கன்னியின் காட்சிகள்


கி.பி. 1858 பிப்ரவரி 11 - ஜூலை 16:

பிரான்சிஸ் நாட்டின் லூர்து நகரில் மசபியேல் என்ற குகையில் அன்னை மரியா பதினெட்டு முறை காட்சி அளித்தார்.   பெர்னதெத் சூபிரூஸ் என்ற இளம்பெண் அன்னையின் காட்சியைக் காணும் பேறுபெற்றார்.  மரியன்னை பெர்னதெத்திடம், ‘நானே அமல உற்பவம்.  எனக்காக இங்கு ஓர் ஆலயம் எழுதப்பட வேண்டும்.  பாவிகளின் மனமாற்றத்திற்காக மக்கள் ஜெபமும் தவமும் செய்ய வேண்டும்.  ’ என்று கூறினார்.   அன்னை, நாளுக்கு ஒருமறையுண்மை என்ற வகையில் ஜெபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறையுண்மைகள் அனைத்தையும் 15 காட்சிகளில் பெர்னதெத்தை ஜெபிக்கச் செய்தார்.   அன்னை மரியாவின் காட்சிக்கு அடையாளமாக அற்புத நீரூற்று ஒன்றும் தோன்றியது.  

கி.  பி.   1917 மே 13 - அக்டோபர் 13:

போர்ச்சுகல் நாட்டின் பாத்திமா நகரில் புதர் ஒன்றின்மீது அன்னை மரியா ஆறு முறை காட்சி அளித்தார்.  லூசியா டி சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ என்ற ஆடு மேய்க்கும் மூன்று சிறாருக்கு அன்னையின் காட்சியைப் பார்க்கும் பேறுகிடைத்தது.   அன்னை அவர்களிடம், ‘நான் ஜெபமாலை அன்னை. மக்கள் தங்கள் வாழ்வை திருத்தியமைக்கவேண்டும்.   தங்கள் பாவங்களுக்காக கடவுளிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும்.   எல்லோரும் ஜெபமாலை ஜெபிக்க வேண்டும்.   பாவிகளின் மனமாற்றத்திற்காக ஜெபமும் தவமும் மேற்கொள்ளப்பட வேண்டும்.   உலகம் எனது மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்‘ என்று கூறினார்.  நரகத்தின் காட்சியைச் சிறுவர்களுக்குக் காண்பித்த மரியன்னை, நரகவேதனைக்கு உட்படாதவாறு ஜெபிக்கவும் கற்றுக் கொடுத்தார்.   இரண்டாம் உலகப் போர், ரஷ்யாவின் மனந்திருப்பல், திருச்சபைக்கு வரும் துன்பம் ஆகியவற்றை அன்னை முன்னறிவித்தார்.   அக்டோபர் 13ஆம் தேதி அன்னை மரியாவின் கடைசி காட்சியின்போது அங்குமிங்கும் தள்ளாடிய அதிசயத்தைப் பாத்திமாவில்  கூடியிருந்த சுமார் முப்பதாயிரம் பேர் கண்டு சாட்சிகளாயினர்.  

கி.  பி.   16 ஆம் நூற்றாண்டு 

தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி என்ற சிற்றூரில் அன்னை மரியா காட்சி அளித்தார்.   பால்கொண்டு சென்ற இடைய சிறுவன் ஒருவனுக்குத் தோன்றிய அன்னை,  பால் பொங்கி வழியும்அற்புதத்தை நிகழ்த்தினார்.   மோர் விற்ற கால் ஊனமுற்ற  சிறுவனுக்குத் தோன்றிய மரியன்னை, அவனது கால்களுக்கு குணம் அளித்துஆரோக்கிய அன்னையாகத் தன்னை வெளிப்படுத்தினார்.   அவ்வூரில் வாழ்ந்த கிறிஸ்தவ பெரியவர் ஒருவருக்குத் தோன்றிய அன்னை மரியா, தனக்கு ஓர்ஆலயம் எழுப்புமாறு கேட்டுக் கொண்டார்.   அன்னைக்கு ஒரு சிறிய ஆலயம்முதலில் கட்டப்பட்டது.   சிறிது காலத்துக்கு பின் மரியன்னையின் உதவியால் கடல் புயலில் இருந்து தப்பி வேளாங்கண்ணியை அடைந்த போர்ச்சுகீசியர்கள் அந்த ஆலயத்தை பெரிய அளவில் கட்டி எழுப்பினார்.  

தூணில் கன்னி மரியாள் 

நமதாண்டவர் இயேசு கிறிஸ்து  இறந்து, உயிர்த்து விண்ணேற்றம் அடைந்த பின் அப்போஸ்தலர்கள் நற்செய்தி பரப்ப உலகின் பல திசைகளுக்குச்சென்றனர்.   அப்படி சென்றவர்களில் யாகப்பர் (துயஅநள) என்றவர் ஸ்பெயின் தேசத்திற்கு சென்றார்.   அவரது அப்போஸ்தல பணி சிறக்காமல் தோல்வியைத் தழுவியதால் மனம் உடைந்தவராய் ஜெபத்தில் ஆழ்ந்திருந்தார்.  அந்நேரத்தில் அன்னை மரியாள் முதல் முறையாக அவர்முன் தோன்றினார்.   யாகப்பரின் கையில் தன் உருவம் கொண்ட ஒரு மரச் சுரூபத்தைக் கொடுத்தார்.   அதோடு ஜெஸ்பர் மரத்தாலான தூண் ஒன்றையும் கொடுத்து தமக்சுசர அகோசஸா என்னுமிடத்தில் ஓர் ஆலயம் எழுப்பச்சொன்னார்.   ‘இந்த இடம் என் இல்லமாகட்டும்.   இந்த சொரூபம்,  இந்த ஜெஸ்பர் மரத்தூணும் நீ கட்டும் இந்த ஆலயத்திற்குப் பீடமாகவும், பெயராகவும் அமையட்டும்.  ’ என்றார் அன்னை.   இன்றளவும் இந்த மரத்தாள் ஆன மாதாவின் சொரூபமும், ஜெஸ்பர் தூணும் இவ்வாலயத்தில் இருக்கின்றன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக