‘ஜெபமாலை மாதமாகிய அக்டோபர் மாதத்தில் ஜெபமாலை செய்து அருள் வாழ்வில் நம்மை இணைத்துக் கொள்வோம்.’ஆண்டவரின் மீட்புத் திட்டத்தில் முதன்மையானவராகிய அன்னை மரியாளை ஆண்டவரால் தேர்ந்தெடுத்து கபிரியேல் என்னும் வானதூதர் வழியாக இறைவனின் வார்த்தையை இதயத்தில் சுமக்கிறார் அன்னை மரியாள். தூய்மை நிறைந்த இதய பேழையை இறைவார்த்தையால் நிரப்பினாள் அன்னை மரியாள். இத்தகைய இறை அனுபவம் நிறைந்தவள் தான் அன்னை மரியாள். ஜெபமாலை என்பது ‘புதிய ஏற்பாட்டின் சுருக்கம்’ என்றே கூறலாம். இயேசுவின் பிறப்பு, பணிவாழ்வு, இறப்பு, உயிர்ப்பு என புதிய ஏற்பாட்டில் உள்ள அனைத்து செய்திகளையும் இரத்தின சுருக்கமாய் தியானிக்க இந்த ஜெபமாலை உள்ளது.
1. மகிழ்ச்சிநிறை பேருண்மையை தொடங்கும்போது அன்னை மரியாளைப் பற்றி தியானிக்கிறோம். (கபிரியேல் தூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தைச் சொன்னது) இந்த மறையுண்மையில் இறைமகன் இயேசுவின் பிறப்பு பற்றி தியானிக்கிறோம்.
2. ஒளிநிறை பேருண்மையில் இறைமகன் இயேசுவின் பணி வாழ்வினைப்பற்றி சிந்திக்கிறோம். இந்த மறையுண்மையில் (ஏழை) கா- ணாவூர் திருமணத்தில் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்ற அன்னை மரியாள் துணைநின்று பரிந்துரைப்பதைப் பார்க்கிறோம். எனவே நமக்காய் பரிந்து பேசுபவர் அன்னை மரியாள் என்பதை நாம் உணர்கிறோம்.
3. துயர்நிறை பேருண்மையில் இயேசுவின் பாடுகள், இறப்பு பற்றி தியானிக்கிறோம். இந்த பேருண்மையிலும் கூட அன்னை மரியாள் சிலு- வையின் அடியில் நிற்பதையும் மடியில் உயிரற்ற உடல் சுமப்பதையும் தியானிக்கிறோம்.
4. மகிமைநிறை பேருண்மையில் இயேசுவின் உயிர்ப்பு பற்றி சிந்திக்கிறோம். இதில் இறுதியாக அன்னை மரியாள் விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்படுவதை தியானிக்கிறோம். இதன்மூலம் இயேசுவின் மண்ணக வாழ்வை பொறுத்தவரை முதலும், முடிவுமாக இருக்கின்றவர் அன்னை மரியாள். ஜெபமாலை என்பது ‘ஜெயம் தரும் ஒரு கருவி’. ‘பாவிகளை பாவச் சேற்றிலிருந்து தூக்கி எடுக்க உதவும் பாசக்கயிறு’, கலங்கி தவிப்பவர்க்கு களங்கரை விளக்கமாய் திகழ்வது இந்த ஜெபமாலை என்பதை நாம் உணர்வோம்.
‘‘ஜெபம் செய், தவம் செய் என்றவள் அன்னை / ஜெபமாலை செய்வோர்க்கு ஜெயம் தருபவள் அன்னை / திக்கற்றோர்க்கு தஞ்சமாக இருப்பவள் அன்னை / தயங்கிடும் உள்ளம் கொண்டோர்க்கு தாயானவள் அன்னை / ஜெபமாலை சொல்லிடுவோம் நாளும் அருள் மாலையை, கன்னியாம் ஜெபமாலை அன்னைக்கு நாம் சூட்டிடுவோம். கலக்கம் நம்மில் போக்கிட கரம் விரித்து நிற்பவள் அன்னை / மாசுகள் நம்மில் மறைந்திட நேசமாய் நம்மை காப்பவள் அன்னை / தடுமாறும் வாழ்க்கை கரைசேர அடைக்கலமாய் இருப்பவள் அன்னை / ஜெபம் செய்வோம் ஜெயம் பெறுவோம், ஜெபமாலை அன்னையை நாம் போற்றிடுவோம்.’’
வாழ்க! வாழ்க! வாழியவே! ஜெபமாலை அன்னையே!
Sr.S. கரோலின் மேரி, FIHM, பெரியவர்சீலி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக