அர்ப்பண வாக்குறுதி சடங்கு

அர்ப்பண வாக்குறுதி சடங்கு 

தூய ஆவியார் பாடல்.

நம்பிக்கை அறிக்கை.

அர்ப்பண வாக்குறுதி ஜெபம் 

தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே, ஆமென்.

மீட்பின் வரலாற்றில் இறைவாக்கினர்களையும் திருதூதர்களையும் அழைத்து உம் மக்களை வழிநடத்திட அருள்புரிந்த இறைவா. இன்றும் திருதந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள், பொதுநிலை தலைவர்களை அழைத்து உமது ஆட்சியை இவ்வுலகில் நிலை பெற செய்துகொண்டிருக்கும் நல்ல ஆயனே. காலத்துக்கேற்ற புனிதர்களை வழங்கி எங்கள் மீது உமது பேரன்பை பொழிந்து கொண்டிருக்கும் எல்லையற்ற இரக்கப்பெருக்கே, என் இதயத்தின் நன்றிகளை உமக்கு காணிக்கையாக்குகிறேன். 

புனித தந்தை பியோவின் அடிச்சுவட்டில், புனித வாழ்வை நோக்கிய பயணத்தில், (பெயர்....), ஆகிய நான் புனித பியோ ஜெபமாலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக என்னையே அர்ப்பணித்து கொள்கிறேன். ஜெபத்திலும் முன்மாதிரிகையிலும் சிறந்த கத்தோலிக்க நம்பிக்கையாளராக வாழ முழு முயற்சிகள் எடுப்பேன் என வாக்களிக்கிறேன். எனது அர்ப்பண வாழ்வில், தந்தை பியோவின் மனநிலையில் உம்மிடம் வேண்டுகிறேன். என்னோடு தங்கும் ஆண்டவரே, ஏனெனில் உம்மையே நான் தேடுகிறேன். உமது அன்பு, உமது அருள், உமது சித்தம், உமது இதயம், உமது உள்ளம் இவைகளையே நான் தேடுகிறேன். மேலும் மேலும் உம்மை நேசிப்பதைத் தவிர வேறு எதையும் நான் கேட்கவில்லை. ஏனெனில் உம்மையே நான் நேசிக்கிறேன். இவ்வுலகில் என் முழு உள்ளத்தோடு, உறுதியான அன்பால் உம்மை நேசிப்பேன். நித்திய காலமும் தொடர்ந்து உம்மை முழுமையாக நேசிப்பேன். ஆமென்

குரு : இறைவனின் முன்னிலையில் சகோதர சகோதரிகளின் மத்தியில் நீங்கள் கொடுத்த அர்ப்பணத்தை உறுதி செய்கிறேன். இறைவன் உங்களுக்கு இவ்வாழ்வில் நிறை ஆசீரும், மறு வாழ்வில் நிலை வாழ்வையும் வழங்குவாராக. பதில்: ஆமென்.

ஒருங்கிணைப்பாளர் உத்தரியம் ஆசீர்வதிக்கப்படல் :

இறைவா, புனித பியோ ஜெபமாலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு அடையாளமாக இருக்கும் இந்த புனித பியோ உத்தரியங்களை + ஆசீர்வதித்து புனிதப்படுத்தியருளும். இதை அணிகின்றவர்கள் தமது கடமையை உணர்ந்து செயல்பட்டு உமது அன்புக்கு என்றும் பிரமாணிக்கமாக இருக்கவும் உமது அருளினால் நிரப்படவும் அருள்புரிவீராக, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றடுகின்றோம். 
பதில்: ஆமென்.

உ த்தரியத்தை அணிவித்தல் :

குரு : தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே இந்த உத்தரியத்தை அணிந்துகொள். 
பதில் :ஆமென் 

*தீர்த்தம் தெளித்தல் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக