#1.
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றிதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
மலைபோல துன்பம் எனை சூழும் போது அதைபனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
பலவீன நேரம் என் அருள் உனக்கு போதும்
உன் பலவீனத்தில் என்பலன் தருவேன் என்றிர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே
நீர் போதும் என் வழ்விலே – இயேசைய்யா
தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொண்டதும் யாருமில்லையே
உம்மை போல அரவணைப்பதும் யருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா
#2.
அஞ்சாதே ஆண்டவர் துணையிருக்கநெஞ்சோடு நிததம் அவர் நினைவிருக்க(2)உன் தாயின் உதிரத்தில் உனைத் தெரிந்தார்உன் வாழ்வின் உறவாய் உன்னில் நிறைந்தார்- அஞ்சாதே
தீயின் நடுவில் தீமை இல்லைதிக்கற்ற நிலையில் துயரம் இல்லைதோல்வி நிலயில் துவண்டு வாழும்துன்பம் எதுவும் தொடர்ந்திடாதுகாக்கும் தெய்வம் காலமெல்லாம்(2)கரத்தில் தாங்கிடுவார்- அன்பின்கரத்தில் தாங்கிடுவார்-அஞ்சாதே
தூர தேசம் வாழ்க்கை பயணம்தேவ நேசம் உன்னைத் தொடரும்பாவம் யாவும் பறந்து போகும்பரமன் அன்பில் பண்பைப் போலவாழும் காலம் முழுதும் உன்னில்(2)வசந்தம் வீசிடுமே- அன்பின்வசந்தம் வீசிடுமே -அஞ்சாதே
#3.
என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு
என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் புகழ்வேன்
என் உயிரான உயிரான உயிரான இயேசு
1. உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் புகழ்கையிலே இயேசையா
உம் அன்பை சுவைக்கையிலே
2. உம் வார்த்தை எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா
உந்தன் வார்த்தை தியானிக்கிறேன்
3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பானே
0 கருத்துகள்:
கருத்துரையிடுக