புனித ஜெபமாலை இயக்கம்
தல பணியாளர்களுக்கான வழிகாட்டுதல்கள் :
1) தலைமை தல பணியாளர் :
பங்குகளிலோ மற்ற தலங்களிலோ செயல்படுகின்ற ஜெபமாலை இயக்கத்திற்கு முழு பொறுப்பாளராக செயல்படுவார்.
கூட்டம் நடக்கும் இடத்தைக் குறித்தும் நாளை குறித்தும் உறுப்பினர்களுக்கு முன் அறிவிப்பு செய்து சகோதர அன்போடு அழைப்பு விடுப்பார்.
கூட்டத்தை தலைமையேற்று நடத்துவார்.
தல ஜெபமாலை இயக்கத்தில் இயக்கத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர் மற்றும் வருகை பதிவேட்டை பராமரிப்பார்.
இவை இயக்கத்தை தனது குடும்பமாக நினைத்து ஆன்மீக காரியங்களில் அனைவரோடும் நல்லுறவோடு செயல்படுவார்.
இயக்கத்தில் உள்ள அனைவரும் நன்கு செயல்பட உற்சாகப்படுத்தி வழிநடத்துவார்.
2) துணை தல பணியாளர்:
தலைமை தல பணியாளருக்கு எல்லா விதத்திலும் உதவியாளராக செயல்படுவார். அவர் இல்லாத நேரங்களிலும் அவரது பொறுப்பை இவரே ஏற்று செயல்படுத்துவார்.
புனித ஜெபமாலை இயக்கத்தின் வளர்ச்சிக்காக உழைப்பவர். புதிய உறுப்பினர்களை அழைத்து வந்து சேர்ப்பது. ஒரு பயிற்சியாளராகவும் செயல்படுவார்.
தல பணியாளருக்கு ஆலோசகராகவும் செயல்படுவார்.
3) தல செயலர் :
கூட்டத்தின் அறிக்கையை தயார் செய்து அடுத்த கூட்டத்தில் வாசித்து செயலரும் தலைவரும் அதில் கையொப்பமிட்டு பராமரிப்பார்.
4) தல பொருளர் :
வரவு செலவு கணக்குகளை பதிவு செய்து பராமரிப்பார். கூட்டத்திலே பொருளாதார கணக்குகளை வாசித்து கையொப்பம் பெற்றுக் கொள்வார்.
இயக்கத்தின் செலவுகளை தலைவர் ஒப்புதலோடு செயல்படுத்துவார்.
மீதமுள்ள பணத்தை பத்திரமாக பொறுப்போடு வைத்திருப்பார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக