கடவுளின் அன்பு பிள்ளைகளே,‘ஆசிர்பெற்ற கன்னி மரியாவை அன்பு செய்யுங்கள். மற்றவர்களும் அவளை அன்பு செய்ய உதவுங்கள். ’தந்தை புனித பியோ எல்லோரிடமும் சொல்லிய இந்த வார்த்தைகள் அவர் பரலோக அம்மாவிடம் கொண்டிருந்த ஆழ்ந்த பக்திக்கு என்றும்சாட்சியாக விளங்குகிறது. ஏழை மனிதன் அசிசி புனித பிரான்சிஸ் பெயர் தாங்கி, அவரை போலவே அன்னையின் மேல் கொண்ட பக்திக்கு நிகரான தந்தை பியோ, பியட்ரல்சினாவில் சம்மனசுகளின் ராக்கினி புனித மரியாளின் தேவாலயத்தில் ஞானஸ்தானம் பெற்றதிலிருந்து எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவின் பக்தி, அவரது மிக மென்மையான இதயத்தில் பயிராக வளரத்தொடங்கியது. மேலும் அவர் மரணம் வரை எஞ்சியிருந்த காலமெல்லாம் சான் ஜியோவானிரொத்தோந்தோ தூய அருள் அன்னை ஆலயத்திற்கு அருகில் வாழ்ந்து, இன்று வரை அவரது அழியாத உடல் அங்கேயே ஓய்வு கொள்ள கடவுள் கருணை புரிந்ததார். அவரது வாழ்க்கை மற்றும் அவரது இறைப்பணி அனைத்தும் அன்பு அன்னையின் பண்பான பார்வையின் கீழும் அவளின்ஆற்றல் மிகுந்த பரிந்துரையின் கீழும் இனிதாகவும் நேர்த்தியாகவும்நடந்திருக்கிறது. உடல் நலமற்றோரின் சுகாதார இல்லமான Casa Sollievo della sofferenza கூட, அன்னை மரியாவின் வேலையாகவே அவர்கருதினார். ஆகவே, அன்பு பிள்ளைகளே நீங்களும் இன்று தந்தை பியோவின் எடுத்துக்காட்டை நினைவில் கொண்டு கடவுளின் அன்னையினுடையதாய்மையின் பாதுகாப்புக்குள் உங்களையே ஒப்படையுங்கள். நானும் உங்கள்ஒவ்வொருவரையும் அன்னையின் அரவனைப்புக்குள் ஒப்படைக்கிறேன். சிறப்பாக நான் புனித பியோ ஜெபமாலை இயக்கத்தையும், பியோ குரல் இதழை நடத்துகிற ஒவ்வொருவரையும், உங்களில் நோய் வாய்ப்பட்டுள்ளஒவ்வொருவரையும், நீங்கள் யாருக்கெல்லாம் ஜெபிக்க கடமைப்பட்டுள்ளீர்களோ அவர்களையும் நம் அன்பு அம்மாவின் ஆற்றல் மிகுந்தபாதுகாப்புக்குள் இன்று ஒப்படைக்கிறேன்.
அன்பான பிள்ளைகளே, ஆகஸ்ட் 10, 1910 மிகவும் ஆவலோடுஎதிர்பார்க்கப்பட்ட அந்த நாள் வந்தது அன்று பியோ தனது இருபத்திமூன்றாம் வயதில் பெனெவெண்டோ பேராலயத்தில் பேராயர் பவுலோசின்னோசி அவர்களால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். நான்கு நாட்களுக்குப் பின்னர், அவர் தனது ஊர் பங்கு ஆலயமான சம்மனசுகளின் எனது அருமையானவர்களே ராக்கினி புனித மரியாளின் தேவாலயத்தில் முதல் திருப்பலியை ஒப்புகொடுத்து இறைவனை மகிமைபடுத்தினார். அந்த நாளில் நீங்களும்உங்களையும் உங்களோடு தொடர்புள்ள குருக்களையும் ஒப்பிக்கொடுத்து ஜெபியுங்கள். ஜூலை மாதம் 16 ஆம் நாள் புனித கார்மே அன்னை திருநாள். ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் புனித கன்னி மரியா ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பெருவிழா. இந்த நாட்களில் பாவ மன்னிப்பு பெற்று உங்களையும் இயக்கத்தில் உள்ள ஒவ்வொருவரையும் ஒப்புக்கொடுத்து ஜெபியுங்கள். ஜெபமே நமது வெற்றி. ஜெபமாலையே நமக்கு வெற்றி மாலை. எப்போதும் கடவுளின் பின் நிலைத்திருக்க உங்களுக்கு எனதுஆசீர்.
- அருட்திரு அ. செல்வராஜ் க. ச. ஓமன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக