இயேசுவின் ஐந்து காயம் பெற்ற நறுமணத்தவர் தந்தை பியோ


கடிதத்திலிருந்து நாம் அறியும் சில உண்மைகள்

குருத்துவ வாழ்வின் ஆரம்ப நிலையில் கூட, பிந்தைய நாட்களில்அவரை மிகவும் சிறப்புப் பெற்று விளங்கியச் செய்தியாக வெளிப்படையானகாயங்களைப் பற்றிய சில அடையாளங்களை அவர் அனுபவித்து வந்ததாக தந்தை பியோவின் கடிதங்களிலிருந்து தெரியவருகிறது.  

1911ஆம் ஆண்டு தந்தை பியோ தனது ஆன்மிக ஆலோசகர், லாமிஸில் (Lamis))  உள்ள சான் மார்கோவைச் (San Marco)  சார்ந்த அருட்தந்தை பெனடிற்றோ (Benedetto))  என்பவருக்கு எழுதியகடிதத்திலே ஒரு வருடமாக அவர் அனுபவித்துக் கொண்டிருந்த ஒன்றைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.  ‘நேற்றைய இரவிலே நான் விளக்கிச் சொல்ல முடியாததும் புரிந்துகொள்ள முடியாததுமான ஏதோ ஒன்று நிகழ்ந்நது.   என் உள்ளங்கைகளின் நடுவிலே ஒரு பென்னி ( நீல)  நாணயம் அளவிலே சிறப்புநிற அடையாளம் தோன்றியது.   அதைத் தொடர்ந்து அந்தச்சிவப்பு அடையாளத்தின் நடுவிலே அந்த வலி மிகவும்குறிப்பிட்டுச் சொல்லும் படியாக இருந்தது, எவ்வளவு என்றால் அந்த வலியை இன்றும் உணர முடிகிறது.   மேலும் பாதத்தில்அடியில் இன்னும் கொஞ்சம் வலியை உணர முடிகின்றது.  

அவரது நெருங்கிய நண்பர் அருட்தந்தை அகுஸ்தினோ 1915ஆம் ஆண்டு எழுதியதில், அவரிடம் சில குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.   அதிலே 
  1. எப்போது காட்சிகள் பற்றிய அனுபவம் ஏற்பட்டது.   
  2. ஐந்து காய வரம் அருளப்பட்டிருக்கிறதா?   
  3. இயேசுவின் திருப்பாடுகளின் வேதனையை அவரால் உணர முடிந்ததா?   அதாவது முள்மூடி சூடப்பட்டது, கசையால் அடிபட்டது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டனவா?   


இந்தக் கேள்விகளுக்குப் பதில் எழுதிய தந்தை பியோ இவ்வாறு எழுதியிருக்கிறார்.   1903 முதல் 1904 ஆண்டு வரையிலும் நவ சந்நியாசமடத்தில் இருந்த காலத்திலிருந்தே காட்சி வரம் அருளப்பட்டுள்ளது.  காயங்கள் பற்றி எழுதும் போது, ஏற்கனவே ஐந்து திருக்காய வரம் கொடுக்கப்பட்டுவிட்டாலும்,  அது குறித்து அவர் கலங்கியதால் அந்தவரத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு ஆண்டவரிடம் கேட்டுக்கொண்டார்.   அதனால் ஏற்பட்ட வலி  நீங்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளவில்லை.   அந்த வெளிப்படையான காயங்களை மட்டுமே அகற்றவேண்டினார்.   அதனை விவரிக்க இயலாத பெரும்பாலும் தாங்கவே முடியாத அவமானமாகவே அவர் அவற்றைக் கருதினார்.   அந்த வெளிப்படையான காயங்கள் உடனே மறைந்துவிட்டாலும் 1918ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திரும்பவும் தோன்றி விட்டது.   மேலும் வலி தொடர்ந்து இருந்தது என்றும்மிகவும் குறிப்பிடத்தக்க நாட்களிலே,  சில சூழ்நிலைகளிலே வலி மிகவும்அதிகமாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார்.   அவரது முள்முடியின் வேதனையையும் கசையால் அடிபட்ட வேதனையையும்,  அவர் அனுபவித்துக்கொண்டுதான் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.   இந்த அனுபவம் எவ்வளவு இடைவெளிகளுக்கு ஒருமுறை இருந்தது என்று மிகச்சரியாகச் சொல்லமுடியாவிட்டாலும் பல ஆண்டுகளாக வாரத்திற்கு ஒருமுறை அந்த வேதனையைஅனுபவித்து வந்ததாகச் சொல்லியிருந்தார்.  
அந்தக் காயங்கள் காரணமாக உடல்நலம் குன்றியதால் அவரதுவீட்டில் இருக்க அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.   அவரது மடத்திலிருந்து வெளியே தங்கியிருந்தாலும் துறவியின் வாழ்வைத் தொடர விரும்பியதால்தினசரி திருப்பலி நிறைவேற்றி பள்ளியில் பயிற்றுவித்து வந்தார்.  

ஜூலை 1918இல் முதல் உலகமகாயுத்தம் நடந்து கொண்டிருந்ததால் திருத்தந்தை 15ஆம் பெனடிக், ‘ஐரோப்பியாவின் தற்கொலை’ என்று அவர் அழைத்த அந்த உலகப்போர் முடிவுக்கு வர வேண்டும் என்று எல்லா கிறிஸ்தவர்களும் இறைவனிடம் வேண்டுதல் செய்ய வேண்டுமென்று அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.   ஜூலை 27ஆம் தேதி தந்தை பியோ இந்த உலகப்போர் முடிவுக்கு வருவதற்காக தன்னையே காணிக்கையாக ஒப்படைத்தார்.   நாட்கள் நகர்ந்தன.   ஆகஸ்ட் 5 லிருந்து 7ஆம் தேதிக்குள் ஒருநாள் இயேசு தந்தை பியோவிற்குக் காட்சியில் தோன்றிஅவரது விலாப்பகுதியைக் குத்தி திறந்தது போன்று காட்சிக் கிடைத்தது.  அதன் விளைவாக,  தந்தை பியோவிற்கு விலாப்பகுதியில் காயம் ஒன்றுஏற்பட்டது.   ஐந்தாவது காயங்களின் தோற்றம் அல்லது இதயம் குத்தித்திறக்கப்பட்டது இறையன்பின் சங்கமத்தைக் குறித்துக் காட்டுகிறது.  இதயம் குத்தித் திறக்கப்பட்டபோது வடிந்த இரத்தம் தாங்கிய துணியானது, சிக்காகோவிலுள்ள ஜான்கேன்டியுங் ஆலயத்தில் பொது மக்களின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் திறந்து வைக்கப் பட்டிருக்கிறது. 

காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏழு வாரங்கள் ஆன்மிகஆறுதலின்றி தவித்தார் புனித தந்தை பியோ.   அவருடன் இருந்த கப்புச்சின்சபையைச் சேர்ந்த ஓர் அருட் சகோதரர், இந்த நாட்களில் அவரது தோற்றமேஇறந்து போனவரது தோற்றம் போன்று இருந்தது.   அவர் தொடர்ந்து கண்ணீர்சிந்தி கொண்டும் ஏக்கபெருமூச்சு விட்டுக் கொண்டும் கடவுள் என்னைக்கைவிட்டு விட்டார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.  

ஆகஸ்ட் 21, 1918ஆம் ஆண்டில் அருட்தந்தை பெனடிற்றோவிற்கு7 நல்லதைப் பற்றிக் கொள்ளுங்கள் ( 1 தெச 5- 21) புனித தந்தை பியோ எழுதிய கடிதத்திலே ஐந்துகாலம் தோன்றிய காலங்களில்அனுபவித்த வேதனைகளைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.   ‘ ஆகஸ்ட் 5 ஆம்தேதி ஒரு சிறுவனுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கி கொண்டிருந்த போது, என் மனக்கண்முன்னால் தோன்றிய உருவத்தைப் பார்த்து திடீரென்றுஅதிர்ச்சிக்குள்ளானேன்.   நெருப்பு கக்கிய நீண்ட கூர்மையான இரும்புக்கத்தியைப் போன்ற கருவி ஒன்றை கையில் வைத்திருந்தார்.   அதைப் பார்த்தமாத்திரத்தில் அவரது பலத்தையெல்லாம் சேர்த்து அந்தக் கருவியை என்ஆன்மாவில் குத்தியதை நான் உணர்ந்தேன்.   நான் வேதனையில் அலறினேன்.  இறப்பதைப்போல உணர்ந்தேன்.   தொடர்ந்து ஒப்புரவு அருட்சாதனம் வழங்கஆற்றல் இல்லாததுபோல பலவீனமாகத் தோன்றிதால் அந்தச் சிறுவனைபோகச் சொல்லிவிட்டேன்.   அப்போதிலிருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை வேதனை தொடர்ந்து நீடித்தது.   இந்தக் கொடூரமான வேதனை காலத்திலேஅனுபவித்த துன்பத்தை வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியாது.  உள் உறுப்புகள் எல்லாம் கிழிக்கப்பட்டது.   அந்தக் கருவிக்கு ஒன்றுமேதப்பவில்லை.   அந்த நாளிலிருந்து  மரணவேதனை அனுபவித்தேன்.   ஆன்மாஎப்போதும் ஆழமாகக் குத்தித் திறக்கப்பட்டிருப்பது போல உணர்வும்அதனால் ஏற்பட்ட தொடர் வேதனையும் இருந்து  கொண்டே இருந்தது’என்று எழுதி இருக்கிறார்.  
செப்டம்பர் 20, 1918 இல் ஐந்து காயங்களும் மறந்து விட்டதாகவும் தந்தை பியோ ஆழ்ந்த அமைதியில் இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.  இரக்கத்தின் இராக்கினி ஆலயத்தில் பாடகர் குழுவினர் இருக்கும் பகுதியில் தந்தை பியோ ஆழ்ந்த ஜெபத்தில் இருந்த போது காயப்பட்ட கிறிஸ்துவின்தோற்றத்தில் மீண்டும் தோன்றி ஐந்து காயத்தைக் கொடுத்திருக்கிறார்.   தந்தை பியோவிற்கு முன்பு ஏற்பட்டது போன்ற அனுபவம் மீண்டும் தோன்றியிருக்கிறது.   அந்தக் காட்சி முடிந்தவுடன் கிறிஸ்துவின் ஐந்து, வெளிப்படையான காயங்கள் தந்தை பியோ உடலில் தோன்றின.   இந்தமுறை தோன்றிய காயங்கள் ஐம்பது வருடங்கள் தொடர்ந்து அவரிலேயே நிலைத்திருந்ததன.   லாமிஸ் நாட்டிலுள்ளசான்மார்க்கோ என்ற ஊரிலிருந்து அக்டோபர் 2 அன்று தந்தை பியோ, அவரது சுப்பீரியரும் ஆன்மிக ஆலோசகருமான தந்தை பெனடிற்றோவிற்கு எழுதிய கடிதத்திலேஇவ்வாறு விவரமாக எழுதியுள்ளார்.  

‘சென்ற மாதம் 20ஆம் தேதி காலையில்பாடகர் குழு இருக்கும் இடத்திலே திருப்பலிக்குப் பிறகுஅமர்ந்திருந்தபோது ஆழ்ந்த உறக்கத்தை ஒத்த மயக்கநிலை ஏற்பட்டது.  ஆகஸ்ட் 5ம் தேதி பார்த்ததைப் போன்ற அதிசய மனிதர் ஒருவரைப் பார்த்தேன்.  8 தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம்.   ( 1 தெச.   5 -19) இந்த முறை பார்த்த நபரில் ஒரு வித்தியாசம் என்னவென்றால் அவரது கைகளிலும் கால்களிலும் விலா பகுதியிலும் இரத்தம் சிந்திக் கொண்டிருந்தது.  அதிர்ச்சிக்குள்ளான நான்,  அந்த நிமிடத்தில் இருந்த உணர்வு நிலை விவரிக்கஇயலாத நிலைக்கு ஆளானேன்.   விலாவை விட்டு வெடித்து வெளியேறி விடும்போன்ற இதயத்தை ஆண்டவர் இடைப்பட்டுப் பலப்படுத்தியிருக்காவிட்டால்நான் இறந்து போயிருப்பேன் என்று நினைக்கிறேன்.   காட்சி மறைந்தது.   என்கைகளிலும் கால்களிலும் விலாவிலும் இரத்தம் வழிவதை நான் உணர்ந்தேன்.  அன்று அனுபவித்த வேதனையும் இன்னும் அனுதினம் தொடரும் வேதனையையும் கற்பனை செய்து பாருங்கள்.   இதயத்தின் காயத்தில் வியாழன் முதல்சனி வரை தொடர்ந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.  

அன்புத் தந்தையே காயங்களில் வேதனையாலும் ஆன்மாவில் ஆழ்ந்துஉணர்ந்த உணர்வினால் இறந்து கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.   இந்தநிலையை மாற்றும் எனும் வேண்டுதலை ஆண்டவர் கேட்டிருக்காவிட்டால் இரத்தம் சிந்தியே இறந்து போயிருப்பேன்.  

மிகவும் நல்ல இயேசு இந்த அருளினை எனக்குக் கொடுத்திருக்கிறாரா?  வெளி அடையாளங்களைக் கொண்டிருப்பதனால் உண்டான அவமானத்திலிருந்து விடுவிப்பாரா?   எனக்கு ஏற்படும் அவமானத்தையும் தாங்க முடியாத நிந்தையையும் ஏற்படுத்தும் வெளி அடையாளம் நீக்கும் வரையில்குரலை நிறுத்தாமல் இறைவனிடம் இரக்கத்திற்காக மன்றாடுவேன்.  காயத்தையோ வலியையோ அல்லது வெளித் தோற்றத்தையோ மாற்றும்படிவேண்டுவேன்‘என்று எழுதியுள்ளார்.   மேலும், ‘ நான் சிலுவையில் இறப்பதுபோன்று உணரும் அளவு வேதனை அதிகமாக இருந்தது’ என்று மேற்கோள்காட்டியுள்ளார்.  

தந்தை பியோ 1919 தொடக்கத்தில் அமைதியாக வேதனை அனுபவிக்க விரும்பிருந்தாலும் அவருக்கு ஐந்து காயம் இருந்தது எல்லாப் பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது.   பல மருந்துவர்களும் மக்கள் பலரும் வந்து தந்தை பியோவின் காயத்தைப் பரிசோதிக்கவும் பார்க்கவும் செய்தனர்.  முதல் உலகப் போருக்குப் பிறகு தங்கள் வாழ்வைக் கட்டியெழுப்ப விரும்பிய மக்களுக்கு ‘நம்பிக்கை அடையாளமாக’ தந்தை பியோ விளங்கினார்.  அப்போது முதல் குணமளிக்கும் வரம்,  ஒரே நேரத்தில் இரண்டு நேரத்தில் தோற்றம் அளித்தல், ஆகாயத்தில் மிதத்தல், இறைவாக்கு வரம், நல்ல செயல் செய்யும் ஆற்றல்,  நீண்ட இடைவெளியில் உணவும் உறக்கமும் இன்றி இருத்தல் மற்றவர் மனத்தில் இருப்பதை அறியும் ஆற்றல் (20 நாட்கள்) , பலமொழி பேசும் வரம், மனமாற்றம் செய்ய வைக்கும் கொடை, காயங்களில் வரும் நறுமணம் போன்ற பல அதிசயங்கள் வெளிப்பட ஆரம்பித்தன. 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக