இயேசுக் கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தின் பக்தி திருச்சபையில் புதிதானதல்ல. பழங்காலத் தொட்டே நிலவி வருகிறது. இயேசுக்கிறிஸ்து குருத்துவத்தையும், நற்கருணையும் ஏற்படுத்திய புனித வியாழனன்றே ஏற்படுத்தப்பட்டது. இயேசு பாடுபடுவதற்கு முந்திய இரவு அப்போஸ்தலர்களிடம், ‘இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள். உணவு அருந்திய பின்பு, கிண்ணத்தை எடுத்து ‘இந்தக் கிண்ணம் உங்களுக்காக சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை’ என்று கூறிய வார்த்தைகள் உறுதிப்படுத்துகின்றன. ‘கிறிஸ்துவின் இரத்தம் மீட்பின் ஊற்று’ எனத் திருத்தந்தை ஜான் பால் 2 கூறியுள்ளார்.
‘இரத்தமும், தண்ணீரும் பீறிட்டுவரும், ஓ! இயேசுவின் திரு இருதயமே’ எங்கள் மேல் இரக்கமாயிரும். நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்‘ எனச் செபிக்கிறோம். நம்முடைய பாவங்களுக்கும், உலகிலுள்ள அனைவரின் பாவங்களுக்கும் பரிகாரமாக இயேசுவின் இரத்தத்தைக் காணிக்கையாக்குகிறோம்.
1995ஆம் வருடத்தில், இறை இரக்கத்தின் நேரமாகிய மதியம் 3மணியளவில் நைஜீரியாவில் எனுகு மாவட்டத்தில் ஒலோ என்ற ஊரிலுள்ளபர்ணபாஸ் நோயே என்பவருக்குக் காட்சியில் இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தை ஆராதித்து ஆறுதலளிக்கக் கேட்டுக் கொண்டார். இரண்டு வருடங்களுக்குப் பின், திரு இரத்தத்தின் ஜெபமாலையையும், இன்னும் பலபயனுள்ள ஜெபங்களையும் நேரடியாகக் கொடுத்துள்ளார்.
இயேசுவின் உயிருள்ள உடலிலிருந்து இரத்தத்தைப் பிரிக்க முடியாது. இப்பக்தி மிகச் சிறப்பானது. இப்பக்தி தீய ஆவிகளையும், சாத்தானையும்அழிக்கும் கருவியாகும். இப்பக்தியை அனுசரிப்பவர்களைத் திடீர் மரணம், தீய ஆவி இன்னும் பலவிதமான நோய்களிலிருந்து காப்பாற்றி, இறைவனோடு ஒன்றித்து வாழ்ந்து பேரின் பத்திற்கு அழைத்துச் செல்வதாக உறுதி கூறுகிறார்.
‘ஜெத்சமனியில் உலகிலுள்ள எல்லா மக்களுக்காகவும் நான் காத்திருக்கிறேன். பயங்கரமும், அச்சமும் நிறைந்த நேரம் அது’ என்று இயேசு பர்ணபாஸ் என்பவரிடம் கூறினார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 11மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 3 மணி வரை ஜெத்சமனி நேரமாகும்.
’இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தின் ஜெபமாலையைப்பக்தியுடன் ஜெபிப்பவர்களுக்கு விசேஷ அருள் வரங்கள் கிடைக்கும் என்பது நிச்சயம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக