கன்னியின் காட்சிகள்


கி.பி. 1858 பிப்ரவரி 11 - ஜூலை 16:

பிரான்சிஸ் நாட்டின் லூர்து நகரில் மசபியேல் என்ற குகையில் அன்னை மரியா பதினெட்டு முறை காட்சி அளித்தார்.   பெர்னதெத் சூபிரூஸ் என்ற இளம்பெண் அன்னையின் காட்சியைக் காணும் பேறுபெற்றார்.  மரியன்னை பெர்னதெத்திடம், ‘நானே அமல உற்பவம்.  எனக்காக இங்கு ஓர் ஆலயம் எழுதப்பட வேண்டும்.  பாவிகளின் மனமாற்றத்திற்காக மக்கள் ஜெபமும் தவமும் செய்ய வேண்டும்.  ’ என்று கூறினார்.   அன்னை, நாளுக்கு ஒருமறையுண்மை என்ற வகையில் ஜெபமாலையின் மகிழ்ச்சி, துயரம், மகிமை மறையுண்மைகள் அனைத்தையும் 15 காட்சிகளில் பெர்னதெத்தை ஜெபிக்கச் செய்தார்.   அன்னை மரியாவின் காட்சிக்கு அடையாளமாக அற்புத நீரூற்று ஒன்றும் தோன்றியது.  

கி.  பி.   1917 மே 13 - அக்டோபர் 13:

போர்ச்சுகல் நாட்டின் பாத்திமா நகரில் புதர் ஒன்றின்மீது அன்னை மரியா ஆறு முறை காட்சி அளித்தார்.  லூசியா டி சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ என்ற ஆடு மேய்க்கும் மூன்று சிறாருக்கு அன்னையின் காட்சியைப் பார்க்கும் பேறுகிடைத்தது.   அன்னை அவர்களிடம், ‘நான் ஜெபமாலை அன்னை. மக்கள் தங்கள் வாழ்வை திருத்தியமைக்கவேண்டும்.   தங்கள் பாவங்களுக்காக கடவுளிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும்.   எல்லோரும் ஜெபமாலை ஜெபிக்க வேண்டும்.   பாவிகளின் மனமாற்றத்திற்காக ஜெபமும் தவமும் மேற்கொள்ளப்பட வேண்டும்.   உலகம் எனது மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்‘ என்று கூறினார்.  நரகத்தின் காட்சியைச் சிறுவர்களுக்குக் காண்பித்த மரியன்னை, நரகவேதனைக்கு உட்படாதவாறு ஜெபிக்கவும் கற்றுக் கொடுத்தார்.   இரண்டாம் உலகப் போர், ரஷ்யாவின் மனந்திருப்பல், திருச்சபைக்கு வரும் துன்பம் ஆகியவற்றை அன்னை முன்னறிவித்தார்.   அக்டோபர் 13ஆம் தேதி அன்னை மரியாவின் கடைசி காட்சியின்போது அங்குமிங்கும் தள்ளாடிய அதிசயத்தைப் பாத்திமாவில்  கூடியிருந்த சுமார் முப்பதாயிரம் பேர் கண்டு சாட்சிகளாயினர்.  

கி.  பி.   16 ஆம் நூற்றாண்டு 

தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி என்ற சிற்றூரில் அன்னை மரியா காட்சி அளித்தார்.   பால்கொண்டு சென்ற இடைய சிறுவன் ஒருவனுக்குத் தோன்றிய அன்னை,  பால் பொங்கி வழியும்அற்புதத்தை நிகழ்த்தினார்.   மோர் விற்ற கால் ஊனமுற்ற  சிறுவனுக்குத் தோன்றிய மரியன்னை, அவனது கால்களுக்கு குணம் அளித்துஆரோக்கிய அன்னையாகத் தன்னை வெளிப்படுத்தினார்.   அவ்வூரில் வாழ்ந்த கிறிஸ்தவ பெரியவர் ஒருவருக்குத் தோன்றிய அன்னை மரியா, தனக்கு ஓர்ஆலயம் எழுப்புமாறு கேட்டுக் கொண்டார்.   அன்னைக்கு ஒரு சிறிய ஆலயம்முதலில் கட்டப்பட்டது.   சிறிது காலத்துக்கு பின் மரியன்னையின் உதவியால் கடல் புயலில் இருந்து தப்பி வேளாங்கண்ணியை அடைந்த போர்ச்சுகீசியர்கள் அந்த ஆலயத்தை பெரிய அளவில் கட்டி எழுப்பினார்.  

தூணில் கன்னி மரியாள் 

நமதாண்டவர் இயேசு கிறிஸ்து  இறந்து, உயிர்த்து விண்ணேற்றம் அடைந்த பின் அப்போஸ்தலர்கள் நற்செய்தி பரப்ப உலகின் பல திசைகளுக்குச்சென்றனர்.   அப்படி சென்றவர்களில் யாகப்பர் (துயஅநள) என்றவர் ஸ்பெயின் தேசத்திற்கு சென்றார்.   அவரது அப்போஸ்தல பணி சிறக்காமல் தோல்வியைத் தழுவியதால் மனம் உடைந்தவராய் ஜெபத்தில் ஆழ்ந்திருந்தார்.  அந்நேரத்தில் அன்னை மரியாள் முதல் முறையாக அவர்முன் தோன்றினார்.   யாகப்பரின் கையில் தன் உருவம் கொண்ட ஒரு மரச் சுரூபத்தைக் கொடுத்தார்.   அதோடு ஜெஸ்பர் மரத்தாலான தூண் ஒன்றையும் கொடுத்து தமக்சுசர அகோசஸா என்னுமிடத்தில் ஓர் ஆலயம் எழுப்பச்சொன்னார்.   ‘இந்த இடம் என் இல்லமாகட்டும்.   இந்த சொரூபம்,  இந்த ஜெஸ்பர் மரத்தூணும் நீ கட்டும் இந்த ஆலயத்திற்குப் பீடமாகவும், பெயராகவும் அமையட்டும்.  ’ என்றார் அன்னை.   இன்றளவும் இந்த மரத்தாள் ஆன மாதாவின் சொரூபமும், ஜெஸ்பர் தூணும் இவ்வாலயத்தில் இருக்கின்றன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

திரு இரத்தத்தின் ஜெபமாலை


நெற்றியில் சிலுவை அடையாளம் வரையவும்.

இதோ ! ஆண்டவரின் சிலுவை.   சத்துருகள் அகன்றுப் போகட்டும்.  இயேசுவின் நாமத்தினால் தீயசக்திகளின் ஆதிக்கம் எங்கள் ஒவ்வொருவரைவிட்டும், எங்கள் குடும்பங்களை விட்டும், இவ்வுலகிலுள்ள எல்லா நாடுகளையும், மனுமக்கள் அனைவரை விட்டும் அகன்று போகட்டும்.   யூதாகுலத்தின் சிங்கமும், தாவீதின் குலக் கொழுந்துமானவர் ஜெயம் கொண்டார்.  !அல்லேலூயா (3)

எல்லோரும்: இயேசுவே! உமது அன்புக் கோட்டைக்குள்ளே, அக்கினிகோட்டைக்குள்ளே, இரத்தக் கோட்டைக்குள்ளே எங்களை வைத்துப்பாதுகாத்தருளும் (2 முறை)
  1. ஒருவர் : இயேசுவின் திருசிரசிலிருந்து வழிந்தோடிய பரிசுத்த இரத்தமே! எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும் (இயேசுவே உமது அன்புக்கோட்டைக்குள்ளே .  .  .  .  .  .  .  .  ) (5 முறை சொல்லவும்) 
  2. ஒருவர் : இயேசுவின் திருத்தோளிலிருந்து வழிந்தோடிய பரிசுத்த இரத்தமே(5) எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும்.   (இயேசுவே உமது அன்புக்கோட்டைக்குள்ளே .  .  .  .  .  .  .  .  )  (5 முறை சொல்லவும்) 
  3. ஒருவர் : இயேசுவின் திருவிலாவிலிருந்து வழிந்தோடிய பரிசத்த இரத்தமும், தண்ணீருமே (5 முறை) எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும்.  இயேசுவின் அன்புக்கோட்டைக்குள்ளே .   .   .   .   . 
  4. ஒருவர்:  இயேசுவே! உமது திருக்கை, கால்களிலிருந்து வழிந்தோடிய பரிசுத்த இரத்தமே   எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும்.  (இயேசுவே உமது அன்புக்கோட்டைக்குள்ளே .  .  .  .  .  .  .  .  )  (5 முறை சொல்லவும்) 
  5. ஒருவர் : இயேசுவின் அனைத்துக் காயங்களிலிருந்தும் வழிந்தோடிய பரிசுத்தஇரத்தமே (5 முறை)   எல் : எங்களைப் பரிசுத்தமாக்கியருளும்.  இயேசுவே! உமது அன்புக்கோட்டைக்குள்ளே .   .   .   .   .  

செபிப்போமாக : எங்களுக்காகச் சிலுவையில் தொங்கிய இயேசு இரட்சகரே ! எங்கள்பகைவர்களிடமிருந்து எங்களைப் பாதுகாத்தருளும்.   சகல அபாய மரணத்திலிருந்தும் எங்களைக் காப்பாற்றி மகா பாக்கியமான நல்ல மரணத்தையும், நித்திய பரலோக ஜீவியத்தையும் எங்களுக்குக் கட்டளை இட்டருளும்.   இரக்கம்நிறைந்த இயேசுவே! நீங்கள் சுமந்த பாரமான சிலுவையால் ஏற்பட்ட உம்தோளின் கொடூரக் காயத்தினையும் உம் ஐந்து திருக்காயங்களையும் பார்த்து, பாவிகளாகிய எங்கள் மேலும், பரிசுத்த சகல ஆத்துமாக்கள் மீதும் இரக்கமாயிரும்.   எங்களுக்காகப் பாடுகள் ஏற்ற இயேசுவே! அன்று புனிதத்துணியில் பதிந்த உம் திருமுகத்தை நாங்கள் தரிசிக்க இப்போதும் எப்போதும் எனக்கு வரம் அருளும்.   ஆமென் ! 

சகோ.   சிறிய புஷ்பம் தூய இதய ஆசிரியப் பயிற்சி நிறுவனம் , கடலூர்.  

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இயேசு கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரக்கத்தின் பக்தி


இயேசுக் கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தின் பக்தி திருச்சபையில் புதிதானதல்ல.   பழங்காலத் தொட்டே நிலவி வருகிறது.  இயேசுக்கிறிஸ்து குருத்துவத்தையும், நற்கருணையும் ஏற்படுத்திய புனித வியாழனன்றே ஏற்படுத்தப்பட்டது.   இயேசு பாடுபடுவதற்கு முந்திய இரவு அப்போஸ்தலர்களிடம், ‘இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல்.  எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்.   உணவு அருந்திய பின்பு, கிண்ணத்தை எடுத்து ‘இந்தக் கிண்ணம் உங்களுக்காக சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை’ என்று கூறிய வார்த்தைகள்  உறுதிப்படுத்துகின்றன.  ‘கிறிஸ்துவின்  இரத்தம் மீட்பின் ஊற்று’ எனத் திருத்தந்தை ஜான் பால் 2  கூறியுள்ளார்.  
‘இரத்தமும், தண்ணீரும் பீறிட்டுவரும், ஓ! இயேசுவின் திரு இருதயமே’ எங்கள் மேல் இரக்கமாயிரும்.   நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்‘ எனச் செபிக்கிறோம்.   நம்முடைய பாவங்களுக்கும், உலகிலுள்ள அனைவரின் பாவங்களுக்கும் பரிகாரமாக இயேசுவின் இரத்தத்தைக் காணிக்கையாக்குகிறோம். 

1995ஆம் வருடத்தில், இறை இரக்கத்தின் நேரமாகிய மதியம் 3மணியளவில் நைஜீரியாவில் எனுகு மாவட்டத்தில் ஒலோ என்ற ஊரிலுள்ளபர்ணபாஸ் நோயே என்பவருக்குக் காட்சியில் இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தை ஆராதித்து ஆறுதலளிக்கக் கேட்டுக் கொண்டார்.   இரண்டு வருடங்களுக்குப் பின், திரு இரத்தத்தின் ஜெபமாலையையும், இன்னும் பலபயனுள்ள ஜெபங்களையும் நேரடியாகக் கொடுத்துள்ளார்.  

இயேசுவின் உயிருள்ள உடலிலிருந்து இரத்தத்தைப் பிரிக்க முடியாது.  இப்பக்தி மிகச் சிறப்பானது.   இப்பக்தி தீய ஆவிகளையும், சாத்தானையும்அழிக்கும் கருவியாகும்.   இப்பக்தியை அனுசரிப்பவர்களைத் திடீர் மரணம், தீய ஆவி இன்னும் பலவிதமான நோய்களிலிருந்து  காப்பாற்றி,  இறைவனோடு ஒன்றித்து வாழ்ந்து பேரின் பத்திற்கு அழைத்துச் செல்வதாக உறுதி கூறுகிறார். 

‘ஜெத்சமனியில் உலகிலுள்ள எல்லா மக்களுக்காகவும் நான் காத்திருக்கிறேன்.   பயங்கரமும்,  அச்சமும் நிறைந்த நேரம் அது’ என்று இயேசு பர்ணபாஸ் என்பவரிடம் கூறினார்.   ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 11மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 3 மணி வரை ஜெத்சமனி நேரமாகும். 

’இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தத்தின் ஜெபமாலையைப்பக்தியுடன் ஜெபிப்பவர்களுக்கு விசேஷ அருள் வரங்கள் கிடைக்கும் என்பது நிச்சயம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இயேசுவின் ஐந்து காயம் பெற்ற நறுமணத்தவர் தந்தை பியோ


கடிதத்திலிருந்து நாம் அறியும் சில உண்மைகள்

குருத்துவ வாழ்வின் ஆரம்ப நிலையில் கூட, பிந்தைய நாட்களில்அவரை மிகவும் சிறப்புப் பெற்று விளங்கியச் செய்தியாக வெளிப்படையானகாயங்களைப் பற்றிய சில அடையாளங்களை அவர் அனுபவித்து வந்ததாக தந்தை பியோவின் கடிதங்களிலிருந்து தெரியவருகிறது.  

1911ஆம் ஆண்டு தந்தை பியோ தனது ஆன்மிக ஆலோசகர், லாமிஸில் (Lamis))  உள்ள சான் மார்கோவைச் (San Marco)  சார்ந்த அருட்தந்தை பெனடிற்றோ (Benedetto))  என்பவருக்கு எழுதியகடிதத்திலே ஒரு வருடமாக அவர் அனுபவித்துக் கொண்டிருந்த ஒன்றைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.  ‘நேற்றைய இரவிலே நான் விளக்கிச் சொல்ல முடியாததும் புரிந்துகொள்ள முடியாததுமான ஏதோ ஒன்று நிகழ்ந்நது.   என் உள்ளங்கைகளின் நடுவிலே ஒரு பென்னி ( நீல)  நாணயம் அளவிலே சிறப்புநிற அடையாளம் தோன்றியது.   அதைத் தொடர்ந்து அந்தச்சிவப்பு அடையாளத்தின் நடுவிலே அந்த வலி மிகவும்குறிப்பிட்டுச் சொல்லும் படியாக இருந்தது, எவ்வளவு என்றால் அந்த வலியை இன்றும் உணர முடிகிறது.   மேலும் பாதத்தில்அடியில் இன்னும் கொஞ்சம் வலியை உணர முடிகின்றது.  

அவரது நெருங்கிய நண்பர் அருட்தந்தை அகுஸ்தினோ 1915ஆம் ஆண்டு எழுதியதில், அவரிடம் சில குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.   அதிலே 
  1. எப்போது காட்சிகள் பற்றிய அனுபவம் ஏற்பட்டது.   
  2. ஐந்து காய வரம் அருளப்பட்டிருக்கிறதா?   
  3. இயேசுவின் திருப்பாடுகளின் வேதனையை அவரால் உணர முடிந்ததா?   அதாவது முள்மூடி சூடப்பட்டது, கசையால் அடிபட்டது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டனவா?   


இந்தக் கேள்விகளுக்குப் பதில் எழுதிய தந்தை பியோ இவ்வாறு எழுதியிருக்கிறார்.   1903 முதல் 1904 ஆண்டு வரையிலும் நவ சந்நியாசமடத்தில் இருந்த காலத்திலிருந்தே காட்சி வரம் அருளப்பட்டுள்ளது.  காயங்கள் பற்றி எழுதும் போது, ஏற்கனவே ஐந்து திருக்காய வரம் கொடுக்கப்பட்டுவிட்டாலும்,  அது குறித்து அவர் கலங்கியதால் அந்தவரத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு ஆண்டவரிடம் கேட்டுக்கொண்டார்.   அதனால் ஏற்பட்ட வலி  நீங்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளவில்லை.   அந்த வெளிப்படையான காயங்களை மட்டுமே அகற்றவேண்டினார்.   அதனை விவரிக்க இயலாத பெரும்பாலும் தாங்கவே முடியாத அவமானமாகவே அவர் அவற்றைக் கருதினார்.   அந்த வெளிப்படையான காயங்கள் உடனே மறைந்துவிட்டாலும் 1918ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திரும்பவும் தோன்றி விட்டது.   மேலும் வலி தொடர்ந்து இருந்தது என்றும்மிகவும் குறிப்பிடத்தக்க நாட்களிலே,  சில சூழ்நிலைகளிலே வலி மிகவும்அதிகமாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருந்தார்.   அவரது முள்முடியின் வேதனையையும் கசையால் அடிபட்ட வேதனையையும்,  அவர் அனுபவித்துக்கொண்டுதான் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.   இந்த அனுபவம் எவ்வளவு இடைவெளிகளுக்கு ஒருமுறை இருந்தது என்று மிகச்சரியாகச் சொல்லமுடியாவிட்டாலும் பல ஆண்டுகளாக வாரத்திற்கு ஒருமுறை அந்த வேதனையைஅனுபவித்து வந்ததாகச் சொல்லியிருந்தார்.  
அந்தக் காயங்கள் காரணமாக உடல்நலம் குன்றியதால் அவரதுவீட்டில் இருக்க அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.   அவரது மடத்திலிருந்து வெளியே தங்கியிருந்தாலும் துறவியின் வாழ்வைத் தொடர விரும்பியதால்தினசரி திருப்பலி நிறைவேற்றி பள்ளியில் பயிற்றுவித்து வந்தார்.  

ஜூலை 1918இல் முதல் உலகமகாயுத்தம் நடந்து கொண்டிருந்ததால் திருத்தந்தை 15ஆம் பெனடிக், ‘ஐரோப்பியாவின் தற்கொலை’ என்று அவர் அழைத்த அந்த உலகப்போர் முடிவுக்கு வர வேண்டும் என்று எல்லா கிறிஸ்தவர்களும் இறைவனிடம் வேண்டுதல் செய்ய வேண்டுமென்று அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.   ஜூலை 27ஆம் தேதி தந்தை பியோ இந்த உலகப்போர் முடிவுக்கு வருவதற்காக தன்னையே காணிக்கையாக ஒப்படைத்தார்.   நாட்கள் நகர்ந்தன.   ஆகஸ்ட் 5 லிருந்து 7ஆம் தேதிக்குள் ஒருநாள் இயேசு தந்தை பியோவிற்குக் காட்சியில் தோன்றிஅவரது விலாப்பகுதியைக் குத்தி திறந்தது போன்று காட்சிக் கிடைத்தது.  அதன் விளைவாக,  தந்தை பியோவிற்கு விலாப்பகுதியில் காயம் ஒன்றுஏற்பட்டது.   ஐந்தாவது காயங்களின் தோற்றம் அல்லது இதயம் குத்தித்திறக்கப்பட்டது இறையன்பின் சங்கமத்தைக் குறித்துக் காட்டுகிறது.  இதயம் குத்தித் திறக்கப்பட்டபோது வடிந்த இரத்தம் தாங்கிய துணியானது, சிக்காகோவிலுள்ள ஜான்கேன்டியுங் ஆலயத்தில் பொது மக்களின் பார்வைக்கும் வணக்கத்திற்கும் திறந்து வைக்கப் பட்டிருக்கிறது. 

காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏழு வாரங்கள் ஆன்மிகஆறுதலின்றி தவித்தார் புனித தந்தை பியோ.   அவருடன் இருந்த கப்புச்சின்சபையைச் சேர்ந்த ஓர் அருட் சகோதரர், இந்த நாட்களில் அவரது தோற்றமேஇறந்து போனவரது தோற்றம் போன்று இருந்தது.   அவர் தொடர்ந்து கண்ணீர்சிந்தி கொண்டும் ஏக்கபெருமூச்சு விட்டுக் கொண்டும் கடவுள் என்னைக்கைவிட்டு விட்டார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.  

ஆகஸ்ட் 21, 1918ஆம் ஆண்டில் அருட்தந்தை பெனடிற்றோவிற்கு7 நல்லதைப் பற்றிக் கொள்ளுங்கள் ( 1 தெச 5- 21) புனித தந்தை பியோ எழுதிய கடிதத்திலே ஐந்துகாலம் தோன்றிய காலங்களில்அனுபவித்த வேதனைகளைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.   ‘ ஆகஸ்ட் 5 ஆம்தேதி ஒரு சிறுவனுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கி கொண்டிருந்த போது, என் மனக்கண்முன்னால் தோன்றிய உருவத்தைப் பார்த்து திடீரென்றுஅதிர்ச்சிக்குள்ளானேன்.   நெருப்பு கக்கிய நீண்ட கூர்மையான இரும்புக்கத்தியைப் போன்ற கருவி ஒன்றை கையில் வைத்திருந்தார்.   அதைப் பார்த்தமாத்திரத்தில் அவரது பலத்தையெல்லாம் சேர்த்து அந்தக் கருவியை என்ஆன்மாவில் குத்தியதை நான் உணர்ந்தேன்.   நான் வேதனையில் அலறினேன்.  இறப்பதைப்போல உணர்ந்தேன்.   தொடர்ந்து ஒப்புரவு அருட்சாதனம் வழங்கஆற்றல் இல்லாததுபோல பலவீனமாகத் தோன்றிதால் அந்தச் சிறுவனைபோகச் சொல்லிவிட்டேன்.   அப்போதிலிருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை வேதனை தொடர்ந்து நீடித்தது.   இந்தக் கொடூரமான வேதனை காலத்திலேஅனுபவித்த துன்பத்தை வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியாது.  உள் உறுப்புகள் எல்லாம் கிழிக்கப்பட்டது.   அந்தக் கருவிக்கு ஒன்றுமேதப்பவில்லை.   அந்த நாளிலிருந்து  மரணவேதனை அனுபவித்தேன்.   ஆன்மாஎப்போதும் ஆழமாகக் குத்தித் திறக்கப்பட்டிருப்பது போல உணர்வும்அதனால் ஏற்பட்ட தொடர் வேதனையும் இருந்து  கொண்டே இருந்தது’என்று எழுதி இருக்கிறார்.  
செப்டம்பர் 20, 1918 இல் ஐந்து காயங்களும் மறந்து விட்டதாகவும் தந்தை பியோ ஆழ்ந்த அமைதியில் இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.  இரக்கத்தின் இராக்கினி ஆலயத்தில் பாடகர் குழுவினர் இருக்கும் பகுதியில் தந்தை பியோ ஆழ்ந்த ஜெபத்தில் இருந்த போது காயப்பட்ட கிறிஸ்துவின்தோற்றத்தில் மீண்டும் தோன்றி ஐந்து காயத்தைக் கொடுத்திருக்கிறார்.   தந்தை பியோவிற்கு முன்பு ஏற்பட்டது போன்ற அனுபவம் மீண்டும் தோன்றியிருக்கிறது.   அந்தக் காட்சி முடிந்தவுடன் கிறிஸ்துவின் ஐந்து, வெளிப்படையான காயங்கள் தந்தை பியோ உடலில் தோன்றின.   இந்தமுறை தோன்றிய காயங்கள் ஐம்பது வருடங்கள் தொடர்ந்து அவரிலேயே நிலைத்திருந்ததன.   லாமிஸ் நாட்டிலுள்ளசான்மார்க்கோ என்ற ஊரிலிருந்து அக்டோபர் 2 அன்று தந்தை பியோ, அவரது சுப்பீரியரும் ஆன்மிக ஆலோசகருமான தந்தை பெனடிற்றோவிற்கு எழுதிய கடிதத்திலேஇவ்வாறு விவரமாக எழுதியுள்ளார்.  

‘சென்ற மாதம் 20ஆம் தேதி காலையில்பாடகர் குழு இருக்கும் இடத்திலே திருப்பலிக்குப் பிறகுஅமர்ந்திருந்தபோது ஆழ்ந்த உறக்கத்தை ஒத்த மயக்கநிலை ஏற்பட்டது.  ஆகஸ்ட் 5ம் தேதி பார்த்ததைப் போன்ற அதிசய மனிதர் ஒருவரைப் பார்த்தேன்.  8 தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம்.   ( 1 தெச.   5 -19) இந்த முறை பார்த்த நபரில் ஒரு வித்தியாசம் என்னவென்றால் அவரது கைகளிலும் கால்களிலும் விலா பகுதியிலும் இரத்தம் சிந்திக் கொண்டிருந்தது.  அதிர்ச்சிக்குள்ளான நான்,  அந்த நிமிடத்தில் இருந்த உணர்வு நிலை விவரிக்கஇயலாத நிலைக்கு ஆளானேன்.   விலாவை விட்டு வெடித்து வெளியேறி விடும்போன்ற இதயத்தை ஆண்டவர் இடைப்பட்டுப் பலப்படுத்தியிருக்காவிட்டால்நான் இறந்து போயிருப்பேன் என்று நினைக்கிறேன்.   காட்சி மறைந்தது.   என்கைகளிலும் கால்களிலும் விலாவிலும் இரத்தம் வழிவதை நான் உணர்ந்தேன்.  அன்று அனுபவித்த வேதனையும் இன்னும் அனுதினம் தொடரும் வேதனையையும் கற்பனை செய்து பாருங்கள்.   இதயத்தின் காயத்தில் வியாழன் முதல்சனி வரை தொடர்ந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.  

அன்புத் தந்தையே காயங்களில் வேதனையாலும் ஆன்மாவில் ஆழ்ந்துஉணர்ந்த உணர்வினால் இறந்து கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.   இந்தநிலையை மாற்றும் எனும் வேண்டுதலை ஆண்டவர் கேட்டிருக்காவிட்டால் இரத்தம் சிந்தியே இறந்து போயிருப்பேன்.  

மிகவும் நல்ல இயேசு இந்த அருளினை எனக்குக் கொடுத்திருக்கிறாரா?  வெளி அடையாளங்களைக் கொண்டிருப்பதனால் உண்டான அவமானத்திலிருந்து விடுவிப்பாரா?   எனக்கு ஏற்படும் அவமானத்தையும் தாங்க முடியாத நிந்தையையும் ஏற்படுத்தும் வெளி அடையாளம் நீக்கும் வரையில்குரலை நிறுத்தாமல் இறைவனிடம் இரக்கத்திற்காக மன்றாடுவேன்.  காயத்தையோ வலியையோ அல்லது வெளித் தோற்றத்தையோ மாற்றும்படிவேண்டுவேன்‘என்று எழுதியுள்ளார்.   மேலும், ‘ நான் சிலுவையில் இறப்பதுபோன்று உணரும் அளவு வேதனை அதிகமாக இருந்தது’ என்று மேற்கோள்காட்டியுள்ளார்.  

தந்தை பியோ 1919 தொடக்கத்தில் அமைதியாக வேதனை அனுபவிக்க விரும்பிருந்தாலும் அவருக்கு ஐந்து காயம் இருந்தது எல்லாப் பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது.   பல மருந்துவர்களும் மக்கள் பலரும் வந்து தந்தை பியோவின் காயத்தைப் பரிசோதிக்கவும் பார்க்கவும் செய்தனர்.  முதல் உலகப் போருக்குப் பிறகு தங்கள் வாழ்வைக் கட்டியெழுப்ப விரும்பிய மக்களுக்கு ‘நம்பிக்கை அடையாளமாக’ தந்தை பியோ விளங்கினார்.  அப்போது முதல் குணமளிக்கும் வரம்,  ஒரே நேரத்தில் இரண்டு நேரத்தில் தோற்றம் அளித்தல், ஆகாயத்தில் மிதத்தல், இறைவாக்கு வரம், நல்ல செயல் செய்யும் ஆற்றல்,  நீண்ட இடைவெளியில் உணவும் உறக்கமும் இன்றி இருத்தல் மற்றவர் மனத்தில் இருப்பதை அறியும் ஆற்றல் (20 நாட்கள்) , பலமொழி பேசும் வரம், மனமாற்றம் செய்ய வைக்கும் கொடை, காயங்களில் வரும் நறுமணம் போன்ற பல அதிசயங்கள் வெளிப்பட ஆரம்பித்தன. 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனது அருமையானவர்களே!


கடவுளின் அன்பு பிள்ளைகளே,‘ஆசிர்பெற்ற கன்னி மரியாவை அன்பு செய்யுங்கள்.  மற்றவர்களும் அவளை அன்பு செய்ய உதவுங்கள்.  ’தந்தை புனித பியோ எல்லோரிடமும் சொல்லிய இந்த வார்த்தைகள் அவர் பரலோக அம்மாவிடம் கொண்டிருந்த ஆழ்ந்த பக்திக்கு என்றும்சாட்சியாக விளங்குகிறது.   ஏழை மனிதன் அசிசி புனித பிரான்சிஸ் பெயர் தாங்கி, அவரை போலவே அன்னையின் மேல் கொண்ட பக்திக்கு நிகரான தந்தை பியோ, பியட்ரல்சினாவில் சம்மனசுகளின் ராக்கினி புனித மரியாளின் தேவாலயத்தில் ஞானஸ்தானம் பெற்றதிலிருந்து எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவின் பக்தி, அவரது மிக மென்மையான இதயத்தில் பயிராக வளரத்தொடங்கியது.   மேலும் அவர் மரணம் வரை எஞ்சியிருந்த காலமெல்லாம் சான் ஜியோவானிரொத்தோந்தோ தூய அருள் அன்னை ஆலயத்திற்கு அருகில் வாழ்ந்து, இன்று வரை அவரது அழியாத உடல் அங்கேயே ஓய்வு கொள்ள கடவுள் கருணை புரிந்ததார்.   அவரது வாழ்க்கை மற்றும் அவரது இறைப்பணி அனைத்தும் அன்பு அன்னையின் பண்பான பார்வையின் கீழும் அவளின்ஆற்றல் மிகுந்த பரிந்துரையின் கீழும் இனிதாகவும் நேர்த்தியாகவும்நடந்திருக்கிறது.   உடல் நலமற்றோரின் சுகாதார இல்லமான Casa Sollievo della sofferenza  கூட, அன்னை மரியாவின் வேலையாகவே அவர்கருதினார்.   ஆகவே, அன்பு பிள்ளைகளே நீங்களும் இன்று தந்தை பியோவின் எடுத்துக்காட்டை நினைவில் கொண்டு கடவுளின் அன்னையினுடையதாய்மையின் பாதுகாப்புக்குள் உங்களையே ஒப்படையுங்கள்.   நானும் உங்கள்ஒவ்வொருவரையும் அன்னையின் அரவனைப்புக்குள் ஒப்படைக்கிறேன்.  சிறப்பாக நான் புனித பியோ ஜெபமாலை இயக்கத்தையும், பியோ குரல் இதழை நடத்துகிற ஒவ்வொருவரையும், உங்களில் நோய் வாய்ப்பட்டுள்ளஒவ்வொருவரையும், நீங்கள் யாருக்கெல்லாம் ஜெபிக்க கடமைப்பட்டுள்ளீர்களோ அவர்களையும் நம் அன்பு அம்மாவின் ஆற்றல் மிகுந்தபாதுகாப்புக்குள் இன்று ஒப்படைக்கிறேன்.  

அன்பான பிள்ளைகளே,  ஆகஸ்ட் 10,  1910 மிகவும் ஆவலோடுஎதிர்பார்க்கப்பட்ட அந்த நாள் வந்தது அன்று பியோ தனது இருபத்திமூன்றாம் வயதில் பெனெவெண்டோ பேராலயத்தில் பேராயர் பவுலோசின்னோசி அவர்களால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.   நான்கு நாட்களுக்குப் பின்னர், அவர் தனது ஊர் பங்கு ஆலயமான சம்மனசுகளின் எனது அருமையானவர்களே ராக்கினி புனித மரியாளின் தேவாலயத்தில் முதல் திருப்பலியை ஒப்புகொடுத்து இறைவனை மகிமைபடுத்தினார்.   அந்த நாளில் நீங்களும்உங்களையும் உங்களோடு தொடர்புள்ள குருக்களையும் ஒப்பிக்கொடுத்து ஜெபியுங்கள்.  ஜூலை மாதம் 16 ஆம் நாள் புனித கார்மே அன்னை திருநாள்.   ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் புனித கன்னி மரியா ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பெருவிழா.  இந்த நாட்களில் பாவ மன்னிப்பு பெற்று உங்களையும் இயக்கத்தில் உள்ள ஒவ்வொருவரையும் ஒப்புக்கொடுத்து ஜெபியுங்கள்.   ஜெபமே நமது வெற்றி.  ஜெபமாலையே நமக்கு வெற்றி மாலை.   எப்போதும் கடவுளின் பின் நிலைத்திருக்க உங்களுக்கு எனதுஆசீர்.  

- அருட்திரு அ.   செல்வராஜ் க.   ச.   ஓமன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனது விசுவாச அனுபவம்


ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில் அதை கட்டுவோரின்உழைப்பு வீணாகும். ஆண்டவரே நகரைக் காக்கவில்லையெனில் காவலர்கள்விழித்திருப்பதும் வீணாகும்.   (திரு.   பா.   127- 1) 
என் பெயர் குமார்.   நான் வெளிநாட்டில் வேலைப் பார்க்கிறேன்.   என்சொந்த ஊர் தஞ்சைக்கு அருகில் வல்லம் என்னும் ஊர்.   நாங்கள் வீடு கட்டிக்கொண்டு இருக்கும் பொழுது பல கஷ்டமும், பிரச்சினைகளும் இருந்தது.  லோன் கிடைக்காமல் வீடும் கட்ட முடியாமல் ஒரு வருடமாக இருந்தது.  எங்களுக்கு தெரிந்த அருட்சகோதரியிடம் கஷ்டத்தை எடுத்துக் கூறினேன்.  அவர்கள் மேற்கூறிய (திரு.   பா.   127 - 1)  என்கிற வசனத்தைத் தினமும் சொல்லி ஜெபி என்றார்கள்.   நானும் ஜெபித்தேன்.   பிறகு நான் இருக்கும் நாட்டில் என்அம்மாச்சி உள்ளார்கள்.   அவர்கள் பியோ குரல் இதழைக் கொடுத்துப் படி,விசுவாசத்தோடு ஜெபம் செய், ஜெபமாலை சொல் என்றார்கள்.   அவ்வாறே ஜெபித்து வந்தேன்.   நான் என் அம்மாச்சியிடம் என் பிரச்சினைகளும் வீடும்நல்லபடியாக கட்டி முடித்தால் பியோ குரல் இதழில் சாட்சி எழுதுகிறேன்.  பியோ இல்லம் என்ற பெயரும் வைப்பேன் என்றேன்.   நான் இறை வசனத்திலும்அதிக நம்பிக்கையோடும், ஜெபமாலையும் ஒப்புக் கொடுப்பேன்.   எனக்குலோன் கிடைத்தது.   நல்லபடியாக வீடு கட்டி முடித்தேன்.   பிரச்சினைகளும் நீங்கிற்று.   என் விசுவாச ஜெபம் எனக்கு பலன் அளித்தது.   இயேசுவுக்கே புகழ்!மரியே வாழ்க! புனித தந்தை பியோவுக்கு நன்றி நன்றி.  

இப்படிக்கு,

குமார், சிங்கப்பூர்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எனது விசுவாச அனுபவம்


இயேசுவின் திரு இருதயம், புனித பியோ எங்கள் குடும்பத்திற்குச் செய்து வரும் நன்மைகளுக்கு நன்றி கூறுகிறோம்.  

கடவுளே உமக்கு நன்றி செலுத்துகிறோம்.  கடவுளே உமது பெயரைப் போற்றுகிறோம்.   உம் வியத்தகுசெயல்களை எடுத்துரைக்கின்றோம்.   (திரு.   பா.   75- 1) எங்கள் வாழ்வில் கடவுள் செய்த வியத்தகு செயல்களை எழுதுகிறேன்.  

என் கணவர் பீட்டருக்குப் பல வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது.   அவ்வப்போது சோதனை செய்து மருந்து  சாப்பிட்டு வருகிறார்.   சென்ற ஆண்டு ஒருமுறை மருத்துவரிடம் சென்றபோது பல சோதனைகள் செய்து விட்டு அஞ்சியோகிராம் எடுக்க வேண்டும் என்றார்.   ஹைதராபாத்தில் பணிபுரிவதால் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்னை சென்றோம்.   மிகவும் பயந்துதான் சென்றோம்.   இருப்பினும் இயேசுவின் திரு இருதயம் புனித பியோ இவர்கள் மீது நம்பிக்கை வைத்து மருத்துவமனையை அடைந்தோம். 
 அஞ்சியோகிராம் முடிந்து, அடைப்புகள் இருப்பதாகவும், எவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சைசெய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்துஅடைப்புகளை நீக்க வேண்டும் என்றும் மருத்துவர்சொல்லிவிட்டார்.   காலம் தாழ்த்தவும் முடியாது.   அதேநேரம் அறுவை சிகிச்சை எப்படி இருக்குமோ என்ற பயம்.  இருப்பினும் இயேசுவின் திரு இருதயத்தின் அருளாலும்புனித பியோவின் புதுமையாலும் என் கணவரின்அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து நல்லசுகத்துடன் வெளிவந்தார்.   மூன்று மாதங்கள் ஓய்வெடுத்தபின் தற்போது ஹைதராபாத்தில் தம் பணியைத்தொடர்கிறார்.  

இயேசுவின் திரு இருதயத்துக்கு கோடான கோடிநன்றி ! புனித பியோவுக்கு எங்கள் குடும்பம் முழுதும்நன்றி கூறுகிறது.  நன்றி! நன்றி!! நன்றி!!!

அன்புடன்,

கல்பனா பீட்டர், ஹைதராபாத்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS