துவரிடம் சென்றபோது பல சோதனைகள் செய்து விட்டு அஞ்சியோகிராம் எடுக்க வேண்டும் என்றார். ஹைதராபாத்தில் பணிபுரிவதால் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்னை சென்றோம். மிகவும் பயந்துதான் சென்றோம். இருப்பினும் இயேசுவின் திரு இருதயம் புனித பியோ இவர்கள் மீது நம்பிக்கை வைத்து மருத்துவமனையை அடைந்தோம்.
அஞ்சியோகிராம் முடிந்து, அடைப்புகள் இருப்பதாகவும், எவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சைசெய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்துஅடைப்புகளை நீக்க வேண்டும் என்றும் மருத்துவர்சொல்லிவிட்டார். காலம் தாழ்த்தவும் முடியாது. அதேநேரம் அறுவை சிகிச்சை எப்படி இருக்குமோ என்ற பயம். இருப்பினும் இயேசுவின் திரு இருதயத்தின் அருளாலும்புனித பியோவின் புதுமையாலும் என் கணவரின்அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து நல்லசுகத்துடன் வெளிவந்தார். மூன்று மாதங்கள் ஓய்வெடுத்தபின் தற்போது ஹைதராபாத்தில் தம் பணியைத்தொடர்கிறார்.
இயேசுவின் திரு இருதயத்துக்கு கோடான கோடிநன்றி ! புனித பியோவுக்கு எங்கள் குடும்பம் முழுதும்நன்றி கூறுகிறது. நன்றி! நன்றி!! நன்றி!!!
அன்புடன்,
கல்பனா பீட்டர், ஹைதராபாத்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக