அன்பான ஆன்மீக குழந்தைகளே !
ஈராக்கில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையை கையாண்டு கிறிஸ்தவர்களை முற்றிலும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். எண்ணற்ற கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறவும் பயங்கரமான கொடுமைகளுக்கும் உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலை மாற ஈராக்கில் அமைதி திரும்ப குறிப்பாக கிறிஸ்தவர்களின் பாதுகாப்பு வேண்டி ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப ஒரு நாளில் உபவாசமிருந்து நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து திருப்பலி ஒப்புக்கொடுக்கவும், அர்ப்பணிப்போடு ஜெபமாலை ஒப்புக்கொடுத்து அன்னை மரியாயிடம் மன்றாடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
- ஆன்மீக வழிகாட்டி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக