புனித பியோ ஜெபமாலை இயக்கம் பற்றி உங்களோடு...
ஐந்து காய புனிதர்.
ஒரே நேரத்தில் இரு இடங்களில் தோன்றுபவர்.
நோய்களை குணமாக்குகிறவர். இறைவா குறைத்தவர். ஜெபத்தில் மேல் எழும்பி செல்பவர்.
ஆகாயத்தில் பறப்பவர். உள்ளத்தை ஊடுருவி வாசிப்பவர்.
நற்கருணை ஆண்டவரில் ஒன்றித்துப் போனவர்.
ஒப்புரவு அருட்சாதனத்தில் ஆன்மாக்களுக்கு இறைவனின் இரக்கத்தை வழங்கியவர். உத்தரிக்கிற நிலை ஆன்மாக்களுக்கு பேருதவி புரிந்து மோட்சத்திற்கு அனுப்பியவர்.
கன்னி மரியாவை "அம்மா" என்று அழைத்து அனுதினமும் 40 முதல் 60 ஜெபமாலைகளை ஜெபிப்பவர்.
கன்னி மரியாவையும் இயேசுவையும் காட்சியில் கண்டு அவர்களோடு உரையாடியவர்.
துன்பரும் ஏழை மனிதர்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் "துன்புறுவோரின் இல்லம்" என்ற மருத்துவமனையை கண்டவர்
இரண்டாம் உலகப்போரின் தாக்கங்களிலிருந்து மக்களை காக்க கடவுளிடம் கையேந்தி ஜெபத்தை ஆயுதமாக பயன்படுத்தியவர்.
வாழும் பொழுதே பலநூறு ஜெபக்குழுக்களை அமைத்து ஜெபிக்க வழி நடத்தியவர். ஜெபமே கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வாழ்வுக்கு அடித்தளம் என்பதை புகட்டியவர். கப்புச்சின் சபையின் புகழ் பெற்ற புனிதர் padre பியோ என்றழைக்கப்படும் தந்தை பியோ.
தந்தை பியோ தூய ஆவியாரால் வழிநடத்தப்பட்டவராய் கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கையை தெளிவாக உறுதியாக அறிந்திருந்தார். ஜெபத்திலும் தவத்திலும் நற்கருணை ஆண்டவரோடு அலாதி அன்பு கொண்டிருந்தார். ஒப்புரவு அருட்சாதனம் கடவுளுக்காக ஆன்மாவை தூய்மைப்படுத்தும் அருமருந்தாக பயன்படுத்தினார். கன்னி மரியாவின் மீது பற்று ஜெபமாலை பக்தி இயேசுவின் மீதுஆழ்ந்த அன்பு கொண்டிருக்க இட்டுச் சென்றது.
அவருடைய ஆன்மீக வாழ்வின் போதனைகளை நம் வாழ்விலும் கடைபிடித்து நல்லதொரு கத்தோலிக்க விசுவாசத்தை காத்துக்கொள்ள அழைக்கிறது புனித பியோ ஜெபமாலை இயக்கம்.
இந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் தினம் தோறும் ஒரு 53 மணி ஜெபமாலை ஜெபிக்க வேண்டும்.
வாரம் தோறும் குழுவாக சேர்ந்து ஜெபிக்க வேண்டும். சகோதர சகோதரிகளாக அன்பு உறவிலும் அன்பு பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக